என் மகளின் பிறந்த நாள்

Advertisement

joe

Well-Known Member
அழகி
அவள் பேரழகி

அறிவு ஒளி வீசும் கண்ணழகி
அழகு மொழி பேசும் காஜலழகி!

கவிழ்த்த ஏழாம் எண் நாசியழகி
அதில் ஜொலிக்கும்
தங்க பாசியழகி !

கேள்வியாய் வளையும் காதழகி
குடைதோடில் பதில்கூறும் காதழகி

சிவந்த ஆப்பிள் கன்ன அழகி
கடித்தால் சிவக்கும் உன் கன்ன அழகு!

முத்துச் சிப்பி பல்லழகி
கடி வாங்கிப் பார் அறிவாய்
அதன் கூர் அழகை!

செக்கச் சிவந்த செர்ரி இதழ் அழகி
திட்டினால் உதடுபிதுக்கி அழும் ராஸ்பெர்ரி இதழ் அழகி!

எத்தனை தடை வந்தாலும் அதை எதிர்த்து நடை போடும் அவள் அகமும் அழகு!
 

banumathi jayaraman

Well-Known Member
கவிதை அருமை
உங்கள் அன்பு மகளுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் சொல்லிடுங்க, Joe டியர்
 

joe

Well-Known Member
கவிதை அருமை
உங்கள் அன்பு மகளுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் சொல்லிடுங்க, Joe டியர்
Thanks mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top