ஏரிக்கரை - தோஷி
Thoshi's Erikkarai
எனக்கு பொதுவாக தினமும் ஒருமுறையேனும் செய்தித்தாள்களை புரட்டிப்பார்க்கும் பழக்கம்...
அதில் சமீபத்தில் பாதித்த செய்து இது...
1. வேளச்சேரி ஏரிக்கரையில் ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது வலி ஏற்படுகிறது என்கிற காரணத்தால், மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் தனது பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி கொன்றிருக்கிறது. கேட்டபொழுதே ரத்தம் கொதித்தது.
2. இன்னும் ஒரு சம்பவமும் கூட இப்பொழுது நினைவிற்கு வருகிறது. காதலன் தனது காதலியுடன் கூடிக்களித்து, குழந்தையும் உருவாகி விட, குழந்தையோடு திருமணம் செய்ய ஏற்று கொள்ள மறுத்து விட்டான். காதலியோ குழந்தை கலைக்கும் நிலையை தாண்டியதால் அதை பெற்று தன் தாயாரின் உதவியுடன் கொன்று குப்பைத் தொட்டியில் வீசி சென்றாளாம். இதுவும் சமீபத்திய செய்தி தான்.
3. முதலில் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண், இரண்டாம் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுக்க, தனது புகந்த வீட்டினரால் புறக்கணிக்கப் படுகிறாள். கணவன் பார்க்கவே வரவில்லையாம். அதற்காக இரண்டு குழந்தைகளுக்கும் பால் தரும் பொழுது அதன் முகங்களை மார்போடு அழுத்தி மூச்சு திணற வைத்து கொன்றிருக்கிறாள்.
இது போன்ற பல செய்திகள் மனதை பாராமாய் அழுத்தியவை. இதில் முதலாவதாக குறிப்பிட்ட செய்தியின் கருவை வைத்து வடிவமைக்கப்பட்ட கதை. மிக அழகாக நேர்த்தியாக வந்திருக்கிறது.
சிறிய கதை தான். அனைவரும் வாசியுங்கள். நம்மை சுற்றி நடக்கும் அவலங்களை எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நாம்!!! என்று குறையும் இந்த அவலங்கள்...
வாழ்த்துக்கள் தோஷி முதல் கதையை இவ்வளவு நேர்த்தியாக தந்தமைக்கு...