என் மன்னவன் நீ தானே டா...27

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...27

காலை சோர்வாக கண்விழித்தாள் திவ்யா.இரவு முழுவதும் அழுதது அவளது முகம் வீங்கி இருந்தது.கண்கள் இயல்பாக தனது கணவனைத் தேடியது அவன் இல்லை என்று உணர்ந்தவுடன் மனது மேலும் சோர்வடைந்ததை போல உணர்ந்தாள்.எழுந்து தன்னை சுத்தப்படுத்தியவள் கார்மெண்ட்ஸ் செல்ல தயாராகி கீழே வந்தாள்.அங்கு தன் அன்னையும் தங்கையும் ஏதோ தீவிரமாக டிவியைப் பார்த்து பேசிக்கொண்டு இருக்கவும் அவர்களிடம் சென்றவள்,

"என்ன அம்மா...என்ன அப்படி பார்க்குரீங்க..."என்று தானும் அமர்ந்தாள்.அதில் முக்கிய செய்திகளில் பெண்களை புகைபடம் எடுத்து மிரட்டும் கும்பல் பிடிபட்டது என்று செய்தி ஓடிக்கொண்டிருந்தது.அதை பார்த்தவள் பல்லைக் கடித்தாள்,

"இவனுங்கள எல்லாம் கைது பண்ணக்கூடாது சுட்டுக் கொல்லனும்...பொறுக்கி ராஸ்கல்ஸ்..."என்றாள் அகங்காரமாக.கலைவாணியோ,

"அதை போலிஸ் பார்த்துக்கும்...போடி போய் டிவிய ஆப் பண்ணிட்டு படிக்கிற வேலைய பாரு உனக்கு பரீட்சை வருது அதுக்கு தான் லீவ் விட்டுருக்காங்கனு சொன்ன இப்ப உட்கார்ந்து டிவி பார்க்குற போடி..."என்று வர்ஷியை திட்டினார்.

"இரும்மா...போறேன் எப்ப பாரு என்ன திட்டிக்கிட்டே இருக்குறது...எனக்கு ஒரு காபி கொடுங்க நான் போறேன்..."என்றவள் அடுத்த சேனலை மாற்ற அவளிடம் இருந்து ரிமோட்டை பரித்தவர் டிவியை அணைத்துவிட்டு,

"இப்ப போய் படி...எப்ப பாரு தின்னுட்டு தூங்க வேண்டியது...போடி..."என்று அதட்டி அனுப்பினார்.அவரை முறைத்துக்கொண்டே சென்றாள் வர்ஷி. திவ்யாவிடம் திரும்பிய கலைவாணி,

"நீ ஏன் திவிமா டல்லா இருக்க...மாப்பிள்ளை எங்க..."என்றார்.அவர் கிருஷ்ணனைப் பற்றி கேட்டவுடன் முகம் மீண்டும் இறுகியது,

"அவருக்கு கொஞ்சம் வேலை ம்மா..."என்றவள் அவர் அடுத்த கேள்வி கேட்கும் முன்,

"அம்மா...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்..."என்று கூறி சென்றுவிட்டாள்.செல்லும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார் ஏதோ சரியில்லை என்று மனது சொன்னாலும் அவளிடம் கேட்கமுடியாமல் தவித்தார்.

காரில் செல்லும் போது திவ்யாவுக்கு கிருஷ்ணன் நியாபகம் தான் எங்கு சென்று இருப்பான் என்ற நினைத்தாலும் எப்போதும் நான் தான் அவன் பின்னாடி போறேன் இந்த ஒருவாட்டி அவனா வரட்டும் என்று தனக்குள் உறுதி பூண்டாள்.இன்னும் சில நிமிடங்களில் அந்த உறுதி அனைத்தும் மறந்து அவனின் பின்னால் செல்ல போகிறாள் என்று அறியாமல்.தன் கைபேசியின் அழைப்பில் கலைந்தவள் யார் என்று பார்த்தாள் செல்வம் தான் அழைத்திருந்தார்.அழைப்பை ஏற்றவள்,

"ஹலோ...அங்கிள் சொல்லுங்க..."என்றாள்.அவர் கூறிய செய்தியில் அதிர்ந்தவள்,

"என்ன அங்கிள் சொல்ரீங்க...நான் உடனே ஆபிஸ் வரேன்..."என்று கூறி வைத்துவிட்டு வேகமாக கார்மெண்ட்ஸை அடைந்தாள்.

செல்வத்திற்கு அதிர்ச்சியாக தான் இருந்தது கிருஷ்ணன் அனுப்பிய வீடியோக்களை பார்த்தவர் உடனே அவனுக்கு அழைத்தார்.

"என்ன கிருஷ்ணா இது..."என்று மேலும் கேட்க வந்தவரை தடுத்தவன்,

"அங்கிள்,நான் முக்கியமான வேலையில இருக்கேன்...நீங்க வீடியோஸ் எல்லாத்தையும் தாரணி கிட்ட கொடுங்க மத்தத அவ பார்த்துபா..."என்று கூறி வைத்துவிட்டான்.கிருஷ்ணன் கூறிய படி அனைத்தையும் திவ்யாவிடம் கொடுத்தார்.தன் அலுவலக அறையில் அனைத்து வீடியோக்களையும் பார்த்தவள் முகம் கோபத்தில் சிவந்தது.

அஞ்சலிக்கு மகிழ்ச்சி தாளவில்லை ஜேடி கம்பெணி மேலாளர் அவளுக்கு சேரவேண்டிய தொகையை அனுப்பிவிட்டார்.அந்த பணத்தை என்ன என்ன செய்யலாம் என்று யோசனையில் இருந்தவளை கலைத்தது டெலிபோன் ஒலி.அதை எடுத்து காதில் வைத்தவள் அடுத்த நிமிடம் திவ்யாவின் அறையில் இருந்தாள்.

திவ்யா அஞ்சலியை கூர்ந்து பார்த்தவள்,

"என்ன அஞ்சலி ரொம்ப சந்தோஷமா இருக்குர போலிருக்கு..."என்றாள் நக்கலாக.அவளது கேள்வியில் தடுமாறிய அஞ்சலி,

"என்ன மேடம் அப்படி ஒண்ணும் இல்ல.."என்றாள் திக்கிதிணறி.அடுத்த நிமிடம் தன் இருக்கையை உதைத்து எந்திரித்த திவ்யா,

"எவ்வளவு பணம் வாங்குன..."என்று அஞ்சலியை நோக்கி கர்ஜித்தாள்.அவளது தோரணையில் அஞ்சலிக்கு உள்ளுக்குள் நடுங்கினாலும்,

"என்ன மேடம் சொல்லுரீங்க..."என்றாள் அப்பாவியாக.அவளது பதில் திவ்யாவை மேலும் கோபமூட்டியது அவளின் அருகில் வந்து அவள் என்னவென்று உணரும் முன் அறைந்திருந்தாள்.இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த செல்வம் தான் திவ்யாவை தடுத்தார்,

"அமைதியா பேசு திவிமா..."என்றார்.அதில் சற்று நிதானித்தவள் அஞ்சலியிடம் திரும்பி,

"சொல்லு எவ்வளவு பணம் வாங்குன..."என்றாள் அதே கோபத்தோடு.

"என்ன மேடம் சொல்ரீங்க...நான் யார் கிட்டேயும் பணம் வாங்கல...யாரோ என் மேல வீணா பழி போட பாக்குராங்க.."என்று செல்வத்தை பார்த்து கூறினாள்.

"ஓ...உனக்கு எதுவும் தெரியாதுல..இரு..."என்று அனைத்தும் வீடியோக்களையும் அவளிடம் காட்டினாள்.அதைக் கண்ட அஞ்சலிக்கு உடம்பு நடுங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

"இது எல்லாம் பொய்...நீங்க வேணும்னு என் மேல பழி போடுரீங்க..எல்லாம் அந்த கிருஷ்ணன் பன்ற வேலை...அவனுக்கு என் மேல ஒரு கண்ணு ஆன நான் அவன ஏத்துக்கல...அதனால தான் இப்படி பண்றான்..."என்றாள் அவனை பழிவாங்கும் எண்ணத்தோடு.அவள் கிருஷ்ணனின் பெயரைக் கூறியதிலே கோபத்தின் உச்சிக்கு சென்றாள் திவ்யா.

"அங்கிள் போலீஸ்க்கு போன் போடுங்க...இந்த வீடியோ பொய்யா இல்லையானு அவுங்க சொல்லுவாங்க..."என்றாள்.அவள் போலிஸ் என்றவுடன் அஞ்சலிக்கு சர்வமும் அடங்கியது.தன் காத்துக்கொள்ள நினைத்தவள்,

"மேடம் நானா எதுவும் செய்யல எல்லாம் உங்க ஹஸ்பெண்ட் சொல்லி தான்..."என்று அவள் முடிக்கும் முன் இடியென இறங்கியது திவ்யாவின் கரம் அதில் தடுமாறிய அஞ்சலி கண்கள் சிவந்து,

"என்ன மேடம் சும்மா அடிக்கிரீங்க உங்க ஹஸ்..."அவள் கூறும் முன்

"ஏய்..."என்று கர்ஜித்தாள் திவ்யா.

"இன்னொரு முறை என் ஹஸ்பென்ட் பெயரை சொன்ன...உன் துளைச்சிடுவேன்...நீ தான் எல்லாம் செஞ்சிருக்க என் கிட்ட வேற சாட்சி இருக்கு.."என்றவள் இருவரையும் அழைத்தாள்.செல்வராஜும்,டைரவரும் உள்ளே வந்தார்கள்.அவர்களை கண்ட அஞ்சலிக்கு மேலும் நடுக்கம் வந்தது,

"என்ன சொல்லபோறிங்களா இல்ல போலீஸ் கிட்ட ஒப்படைக்கவா..."என்று திவ்யா கூறவும் நடுங்கிய இருவரும் ஒண்ணுவிடாமல் ஒப்பித்துவிட்டனர்.திவ்யாவின் தோரணையே கூறியது அவள் கண்டிப்பாக செய்வாள் என்று அதனால் அவர்கள் பயந்துவிட்டனர்.

அஞ்சலிக்கு அதுக்கு மேல் எதுவும் கூறமுடியாமல் தலைகுனிந்தாள்.அவளுக்கு என்ன முயன்றும் கிருஷ்ணனை பழிவாங்க முடியவில்லையே என்று நினைத்தவள் முதலில் தன்னை காத்துக்கொள்ள நினைத்து திவ்யாவிடம்,

"சாரி மேடம் நான் ஏதொ..."என்று ஏதோ கூறவந்தவளை தடுத்த திவ்யா செல்வத்திடம் திரும்பி,

"அங்கிள் இவங்க மூன்னு பேர் கணக்கையும் தீர்த்து அனுப்புங்க...இன்னும் கொஞ்ச நேரம் என் கண் முன்னாடி நின்னாங்க நான் என்ன செய்வன்னே தெரியாது..."என்றவள் மேலும்,

"உங்க குடும்பத்துக்காக தான் உங்கள சும்மா விடுறேன் இல்ல..."என்று செல்வராஜையும்,அந்த டைவரையும் எச்சரித்தவள் அஞ்சலியிடம் திரும்பி,

"உன் வாழ்க்கை வீணா போக கூடாதுனு தான் உன்ன விடுறேன்...இன்னொருவாட்டி என் கிருஷ்ணன் மேல உன் கண்ணு வந்துச்சு ..."என்று ஒற்றை விரலில் எச்சரித்தவள் அவர்களை வெளியில் அனுப்பினாள்.

திவ்யா அவர்கள் சென்றவுடன் சோர்வாக தன் இருக்கையில் அமர்ந்தவள் உள்ளம் எல்லாம் கிருஷ்ணனே நிறைந்து இருந்தான்.தனக்காக எவ்வளவு செய்திருக்கிறான் என்று நினைத்தவள் கிருஷ்ணனுக்கு அழைத்தாள்.அவன் எடுக்கவில்லை என்றதும் ஒருவேலை நேற்றைய சண்டையில் கோபமாக உள்ளானோ நினைத்தவள் தன் வீட்டிற்கு அழைத்து கேட்டாள் அங்கும் அவன் வரவில்லை என்றவுடன் மனது தவிக்க ஆரம்பித்தது.தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் அவனை தேட கிளம்பினால்.அவளது மன்னவனோ ஒரு கிளப்பின் முன் ஒருவருக்காக கழுகு போல காத்திருந்தான்.அவன் கண்களில் ஆளையே கொல்லும் வெறி இருந்தும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு காத்திருந்தான்.

அனைத்திலும் தோற்று தன் வீடு நோக்கி சென்ற அஞ்சலி தன் வீட்டின் முன் போலிஸ் வண்டி நிற்கவும் உடம்பும் மனதும் பதறத்துவங்கியது.அதே பதட்டத்தோடு உள்ளே நுழைந்தாள் அங்கு ஒரு நாற்காலியில் அவளது தந்தையும் எதிரில் ஒரு காவல் அதிகாரியும் அமர்ந்து இருந்தனர்.இவளைக் கண்டவுடன் அவளது தாய் ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதார் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தவளை கலைத்தது அவளது தந்தையின் குரல்,

"அவன் செஞ்ச தப்புக்கு அவன் தண்டனை அனுபவிக்கனும் சார்...அவன என் புள்ளனு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு...எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா சார்..."என்றவர் குரல் கரகரத்தது.அவரது நிலை உணர்ந்த காவலரும் அவரிடம் தைரியம் சொல்லிவிட்டு சென்றார்.தன் தாய் மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்ட அஞ்சலிக்கு உள்ளுக்குள் நடுங்க துவங்கியது தன் அண்ணன் இவ்வளவு கேடு கெட்டவனாக இருப்பான் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.அவள் வர்ஷியை மிரட்ட அவனை உபயோகித்தது என்று நினைத்தாலே மனது நடுங்கியது."கெடுவான் கேடு நினைப்பான்"என்ற பழமொழி அஞ்சலிக்கு பொருந்தும்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அஞ்சலி செல்வராஜ் டிரைவர் மூணு பேர் செஞ்சதும் திவ்யாவுக்கு தெரிய வைச்சு அவளையே பனிஷ்மென்ட் கொடுக்க வைச்சுட்டான்
ஹா ஹா ஹா
சூப்பர் கிருஷ்ணா
அஞ்சலியின் அண்ணனை போலீஸ் பிடிச்சுட்டு போயிடுச்சா?
இதுவும் சூப்பர்
இப்போ யாருக்காக கிளப்பில் கிருஷ்ணா காத்திருக்கிறான்?
சகுந்தலாவுக்காகவா?
அப்போ இந்த ஸ்டோரி முடியப் போகுதாப்பா?
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அஞ்சலி செல்வராஜ் டிரைவர் மூணு பேர் செஞ்சதும் திவ்யாவுக்கு தெரிய வைச்சு அவளையே பனிஷ்மென்ட் கொடுக்க வைச்சுட்டான்
ஹா ஹா ஹா
சூப்பர் கிருஷ்ணா
அஞ்சலியின் அண்ணனை போலீஸ் பிடிச்சுட்டு போயிடுச்சா?
இதுவும் சூப்பர்
இப்போ யாருக்காக கிளப்பில் கிருஷ்ணா காத்திருக்கிறான்?
சகுந்தலாவுக்காகவா?
அப்போ இந்த ஸ்டோரி முடியப் போகுதாப்பா?
நன்றி தோழி...சகுந்தலாவுக்கு தகுந்த பாடம் காத்துக்கொண்டு இருக்கிறது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top