என் காதல் தீ எபிலாக்

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஏழு வருடங்களுக்கு பிறகு,

“ஹேஏஏஏ… நாந்தான் ஃபர்ஸ்ட்…”

“இல்ல… நாந்தான் ஃபர்ஸ்ட்”

“யூ சீட்டர்! நாந்தான் ஃபர்ஸ்ட் வந்தேன்”

“நான் சீட்டர் இல்ல… நீதான் சீட்டர்!”

அந்த இடம் முழுவதுமே இந்த இரு குழந்தைகளின் சண்டையால் நிசப்தத்தைத் தொலைத்திருந்தது. அவர்கள், அபிராமியின் மகனும் கதிர் மற்றும் நிரல்யாவின் பெண்ணும் ஆவர். தங்களது மாரி அங்கிளிடம் ஆற்றிற்கு கூட்டிப் போகுமாறு அடம்பிடித்து அழைத்து வந்திருந்தனர்.

இருவரும் சண்டையிடுவதை ரசித்துப் பார்த்தவாறு கரையில் அமர்ந்திருந்தான் மாரி. அவனுக்கு அருகில் அவனது கூட்டாளி மற்றும் நண்பனான காசி.

“இப்போ எல்லாம் நிம்மதியா இருக்கோம்ல மச்சான்!” என்று நண்பன் கேட்க,

“ஆமாம் மச்சான்! எல்லாத்துக்கும் நம்ம கதிர் ஐயா தான் காரணம்” என்று பதிலளித்தான் மாரி, குழந்தைகளின் மீது பார்வையை பதித்தவாறே.

சில ஆண்டுகளுக்கு முன் அவன் கூட்டத்தின் தொழிலே ஆற்றில் நீந்த வருபவர்களை மூழ்கவைத்து அவர்களின் உடலுக்காக வரும் உறவினர்களிடம் பேரம் பேசி சம்பாதிப்பது. இதில் உள்ளூர், வெளியூர் என பலர் உயிரிழந்திருக்கின்றனர், கதிர் மற்றும் நிரல்யாவின் தாயார் உட்பட.

அன்று நிரல்யாவையும் அவ்வாறே அவர்கள் கொல்ல நினைக்க, அவர்களிடம் இருந்து நிரல்யாவைக் காப்பாற்றிய கதிர், அவர்கள் யாரென்று கண்டுபிடிக்கும்வரை இப்படி ஒரு பயங்கரம் தங்கள் வட்டாரத்தில் நடந்துகொண்டிருப்பதை நம்பவே இல்லை. இதனைப் பற்றி கேட்டதெல்லாம் வதந்தி என்று அவன் நினைத்திருக்க, உண்மை என்று அறிந்தவன், அதனை முற்றிலும் ஒழிக்க அத்தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்றவாறு பணிகளைத் தந்தான்.

இன்று அனைவரும் அவன் ஆலையில் பணியில் இருக்கின்றனர். மாரி அங்கு பணிபுரிவதோடு, கதிரின் செல்ல மகளை பார்த்துக்கொள்வதையும் மேற்கொள்கிறான். அவனுக்கு அம்மு என்றால் உயிர்.

நேரம் செல்வதைக் கண்டவன், இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டை அடைந்தான். அதே நேரம், நிரல்யாவும் வீட்டை வந்தடைந்து பெரியவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் இவ்வளவு சீக்கிரத்தில் வீட்டில் இருப்பதைக் கண்ட குழந்தைகள் அவளை தாவி அணைத்துக்கொண்டனர். இருவரையும் கொஞ்சியவள், அவள் பையில் இருந்து இருவருக்கும் புதுத் துணிகளை அளித்தாள்.

“ஐ… மம்மி… நீங்களே டிசைன் செய்ததா?” என்று ஆசையாக கேட்ட அம்மு, அவள் ஆம் என்று தலையசைத்ததைக் கூட நின்று பார்க்காமல் அதனை உடுத்த தனதறைக்கு ஓடினாள். பிரவீன் மட்டும் நின்று தன் அத்தைக்கு ஒரு அன்பு முத்தத்தை அளித்துவிட்டு “தேங்க்ஸ் அத்தை!” என்று ஓட்டம் பிடித்தான்.

நிரல்யா இப்போது கோவை நகரத்தில் ஒரு புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனிங் நிறுவனம் நடத்தி வருகிறாள். அவள் ஆசைப்படியே கதிர் அவளை ஃபேஷன் டிசைனிங்கில் சேர்த்து விட பிரியப்பட்டும், தன் இளங்கலை படிப்பை முடித்து விட்டே அத்துறையில் சேர்ந்தாள். இடைப்பட்ட காலத்தில் அவள் பல ஃபேஷன் டிசைனிங் சார்ந்த கோர்ஸ்கள் செய்திருக்க, வெகு விரைவிலேயே அவளால் அத்துறையில் ஒளிர முடிந்தது. தற்போது, இருவரும் சேர்ந்து அனைத்தையும் பார்த்துக்கொள்கின்றனர்.

*****​

குழந்தைகள் இருவரையும் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவள், அவர்களின் அருகிலேயே கண்ணயற, தன் கண்ணத்தில் உணர்ந்த ஈரப்பதத்தில் கண்விழிக்கும்முன் அவளை இரு கைகள் ஏந்திக்கொண்டு பால்கனியை நோக்கிச் சென்றது. அது யாரென்று ஸ்பரிசத்தில் உணர்ந்தவள் எதுவும் பேசாமல் கண்மூடி அந்த நிமிடத்தை ரசித்து அவன் கழுத்தைச் சுற்றி கைகளால் மாலையிட்டாள்.

பால்கனியை வந்தடைந்த கதிர், அங்கே போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அவளை அமரவைத்தவன், அவள் அருகே அமர, அதற்காகவே காத்திருந்தாற்போல அவன் தோள் சாய்ந்துகொண்டாள் அவன் காதலி.

இது இருவருக்குள்ளும் தினமும் நடைபெறுவது. இரவில் சிறிது நேரமேனும் இவ்வாறு இருவரும் அமைதியாக ஊஞ்சலில் அமர்ந்து கொள்வார்கள். அந்த பேச்சற்ற மௌனத்தி அவர்கள் மனம் மட்டும் பல கதைகள் பேசும்.

இன்றும் அதேபோல் அமர்ந்து கொண்டவர்கள் வளர்பிறையாய் வளர்ந்துகொண்டிருக்கும் தங்கள் காதலை அசைபோட்டவாறு அமர்ந்திருந்தனர்.



இயற்கையின் மெல்லிசையில் அவர்கள் நெஞ்சம் பாடும் கவிதைக்கு இடைஞ்சல் எதுவும் இல்லாமல் அரங்கேற்றம் நடக்கும் பொழுதை கலைக்காமல் நாமும் விடைபெறுவோமாக!HelloGuruPremaKosame.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top