"கண்ணி வைக்கும் மானே"!!! -14

Sirajunisha

Well-Known Member
#1
1
ஆர்னி மயங்கி விழுந்ததும்..தன் நெஞ்சோடு அணைந்தார் போன்று தன் கைகளில் தாங்கிக் கொண்டவன்.. "ஆனி.. ஆனி.." என்று அவள் கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயன்றான்.. அவளிடம் எந்த அசைவுமே இல்லை... மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர அவர்கள் அடைந்திருந்த அதிர்ச்சி அவர்களை ஒரு அடி கூட நகர விடவில்லை..

முதலில் சுதாரித்த பக்தவட்சலம் தான் அவருக்கு அருகில் இருந்த தண்ணியை எடுத்து ஆர்னியின் முகத்தில் லேசாக தெளித்து அவளை மயக்கத்திலிருந்து தெளிய வைத்தார்... அதன் பிறகு தான் மற்றவர்கள் சுய உணர்வடைந்து ஆர்னியின் அருகில் சென்றனர்...

ஆர்னி கண்ணை விழித்ததும் சற்றே எழுந்து அமர உதவி செய்தவன்... "ஆர் யூ ஆல்ரைட் "? என்று கேட்டான் அமிர்தன் ...

கண்விழித்து ஆர்னிக்கு சற்றும் நேரம் மூளையில் எதுவுமே பதியவில்லை.. என்ன நடந்தது என்று புரியாமலேயே எழுந்து அமர, ஆர்னி நலமாக உள்ளதை அறிந்தவன் சற்றே ஆசுவாச மூச்சு விட்டான்..

அதே நேரம் சரியாக அமிர்தனின் செல் இசைக்க.. எடுத்துப் பார்த்தவன் தந்தை என அறிந்து முகத்தில் சிரிப்புடன் எழுந்தவன்..
2
அருகில் திகைத்தபடி நின்றிருந்த அசோக்கிடம் ஆர்னியை பார்த்துக் கொள்ளுமாறு கண்களால் ஜாடை காட்டி விட்டு, போனை ஆன் செய்து "ஹவ் ஆர் யூ டேட்"? என்று சிரித்து பேசியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றான் ...

அமிர்தனின் குரலில் சுயஉணர்வடைந்தவளுக்கு நடந்தது நிகழ்வு நியாபகம் வர அழ ஆரம்பித்து விட்டாள் .. சுற்றி நின்றிருந்தவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை ...

வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஆர்னியின் அழுகுரலை கேட்டு அங்கு வருவதை கண்ட புருஷோத்தமன் .. "இங்கே எதுவும் பேச வேண்டாம்"? ரூம் க்கு அழைத்துக் கொண்டு போங்க " என்றார் அவசரமாக ...

சூழ்நிலை உணர்ந்து மீனாட்சியும் ஆர்னி, "வாம்மா அழாத.. எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் " "எழுந்து ரூமிற்கு வாம்மா" என்று கையை பிடித்து அழைத்துச் சென்றார்..

"பாட்டியை தவிர அனைவரும் ஆர்னியுடன், என்ன செய்வது ? என்ற தெரியாத நிலையில் அவளுடனே சென்றனர்...

பாட்டி திடீரென பேரன் செய்த காரியத்தால் தேவையில்லாத கற்பனைகள் தோன்ற கன்னத்தில் கைவைத்தபடி அப்படியே அமர்ந்து விட்டார்...

தனது தந்தையிடம் பேசிவிட்டு வந்த அமிர்தன் தனது பாட்டி சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு..
3
"என்ன பாட்டி? ஏன் முகமெல்லாம் டல்லாக இருக்கு"? என்று அவர் நெற்றியில் கை வைத்து பார்க்க... அமிர்தனின் அன்பில் நெகிழ்ந்தவர்க்கு கண்களிலிருந்து கண்ணீர் வந்தது...

"அச்சோ! ஏன் பாட்டி அழறீங்க "? என்றான் பதட்டமாக ...

"என்னப்பா இப்படி பண்ணிட்ட"? என்றார் ஆதங்கமாக...

"நான் என்ன பாட்டி பண்ணேன்"? என்றான் குழப்பமாக..

"ஆர்னி கழுத்தில் ஏன் அந்த செயினை போட்ட "? என்றார் கோபமாக ...

"திவி தான் சொன்னாள்? வெயிட் ஆன நகையா தேடிட்டு இருக்கேன்னு ... அது வெயிட்டா இருந்துச்சு.. சோ .. அதை அவளுக்கு போட்டு விட்டேன் ... நம்ம பேமிலிக்கு வந்த ஆபத்தில் மாட்டி .. அவளுக்கு உயிர் போய் உயிர் வந்திருக்கு.. நாம இதை கூட செய்யலன்னு எப்படி பாட்டி"? என்று கேள்வியாக...

ஏற்கனவே இருந்த சந்தேகம்.. பாட்டிக்கு தெளிவாகி விட்டது.. அது "மாங்கல்யம்" என்று தெரியாமலேயே அமிர்தன், ஆர்னியின் கழுத்தில் அணிவித்திருக்கான்.. இன்னும் அவனுக்கு விசயம் தெரியவில்லை என்று...

பெருமூச்சு விட்டவர்... அமிர்தனுக்கு விசயத்தை கூறும் பொருட்டு, "நீ போட்டது அசோக் , தாரா விற்கு போட வேண்டியது " என்றார் மொட்டையாக...

4
"ஓ! என்றவன் சற்று யோசித்து ஆர்னிக்கு கொடுத்துட்டேனே பாட்டி, "நாம தாரா க்கு வேறு வாங்கி கொடுத்து விடலாம் ".. என்று கூறி பாட்டியின் Bp யை எகிற வைத்தான்...

"அமிர், நீ போட்டது செயினாக இருந்தால் பரவாயில்லையே ... நீ ஆர்னி கழுத்தில் போட்டது அசோக், தாரா கழுத்தில் போட வேண்டிய "மாங்கல்யத்தை" என்றார் சத்தமாக...

"பாட்டியின் குரல் சத்தத்தை கேட்ட நாகேந்திரன் அவசரமாக அங்கு என்னவென்று பார்க்க வந்தார்...

"மாங்கல்யம்"? என்று குழப்பமான முகபாவனையுடன் கேட்டுக் கொண்டிருந்த அமிர்தனை கண்டு தன் பேரனுக்கு அதைபற்றி எதுவும் தெரியாமல் அணிவித்து இருக்கிறான்" என்று அனுபவஸ்தரானவருக்கு விசயம் புரிபட... திரும்பவும் அனைவருக்கும் விசயத்தை கூறும் பொருட்டு ஆர்னியின் அறைக்கு சென்று விட்டார்..

இங்கு பாட்டி, ஒன்றும் அறியாத பேரனுக்கு விசயத்தை தெளிவாக கூறினார்... "ஆமாப்பா... நீ ஆர்னி கழுத்தில் போட்டது .. "மாங்கல்யம்" அதாவது "தாலி".. உனக்கு இன்னும் புரியற மாதிரி சொல்லனும்னா.. "வெட்டிங் ரிங்" மாதிரி "வெட்டிங் செயின்" என்றார் தெளிவாக..
5
"வாட்"? என்று அதிர்ந்த பேரனின் முகத்தை பார்த்த பாட்டிக்கு அமிர்தனை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது...

"எப்படி?.. எனக்கும் இன்டியன் கல்ச்சர் தெரியும்.. டேட் ம் சொல்லியிருக்காங்க.. நான் சினிமாவிலேயும் பார்த்திருக்கேன்.. "மஞ்சள் கயிற்றில் தானே தாலி கட்டுவாங்க"? என்றான் சின்னதம்பி பிரபு போல..

"ஆமாப்பா.. நம்ம மாதிரி பெரிய இடத்தில் உள்ளவங்க தங்கத்தில் தாலி கோர்த்து மணமேடையில் போடுவாங்கப்பா... அதை கூட த்ரிஷா நடிச்ச படத்தில் காட்டினாங்களேப்பா... நீ அந்த படம் பார்த்திருந்தால் இப்படி நடந்திருக்குமா"? "விதி உன்னை அந்த படத்தை பார்க்க விடலப்பா.." என்றார் கன்னத்தில் கைவைத்தபடி சோகமாக...

அமிர்தன் தலைபிடித்தபடி, பாட்டிக்கு முகத்தை காட்டாமல் அமர்ந்திருந்தான்... பின்னே அவன் சிரிப்பதை கண்டால் பாட்டி முதுகில் டின் கட்டி விடுவார்களே"?...

ஆர்னி உயிருக்கு போராடிய நிலையை கண்டவனுக்கு, அவன் உயிர் அவன் வசமில்லை.. ஆர்னி மருத்துவமனையில் இருந்த நாட்களில் ஒரு நாள் இரவு கூட அவன் நிம்மதியாக உறங்கியதில்லை.. எத்தனை முறை அவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்திருப்பான்...
6
எத்தனை இரவுகள் அவனுக்கு தூங்கா இரவுகள் ஆகியிருக்கும்.. அமிர்தனுக்கு கண்ணை மூடி தூங்கவே பயமாக இருந்தது.. அவனையும் அறியாமல் ஆர்னியின் இரத்தம் தோய்ந்த முகமே வந்து அவனை பதறச் செய்தது...

ஒரு நாள் இரவு தூங்காமல் ஆர்னியை பற்றி தன்னையறியாமல் யோசித்துக் கொண்டிருந்தவன்... "ஆனியுடய அணைப்பு கிடைத்தால் தான் நான் நார்மலாக முடியும்" என்று தோன்றியது ...

உடனே இன்னுமொரு எண்ணம்... "அவளிடம் நெருங்கினோம் அவ்வளவுதான்.. அன்றைக்கு ஏதோ கிஸ் பண்ணும் போது அவளுக்கு என்னை பிடித்திருந்ததால்... என்று சிந்தித்து கொண்டிருந்தவன்.. டக்கென்று எழுந்து அமர்ந்தான்...

மனம் பரப்பாக அவசரமாக அவள் உடனிருந்த நிகழ்வுகளை யோசித்து பார்க்க.. சுய உணர்வில்லா நினையிலும் தன்னை உணர்ந்து வெட்கச் சிரிப்பு சிரித்தவளை நினைத்தவனுக்கு ஆர்னியும் தன்னை விரும்புகிறாள் என்பது வெட்ட வெளிச்சமாகியது...

ஆனால் அதை ஆர்னி ஒரு போதும் ஒப்புக் கொள்ள போவதில்லை.. "என்ன செய்வது "? என்று யோசித்து கொண்டிருந்தவனுக்கு சூழ்நிலை சரியாக அமைய தனது திருமணத்தை நடத்திவிட்டான்... இனி மற்றவர்களை சமாளிக்க வேண்டும்.. நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவன்...
7
"பாட்டி.. இது ஒரு ஜஸ்ட் ஆக்ஸிடென்ட் மாதிரி தான்.. தெரியாமல் "தாலி" போட்டுட்டேன்.. அதற்காக நாங்க கணவன் மனைவியாக வாழனும் என்று எந்த அவசியமும் இல்லை.. ஆனி யை "தாலி" யை கழற்றிக் கொடுக்க சொல்லிடுங்க...

"ஒரு பெண்ணுக்கு தாலி அவள் கழுத்தில் தெரிந்து ஏறினாலும் , தெரியாமல் ஏறினாலும்.. நீ தான் அவனுக்கு மனைவி னோ, ஆனி கழுத்தில் உள்ள தாலியை கழற்றினால் என் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ " என்று தேவையில்லாமல் யோசிக்காதீங்க... என்று கூறியபடி பாட்டியை பார்த்தான்...

"அப்படியெல்லாம் அபசகுணமா பேசாதப்பா " என்று பாட்டி கண்கலங்கினார்...

"நான் உள்ளதை தான் சொல்ற பாட்டி, நீங்க சம்பிரதாயத்தை எல்லாம் உயிர் மூச்சு மாதிரி கடைபிடிக்கிறீங்க.. அதனால் தான் சொன்னேன் " என்று பாட்டிக்கு பெரிய ஐஸ் ஆக தூக்கி வைத்தவன்..

"இன்னொரு முக்கியமான விசயம்.. இந்த ஊர் பெண்ணை கல்யாணம் செய்தால் தான் என்னை உங்க கூடவே வைத்துக் கொள்ள முடியும் னு" இதை என்னோட கல்யாணம் தான்னு நீங்க முடிவெடுத்து எல்லாரையும் ஒப்புக் கொள்ள வைத்து விடாதீங்க" என்று ஒவ்வொரு பாயிண்டாக பாட்டிக்கு எடுத்து கொடுத்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் அமர்ந்திருந்தான்...
 

Sirajunisha

Well-Known Member
#2
8
சற்று நேரம் யோசித்த பாட்டியின் முகம் பிரகாசமாவதை கண்டு, "ஹப்பா.. என்னோட பிரகாசமான எதிர்காலமே பாட்டி முகத்தில் தான் தெரியுது" என்று மனதில் நினைத்தவன்... தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டாது .. இரு கைகளையும் தலையில் தாங்கியபடி போஸ் கொடுத்து அமர்ந்து கொண்டான்..

ஆர்னியின் அறைக்கு எழுந்து சென்றார் பாட்டி.. "அங்கு ஆர்னி அழுதழுது முகமெல்லாம் ரோஜா நிறத்திற்கு மாதிரி கண்ணீர் மல்க அமர்ந்தபடி, "என் கழுத்தில் உள்ளதை தயவு செய்து யாராவது கழற்றுங்க " என்று அழுகையும் ஆத்திரமுமாக அனைவரிமும் கத்திக் கொண்டிருந்தாள்...

ஆர்னியின் நிலைமை அங்கிருந்த அனைவருக்குமே நன்றாக புரிந்தது.. இருந்தாலும் அவள் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை கழற்ற யாருக்குமே துணிவு வரவில்லை ...அமிர்தனும் இதை மாங்கல்யம் என்று தெரியாமல் போட்டிருக்கான்" என்று நாகேந்திரன் சொன்னவுடன் அவளது கோபம் பன்மடங்காக அதிகரித்து விட்டது...

உள்ளே நுழைந்த படி, "இங்கே பார் ஆர்னி, தெரிந்து நடந்ததோ தெரியாமல் நடந்ததோ.. உனக்கும் அமிர்தனுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது. இதை யாராலேயும் மாற்ற முடியாது..
9
"நீனும் அமிர்தனும் தான் கணவன் மனைவியா வாழனுமென்று கடவுளோட முடிச்சு இருக்கு.. அதனால் நான் இப்படி நடந்திருக்கு.. இதை யாராலேயும் மாற்ற முடியாது.. உங்க குடும்பத்தில் உள்ளவங்களிடம் நான் பேசுகிறேன்... உன்னை மாதிரியே அமிரும் பேசிட்டு இருக்கான்.. இது சரியாக வராது.. பெரியவ நான் சொல்வதை கேட்டுத்தான் ஆகணும்" என்றவர்..

பாட்டி பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களிடமும்.. " இது அமிருக்கும் ஆர்னிக்கு மட்டும் சொல்லவில்லை.. உங்க எல்லோருக்கும் தான் " என்றவர்... பாகுபலி படத்தில் சிவகாமி சொல்வது போல் "இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்" என்று பில்டப்புடன் கம்பீரமாக சொல்லி விட்டு சென்று விட்டார்...

நாகேந்திரனே சற்று நேரம் தனது மனைவியின் பேச்சில் அசந்து விட்டார்.. அவருக்கு எங்கே தெரியப் போகிறது.. கதை, வசனம் எல்லாம் தனது பேரன் தான் சொல்லிக் கொடுத்தான் என்று....

திவி மட்டும் ஆர்னியின் உடன் இருக்க, மற்றவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியில் வந்தனர்... அமிர்தன் தலையை தாங்கி பிடித்த படி அமர்ந்திருப்பதை கண்டு அசோக் அண்ணன் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தான்...
10
சற்றே தலைநிமிர்த்தி பார்த்தவன், எல்லோரும் அவனை பாவமாக பார்ப்பதை கண்டு.. "நான் கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும் " என்று கூறிவிட்டு மாடிக்குச் சென்று விட்டான்...

நாகேந்திரன், ஜெயராமன், மீனாட்சி, அசோக் மட்டும் அப்படியே ஏதோ யோசித்தபடி அமர்ந்து இருந்தனர்.. புருஷோத்தமன், பார்வதி, பக்தவட்சலம் போன்றவர்கள் கிளம்பிச் சென்றிருந்தனர்...

வெகு நேரம் கழித்து ஆர்னியின் அறையிலிருந்து திவ்யா வெளியே வந்தாள் .. தனது மகளை கண்ட மீனாட்சி, "ஆர்னி என்ன பண்றா"? திவி .. என்றார் கவலையாக..

"கஷ்டப்பட்டு சாப்பிட வைத்து மாத்திரை கொடுத்து தூங்க வைத்திருக்கேன்.. தேமிக்கிட்டே தூங்குறா மா.. பார்த்தாலே பாவமா இருக்கு" என்றாள் திவி ..

"திவி, "என்னதான் ஆர்னி உனக்கு பிரண்ட் ஆக இருந்தாலும்... இனி அண்ணணோட வைஃப்.. சோ.. பெயரை சொல்லி கூப்பிட்டாலும் பரவாயில்லை .. அவ, இவ ன்னு பேசாதே புரியுதா "? என்றான் அசோக் எச்சரிக்கை விதமாக...

"சரி" என்று தலையாட்டியவள்... சற்று யோசித்து.. "அமிர்தன் அண்ணன் பேசி பழகறதுக்கு கூட ஸ்டேடஸ் பார்ப்பாங்க".."என்னை கூட. பழகுறவங்களிடம் கவனமா இருன்னு கண்டித்திருக்காங்க"...

11
"ஆனால் இப்போ டோட்டலா அவங்க குணத்திற்கு மாற்றமாக எல்லாமே நடந்து விட்டது .. ஆர்னி ரொம்பவே நல்ல பொண்ணு... எனக்கு அண்ணணை நினைத்தால் தான் கவலையாக இருக்கு " என்றாள் கன்னத்தில் கைவைத்தபடி திவி ...

அமிர்தன் அண்ண எந்த சிசுவேசனையும் ஈஸியா ஹேண்டில் பண்ணுவாங்க.. நாம ஒன்னுமே பண்ண முடியாதுன்னு நினைக்கிற இடத்தில் கூட நாம நினைக்காத ஒன்றை கொண்டு வந்து சக்ஸஸ் பண்ணுவாங்க.. நான் பலதடவை இதை அவங்களிடம் பார்த்து பிரம்மிச்சிருக்கேன்..

"பிஸ்னஸிலேயே அப்படினா.. தன்னோட லைப்பையும் சரியா கொண்டு போவாங்க.. சோ .. நீ தேவையில்லாமல் வொரி பண்ணாத திவி " என்றான் அசோக் தன் தங்கையை தேற்றும் விதமாக ...

"ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்டவள்.. தனது அறைக்கு எழுந்து சென்று விட்டாள் ...

நேரம் யாருக்காகவும் காத்திருக்காமல் ஓடிக் கொண்டிருந்தது.. மாலை வேளை அமிர்தன் கிளம்பி வெளியில் சென்றான் .. பாட்டி ஜாதகம் பார்க்கக் கூடிய ஐயர்க்கு போன் செய்து ஏதோ விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.. பிறகு மீனாட்சியும் பாட்டியும் மட்டும் கிளம்பி வெளியில் சென்றனர்.. திவி, ஆர்னிக்கு துணையாக இருந்து விட்டாள்..

12
ஆர்னி அப்படியே படுத்துக் கிடந்தாள்.. கண்ணீரெல்லாம் வரவில்லை .. ஒரு நொடியில் அவளுடைய வாழ்க்கையை ஒருவனால் மாற்ற முடியுமா? .. அவள் நினைத்தது என்ன? .. இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?.. பேருந்தில் சந்தோஷமாக பயணம் செய்து கொண்டிருக்க வேண்டியவளை இப்படி செய்துவிட்டானே? " என்று ஆதங்கமாக இருந்தது..

இன்னொரு மனம், அவனுக்கு இது என்னென்னு தெரியாமல் தான் போட்டுட்டான்னு பெரியவர் சொன்னாரே.. அது உண்மையா இருக்குமா?... "இவன் கேடி இவனை நம்ம முடியாது?"".. ஆனால் அவன் சாதாரணமா தானே போன் பேசிட்டு இருந்தான் .. அப்போ நிஜமாகவே இது தாலின்னு தெரியாதா"? என்று பலவாறு தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தாள்..

மீனாட்சியும் , பாட்டியும் வெளியில் சென்றவர்கள் வந்து விட்டார்கள் என்பது வெளியில் கேட்ட பேச்சுக் குரலிலேயே தெரிந்தது.. "அமிர் இன்னும் வரவில்லையா திவி"? என்றார் பாட்டி..

"இல்லை பாட்டி.. இன்னும் வரவில்லை " என்று திவி கூறுவதும் காதில் விழுந்தது..

ஆர்னி கடிகாரத்தை பார்த்தாள் மணி இரவு 10 :30 என காட்டியது.. இவ்வளவு நேரமாகியும் வரவில்லை யா? என்று துணுக்குற்றவள் எழுந்து அமர்ந்து விட்டாள்...
13
"ஏன்.. இன்னும் வரவில்லை ? " என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அமிர்தன் வந்து விட்டான்..

"வாப்பா.. அமிர் ..எங்கே போன? .. ஏன் இவ்வளவு நேரம்"? என்றார் கேள்வியாக...

"ஷு வை கழற்றிவிட்டு சாக்ஸ் உடனே வந்து அமர்ந்தவன்.."என்ன பாட்டி கேள்வியெல்லாம் பலமா இருக்கு"? என்றான் ..

"முன்னாடி மாதிரி இல்லையேப்பா.. நீ இப்போ குடும்பஸ்தன் ஆயிட்ட.. உனக்குன்னு இப்போ மனைவி வந்துட்டா.. இனிமே நேராநேரத்தோட வீட்டிற்கு வந்துவிடனுப்பா ".. என்றார் பாட்டி கிண்டலாக...

இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து குடும்பத்தினர் அனைவருமே கூடி விட்டனர்...

கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்.. பாட்டியையே அழுத்தமாக பார்த்தபடி, " இப்போ என்ன பாட்டி சொல்ல வர்றீங்க ? தெரியாமல் நடந்தாலும் கல்யாணம் தான் சொல்றீங்களா? " என்றான்..

பாட்டியும் தெனாவட்டாக ஷோபாவில் அமர்ந்தவர்.."ஆமாம் அமிர் " என்றார் அழுத்தமாக ..

"அப்படியென்றால் நானும், ஆனியும் கணவன் மனைவியும் தான்னு சொல்றீங்களா?" என்றான் கேள்வியாக...

"ஆமாப்பா " என்றார் பாட்டியும் கராராக..

"இதை மாற்ற முடியாதுன்னு சொல்றீங்களா"?..

"ஆமாப்பா.. ஆமா " என்றார் பாட்டியும் ...

14
இதை கேட்டுக் கொண்டிருந்த ஆர்னிக்கு, "இவன் பாட்டியை கேள்விக் கேட்கிறானா?.. இல்லை எல்லோர் மனசிலேயும்.. நாங்க இரண்டு பேரும் கணவன் மனைவிதான்னு பதிய வைக்கிறானா"? என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள் ...

பெருமூச்சு விட்டபடி எழுந்தவன்... "இதை ஆனி சொல்லட்டும்.. அப்போ நான் ஒத்துக்கிறேன் " என்றான் அமிர்தன் . பாட்டியை அழுத்தமாக பார்த்தபடி..

"ஆர்னிக்கு மனதில் திக்கென்றது.. ஐயோ! "என்ன என்னை சொல்ல சொல்றான் "? என்று சிந்தித்தவள்.. பிறகு தெளிந்து.. "ஆர்னி .. இது கூட நல்ல வாய்ப்பு தான் சம்மதமில்லை னு சொல்லிட்டு.. நாம கிளம்பிடலாம் " என்று முடிவெடுத்து விட்டாள் ...

"ஆர்னி சொல்லுவது இருக்கட்டும்.. நாங்க எடுத்த முடிவிற்கு உன் பதில் என்ன?.. முதலில் அதை சொல் " என்றார் பாட்டி.. (ஏற்கனவே முடிவு பண்ணித்தான் தாலியே கட்டிட்டான்.. அவன்ட்ட என்ன முடிவுன்னு கேக்கிறீங்களே.. பாட்டி)

சற்று நேரம் அமைதியாக இருந்தான்... (டேய் அமிரு.. வேணாம்டா.. உன்னை பற்றி நான் எல்லா உண்மையும் மக்கள் ட சொல்லிட்டேன்.. ஓவரா பில்டப் பண்ணாத ஆமா..)

"பதில் சொல்லுப்பா " என்று அமிர்தனை ஊக்கினார் பாட்டி..
 

Sirajunisha

Well-Known Member
#3
15
" பெரியவங்க உங்களையும்.. நம்ம கலாச்சாரத்தையும் நான் மதிக்கிறேன்... (பார்ரா.. டேய் வேணாண்டா .. எனக்கு கண்ண கட்டுது).. ஆனி என்னுடைய மனைவி தான்.. ஆனால் ஆனி க்கு இதில் விருப்பமில்லையென்றால் அவளை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது ".. என்று தீர்க்கமாக கூறியவன்..

"திவி , ஆனி சாப்பிட்டாச்சா " என்றான் ..

"இன்னும் இல்லை அண்ணா " என்றாள் திவி..

"சாப்பிட்டதும்.. ஆனி யை மாடிக்கு வரச் சொல் " என்று நகரப் போனவனை..

இடைமறித்த பாட்டி, "ஐயோ அமிர் .. இன்றைக்கு "பர்ஸ்ட் நைட்" எல்லாம் ஏற்பாடு பண்ணவில்லை" என்றார் அபத்தமாக..

இப்போது குடும்பமே சேர்ந்து பாட்டியை கொலை வெறியோடு முறைத்தது.. "விசாலம்ம்ம் " என்றார் நாகேந்திரன் பல்லை கடித்தபடி...

"பர்ஸ்ட் நைட் " தான கொண்டாடுறேன் என்று கடுகடுத்தவன்.. "நானே ரிஃப்ரெஷ் பண்ணிவிட்டு கீழே வரேன் " என்று பொதுவாக சொன்னவன் தனது அறைக்கு சென்று விட்டான்...

அமிர்தன் சென்றதும் நாகேந்திரன், ஜெயராமன் , அசோக், திவி, மீனாட்சி எல்லோரும் பாட்டியை சுற்றி நின்று கொண்டு பிலுபிலுவென பிடித்துக் கொண்டனர்...

16
"ஏன் விசாலம்.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? ".. "எந்த நேரத்தில் எதை பேசுறதுன்னு தெரியாமல் "?.."சில, நேரம் ரொம்ப அறிவா பேசுற.. சில நேரம் அப்படியே அறிவுகெட்டத்தனமா பேசுற" என்றார் கோபமாக ...

"ஏங்க.. என்னை திட்டுறீங்க"? என்றார் பாவமாக ...

"பின்னே என்ன பாட்டி... ஆர்னியிடம் பேசறத்துக்கு அண்ணன் வரச் சொன்னால்.. நீங்க தத்து பித்துனு உலறிட்டு இருக்கீங்க" என்றான் அசோக் ...

"பாட்டி பாவமாக எல்லோரையும் பார்க்க... சரி சரி விடுங்க " என்று ஜெயராமன் தான் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்..

தனது அறைக்கு வந்த அமிர்தன், தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.. காலையில் "தாலி செயினை போடும் போது பார்த்தது.. இன்னும் நான் உன்னை பார்க்கல ... "என்ன மனநிலையில் இருக்க?.. என் மேல் கோபமாக இருக்கியா"? கண்டிப்பாக கோபம் இருக்கும்...

நான் கேட்கும் பொழுது, கண்டிப்பாக எனக்கு இஷ்டமில்லை தான் சொல்லுவ.. உன்னை "சரி" சொல்ல வைக்கணும்?".. என்ன பண்ணலாம்..

"என் மேல் உள்ள லவ் ஐ.. கொஞ்சமா வெளியே வர வைத்தால் போதும்.. உன்னை சரி சொல்ல வைத்து விடுவேன்" என்று யோசித்தவனின் முகத்தில் ...

17
மெல்ல சிரிப்பு தோன்ற, "Mrs.ஆர்னி அமிர்தன் " கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்க வாயாலேயே சம்மதம் னு சொல்ல வைக்கிறேன் ".

வெயிட் பண்ணு டி.. "மை ஸ்வீட் பொண்டாட்டி" என்று மனதிற்குள் ஆர்னியை கொஞ்சிக் கொண்டிருந்தான் "அமிர்தன் "...

பிரிய நினைக்கும் மனைவிக்கும்...
சேர நினைக்கும் கணவனுக்கும்..

விதி என்ன வைத்திருக்கிறதோ?..

தொடரும்...
 

Sirajunisha

Well-Known Member
#4
ஹாய் மக்களே,
நான் அடுத்த udயோடு வந்துட்டேன். போன Ud க்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

உங்களுடைய வரவேற்பை பார்த்து கண்ணு வேர்த்து போச்சு மக்களே..

இந்த Ud படிச்சிட்டு நீங்க விரும்பிய மாதிரி இருக்கான்னு... கண்டிப்பா ஜொள்ளிட்டு போங்கோ...

கதையை படிங்க கருத்தை சொல்லுங்க..

Waiting for ur comments makkaley ..
 
#10
ஹா... ஹா... ஹா.........
இந்த அமிர்தன் கேடி பில்லா
கில்லாடி ரங்காவா
இருக்கானேப்பா?
அடேய், அமிர்தன்?
தாலியோட மகத்துவம்
என்ன-ன்னு தெரிஞ்சே-தான்
ஆர்னியை நீ கல்யாணம்
செய்தாயா, அமிர் பையா?
அந்த ஆர்னிப் புள்ள மேல
இந்த அமிர்தன் பயல், இம்பூட்டு
லவ்ஸ் வைச்சிருக்கோக்குள்ள
நாங்க என்னத்த ஜொள்ளறது,
சிராஜ் டியர்?
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates