ஒரு குரல் போலவே நீ எனக்குள்ளே 1

Advertisement

n.palaniappan

Well-Known Member
சர்வமும் நீயே 1:

இந்த பில்டிங் டிசைன் முடிஞ்சுது .. அரவிந்த் வந்ததும் செக் பண்ணி மெயில் பண்ண சொல்லுங்க ..நான் வீட்டுக்கு கெ லம்புறேன் என்று தன் ஜூனியர்க்கு.. இதை சொல்லும்போதே ஷ்ரத்தா தன் பொருட்களை அவள் கை பையில் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தால் ஆபீஸில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு மிகவும் முக்கியம் .. ஷ்ரத்தா இந்த ஆபீஸில் டிசைனிங் டிபார்ட்மெண்ட் மேனஜர் ஆன அவளுக்கு கீழ இருக்க ஜூனியர்ஸ்கும் இவளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத மாதிரி தட்டி குடுத்து வேலை வாங்க தெரிஞ்ச ஒரு மேனஜர் . ஓகே மேம் .. இதுக்கு ஷ்ரத்தா வின் பதில் ஒரு சின்ன சிரிப்பு மட்டுமே.ஷ்ரத்தா இந்த ஆபீஸில் அதிகம் பேசும் ஒரே நபர் அரவிந்த் மட்டும் தான்.இந்த கம்பெனியின் M.D . ஆபீஸில் இருந்து வெளிய வந்து அவளோட மஞ்சள் கலர் வெஸ்பாவ ஸ்டார்ட் பண்ணி வீட்டுக்கு கெலம்பிட்டா .இதுக்கு அப்புறம் அவளோட நினைவு எல்லாம் அவ பொண்ணு மட்டும் தான்.. எஸ் ஷ்ரத்தா ஒரு சிங்கிள் மாம்.இவள பார்த்து யாரும் சொல்ல மாட்டாங்க ஒரு 3 வயசு பொண்ணுக்கு அம்மான்னு.ஷ்ரத்தா வயசு 25, எல்லோரையும் திரும்பி ஒரு தடவ பார்க்க வைக்கிற அழகு ..அவ இப்ப கொச்சின் ல இருக்க அவ ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வர 15 நிமிடங்கள் தான்.வீட்டுக்குள் நுழையும் போதே அவ முகம் மாறிடும் இதுக்கு மேல அவளும் அவ பொண்ணும் ஒரு உலகத்துல இருப்பாங்க அதுக்குள்ள நுழைய யாருக்குமே அனுமதி இல்லை. நான் சாப்பிட மாட்டேன்னு கொஞ்சி கொஞ்சி மழலை மொழி ல நம்ப ஏஞ்சல் அவங்க பாட்டி கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காங்க ..அத சத்தம் போடாம ஷ்ரத்தா வாசல்ல நின்னு பார்த்துக் கொண்டிருந்தாள் ..

பார்க்காத நீ குடுக்குற செல்லம் தான் எல்லாமே ..

நேற்று அம்மாவும் பொண்ணும் சேர்ந்து முன்னாடி வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைச்சுருக்கிங்க .

என்னவோ பண்ணுங்கன்னு சாப்பாடு கின்னத்த நங்குன்னு வச்சுட்டு போய்ட்டாங்க..

மம்மாஆ ஆ... பேபி பண்ல ...அச்சோ எனக்கு தெரியுமே என் பேபி ரொம்ப சமத்துண்ணு ..


ஆமா நீங்க தான் உங்களை மெச்சிக்கணும்.இப்பவே இப்படி பண்றீங்களே இன்னும் நான் ஆஸ்திரேலியா போன ரெண்டு பேரும் என்ன பண்ண போறீங்க னு நினைச்சாலே பயமாயிருக்கு ..

அம்மா நான் பார்த்துக்கிறேன் நீங்க ஜாலியா ஆஸ்திரேலியா போய் அண்ணா கூட கொஞ்சம் நாள் இருப்பீங்களாம். நாளைக்கு நான் லீவ் தான் ..நான் இன்னும் ஒன் வீக் லீவ் தான் நாளைக்கு ராதா அம்மா வருவாங்க அவங்க கூட பேபி செட் ஆகுற வரைக்கும் நான் வீட்ல தான் இருப்பேன் .ஒன்னும் பிரச்சனை இல்லை .. வாங்க போய் உங்க லக்கேஜ் எல்லாம் செக் பண்ணலாம்.

அப்பாவும் மிதுனும் எங்க காணும் ?அவங்க கடைக்கு போனாங்க இப்ப வந்துடுவாங்க நீ சாப்பிடு வா ..

வரேன் மா ..பேபிய தூங்க வச்சுட்டு வறேன்.மிதுணும் அப்பாவும் வந்தாச்சு சேர்ந்தே சாப்பிடலாம் ..

நாங்க இல்லைனு ஒழுங்கா சாப்பிடாம இருக்காதா ..நீயும் பத்திரம் பேபியும் பத்திரமா பார்த்துக்கோ மா ..சரிப்பா நான் என்ன குழந்தையா ..கவலை படாமல் போய்ட்டு வாங்க பா ..அம்மா போய்ட்டு லேண்ட் ஆனதும் கால் பண்ணுங்க ..அவங்களை ஃப்ளைட் ஏற்றி விட்டுட்டு அப்படியே மிதுனையும் சென்னை பஸ் ஏற்றி வீட்டுக்கு வர மாலை ஆனது..
நல் துவக்கம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top