ஒரு பெண்ணின் கதை

Advertisement

Sahi

Well-Known Member
நம் இந்நாட்களில் பார்க்காத அல்லது கேட்காத வித்தியாசமான கதை இல்லை. ரொம்பவும் பொதுவான, மத்தியதர வர்க்கத்தில் ஆண் பிள்ளை மோகம் கொண்ட குடும்பத்தில் பிறந்த பெண்ணின் கதை. இதைவிட கொடுமை அனுபவிக்கும் பெண்கள் இருக்கலாம். ஆனால் ஒரு தவறும் செய்யாது மனதளவில் நொந்து பகிரக்கூட ஆள் இல்லாமல் தவிக்கும் நம் சகோதரிகளில் ஒருவரின் கதை.
ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளை கொண்ட அளவான குடும்பம். சிறுபிராயத்திலிருந்து பல வேறுபாடுகள் காட்டியிருந்தாலும் அதை அறியாது தன் மேல் வன்மம் கொண்ட பாட்டிகள், சித்தி, சில நேரங்களில் அம்மா என்று அனைவரையும் தன் வாய் பேச்சினால் வென்றாள். பதின்ம வயதில் அண்ணனுக்காக பாட்டி வீட்டில் இருந்து படிப்பை மேற்கொண்ட போது பல வெளியில் சொல்ல முடியாத துன்பங்களை கடந்தாள் (கதையேயாயினும் ஒரு சிறு பெண்ணுக்கு உறவினர்களால் ஏற்படும் பாலியல் துன்பறுத்தலை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை). வேதியியல் பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டமும் பெற்றாள். அடுத்தக் கட்டம் திருமணம். அனைவருக்கும் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நிகழ்வு அவளுக்கு ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில். அப்பாவிற்கு விருப்பமில்லை அந்த வரனில். அம்மா மற்றும் அண்ணனின் பிடிவாதம் வென்றது. ஏன் அப்படி என்ன குறைபாடுகள் அந்த வரனில்? பையனின் படிப்பு ஜஸ்ட் ஆவெரேஜ் ஒரு டிகிரி. அதுவும் பல அரியர்ஸ். அந்த பெண்ணின் மீதும் அக்கறை கொண்ட சிலரின் கண்ணிற்கு பட்டது நிறம் மற்றும் தோற்றம். அதையும் தாண்டி மாத வருமானம் பத்து வருடங்களுக்கு முன்பே எனினும் ரூ. 2500/-. இதையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்ல ஜாதகத்தை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். ஆம் பெண்ணின் ஜாதகப்படி அவளுக்கு எல்லா விதத்திலேயும் கீழே உள்ள மணமகன் தான் அமைவான் என்று அவள் அப்பாவை சமாதானம் செய்தார்கள்.
இதோடு முடிந்ததா இல்லை இல்லை இனிமேல் தான் இன்னும்.
இரு மணமக்கள் வீட்டார் இடையே சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்த கருத்து வேறுபாடு பெரிய கருத்து மோதல்களில் வந்து நின்றது. எதுவுமே வெளிப்படையாக இல்லை. வெளியே சிரித்துக்கொண்டும் உள்ளே எரிமலையாக குமுறிக்கொண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தேறின. இதில் பெண்ணின் அம்மா மணப்பெண்ணிடம் உன் மாமியார் இப்படி பண்றாங்க (கல்யாணத்திற்கு முன்னாடியே உன் மாமியார் நல்லாயிருக்குள்ள நியாயம்), உன் நாத்தனார் இப்படி பண்றான்னு ஒரே புலம்பல். இதை பொறுக்க முடியாமல் இப்படி ஒரு கல்யாணம் தேவையான்னு கேட்டதுக்கு பின்ன இங்கேயிருந்து உங்க அண்ணன ஒன்னுமே இல்லாம செய்யப்போறியான்னு (ஜோஷியக்காரர்களின் உபயம் - பெண்ணுக்கு கல்யாணம் நடந்தால் தான் பையன் வேலைக்கு போவான்) கேட்ட கேள்வியில் அதன் பின் தேவைக்குக் கூட வாய் திறக்கவில்லை.
எல்லா களேபரத்துலேயும் கல்யாணம் அப்பாவின் ஆசைப்படி (இதுமட்டும் தான்) மிகவும் விமரிசையாக நடந்தது. எல்லா சடங்குகளிலும் ஜடமாக பங்கேற்றாள். அதன் பின்னும் சர்ச்சை. முதலிரவு பெண் வீட்டிலா, மாப்பிள்ளை வீட்டிலா என்று. எப்படியோ அதையும் கடந்து வாழ்க்கையை எதிர் நோக்க ஆரம்பித்தாள். இன்னும் விடவில்லை அவர்களின் நீயா நானா பிரச்சனை. நம் ஊரில் தான் கல்யாணம் முடிந்தது என்று விட மாட்டார்களே தாலி பிரித்து கோர்த்தல், ஆடி மாசம் இப்படி பல சம்பிரதாயங்கள் இருக்குமே. இதெல்லாம் நடந்துச்சோ இல்லையோ அமோகமா சண்டை நடந்துச்சு.
எடுத்ததுக்கெல்லாம் உங்க முறை எங்க முறைனு அதுல ஒருத்தவங்க பெண் வீட்ட தங்கள் சாதியே இல்லைனு வேற சொல்லி படிக்கிற பிள்ளைங்க வரைக்கும் வம்பாயிடுச்சு.
இதையெல்லாம் காரணமா வைத்து தனியா போயிடுங்கன்னு பிள்ளையோட அம்மா சொல்ல அதை ஒரே மனதாக ஆமோதித்தார் அரைவேக்காடு மாமனார் (மாப்பிள்ளையின் அப்பாதாங்க).
கல்யாணம் பண்ணி வச்சுட்டு அம்மா ஒதுங்கியாச்சு பையனுக்கு லைன் கிளியர்னு. பையனோட அம்மாவுக்கு அவன் வருமானத்துல பிழைக்க முடியாது வந்தவளுக்கும் சேர்த்து செலவு செய்யணும்னு வெளிய போக சொல்லியாச்சு. இதுல மாட்டிகிட்டு முழிக்கிறது பெண்ணோட அப்பாவும் எல்லாத்துக்கும் தலையாட்டின பொண்ணும் தான். மாப்பிள்ளையை கேட்கறீங்களா? அவருக்கு என்னங்க? நடந்தது, நடக்குறது, நடக்கப்போவது (எல்லாம் அவன் செயல்) எதுவுமே தெரியாதுன்னு ஒரு லுக்.
தனிக்குடித்தனம் வந்து இப்படி அப்படின்னு அவளும் ஒரு வேலைக்கு போய் அப்பாவோட சப்போர்ட்டோட ரொம்ப இல்லனாலும் ஒரு நல்ல வாழ்க்கைய ஆரம்பிச்சா.
நிலைக்க விடலையே. பையன் வீட்டிலிருந்து தூது பக்கத்துலேயே வீடு பார்த்து வந்திருங்கன்னு.
இப்பவும் பேசாம இருந்த வேலைக்கு ஆகாதுன்னு முடியவே முடியாதுன்னுட்டா பொண்ணு (ஏன் பேர் சொல்லவே இல்லைனு யோசிக்கறீங்களா? இங்க representatives நிறைய பேர் இருக்கறதுனால ஒரு பேர்ல அடக்க விரும்பல. அதைவிட கதைக்கருவே போதும்னு தோன்றியதால).
நம்ம ஊர் மாமியார்தனத்தை காமிக்க ஆரம்பிச்சுட்டாங்க அவ மாமியார் அதுதாங்க பையன பிரிச்சுட்டா, குடும்பத்தை குலைச்சுட்டான்னு (ஒரு சீக்ரெட் சொல்றேன் அவங்க பெரிய பையன் காதல் கல்யாணம் வீட்டுக்கு தெரியாம. ஷ் யாருகிட்டேயும் சொல்லிறாதீங்க பெண் வீட்டுக்கு இது தெரியாது) அது மட்டுமா சாபமும் கூட உனக்கெல்லாம் பிள்ளையே பிறக்காது பொறந்தாலும் கூன், குருடுதான் பிறக்கும்னு.
இந்த சாபமோ இல்லை யார் செய்த பாவமோ கணவனோடான நேரங்கள் எல்லாம் கல்யாணத்தின் போது நடந்த பிரச்சினைகள், மாமியாரின் சாபங்கள், சிறு வயதில் நடந்த பாலியல் கொடுமைகள்னு அவனை நெருங்கவே விடறதில்லை. பகலில் சரி என்று தோன்றும் எல்லாம் இரவில் இருட்டறையில் கொடுமைகளாக வடிவெடுத்தது. ஒரு சில நாட்களில் அவளே நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்றாலும் கணவன் கேட்டால் தானே.
யாருக்கும் நான்கு சுவர்களுக்குள் நடப்பது தெரியாததால் மகளிர் மருத்துவர் (gynaecologist), கோயில், பரிகாரம் என்று படையெடுப்பு வேறு. ரொம்ப நாளைக்கு இது பொறுக்காது அம்மாவிடம் தான் சிறுவயதில் பட்ட துன்பத்தை மேலோட்டமாகக் கூறி அதனால் தான் குழந்தையின்மை அப்படிங்கிறதையும் தயக்கத்தோடு சொன்னா. அதற்கான பதில் பல பேர் அப்படித்தான் கஷ்டப்பட்டு இருக்காங்க. அதற்காக என்ன பண்றது அப்படின்னு ஒரு ஆறுதல் படுத்தின ஒரே அம்மா அவங்க தான். இதற்கு மேல நடப்பது நடக்கட்டும்னு இனிமேல் டாக்டரிடமோ, கோயில் குளம், பரிகாரம்னோ கூப்பிடாதீங்க நான் வர மாட்டான் எதுவும் செய்யவும் மாட்டேன் அப்படின்னு முடிவெடுத்துட்டா. (இந்த இடைப்பட்ட காலத்தில் நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் அவள் அண்ணனுக்கு திருமணமும் முடிந்தது. எங்க அந்த ஜோஷியக்காரன்?)
இப்பவும் அவங்க அம்மா கவலை எல்லாம் மகனுக்கு ஒரு நல்ல வேலை குடும்பத்துக்கு மகன் மூலமா வாரிசு. ஒரு விளக்கமும் கொடுத்தாங்க பொண்ணுகிட்ட. நீயும் அவரும் வேலைக்கு போய் எப்படியோ குடும்பம் ஓடுது. ஆனால் வருமானம் குறைச்சல் தானே இதுல குழந்தை இருந்தா இன்னும் கஷ்டம்னு.
இதோட விட்டாங்களா எப்படியோ நீ செட்டில் ஆயிட்ட (பண பற்றாக்குறை, திருமண வாழ்க்கை கேள்விக்குறி ... இதற்கு பேர் செட்டில் ஆறது) அவனுக்கு தான் பாவம் வேலை கிடைக்க மாட்டேங்குதுனு ஆதங்கம். (இரண்டு முறை அப்பா சிபாரிசில் வேலை வாங்கி கொடுத்ததும், பிசினஸ் பண்ணுவேன்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு போய் அதை விட்டதும் partial amnetiaல அவங்களுக்கு மறந்து போச்சு பாவம் வயசாயிடுச்சுல்ல)
ஒரே வருடத்தில் மகனுக்கு குழந்தை வர தாமதம் என்று எல்லா கடவுளையும் வேண்டி வரம் பெற்றவரால் பெண்ணுக்கு வேண்ட மனம் வரவில்லை.

இதோ 12 வருடங்கள் கடந்தும் இன்னும் ரூ. 15,000/- மாத வருமானத்தில் கட்டுத்திட்டமாக குடும்பம் நடத்தி, ஒரே ஆறுதலாக இருந்த அப்பாவையும் இழந்து, குழந்தையும் இல்லாது, இல்லற வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாது, சுயநலம் மட்டுமே உருவான சகோதரனின் வாழ்க்கையை கண்டு கொஞ்சமும் பொறாமை இன்றி, இன்னுமும் மகன் இப்பொழுது கூட மருமகள், பேரன், பேத்தி என்று மட்டுமே பார்க்கும் அம்மாவின் போக்கில் எந்த மாற்றமும் இல்லாது வாழ்க்கையை வெறுமே கடமைக்கு மட்டுமே வாழும் ஒரு பெண்ணின் கதை.
 

priya raghavan

Well-Known Member
Hmmm...ivvalavu kodumai ellam lifela irukkannu theriyalai....konjam adhigama uvagaipadhinana maadhiriirukku.....enga veetla vela seiravanga ponnuku jaadhagam paar karanga....mapilaiku car (~6lakhs) vaangithara readya irukkanga..so paiyan car vachu pizhaichupannu solranga..apadi vela par kara paiyana irundha site kuduppangalam..So...ponnuku nalla thaan seiyaranga....paisavoda thaan poranga..athanala pora idhathulaiyum kethathaan irukkanga..
 

banumathi jayaraman

Well-Known Member
Thanks Banuma.
Oru dbt eppo thoonguveenga. Romba late night varaikum muzhichurukkeenga.
Take care of ur health please. Its my humble request.
என் மீதான உங்களுடைய
அக்கறைக்கு மிகவும் நன்றி,
சஹி டியர்
எப்பவும் 11மணிக்கு படுத்துடுவேன்
(மல்லிகா அப்டேட் உண்டு-ன்னு
சொன்னால் மட்டும் லேட்டாகும்)
தூக்கம் வரும் பொழுது
தூங்கிடுவேன்ப்பா
இன்று ஒரு தூக்கம் போட்டுட்டு
நடுவில் பாத்ரூம் போக எழுந்த
பொழுது செல்லில் பார்த்து
இங்கே வந்தேன்
உங்களுடைய அப்டேட் பார்த்து
ஒரு எமோஜி மட்டும் போட்டுட்டு
தூங்கப் போயிட்டேன்ப்பா
ஷான்வி டியரோட அப்டேட்டுக்கும்
இதேதான் செய்தேன்
Once again thank you, சஹி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top