என் காதல் தீ 04-B

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
சாரி ஃப்ரெண்ட்ஸ்... சின்ன அப்டேட் தான் என்றாலும் ரொம்ப தாமதமாகி விட்டது. அடுத்த அப்டேட் பாதி எழுதிவிட்டேன், ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலை தந்துவிடுகிறேன்... படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா...

HelloGuruPremaKosame.jpg

நிரல்யாவின் குரல் காதில் விழவும் தன்னருகில் அவள் இருந்த இடத்தைக் கண்டவனுக்கு அங்கே யாருமில்லாமல் போகவும், விரைந்து காரிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் தேடியவன் கண்களில் எதுவும் படாமல் போகவும் மீண்டும் குரல் வரவும் அத்திசையை நோக்கி ஓடினான்.

அங்கே அவன் கண்டதோ, தன் கைகளை நீருக்கு மேலே ஆட்டி முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்த நிரல்யாவை. ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவன் தண்ணீரையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். ஆழ்ந்து மூச்சுவிட்டவன், கண்களை மூடிக்கொண்டு ஆற்றில் குதித்தான்.

பலநாட்கள் பழகாததால் சிறிதளவு தடுமாற்றம் அடைந்து, பின் நீரின் ஓட்டம் பிடிபட, நிரல்யாவை நோக்கி நீந்தத் தொடங்கினான்.

அவன் அவளை நெருங்கும்முன் அவள் முற்றிலும் மூழ்கியிருக்க, நீருக்கு அடியில் சென்றவனுக்கு அவள் எங்கோ அடித்துச் செல்லப்படுவது கண்ணில் பட்டது. சிறிது நேரப் போராட்டத்தின் பின் வெற்றிகரமாக நிரல்யாவை கரையில் கொண்டு வந்து சேர்த்து முதலுதவியும் செய்து அவள் கண்விழிக்கக் காத்திருக்கலானான்.

இத்தனை நேரமும் வராத எண்ணங்கள் யாவும் தற்போது அவனை ஆட்கொள்ளலாயின. அவற்றை எல்லாம் தெளிவாக யோசிக்க இது தோதான இடமல்ல என்பதனை உணர்ந்தவன், தன் கவனத்தை இன்னும் தன் சுயத்துக்கு வராத நிரல்யாவை நோக்கி திருப்பினான். அதேநேரம் நிரல்யாவும் விழித்தெழுந்தாள்.

தலையைப் பிடித்துக்கொண்டே எழுந்தவளுக்கு என்ன நடந்தது என்பது புரிய சில நிமிடங்கள் எடுக்க, தன்னை காப்பாற்றியவனை நன்றியுடன் பார்த்தவளுக்கு அவனே தன் பிரச்சினைகளுக்கு மூலகாரணம் என்பது புரிய, எரிச்சலுடன் பார்த்தாள். (றைட்டு… போதை தெளிஞ்சுருச்சு!)

“இப்போ எப்படி இருக்குதுங்க?” என்ற அவனின் கேள்விக்கும் பதிலளிக்காமல் எழுந்தவளுக்கு கால்கள் தள்ளாட, தாங்க வந்தவனின் உதவியையும் மறுத்துவிட்டு தானே எழுந்து நடக்கலானாள்.

நம் நாயகியின் இந்த பார்வை மாறுதலின் காரணம் புரியா நாயகனும் என்னவென்று குழம்பி நோக்க, அவனைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் நிரல்யா. அவளைப் பின்தொடர்ந்த கதிரும் உள்ளிருந்து ஒரு துவாலையை எடுத்துக் கொடுத்துவிட்டு அங்கிருக்காமல் விலகிவிட்டான். (ரொம்ப நல்லவனா இருக்கானே! இப்படி இருந்தா உலகத்துக்கு ஆகாதே!)

அரை மணி நேரம் கடந்திருக்க, காரின் அருகில் வந்தவனுக்கு நிரல்யா தூங்கிக்கொண்டிருப்பது தெரியவே, அவளது உடைகள் உலர்ந்திருப்பது கண்டு தங்கள் வீடை நோக்கி செலுத்தியவனின் மனம் அவன் கண்ட காட்சியை அசைபோட்டது.

நிரல்யாவை அவளது உடை உலரும்வரை காரிலேயே இருக்குமாறு பணிந்துவிட்டு நகர்ந்தவன் அந்த ஆள் ஆரவாரமற்ற சாலையில் சிறிது தூரம் நடந்து வர எண்ணி நடந்தான். அந்த பெரிய மரத்தின் அருகில் அவன் வரவும், பேச்சுக்குரல்கள் கேட்கவும், என்னவென்று அறிய நின்றவனுக்கு அங்கே கேட்டவை அதிர்ச்சியளித்தது.

“என்னடா… இப்படி மிஸ் பண்ணிட்ட… இதுதான் முதல்தடவை… எப்பவும் காரியத்த கச்சிதமா முடிச்சிடுவ… இப்போ மட்டும் ஏன்?

“என்னணே செய்யுறது? அந்த பொண்ணு தனியா தான வந்துச்சு… ஈசியா தூக்கிரலாமுன்னு பாத்தா எங்க இருந்தோ அவன் வந்துட்டான்…”

“அவன் நம்மல பாத்திருப்பாளா?”

“அதுக்கு வாய்ப்பில்லண்ணே”

“சரி… இங்க வெச்சு எதுவும் பேச வேணா… நம்ம எடத்துக்கு போயிறலாம்” என்றவாறு இருவர் அந்த புதர்களினுள் மறைந்து போயினர். அவர்களைப் பின்தொடர நினைத்தவனுக்கு அது முடியாமல் போக, கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பினான்.

இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை; அதன் அவசியமும் இருவருக்குள்ளும் இருந்ததில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகளோடு அவர்களது பேச்சுக்கள் நின்றுவிடும், பெரும்பாலும் கல்லூரி என்ற அளவிலேயே. ஆனால், இனி அவளின் வார்த்தைகளே அவனைக் கூறுபோடும் என்பதனை அவன் அறிந்தால்? அதன்பின்னும் இவ்வாறே இருப்பானா?

*********

அன்று இரவு,

யாருக்கோ கால் செய்த நிரல்யா, மறுமுனை எடுக்கப்பட்டதும், “அஸ் யூ விஷ்” என்றுவிட்டு போனை அணைத்துவிட்டாள். அவள் மனமோ, அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது, அதற்கும் தடங்கல் விரைவில் வரும் என்பதனை அறியாமல்!
தொடரும்....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வெளிநாட்டிலிருந்து வந்த
பெண்ணுக்கு இங்கே எதிரி
யாரு?
ஒருவேளை அவளின் அழகுக்கு
வந்த ஆபத்தா?
இல்லை, நிரல்யா பாரில் ஏதேனும்
உறண்டை இழுத்தாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top