ஒரு பத்தி கதை - காஃபி வித் ஃபெர்னாண்டஸ்

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எல்லா எழுத்தாளர்களும் முப்பது எபிசோட் நாற்பது எபிசோட்-ன்னு நான்-ஸ்டாப் ஆ போயிட்டு இருக்காங்க. நமக்கு அம்புட்டு அறிவு இல்லைங்கோ. குட்டியா .... ஒரு பத்தி-ல கதை முயற்சி செய்திருக்கேன். படிச்சு எப்படின்னு சொல்லுங்க நட்புக்களே...

"எப்பிடிறா? உனக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க தோணுது?" - ன்னு கவுண்டமணி செந்தில் கிட்ட கேட்ட மாதிரி... பல்லை நறநறன்னு கடிச்சீங்கன்னா .. யோசிக்காம கமெண்ட்-ல சொல்லுங்க.

[சுஜாதாவின் ரெண்டு வரி கதைகள் - இதற்கு முன்னோடி]
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இது ஒரு பத்தி கதை........

"ஹாய் நிலா, நான் சூர்யா", என்று எதோ ஒரு கதாநாயகன் நாயகியோடு பேசும் வசனம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்தது.

வின்சென்ட் பெர்னாண்டஸ், உணவருந்தும் மேஜையில் காஃபி கப்-பினை வைத்து.. "தாத்தா காஃபி" என்று அவனது தாத்தா ஹியூபெர்ட் பெர்னாண்டஸ் க்கு கொடுத்தான். அவரோ வெகு தீவிரமாக ஒரு கடிதத்தை படித்தபடி காஃபியை எடுத்துக் குடித்தார். பத்து நிமிடத்தில் மயங்கி சரிந்தது அவர் உடல். "சாரி தாத்தா, என் காதல் சக்ஸஸ் ஆகணும்-னா சொத்து பூரா என்னோடதா இருக்கணும்-கின்றது ஸ்டெல்லா வீட்ல போட்ட கண்டிஷன், எனக்கு உங்களை மேல அனுப்பறத தவிர வேற வழி தெரியல ",என்று அவன் மனதுக்குள் பேசினான். மெதுவே அவர் கையில் இருந்த கடிதத்தை எடுத்து படிக்க.....

அது நீதிமன்றம் கொடுத்திருந்த ... அவர்களது நிறுவனத்தின் திவால் நோட்டீஸ்..


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 

Eswari kasi

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO: (y):love::love: நீ தாத்தாவுக்கு ஆப்பு வைச்ச ஆன உனக்குள்ள ஆப்பு கடவுள் ரெடி வைச்சுயிருப்பார் என்பதை மறந்துட்டையே விின்செனட் பெர்னாண்்்டஸு:LOL:

சூப்பர் டியர், தெய்வம் நின்றுக் கொல்லும் நிலை மாறி இப்பவெல்லாம் தெய்வம் அன்றே கொல்லும் நிலை வந்துவிட்டது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top