ஏய் நீ ரொம்ப அழகா இருக்க - Teaser

Magizh Kuzhali

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் நேசங்களே, ஏற்கனவே கிண்டிலில் பதிவேற்றியிருந்த என் மூன்றாவது கதையான "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" கதையை, இன்று முதல் நம் தளத்தில் ongoingகில் கொடுக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

திங்கள், புதன், வெள்ளி என்று வாரத்தில் மூன்று நாட்கள் UD கொடுக்கபடும். குறுநாவல் தான் மக்களே, சிறியதாக, ஆனால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதுவரை என் கதையை படித்தது ஆதரவு அளித்து வந்த அனைவரும் இதற்கும் உங்கள் கருத்தை தடையில்லாமல் கூறி என் எழுத்துக்களை மேலும் மெருகூட்ட உதவி புரியுங்கள் மக்களே. என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்

நேசத்துடன்,
மகிழ் குழலி

*********************************************************

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க - கதையின் டீசெர்.

<3 <3 <3 <3 <3 <3 <3

அவள், ரித்வினியா - சுத்த சைவம் என்று தெரிந்தும் அந்த அசைவ உணவை பரிமாறியே ஆகவேண்டும் என்று அத்தனை பேர் முன்பு அழிச்சாட்டியம் செய்யும் அவனை, அந்த துர்வாசனை - கொலை செய்யும் வெறியே வந்தது அவளுக்கு. என்ன செய்ய? அவன் அவளுக்கு சீனியர் மாணவனாக போய் தொலைந்தான்.

வேறு வழியில்லாமல் அங்கிருந்த பிரஜன்னை கூர்ந்து பார்க்க அவன் ஒரு தட்டில் பிரியாணியை வைத்து விளிம்பில் நல்ல இடம் விட்டு கொடுக்க அதை துளிகூட உள்ளே பட்டுவிடாமல் விரல் நுனியில் பிடித்து வாங்கியவள் அதை கொண்டு சென்று துர்வசனின் கைகளில் கோவத்தோடு திணிக்க, தானாக நடப்பதுபோல் அவள் திணித்ததாலேயே சரிந்தது என்பது போல் அந்த தட்டில் இருந்த பிரியாணி முழுவதையும் அவள்மேல் அபிஷேகம் செய்தான். கண்களில் நீர் திரண்டுவிட்டது அவளுக்கு.

“ச்சு..ச்சு...பார்த்துக்கொடுக்க கூடாது? பாரு மேலேயே கொட்டிக்கிட்ட” என்று அவன் வேண்டுமென்றே வெறுபேற்றுவதுப்போல் பரிதாபப்பட இவள் குனிந்து தன் உடையை பார்த்தவள் நிமிராமல் நீர் தேங்கிய விழிகளை மட்டும் மலர்த்தி அவனை உறுத்து விழித்தாள். அதற்க்கேலாம் பயபடுபவனா துர்வசன்?

“போ...போய் வாஷ் பண்ணிக்கோ...” நக்கலாய் கூற விடுவிடுவென அங்கிருந்த தன் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

சிறிது நேரத்திலேயே,

கையில் ஒரு ஸ்ப்ரே போன்ற ஒன்றுடனும் கவர் ஒன்றுடனும் திரும்பி வந்தவளை யாரும் கவனிக்கவில்லை. அரட்டையில் மூழ்கியிருந்தனர். அவளை கவனித்த மதி தான் முதலில் அவளருகே ஓடி வந்தாள். ரித்து வெளியேறும்போதே தானும் ஓட துடித்தவளை அங்கிருந்தவர்கள் விடவில்லை. நிலைக்கொள்ளாமல் தவித்தபடி அங்கேயே இருக்க, மீண்டும் வந்தவளை கண்ட பிறகே அவளுக்கு நிம்மதியானது.

அவளோ யாரையும் கண்டுக்கொள்ளாமல் விடுவிடுவென துர்வசனின் அருகில் செல்ல, அவள் உள்ளே நுழைந்ததில் இருந்து வேறு உடைக்கு மாறியிருந்தது வரை கவனித்தாலும், அப்போது தான் அவளை காண்பதுபோல் ஒன்றும் அறியாதவானாய் பாவனையுடன் “என்ன?” என்று கேட்க வந்ததே கோவம் அவளுக்கு.

அவன் முகத்தருகே அந்த பழைய உடையை தூக்கி காலடியில் கீழே போட்டவள், தன் கையில் வைத்திருந்த பைண்டிங்கிற்காக வைத்திருக்கும் பையர் ஸ்ப்ரே மூலம் அந்த உடையை அந்த இடத்திலேயே எரித்துவிட்டாள். இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. அவளின் இப்படியான ஒரு கோவத்தையோ, வெறுப்பையோ மதினாவோ பிரஜனோ கூட சற்றும் நினைத்து பார்க்கவில்லை. அவனையே முறைத்து பார்த்தவளின் கண்களிலும் ஜுவாலை. கண்களில் திரளும் கண்ணீரை சுண்டிவிட்டுவிட்டு வெளியேறிவிட்டாள்.

****************************************************

கல்லூரி கதை, காதல் கதை, நட்பின் கதை, மூன்றும் கலந்த கலவையாக இருக்கும். காதலும், நட்பும் இல்லாமல் யாருமில்லை. கிடைக்கும் நலுறவுகளை அரவணைப்போம். எதிர்மறை உணர்வுகளை விடுத்து, நம்மை சுற்றியிருப்போரை இருக்கும் வரை சந்தோசமாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்வோம். இதை புரிந்துக்கொண்டவர்களின் வாழ்க்கை என்றைக்கும் நிம்மதியும் சிரிப்பும் நிறைந்திருக்கும்.

82790805_607186196708448_239748634990608384_n.jpg
 
#3
:D :p :D
உங்களுடைய "ஏய் நீ ரொம்ப
அழகாயிருக்கே"-ங்கிற
அழகான அருமையான லவ்லி
குறுநாவலை இங்கே படிக்க
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
மகிழ் குழலி டியர்
 
Last edited:

laksh14

Well-Known Member
#5

View attachment 6434
superrr teaser sisss....:love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes