என் காவல்காரன் - 1

#1
அத்தியாயம் - 1

அதிகாலை ஆறு மணிக்கு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்த கோயம்பேடு மார்க்கெட்ல் திடீர் என்று ஒரு சலசலப்பு என என்று சலசலப்பு நடந்த இடத்தை அனைவரும் நோக்கினார் அங்கே ஒருவன் வெள்ளை வெட்டி சட்டையில் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டு இருந்தான் அவனை பின் தொடர்ந்து ஐந்து பேர் அறிவால் , கட்டைகளுடன் அவனை துரத்திக்கொண்டு வந்தனர். மூச்சிரைக்க ஓடி வந்த வெள்ளை வெட்டிக்காரனை கட்டையால் அவனின் தலையில் குறி பார்த்து அடித்தான் ஒருவன். அவன் நிலை தடுமாறி கீழே விந்து எழுவதற்கு முன் அவனை சுற்றி வளைத்தனர் அந்த ஐந்து பேர்.

கீழே இருந்தவன் " நா இனி உங்க வழிக்கு வரல என விட்டுடுங்க" என கெஞ்ச அதற்கு அந்த ஐந்து பேரில் ஒருவன் திமிராய்" இத நீ முன்னாடியே யோசிச்சு இருக்கனும் இப்போ கெஞ்சி ப்ரோஜினம் இல்லை. என தைரியம் இருந்த எங்க ஐயாவே எதிர்த்து பேசுவ உன்ன சும்மா விட்டா மத்தவங்களுக்கு பயம் விட்டு போய்டும் அதனால உன்ன இப்படியே விட்டு போறத இல்லை " என்று கூறிவிட்டு தன் பக்கத்தில் இருந்தவரிடம் கண் காமிக்க அவன் அந்த வெள்ளை வேட்டியின் வலது கையையும் இடது காலையும் வெட்டி விட்டு அங்கு வந்த ஜீப்பில் ஏறி சென்று விட்டனர். கத்தியால் வெட்டுப்பட்டவன் அங்கே துடுது கொண்டு இருக்க மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

அப்போது மதுரையில் இருந்து சென்னை வந்த பஸ் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தது அதில் இருந்து இறங்கிய ஒருவன் அங்கே கூட்டமாக இருப்பதாய் பார்த்து அங்கே சென்று பார்த்தான் அதை பார்த்து விட்டு தன்னுடைய மொபைல் போனினை எடுத்து ஆம்புலன்ஸ் க்கு கால் செய்து வரவைத்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். தன்னை அழைத்து செல்ல வரேன் என்று சொன்ன நண்பனை தேடினான். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து அங்கு வெட்டு பட்டு கிடந்தவனை அழைத்து சென்று விட்டனர் இது அனைத்தும் இருபது நிமிடத்தில் நடந்து முடிந்து விட அங்கு ஒரு சம்பவம் நடந்துக்கான அடையாலமே இல்லாமல் ஆகிவிட்டது.

தன் நண்பனை தேடி பஸ் ஸ்டாண்ட் வெளியவே வந்துவிட்டான் ஆனால் இன்னும் அவன் நண்பனை காணவில்லை கால் பண்ணாலும் எடுக்கவில்லை என்ன இவன இன்னும் காணும் என்று யோசிக்கையிலே ப்ளூ பல்சர் இல் ஒருவன் வேகமாக அவன் முன்னால் சடன் பிரேக் இட்டு நிறுத்தினான். பைக்கில் இருந்தவன் அவசரமாக ஹெல்மெட்டை கழட்டிவிட்டு நின்றுகொண்டு இருந்தவனின் பையை வாங்கி முன்னாடி வைத்துக்கொண்டு " வா மச்சான் சீக்கிரம் இரு தடவை ஆச்சு பாரு " என்று கூற நின்று கொண்டு இருந்தவன் அவனை நன்கு முறைத்து விட்டு அவன் பின்னல் அமர்ந்து கொண்டான். இருவரும் திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

" இதுக்கு தான் நானே வந்துக்குறேனு சொனேன்" என்று பின்னல் அமர்ந்து இருந்தவன் குறையுடன் கூறினான்.

"சாரி அர்ஜுன் நைட் ஷிபிட் முடிச்சிட்டு வந்தேன் அதன் லேட் ஆயிடுச்சு " என்று முன்னால் இருந்தவன் மெதுவாய் தான் வர தாமதம் ஆனா காரணத்தை கூறினான்.

" சரி ஒடனே மூஞ்ச பாவமா வசிக்குறமாதிரி நடிக்காத சகிக்கல" என்று கிண்டலாய் அர்ஜுன் கூறினான்.

" ஹ்ம்ம்... ஆமா நா வரும்போது போலீஸ் லா இருந்தாங்களே என்ன ஆச்சு ??" என்று வினவ

"பஸ் ஸ்டாண்ட்ல யாரையோ வெட்டிட்டாங்க கிஷோர் எல்லாரும் அப்படியே வேடிக்கை தான் பாத்துட்டு இருந்தாங்க ஒருத்தவான்களும் எந்த உதவியும் செய்யல "என்று வருத்தமாய் அர்ஜுன் சொல்ல

" இங்க எல்லாம் அப்படித்தான் டா போக போக உனக்கே பழகிடும்" என்று சலிப்பாய் கிஷோர் கூறினான்.

இவ்வாறு அவர்கள் பேசிகொன்டே கிஷோர் தங்கி இருக்கும் ரூமிற்கு சென்றடைந்தனர்.தொடரும்......
 
#3
:D :p :D
உங்களுடைய "என் காவல்காரன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அகிலா ஜெயவேல் டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement