Ambal
Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..
என் மன்னவன் நீ தானே டா...28
தன் நண்பனுடன் பாரில் மது அருந்திக்கொண்டிருந்தான் அவினாஷ்.இன்று தான் ஊட்டியில் இருந்து வந்திருந்தான்.கையில் உள்ள பணம் கரைந்தவுடன் வேறு வழியில்லாமல் தன் தாயை பார்க்க வந்திருந்தான்.சகுந்தலாவோ அவனை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்துவிட்டார்.அதில் கோபமுற்றவன் தன் நண்பனுடன் பாருக்கு வந்துவிட்டான்.
"என்ன டா அவி...இன்னக்கி உனக்கு ரவுண்டு கொஞ்சம் ஓவரா இருக்கு என்ன பிரச்சனை..."என்றான் நண்பன்.
"எல்லாம் எங்க அம்மா தான் டா...எப்ப பாரு என்ன ஒதவாக்கரனு திட்டுராங்க...எரிச்சலா வருது..."
"அவுங்க கிடக்குராங்க விடு டா...நம்ம வேற ஏதாவது டூர் போலாம் டா..."
"ம்ம்...போவோம் அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு அத முடிச்சுட்டு போலாம்..."என்றான்.
திவ்யா காலையில் இருந்து கிருஷ்ணனுக்கு அழைத்துவிட்டாள் ஆனால் அவன் எடுக்கவில்லை என்றவுடன் மனது தவித்தது.ஒரு வேளை கோவித்துக் கொண்டு அவனது வீட்டிற்கு சென்று இருப்பானோ என்று நினைத்தவள் அங்கேயும் சென்று பார்த்தாள் அவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.கடைசியாக எப்போதும் போல் கடற்கரைக்கு சென்றுவிட்டாள்.
சகுந்தலா தான் வழக்கமாக போகும் கிளப்பிற்கு சென்றுவிட்டு திரும்பும் போது யாரோ தன்னை கூப்பிடுவது போல் இருக்க திரும்பியவர் முகத்தில் கர்ச்சீப்பை வைத்தான் ஒருவன் அதில் மயங்கி விழுந்து இருந்தார்.அவர் தெளிந்து கண் திறக்கும் நேரம் தன் கை,கால் கட்டப்பட்டு இருக்கவும் ஒன்றும் புரியாமல் சுற்றி பார்த்தார் அங்கு அவரைக் கொல்லும் வெறியுடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனைக் கண்டவர் பயந்து போனார்.
"என்ன ஆன்ட்டி எப்படி இருக்கீங்க..."என்று கேட்டபடி கையில் உள்ள சாட்டையை சுழற்றினான் கிருஷ்ணன்.அவனது தோரணையில் பயந்தவர்,
"நீ ஏன் என்ன கடத்தின உனக்கு என்ன வேணும்..."என்றார் கண்களில் பயத்துடன்.
"என்ன ஆன்ட்டி பயப்படுரீங்களா...இது பத்தாது இன்னும் பயப்படனு நீ..."என்று சாட்டையால் ஒன்று வைத்தான் அதில் துடித்து போனார் சகுந்தலா.
"ஆ..ஆ..டேய் பாவி பயலே ஏன்டா என்ன அடிக்குற... உன்ன சும்மா விடமாட்டேன்..."என்றார் அகங்காரமாக.அவரது பதில் மேலும் கடுப்பானவன்,
"என்ன ஆன்ட்டி மிரட்டுரீங்கலா...நீங்க செஞ்ச வேலைக்கு உங்கள..."என்று பல்லைகடித்தவன் ரமேஷின் மூலம் அவன் அறிந்தவற்றை நினைத்து பார்த்தான். தன் சொந்த தம்பி மகள்களின் வாழ்க்கையை அழிக்க ஒருவர் இவ்வளவு கீழ் இருங்குவார்களா என்று நினைத்து பார்க்கவே அருவெருப்பாக இருந்தது கிருஷ்ணனுக்கு.
அன்றைய நாளை நினைத்து பார்த்தான் அவன் தான் ரமேஷ் என்று தெரிந்தவுடன் அவனை பின் தொடர்ந்து சென்றவன் அவனை ஆள் இல்லாத இடத்தில் தட்டித் தூக்கியிருந்தான்.அவனது போதை தெளியும் வரைக் காத்திருந்தவன் அவன் தெளியவும் அவனை வெளுத்து வாங்கிவிட்டான்.கிருஷ்ணனின் அடி தாங்க முடியாமல் அனைத்தையும் ஒப்பித்தான் ரமேஷ்.அவன் கூறியதைக் கேட்டு கிருஷ்ணனுக்கு சகுந்தலாவை கொல்லும் வெறியே வந்தது.
"சார் என்ன விட்டுங்க...நான் சும்மா மிரட்டலாம் தான் சொன்னேன் அந்த அம்மா[சகுந்தலா] தான் அந்த பொண்ண கடத்தி விபாச்சார விடுதியில விட சொன்னாங்க..."என்றவன் அதற்கு மேல் முடியாமல் மயங்கி விழுந்தான் அந்த அளவிற்கு அவனை பிழிந்துவிட்டான் கிருஷ்ணன்.பின் அவனது மொபைலை பார்த்தவன் அதிர்ந்தான் அதில் வர்ஷி போலவே பல பெண்களை புகைபடம் எடுத்து மிரட்டியுள்ளான் என்றும் இவனுடன் மேலும் சிலர் சேர்ந்துள்ளனர்.
கிருஷ்ணன் தனக்கு தெரிந்த காவல் அதிகாரிக்கு அழைத்தவன் அவரை தான் இருக்கும் இடத்திற்கு வரும்மாறு அழைத்தான். அவர் வந்தவுடன் அவரிடம் ரமேஷ் பற்றிய தகவல்களை கூறியவன் அவனது மொபைலை அந்த அதிகாரியிடம் ஒப்படைத்தான்.ரமேஷின் மொபைலில் உள்ள அனைத்து விவரங்களையும் பார்த்தவர் கிருஷ்ணனிடம்,
"ரொம்ப நன்றி தம்பி...இவனும் இவனோட கூட்டாளிகளும் சேர்ந்து பல பொண்ணுங்க வாழ்க்கைய நாசமாக்கியிருக்காங்க...இவனுங்கள நாங்க வளைச்சுட்டோமுனு தெரிஞ்சு இங்கேந்து தப்பிச்சிட்டானுங்க.வெறும் நம்பர வச்சு பிடிக்க பார்க்கும் போது எல்லாம் எப்படியோ தெரிஞ்சிகிட்டு தப்பிச்சிடுவானுங்க...இப்ப இவன வச்சே எல்லாரையும் பிடிச்சுடலாம்..."என்றவர் உடனடியாக தன் துணை அதிகாரிகளை அழைத்தவர் மேலும் சில நம்பர்களை கொடுத்து டிரெஸ் செய்ய சொன்னார்.கிருஷ்ணன் ஏற்கனவே கூறியிருந்தான் இவனது நண்பர்கள் உடன் தான் இவனை பார்த்ததாக.அதனால் அவர்களும் இங்கு தான் இருப்பார்கள் என்று அவர்களை பிடிக்குமாறு கூறினார்.
கிருஷ்ணன் கூறியது போல இங்கு அனைவரும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர்.அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ் அவர்களின் மொபைல் மற்றும் மேலும் போதை பொருள்களை கைப்பற்றியது.கிருஷ்ணன் இது அனைத்திலும் தன் பங்கு இல்லாதவாரு பார்த்துக்கொண்டான்.சகுந்தலாவின் சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தான்,
"அடேய் படு பாவி...என்ன அடிச்சிட்டல உன் சும்மா விடமாட்டேன்..."என்று பயத்தில் கண்டபடி உளரிக்கொண்டிருந்தார்.
"என்ன ஆன்ட்டி சவுண்டு ரொம்ப ஓவரா இருக்கு...நீ என்ன சத்தம் போட்டாலும் இங்க யாரும் வரமாட்டாங்க..எவ்வளவு திமிர் இருந்தா ஒரு சின்ன பொண்ணு வாழ்க்கைய நாசமாக்க திட்டம் போட்டு இருப்ப.."என்றான்.
"ஆமா டா நான் தான் செஞ்சேன்...நான் தான் அந்த ரமேஷ் கிட்ட சொன்னேன் என்றவர்...அவனிடம் கூறிய அனைத்தையும் சொன்னார் கடைசியாக உன் பொண்டாட்டியயும் விடமாட்டேன்..."என்றார் வன்மத்தோடு.
"இது தான் ஆன்ட்டி எனக்கு வேனும்..."என்றான் நக்கலாக.அவனது பதிலில் குழம்பிய சகுந்தலா புரியாமல் அவனை பார்த்தார் அவரது பார்வையை உணர்ந்தவன் நக்கலாக,
"என்ன ஆன்ட்டி ஒண்ணும் புரியலயா..."என்றவன் மறைவிடத்தில் இருந்து இதை அனைத்தையும் படம் எடுத்ததைக் காண்பித்தான்.அவனது மொபைலில் சகுந்தலா கூறிய அனைத்தையும் வீடியோ எடுத்து இருந்தான்.நிதானமாக சகுந்தலாவிடம் வந்தவன்,
"இது ஒண்ணே போதும் உன்ன அந்த கேஸ்ல கோர்த்துவிட..."
"என்ன என்ன கேஸ்...என்ன சொல்லுர நீ..."
"என்ன ஆன்ட்டி நீங்க இன்னக்கி டிவி பார்க்கல..."என்றவன்.தன் மொபைலில் உள்ள இணையம் மூலம் இன்றைய முக்கிய செய்திகளை ஓடவிட்டான்.முதலில் அலட்சியமாக பார்த்த சகுந்தலா அதில் ரமேஷைக் காட்டவும் கூர்ந்து கவனித்தார்.அவனை பணம் கொடுக்க நேற்று சென்றிருந்த போது அஞ்சலியுடன் பார்த்தார்.அவள் தான் அவனை அறிமுகபடுத்தினாள் இதுவரை அவனுடன் கைபேசியில் மட்டுமே பேசியிருந்தவர் அவனைக் கண்டவுடன் அவனிடம் அஞ்சலிக்கு தெரியாமல் பேசியவர் வர்ஷியை எப்படி நாசமாக்க வேண்டும் என்று கூறி அவனிடம் பணம் கொடுத்து இருந்தார்.இப்போது அவனை டிவியில் அதுவும் போலீஸ் பிடியில் பார்க்கவும் மனது நடுங்க துவங்கியது.அவரது முகமாற்றத்தை கவனித்தவன்,
"என்ன ஆன்ட்டி இப்ப புரியுதா என்ன கேஸுனு..."என்றான்.
"என்ன என்ன சொல்லுர நீ...நான் எதுவும் செய்யல...என்ன விட்டுடு தம்பி நான் வயசானவ..."என்றார் தன்னை காத்துக்கொள்ள.அவருக்கு பயம் அப்பிக்கொண்டது அவன் என்ன கேஸ் அது இதுனு சொல்ரான் கடவுளே என்று நினைத்தவர் அவனிடம் சரணடைந்தார்,
"ஏய் என் கிட்டே நீ நாடகம் ஆடுறியா துளைச்சிடுவேன் பார்த்துக்க..."என்றவன் மேலும் அவரிடம்,
"நீ தான அந்த ரமேஷ் கூட்டத்தோட தலைவி...போலீஸ் உங்கள தான் தேடுது...இப்ப நான் போன் போட்ட நீங்க.."என்றவன் மேல் நோக்கி கை காட்டினான்.அவனது பதிலில் சகுந்தலாவின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.அவனிடம் அனைத்தும் மறந்து கெஞ்ச ஆரம்பித்தார்,
"என்னது தலைவியா...எனக்கு அவனையே நேத்தி பார்த்தேன் பா...எனக்கு எதுவும் தெரியாது என்ன விட்டுடு இனி உங்கள எந்த பிரச்சனையும் பண்ணமாட்டேன்...என்ன விட்டுடு..."
"என்ன ஆன்ட்டி இதுக்கே பயந்தா எப்படி... நீ அவன நேத்து பார்த்தனு எனக்கு தான தெரியும் போலீஸ்க்கு தெரியாதுல..நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள பழக்கமுனு நான் இதுதோ இருக்கே போட்டோஸ் அத காமிச்சா போதும் என்று சகுந்தலாவும் ரமேஷ் ஒன்றாக இருப்பது போல சில போட்டோகளை அவரிடம் காண்பித்தான்... உங்களுக்கு மட்டும் தான் மார்பிங் பண்ண வருமா நாங்களும் பண்ணுவோம் அதுவும் இது பொய்யான போட்டோஸ்னு யாரலும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவு சூப்பரா வந்திருக்கு... "என்றவன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைக்க அவன் போலீஸ்க்கு தான் அழைக்கிறான் என்று நினைத்தவர்,
"தம்பீ வேணாம்பா...என்ன மன்னிச்சிடு...என்ன விட்டுடு பா நான் எங்காயாவது போயிடுறேன் உன் பக்கமே வரமாட்டேன் என்ன விட்டுடு..."என்று கூறினார்.
திவ்யாவோ கிருஷ்ணனை எங்கு தேடியும் கிடைக்காமல் மனது சோர்வுடன் தன் வீடு நோக்கி வந்தாள்.வீட்டில் நுழையும் நேரம்,
"அய்யோ அம்மா..என்ன விட்டுடு...ப்ளீஸ்..."என்று அவினாஷ் கிட்டதட்ட அலரினான் என்றுதான் சொல்ல வேண்டும்.அவனது அலரலைக் கேட்டு உள்ளே ஓடிய திவ்யா அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றுவிட்டாள்.