என் காதல் தீ 20

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வழக்கம் போல அன்றைய காலை வேளையும் விடிந்தாலுமே கதிருக்கும் நிரல்யாவிற்கும் அது புதியதாகவே தெரிந்தது. அவர்களது இனிய தொடக்கத்திற்கான விடியல் அல்லவா அது?

மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் அறையில் இருந்து வெளிவந்தவர்களை அந்த ஊரின் பெரியவர்கள் சிலர் வரவேற்றனர். என்வென்ற கேள்வியுடன் நின்ற இருவருக்கும் அவர்கள் சிறிய நேரத்திலேயே புரிய வைத்தனர்.

நெல்லுக்கு பெயர் போன அந்த ஊரின் பிரதான ஏற்றுமதி நெல் மட்டுமே. அதனை இங்கிருந்து வாங்கி, கோவை மாநகரத்தில் இருக்கும் ஒரு ஆலைக்கு அனுப்பி அங்கே அவற்றை சுத்தம் செய்து விற்கின்றனர். அன்றைய காலகட்டத்திலிருந்தே அந்த ஆலையில் இருந்து கூறுவது மட்டுமே விலை. சமீப காலங்களில் அவ்வாலையை நடத்துபவர் முன்புபோல் தங்களுக்கு ஏற்ற விலையை எவ்வளவு முறை கேட்டும் தராதபடியால் வேறு மார்க்கம் இருந்தால் பார்க்கலாம் என்று கேட்க வந்திருந்தனர்.

இதனைக் கேட்ட கதிர், தான் அந்த ஆலை உரிமையாளரிடம் பேசிப்பார்ப்பதாக கூறிச்சென்றான்.

அன்று மாலையே வந்தவனின் முகமே கூறியது எதுவும் சரிவர நடக்கவில்லையென்று. அங்கு சென்றபின்பே அவனுக்குத் தெரிந்தது, அந்த ஆலை சில ஆண்டுகளாக நஷ்டத்தில் ஓடுவதும், அதனை விற்பதற்கு அதன் உரிமையாளர் முயற்சிப்பதும். அதனைக் கேட்டபின், யோசனையோடு திரும்பி வந்துவிட்டான் கதிர்.

“இப்போ என்ன கதிர் செய்யறது? பேசாம வேற ஆலையை பார்ப்போமா?” என்று சோர்வோடு கேட்ட தந்தையை நோக்கி,

“நாம ஏன்ப்பா அந்த ஆலையை வாங்கக்கூடாது?” என்றான் கதிர்.

அவன் முடிவு யாரும் எதிர்பாராதது. இருந்தாலும், அதன் சாதக பாதகங்களை அவன் விளக்கிக் கூற, அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி, கதிரின் தந்தையும் நிரல்யாவின் தந்தையும் அவ்வாலையை வாங்க, அதனை நிர்வாகிக்கும் பொறுப்பை கதிர் ஏற்றுக்கொண்டான்.

இதில் நிரல்யாவிற்குத் தான் வருத்தம், கதிர் தன் பணியை விட்டதில். ஆனால், அவளையும் கதிர் சமாதானப்படுத்தியிருந்தான்.

******​

இவற்றுக்கு இடையில் கதிர் மற்றும் நிரல்யாவின் திருமண வரவேற்பு விமர்சையாக நடத்தப்பட்டது. அதுவரை கதிரை சைட்டடித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் பலரின் இதயம் சிதறித்தான் போனது. இருந்தாலும், ஒரு சிலர் அன்றும் கதிரை வைத்த கண் வாங்காமல் பார்க்க, கதிர் தான் தத்தளித்தான், அவனை கண்களாலேயே குத்திக் கிழிக்கும் நிரல்யாவைக் கண்டு.

‘இப்போ கொஞ்ச நாளாத்தான் சந்திரமுகி ஜோதிகால இருந்து காக்க காக்க ஜோதிகாவா மாறுனா… திரும்பியுமா? நான் இவள சைட் அடிக்குறவங்கள ஏதாவது சொல்றேனா? இவ மட்டும் ஓவர் பொசசிவ்வா இருக்கா!’ என்று அவன் புலம்ப,

‘அடேய்! நீ அந்த பையன தனியா ம்யூசியம் பின்னாடி வெளுத்ததெல்லாம் மறந்துருச்சா?’ என்று கேட்டு தன் வேலையை கரெக்டாக செய்து அவன் உள்ளே சென்று உறங்கிக்கொண்டது மிஸ்டர். மனசாட்சி.

******​

“இந்த ப்ளூ கலர் உனக்கு எடுப்பா இருக்கு” என்று நகைகளை கழற்றிக்கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்து கூறினான் கதிர்.

அவன் கண்களை தன் எதிரில் இருந்த கண்ணாடியில் கண்டவளுக்கு அதில் வழிந்த காதல் தெரிய, அதில் தன் வசம் இழந்தவள், அவன் கைகளை தன்னிரு கைகளாலும் இறுக்கிக்கொண்டாள்.

அதில் மெலிதாக புன்னகைத்தவன், அவள் கண்ணத்தில் மெலிதாக முத்தமிட, பெண்ணவள் அவன் கண்களில் இருந்து பார்வையை பிரித்தெடுத்து தரையை நோக்கினாள்.

அவளை தன்புறம் திருப்பியவன் தாடையைப் பற்றி தன் கண்களை பார்க்கச் செய்ய, அதில் தெரிந்த ஏதோ ஒன்றில் இருந்து தன்னை காத்துக்கொள்ள கொண்டவன் மார்பினிலேயே தஞ்சம் புகுந்தாள்.

அதன்பின், சிரிப்பொலிகளும் சலங்கை ஒலியையும் தவிர வேறெதுவும் காலை வரை அங்கே கேட்கவில்லை.HelloGuruPremaKosame.jpg
 

Roobi

Active Member
ஆமா தண்ணியோட தண்ணிக்குள்ளே இருக்கும் போது பதுங்கி இருந்த இருவரும் யார் என்று
சொல்லவில்லையே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top