கதையை பற்றி சில வரிகள்

#1
தங்கக்கூ(ண்)டு

இந்த கதை எழுதியது நான் தான். கதை ஆரம்பம் முதல் முடிவு வரை எனக்கு ஊக்கம் கொடுத்து நான் எழுத உதவிய மல்லி அக்காவுக்கு நன்றி.

பேர் சொல்லாம எழுதனும்னு பட்டுன்னு தோனுச்சு சட்டுன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன். ஆனால் சட்டு புட்டுன்னு முடிக்க முடியல. கதை இரண்டு மூன்று எபிசோட் கடந்ததும் வீட்ல கொரோனா அது இதுனு ஒரு பிரேக். அப்புறம் தொடர்ந்து எழுதினேன். கிட்டத்தட்ட முடிக்கும் போது மறுபடியும் ஒரு பிரேக். இந்த தடவை ரொம்ப லாங் பிரேக். இப்போ ஒருவழியா முடிச்சிட்டேன்.

இந்த கதையில் ஒரு சில விஷயங்கள் புதுசா முயற்சிக்க நினைச்சேன். அது எப்படி வந்திருக்குன்னு படிச்சு பார்த்து சொல்லுங்க.

முதலாவதா, கதையில் இரண்டு கேரக்டர் தர்மன், அர்ஜுன். கதைக்கு இரண்டு பேருமே ஹீரோ கிடையாது. இரண்டு பேரோட குணநலன்கள் சொல்லியிருப்பேன். கதை அர்ஜுனை மையபடுத்தி நகர்கிற போல இருந்தாலும் அவனிடம் நிறைய நெகடிவ்ஸ் இருக்கும். அதுக்காக அவன் ஆன்டி-ஹீரோவும் கிடையாது. பொதுவா ஹீரோக்கு நெகடிவ்ஸ் இருக்காது.

அது போல தர்மன் முன்னணி கதாபாத்திரமா இல்லாட்டி கூட கடைசியில் அவன் ஹீரோ போல தோற்றமளிப்பான். நான் நினைச்சது எப்படி வந்திருக்குதுன்னு கதை படிச்சு பார்த்து சொல்லுங்க

இரண்டாவதா, கிட்டத்தட்ட கதை முழுவதும் ஒரு கேரக்டர்க்கு பேரே வைக்கலை. ஏனோ எனக்கு வைக்க தோணலை.

மூணாவது, இது நிஜ வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு, அவ்வளவுதான். ட்விஸ்ட், டர்ன்ஸ் கிடையாது.

இது ஒரு வகையான ‘Toxic Parenting’ வகை கதை. நான் என் பிள்ளைக்கு சரியானது மட்டும் தான் சொல்வேன், செய்வேன், தி பெஸ்ட் மட்டும் தான் கொடுக்கிறேனு நினைச்சிட்டு அவங்க வாழ்க்கையை இவங்களே வாழ்ந்துட்டு இருப்பாங்க. அப்படி பட்ட ஒரு பெற்றவரின் கதை தான் இது.

வித்தியாசமான கதை கரு படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம்!!
 
JRJR

Well-Known Member
#6
வாழ்த்துக்கள் மா.

யதார்த்தமான கதைக் களம். உண்மையில் இன்றைய காலக் கட்டத்தில் இப்படியான பெற்றோர்களை நிறைய காண்பது வருத்தக்குரியது.
 
#7
வாழ்த்துக்கள் மா.

யதார்த்தமான கதைக் களம். உண்மையில் இன்றைய காலக் கட்டத்தில் இப்படியான பெற்றோர்களை நிறைய காண்பது வருத்தக்குரியது.
நன்றி சிஸ்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement