என் மன்னவன் நீ தானே டா...30

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...30

தனது அறையில் சோர்ந்து போய் படுத்து இருந்தாள் திவ்யா.அவளது மனதில் வர்ஷி கூறிய வார்த்தைகளே ரீங்காரம் இட்டுக் கொண்டு இருந்தன.வர்ஷியின் மாறுபட்ட பரிணாமத்தை பார்த்த கலைவாணியும் திவ்யாவும் கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.சகுந்தலாவை அனுப்பிவிட்டு வர்ஷியிடம் வந்த திவ்யா,

"வர்ஷி என்ன டா ஆச்சு உனக்கு..."என்றாள் அவளது தலையை வருடியவரே.

"எனக்கும் ஒண்ணும் இல்ல அக்கா...நான் நல்லா தான் இருக்கேன்.."அதைக் கேட்டவுடன் கலைவாணி,

"என்ன நல்லா இருக்கியா...உனக்குள்ள ஏதோ காளி தான் வந்திருக்கு அதான் இப்படி அடிச்சிருக்க...நாளைக்கு சாமிக்கு வேண்டிக்கனும்..."என்றார் பயந்துகொண்டு.அவரை முறைத்த வர்ஷி,

"ம்மா..சும்மா என்ன கடுப்பேத்தாத...ஏன் நான் அடிக்கமாட்டேனா...நான் கராத்தே கிளாஸ் போறேன்..."என்றாள் இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டு.

"என்ன கராத்தே கிளாஸா...எப்போ போக ஆரம்பிச்ச...எங்க..."என்றனர் இருவரும்.

"மாமா தான் அக்கா சேர்த்துவிட்டாங்க...அவுங்க தான் சொன்னாங்க இன்னும் நீ சின்ன பிள்ளை இல்ல எல்லாத்துக்கும் பயந்துகிட்டு இருக்க நீ தைரியமா இருக்கனும் சொல்லி காலேஜ்லேயே சேர்த்துவிட்டாங்க...மாமா ரொம்ப கிரேட் அக்கா...எனக்கு ஒரு அப்பா மாதிரி..."என்றாள் உணர்ச்சி பெருக்கோடு.அவளது பதிலைக் கேட்ட இருவருக்குமே உள்ளம் நிறைந்தது.

"எங்க டி மாப்பிள்ளை...ஏன் இன்னும் வரல..."என்றார் கலைவாணி கலங்கிய விழிகளை துடைத்துக்கொண்டு அவரது நெடு நாள் பயம் இன்று முற்றிலும் வடிந்து இருந்தது தனக்கு பிறகு தன் மகளை தகப்பன் போல் கிருஷ்ணன் பார்த்துக்கொள்வான் என்று மனது நிம்மதி அடைந்தது.தன் நினைவில் இருந்து வந்தவர் தன் மகளிடம் இருந்து பதில் வராததைக் கண்டு,

"திவி...உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது பிரச்சனையா...."என்றார்.அவரது கேள்வியில் தடுமாறிய திவ்யா,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ம்மா...எனக்கு தலைவலிக்குது நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்..."என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.அவளது முகத்தில் இருந்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவர் வர்ஷியிடம் திரும்பி,

"வர்ஷி மாப்பிள்ளைக்கு போன் போடு..."என்றார்.அவளும் திவ்யாவின் கலங்கிய முகம் கண்டு ஒரு வேலை அம்மா சொல்ரது போல இரண்டு பேருக்கும் சண்டையோ என்று நினைத்தவள் போன் செய்தாள்.ஆனால் கிருஷ்ணனின் கைபேசி அனைக்கப்பட்டுள்ளது என்று வரவும் தாயிடம் கூறினாள்.அதில் கலங்கிய கலைவாணி

"அய்யோ இப்ப தான எல்லாம் சரியாச்சுனு சந்தோஷப்பட்டேன்...இந்த பொண்ணு இப்ப என்ன பண்ணிவச்சிருக்கானு தெரியிலையே..."என்று வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தார்.

திவ்யாவோ கிருஷ்ணனுக்கு பலமுறை தொடர்பு கொண்டு தோற்றவள் அவன் தன்னிடம் ஏதோ கோபத்தில் உள்ளான் என்று கணத்த மனதுடன் தன் படுக்கையில் தூக்கம் வராமல் வெகு நேரம் புரண்டவள்,பின் தன்னை யாரோ வருடவும் கண்களை லேசாக திறந்தாள்,அங்கு அவளை வருடியபடி அமர்ந்திருந்தான் அவளது மன்னவன்.தான் காண்பது நிழல் பிம்பம் என்று நினைத்தவள் அவனது கைகளை பிடித்துக்கொண்டே உறங்கினாள்.

காலை எப்போழுதும் விழித்த திவ்யா தன் இடை மேல் ஒரு கணமான கரம் இருக்கவும் திரும்பியவள் அவளை அணைத்துக்கொண்டு குழந்தை போல உறங்கும் கணவனைக் கண்டு ஒரு நிமிடம் வந்துவிட்டானா என்று நினைத்தவள் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.அவளது பார்வையை உணர்ந்தானோ என்னவோ தூக்கம் கலைந்த கிருஷ்ணன் தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் மனைவியைக் கண்டு,

"யாரோ என் முகத்தையே பார்க்கமாட்டேனு சொன்னாங்க..."என்றான் கண்களில் குறம்பு மின்ன.அவனது கேள்வியில் நிகழ்வுக்கு வந்தவளுக்கு முகம் மீண்டும் இறுக துவங்கியது.அதை பார்த்தவன்,

"ஏய் திரும்பியும் அந்நியனா மாறாத..."என்றவன் அடுத்து அவள் தன்னை அடிப்பாள் என்று ஊகித்து அவளது கைகளை தன் ஒரு கையால் பிடித்து மற்றொரு கையால் அவளது இடையை பிடித்து தன் அருகே இழுத்து போட்டுக்கொண்டு தான் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.அவனது செய்கையில் கடுப்பான திவ்யா அவனிடம் இருந்து விடுபட போராடினாள்.ஆனால் அவளாள் ஒரு இஞ்ச் கூட நகர முடியவில்லை அந்தளவுக்கு அவனது பிடி இறுகி இருந்தது.தன்னால் விடுபட முடியாது என்று உணர்ந்தவள் தன் அருகில் இருந்த அவனது கன்னங்களை கடித்துவைத்தாள்.

"ஆ...ஆ...ஏய் ராட்சஸி..."என்று அலரியபடி எந்திரத்தவனை பலம் கொண்டமட்டும் தள்ளியவள் அவனை தன் இரு கைலாலும் சரமாறியாக அடித்தாள்.அவளுக்கு இரு நாட்களாக அவன் இல்லாமல் ஏதோ தன் பாதி உயிர் சென்றதை போல் இருந்தது.தன்னை அவன் ஒரு சதவிகிதம் கூட விரும்பவில்லையோ என்று ஏதேதோ நினைத்தவள் இப்போழுது அவனை பார்க்கவும் தன் மனதில் உள்ள அனைத்து கோபமும் தீரும் வரை அடித்தாள்.அவளது அடிகளை சிரிப்புடன் ஏற்றுக்கொண்டவன் அவள் ஓய்ந்து அமரவும்,

"என்ன தரும்மா அவ்வளவு தானா..."என்றான் உல்லாச புன்னகையோடு. அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டாள்.அதை பார்த்தவன்,

"ம்ம்..மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க போலவே..."என்று புலம்பியவன்.

"சரி தூங்கி எந்திரிச்சு சமாதானபடுத்துவோம்..."என்று சொல்லிக்கொண்டு போர்வையை இழுத்தி மூடி தூங்க ஆரம்பித்தான்.தன்னை சுத்தப்படிதத்திக் கொண்டு வந்தவள் அவன் உறங்குவதைக் கண்டு மேலும் கடுப்பானாள்.என் தூக்கத்த இரண்டு நாளா கெடுத்துட்டு நீ மட்டும் நல்ல தூங்கிறியா என்று கருவியவள் மேஜை மேல் இருந்த ஜகில் இருந்த தண்ணீரை அவன் மேல் ஊற்றினாள்.அதில் தூக்கம் கலைந்தவன்,

"தரு பேபி நிஜமா டையர்டா இருக்குடி ப்ளீஸ் தூங்கிக்கிறேன்...அப்புறமா வந்து அடி ஓகே வா..."என்றான்.அவனது சோர்ந்த முகத்தை பார்த்தவள் மேலும் அவனை வதைக்காமல் சென்றுவிட்டாள்.

கலைவாணி தன் மகளின் வாழ்வில் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தவர் அவள் கீழே வந்தவுடன்,

"திவிமா மாப்பிள்ளை..."என்று ஆரம்பிக்கும் முன்,

"ம்மா...வந்துட்டாரு தூங்குறாரு யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்..."என்று கூறிவட்டு செல்ல முற்பட அவளைத் தடுத்த கலைவாணி,

"இன்னக்கி நீ கார்மெண்ட்ஸ் போக வேண்டாம்...மாப்பிள்ளை வரட்டும் கொஞ்சம் பேசனும்..."என்றார்.

"இல்ல ம்மா..."ஏதோ சொல்ல வந்த மகளை தடுத்தவர்,

"நான் பேசனும் திவ்யா..."என்றவர் அவள் பேச அனுமதி தராமல் சென்றுவிட்டார்.அவர் அவ்வளவு தூரம் சொல்லவும் ஒன்றும் சொல்ல முடியாமல் சோபாவில் அமர்ந்தாள்.

கிருஷ்ணன் மதியம் போல் தான் எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கீழே வந்தவன் அங்கே அழகு ஓவியம் போல அமர்ந்திருக்கும் தன் மனைவியைக் கண்டு அவளிடம் சென்றான்,

"என்ன டா செல்லம் எனக்காக வெய்டிங்கா..."என்றான்.அவனை முறைத்தவள் முகத்தை திருப்ப,

"என்ன டா பேபி கோபமா..."என்று மேலும் நெருங்கி அமர,

"ஓழுங்கா தள்ளி உட்காரு..."என்றாள் கோபமாக.அவளது கோபத்தை ரசித்தவன் அவளிடம் மேலும் சீண்ட நினைக்கும் நேரம் அங்கே வந்த கலைவாணி இருவரிடமும் பேச வேண்டும் என்றார்.

"இரண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனைனு நான் கேட்க மாட்டேன் அது உங்களுக்குள்ள நீங்க இரண்டு பேரும் கல்யாணம் ஆகி எங்கேயும் போகல அதனால நீங்களும் திவ்யாவும் ஒரு வாரம் நம்ம தோப்பு வீட்டுக்கு போயிட்டு வாங்க..."ஏதோ சொல்ல வந்த இருவரையும் தடுத்தவர்,

"இங்க கார்மெண்ட்ஸ் செல்வமும் வர்ஷியும் பார்த்துபாங்க...அவளுக்கும் பரிட்சை முடிஞ்சு போச்சு அதனால அவ பார்த்துபா...ஏதாவது வேணும்னா உங்களுக்கு போன் பண்றோம்...இப்ப சாப்பிட்டு கிளம்புங்க..."என்றவர் இருவரையும் பேசவிடாமல் கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்க சென்றார்.

திவ்யாவுக்கு தான் கோபமாக வந்தது தான் சொல்ல வருவதை தன் தாய் கேட்காமல் போகிறாரே என்று இருந்தும் அவரிடம் வாதிடா மனம் இல்லாமல் செல்வத்தை அழைத்து சில வேலைகை சொல்லிவிட்டு போனை வைத்தாள்.அங்கே இவளையே பார்த்துக்கொண்டு இருந்த கிருஷ்ணனைக் கண்டுகொள்ளாமல் வர்ஷியிடம் பேச சென்றுவிட்டாள்.அவளது கோபத்தை ரசித்தவன் ஒரு வாரம் நம்ம இரண்டு பேரும் மட்டும் தான் பேபி என்று தனக்குள் கூறியவன் உல்லாசமாக கிளம்ப தயாரானான். இந்த பயணம் அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத பல இனிய நினைவுகளை தரப்போகிறது என்று இருவருக்கும் தெரியவில்லை.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

கலைவாணியின் கவலை தீர்ந்தது
வர்ஷிக்கு கிருஷ்ணன் இன்னொரு அப்பாதான்
ஹா ஹா ஹா
திவ்யதாரணி கிருஷ்ணன் ஜோடி தோப்பு வீட்டுக்கு போயிட்டு வரட்டும்
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

கலைவாணியின் கவலை தீர்ந்தது
வர்ஷிக்கு கிருஷ்ணன் இன்னொரு அப்பாதான்
ஹா ஹா ஹா
திவ்யதாரணி கிருஷ்ணன் ஜோடி தோப்பு வீட்டுக்கு போயிட்டு வரட்டும்
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top