என் மன்னவன் நீ தானே டா...16

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



என் மன்னவன் நீ தானே டா...16

பார்த்த சில நிமடங்களில் ஒருவனை எவ்வாறு பிடிக்கும் என்று தனக்கு தானே கேள்விக்கேட்டு அதற்கு பதில் தெரியாமல் தோற்று போனாள் திவ்யா. "திவி என்ன இது உன்னோட குறிக்கோள் என்ன நீ ஏது பின்னாடி போய்ட்டு இருக்க.."என்று புத்தி எடுத்துரைத்தாலும் மனது கேட்க மறுத்தது.

இரண்டு நாட்கள் கடந்து இருந்தது திவ்யா மற்றும் அவர்களது குழுவினர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.திவ்யா அன்று கிருஷ்ணனைக் கண்டவள் அதற்கு பிறகு அவர்கள் இருக்கும் பகுதிகளில் அவனை கண்டதில்லை இருந்தும் அவ்வபோது அவனது நண்பர்கள் உடன் சில சமயம் கேன்டீன் தென்படுவான்.அவனது நண்பர்கள் கதை பேசிக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருப்பான். யாரும் அறியாவண்ணம் அவனைக் காண்பாள். அவன் தன்னை பார்க்கமாட்டானா என்று மனது ஏங்கும் ஆனால் அவனோ இவர்களை திரும்பியும் பார்க்கமாட்டான். இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தது போட்டிகள் அனைத்தும் முடிவடைய உள்ளது.

அன்று காலையில் இருந்தே ஒருவித படபடப்பு திவ்யாவுக்கு ஏன் என்று புரியவில்லை.ஏதோ ஒரு யோசனையில் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று கொண்டு இருக்கும் வேளையில் "மிஸ்.தாரணி"என்ற குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.தனது தந்தை அவ்வாறு அழைப்பார் ஒரு நிமிடம் அப்படியே நின்றவள்.

"மிஸ்.தாரணி.."என்று திரும்பி அழைக்கவும் திரும்பியவள் அதிர்ந்தாள்.அங்கு யாரைக் காண வேண்டும் என்று நினைத்தாளோ அவனே அவள் முன் நின்று கொண்டிருந்தான்.

"மிஸ்.தாரணி"என்ற அழைப்பில் சுயநினைவுக்கு வந்தவள்.

"யஸ்..ஐ ம் தாரணி.."

"இந்தாங்க உங்க ஐடி கார்ட்...பார்த்து வச்சிக்க மாட்டீங்கலா...இது இல்லனா உங்கள உள்ள அலோ பண்ணமாட்டாங்க.."என்று கூறி அவளது ஐடி கார்டை திணித்தவன் அவளது பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டான்.அவன் சென்ற பின்பும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.அவனது தாரணி என்ற அழைப்பு அவளது மனதை இதமாக்கி இருந்தது.

கிருஷ்ணன் சென்ற திசையே பார்த்துக்கொண்டு இருந்தவள்.

"ஏன் என் முகத்தை பார்த்துக்கூட பேசமாட்டானாமா...பெரிய இவன் போடா.."என்று மனதிற்குள் திட்டிவிடிக்கொண்டிருக்கும் சமயம்,

"ஏய் திவி...திவி.."என்று ஹேமா அழைக்கவும் அவளிடம் சென்றாள்.

"என்ன டி..."

"இங்க என்ன பண்ற வா..அடுத்தது நம்மளளோடது தான் வா சீக்கிரம்.."என்று அழைத்துச்சென்றாள்.பின் நேரம் சென்றதே தெரியவில்லை.அனைத்து போட்டிகளும் முடிந்து நாளை முடிவு அதனால் அனைவரும் அவர்அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தனர்.அப்பொழுது அங்கு நுழைந்த தாரிகா,

"பலடி இடியட்ஸ்...எவ்வளவு தைரியம் இருக்கும்...லோ கிளாஸ் பிப்பில்ஸ்...."என்று தரையை உதைத்துக்கொண்டு யாரையோ திட்டிக்கொண்டு இருந்தாள்.அதை கண்ட மற்ற இருவரும்,

"என்ன டி...என்ன ஆச்சு...யாரை இப்படி திட்டுற.."என்றனர்.

"அங்க கேன்டீன்ல ஒருத்தன் என்ன இடிச்சிட்டு சாரி சொல்ரான்..."

"நீ சும்மாவா அவன விட்ட.."என்று கேட்டாள் ஹேமா.

"இல்லடி அதான் என் பாஷையில ஓங்கி ஒரு அரை வச்சேன்...லோ கிளாஸ் இடியட்ஸ்...இதுக்கு தான் சொன்னேன் இந்த மாதிரி லோ கிளாஸ் காலேஜ் எல்லாம் வேண்டாம்னு இவ கேட்டாளா...என்று திவியை காட்டி சொன்னவள்...அந்த லோ கிளாஸ் இடியட் இடிச்சது உடம்பே ஒரே செமேல் நான் போய் குளிக்கிறேன்..."என்று கூறி சென்றுவிட்டாள்.

திவ்யாவோ தாரிகா கேன்டீன்ல ஒருத்தன அடிச்சுட்டேன் என்று கூறியதில் இருந்து ஒரு வேளை அவனாக இருக்குமோ என்று மனது பரபரத்தது அதனால் கேன்டீன் நோக்கி ஓடினாள் போய் சேரும் வரை அவனாக இருக்கக் கூடாது என்று மனது அடித்துக் கொண்டது.வேகமாக அங்கு வந்தவள் அங்கு சுற்றிலும் பார்வையை சுழலவிட்டாள் எங்காவது தென்படுகிறானா என்று அவன் இங்கு இல்லை என்று தெரிந்து சற்று ஆசுவாசம் ஆனாவள் திரும்பும் நேரம் புயல் என அவள் முன்னே நின்றான் கிருஷ்ணன்.அவனது கண்கள் சிவந்து முகம் இறுக்கமாக கோபத்தில் உள்ளான் என்று முகமே காட்டிக்கொடுத்தது.

திவ்யா என்னவென்று உணரும் முன்பு கிருஷ்ணின் கரங்கள் இடியென இறங்கியது அவளது கன்னத்தில்.அதில் ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று அவள் உணரமுடியவில்லை.அதற்குள் அவனோ,

"என்னங்க டி காசு இருக்குனு திமிரா...என்னவேன பேசுவிங்களோ...அதான் தெரியாம இடிச்சிட்டேனு சாரி சொல்லரான்ல...அதுக்கு கண்டபடி பேசி அடிப்பிங்களோ..."என்று மேலும் அவளை திட்டிவிட்டு அவளது பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டான்.

திவ்யாவோ பிரம்மைப்பிடித்தது போல நின்றுவிட்டாள்.அவளுக்கு மிகவும் தலையிறக்கமாக போய்விட்டது ஒருவாரு தனது அறைக்கு வந்தவள் தனது படுக்கையில் விழுந்தவள் மனது கனத்தது.அவன் கூறி சென்ற வார்த்தைகள் அவளை ரணமாக்கின இதுவரை யாரும் அவளை அடித்ததோ திட்டியதோ இல்லை அதுவும் தான் எந்த தவறும் செய்யாமல் அவனிடம் அடிவாங்கியது மேலும் மனதை வதைத்தது "என்ன நடந்துச்சினு கூட கேட்க மாட்டானாமா அப்படி என்ன கோபம் இடியட்"என்று திட்டியவள் ஒருவாறு உறங்கியும் போனாள்.

கிருஷ்ணனோ மனதில் பாரம் ஏறியது போல உணர்ந்தான் அதனால் குறுக்கும் நெடுக்கும் தனது அறையில் நடந்து கொண்டிருந்தான் அவனது மனது இன்று கல்லூரியில் நடந்த நிகழ்வுளேயே சுழனறது.

கல்லூரி மதிய நேரம் கிருஷ்ணனும் அவனது நண்பர்களும் பைக் ஸ்டன்டில் கதை அடித்துக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அங்கு வந்த செந்திலின் கன்னம் கன்றி சிவந்து கண்கள் கலங்கி இருந்தது அதைக் கண்டவர்கள்

"என்ன டா..என்ன ஆச்சு...ஏன் இப்படி கன்னம் சிவந்து இருக்கு..."

"தெரியாம ஒரு பொண்ண இடிச்சுட்டேன் டா....அதுக்கு சாரியும் கேட்டேன் டா...ஆனா அந்த பொண்ணு எதையும் காதுல வாங்காம என்ன அடிச்சிட்டு கண்டபடி திட்டிட்டு பொய்யிட்டா..எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு மாப்பிள..."என்றான் குரல் கரகரக்க.

"யாரு டா...உன்ன அடிச்சது...சொல்லு..."என்று கோபத்தில் உறுமினான் கிருஷ்ணன்.

"அந்த JJ காலேஜ் பொண்ணு மச்சா..."

"நீ வந்து காட்டு வா..."என்று அழைத்துக்கொண்டு சென்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணின் போதா நேரமா திவ்யாவின் போதாத நேரமோ அன்று திவ்யாவும் தாரிகாவும் ஒரே நிறத்தில் சுடி அணிந்து இருந்தனர்.செந்திலை அழைத்து வந்த கிருஷ்ணன் யார் என்று கேட்டு கொண்டிருக்கும் வேளையில் செந்திலின் கண்களில் திரும்பி நின்றுகொண்டிருந்த திவ்யா விழுந்தாள்.அவளது சுடிதாரின் நிறத்தைக் கொண்டு அவள் தாரிகா என்று தவறாக நினைத்து அவள் தான் என்று கூறி இருந்தான்.அவன் கைக்காட்டியதும் வேகமாக திவ்யாவின் அருகில் சென்றவன் அவளை அடித்து இருந்தான்.

கிருஷ்ணன் அடித்த பிறகு தான் அவள் யார் என்று பார்த்த செந்தில் திகைத்து இருந்தான்.அவன் கிருஷ்ணனிடம் கூறும் முன்பு அவன் திவ்யாவை திட்டிவிட்டு வேகமாக சென்றிருந்தான்.அனைத்தும் நொடி பொழுதில் முடிந்து இருந்தது.

கோபமாக செல்லும் கிருஷ்ணனின் பின் சென்ற செந்தில் அவனிடம்,

"டேய் மச்சா..ஒரு பெரிய தப்பு நடந்துடுச்சு டா..."

"என்ன டா..."

"என்ன அடிச்ச பொண்ணு இந்த பொண்ணு இல்ல..."என்று கிருஷ்ணன் தலையில் இடியை இறக்கினான்.

"என்ன டா சொல்ர..."என்று பதறியவன்.

"அந்த பொண்ணும் இந்த கலர் சுடி தான் மச்சி பொட்டு இருந்துச்சு...அதான் மச்சி அந்த பொண்ணு நினைச்சுட்டேன்...உன் கிட்ட சொல்வரதுகுள்ள நீ அடிச்சுட்ட..."

"போ டா...உன்னால.."என்று அவனை திட்டிவிட்டு மீண்டும் கேண்டீன் பக்கம் ஓடியவன் அவள் எங்காவது தென்படுகிறாளா என்று பார்த்தான் அவள் அங்கு இல்லை என்றவுடன் கனத்த மனதுடன் வீடு வந்தான்.

"டேய் பையா...டேய்..."என்று பத்தூவின் குரலில் கலைந்தவன்.

"என்ன ம்மா..."என்றான் சோர்வாக.

"என்ன டா ஏதோ கப்பல் கவுந்த மாதிரி சோகத்துல இருக்க...என்ன.."

பத்மினியிடம் அனைத்தும் கூறினான்.அனைத்தையும் கேட்ட பத்மினி,

"உனக்கும் அடிச்சாலே அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்...கோபம் மனுஷன மிருகமா மாத்திடும்...நீ என்ன சொன்னாலும் நீ செஞ்சது தப்பு..நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்டுரு...இப்ப போய் தூங்கு..."

"சரி.."என்றவன் மனது சற்று சமன்பட்டு இருந்தது.

அடுத்த நாள் காலையில் சீக்கிரம் கல்லூரி சென்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அவர்களது கல்லூரி முன்பே சென்று இருந்தது.அதன்பின் அவன் எவ்வளவோ முயன்றும் அவளை பற்றிய தகவலை கல்லூரி நிர்வாகம் தர மறுத்திருந்தது.அவனது நினைவில் அவளது கலங்கிய முகம் ஆழமாக பதிந்திருந்தது.தனது நினைவுகளில் இருந்த வெளி வந்த கிருஷ்ணன் தனது பக்கத்தில் உறங்கும் மனைவியைக் கண்டவன்,

"ராட்சசி...என்னமா அடிக்கிறா...எங்கெயோ சுத்தி உன் கிட்ட நான் மாட்டிக்கிட்டேன்.."என்று வாய்விட்டு புலம்பியவன் முன்பு ஒரு தலையனை விழுந்தது அதில் கலைந்தவன் முன்பு கண்களில் கோபத்துடன் நின்றிருந்தாள் அவனது அழகான ராட்ச்சி.

"அய்யொ...நீ தூங்கலயா.."என்று அலறியவன் கட்டிலில் இருந்து எழுந்து நின்றான்.

"ஏன் டா...நீ ஏன்கிட்ட மாட்டிகிட்டியா..."இரு ஓடாத என்று அவனை தலையனையால் மொத்த தொடங்கினாள் திவ்யா. அவனோ அவளது கைகளில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.இவ்வாறு அவர்களது வாழ்க்கையின் பயணமும் தொடங்கியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top