என் உறவென வந்தவனே -7

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
hii.. frds & siss... en uravena vandhavane 7 epi post pannivitten... padithuvittu comments kodukka marakadhinga...happy reading....;);)

அத்தியாயம் - 7

என் மனம் உன்னை உணரத்தொடங்கிய நொடியில்...
உணர்ந்தேன் சில பொய்களை உண்மையாய்...
காதலிப்பவர்களுக்கு(அன்பு) மட்டுமே உண்மை...

மாலையானதும் கண்விழித்த தனு தன்னுடைய பொருள்களையெல்லாம் எடுத்து பேக் செய்து வைத்தவள்... "உறவினர்களுடன் கோவிலுக்கு சென்ற பானு வந்துவிட்டாளா..." என்று பார்க்க அவளின் அறைக்கு சென்றாள்... அங்கே பானு, ரவி மற்றும் ஜான் மூவரும் இருந்தனர்...

அப்படியே திரும்பி போகப் பார்த்தவளை... "எங்கடிப்போற... உள்ள வா..." என்று பானு அழைக்கவும் உள்ளே சென்றாள்... அங்கே ஜான் "ஊருக்கு போக வேண்டும்..." என்று ரவியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்..."டேய்.. மச்சான் நான் சொல்றத கேளுடா... நான் இன்னைக்கே கிளம்பியாகனும்... இல்ல அம்மாவே நேரா கிளம்பி இங்க வந்துருவாங்க போலடா... அதுவும் இல்லாம ஆபீஸ் வொர்க்ஸ் வேற ஹேவியா இருக்கும்டா... புரிஞ்சிக்கோடா..." என்று ஜான் சொல்லிக்கொண்டிருக்க... "அய்யோ... இத எப்படி மறந்தேன்... ஆமாடா.. அந்த மாயா இருக்காள்ள... அவ ஒரு வேல கொடுத்த மச்சி... அத முடிக்காமலே வந்துட்டேண்டா... அந்த வொர்க்கையும் சேர்த்து நீயே முடிச்சிடு... சீக்கிரம் போய் ரெடியாகுடா..." என்று ரவி அவனை அவசரப்படுத்த... அவனின் செய்கையில் சிரித்தவன்... "இல்லடா... நீ சொன்ன மாதிரி ரெண்டு மூனு நாள் இருந்துட்டே போறேனே..." என்று ஜான் சிரித்துக்கொண்டே சொல்ல... "வேணா...வேணா நீ இப்பவே கிளம்பு... இல்ல அந்த மாயா என்ன ஒரு வழிப்பண்ணிடுவா..." என்று சொல்ல... "யாரு அந்த மாயா.. ஏன் இவ்வளவு பயப்படரீங்க..." என்று பானு கேட்கவும்... "நான் அப்புறம் சொல்றேன்மா... "என்று சொன்னவனை பொய்யாக முறைத்தவள் ஜானிடம் "ம்ம்... அண்ணா நீங்க ரெண்டு நாள் தங்கிட்டுதான் போறீங்க..." என்று சொல்ல... இவர்களின் உரையாடல்களை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தாள் தனு...

"டேய்.. உன் நண்பன் பாவம்தான... எத்தன மணிக்கு ட்ரெயின்..." என்று ரவி கேட்க...
"ம்ம்... 7:45க்கு..." என்று சொல்ல... சிரித்துக்கொண்டிருந்த தனுவிற்கு பொறையேறியது... அவளின் நிலைக்கண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் ஜான்... "நல்லது அண்ணா.. இவளுக்கும் அதே டைம்லதான் ட்ரெயின்..." என்று பானு சொல்ல... "ம்ம்..தெரியுமே.." என்று மனதில் நினைத்தவன்... "ஓ ... அப்படியா..." என்று கேட்டுவைக்க... தனுவிற்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...

அவர்கள் இருவரும் கிளம்பும் நேரமும் வந்தது... "ரவி சாரிடா..மச்சான்... ஸ்டேஷன் வரைக்கும் வர முடியாது..." என்று சொன்னவனை கட்டி பிடித்து "பரவாலடா.. நல்ல ஜாலியா என்ஜாய்ப்பண்ணிட்டு... தங்கச்சியோட சீக்கிரம் சென்னை வரப்பாரு.... ஹாப்பி டேஸ் மச்சான்... " என்று காரில் ஏறி அமர்ந்தான் ஜான்... "சரிடி.. நான் சொன்னதெல்லாம் நியாபகம் வச்சிக்கோ... முக்கியமா அந்த மோனிஷா டீச்சர்கிட்ட.. பிரச்சனைக்கு போகாம இரு.."
என்று சொன்ன பானுவை பார்த்து முறைத்த தனு "நான் என்னமோ அவகிட்ட வேணும்னே சண்டை போடற மாதிரி பேசற... "என்று கோபமாக பேசியவள்... பானு வருந்துவதை பார்த்து... "அய்யோ...பானுமா... சாரிடி நீ வரவரைக்கும் அவ பக்கமே போகமாட்டேன்போதுமா..."என்று சொல்லிவிட்டு அவளின் காதில் "ஹனிமூன் எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் ஸ்கூல் வந்து சேரு... பாய்..." என்று சொன்னவளிடம்.. "ச்சிப்போடி..." என்று அழகாக வெட்கப்பட்டாள் பானு..

இருவரும் காரில் அமர்ந்தது மட்டும் தான் தெரியும்... எப்படி ஸ்டேஷனுக்கு வந்தார்கள் என்றே... தெரியவில்லை... பின்ன... "அவனின்அருகில் அமர்ந்ததிலிருந்து... ஏதோ சிந்தனையாகவே அமர்ந்திருந்தாள் தனு..." அவளின் சிந்தனையை கலைக்காமல் இது தான் சந்தர்ப்பம் என்று... "அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்... அவள் கண்மூடி சிந்திக்கும்போது நெற்றி சுருங்குவதும்...பின் அவளின் வில்போன்ற புருவம் விரிவதும்... மேல் உதட்டை கடிப்பதும்.. " என ரசித்துக்கொண்டிந்தான்... ஜான்...

டிரைவர் காரை வேகமாக நிறுத்தவும் தான் இருவரும் சுயநினைவிற்கு வந்தனர்... தங்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கியவர்கள்... டிரைவரிடம் நன்றி உரைத்துவிட்டு ஸ்டேஷன் உள்ளே சென்றனர்... இருவரும் தங்களின் இருக்கையை தேட... ஜான் தன் இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்துகொண்டான்... தனுவும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்....

ஜானிற்கு அவளை தனியாகவிட மனமே இல்லை... இருந்தாலும் "அவளின் தற்போதைய மனநிலைக்கு நான் தான் காரணம்... தொந்தரவு செய்ய வேண்டாம்.." என்று அமைதியாக இருந்தான்... அவனின் மொபைல் ஒலிக்கவும்... எடுத்து "ஹலோ..." என்றான்... கட்டாகிவிட்டது... மறுபடியும் கால் வர... எடுத்து "ஹலோ... ஹலோ..யாரு... " என்று கேட்க... மறுபடியும் கட்டாகிவிட்டது... கடுப்பானவன் "மறுபடியும் கால் வரட்டும்... என்ன பன்றேன் பாரு..." என்று புலம்பியவன்... வண்டியை எடுப்பதற்கு முன்பாக வாட்டர் பாட்டில் வாங்கலாம் என்று போனான்... போகும் வழியில் தனுவைப் பார்த்தவன்.. தன்னையே நொந்துகொண்டான்... அந்த பெர்த்தில் யாரும் இல்லை இவள் மட்டுமே... தலையை ஜன்னலில் சாய்த்து கண்மூடி அமர்ந்திருந்தாள்....

ஜான் கடைக்கு சென்று இரண்டு வாட்டர் பாட்டில் வாங்கியவன்... இரண்டு குட் டே பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு சென்றான்...

அவன் வந்து தன்னையே பார்த்துகொண்டிருப்பதை உணர்ந்தும்... கண்ணை திறக்காமல் அமர்ந்திருந்தாள்...
அப்போதுதான் ஒன்றை நினைத்தாள்... "அவனின் வருகை மற்றும் பார்க்கும் பார்வையை... நான் கண்கொண்டு பார்க்காமலே உணர்கிறேனா... ம்ம்.. இந்த காதல் வந்துவிட்டால் நம் கண்ணால் பார்த்தும் ,கேட்டும் நம்ப முடியாத விஷயங்கள்கூட... உணர்ந்து நம்புகிறோம்..." என்று நினைத்தவள்... நிமிர்ந்து அமர்ந்தாள்... ட்ரெயின் மெதுவாக கிளம்ப ஆரம்பித்தது... வண்டியில் ஏறிய ஜான்...தனுவிடம் சென்று நிற்கும்போது மொபைல் ஒலிக்க... எடுத்து பார்க்க "அதே நம்பர்தான்..." என்று சொன்னவன் வேகமாக எடுத்து திட்ட ஆரம்பிப்பதற்குள்... "மாமா.. நான் ஹேமா.. பேசுறேன்..." என்று மறுமுனையில் இருந்து குரல் வர... "ஓ.. நீ தானா... நல்ல வேல முன்னாடியே சொன்னியே... இல்லனா நல்லா திட்டியிருப்பேன்... ஆமா..என்ன புது நம்பரா..." என்று கேட்க... "ம்ம்... ஆமாம் மாமா..." என்று ஹேமா சொல்ல... "சரி... எ..." என்று ஆரம்பித்தவன்... தன்னையே பார்த்த தனுவிடம்... வாட்டர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டை நீ ட்ட... அவள் வாங்காமல் இருக்கவும்... "ப்ளீஸ்... வாங்கிக்கோ தனுமா..." என்று சொல்ல... மறுப்பேதும் சொல்லாமல் இந்த முறை வாங்கிக்கொண்டாள்....

அப்படியே தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து போனில் "சரி... எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணிருக்க..." என்று கேட்க... "யாருகிட்ட மாமா.. பேசிட்டிருந்தீங்க..." என்று இவள் கேட்க...
"ஏன் அத தெரிஞ்சி நீ என்ன பண்ணப்போற... முதல்ல எதுக்கு கால் பண்ணண்ணு சொல்லு..." என்று அவன் சதாரணமாக தான் சொன்னான்... அதற்கே கோபப்பட்ட ஹேமா... "நான் நாளைக்கு கால் பண்றேன்..." என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்... "லூசா.. இந்த பொண்ணு நான் என்ன அப்படி சொல்லிட்டேன்னு... டக்குனு கட் பண்ணிட்டா... சரி இதுவும் நல்லது தான்..." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன்... எழுந்து சென்று படியில் நின்றவன்... சிகரெட் ஒன்றை பற்றவைத்து ஊதினான்... அவனின் பழக்கம் இது அதுவும் சந்தோஷமாக இருந்தால் ஒன்றும்... கவலையாக இருந்தால் இரண்டு என கணக்கு வைத்துக்கொள்பவன்....

இங்கே ஹேமா கோபத்தில் தலையணையை எடுத்துக்கீழே வீசியவள்... "தனுமாவா.. யாராக இருக்கும்... அப்படியே உருகி சொன்னாரே... ப்ளீஸ் தனுமான்னு... ம்ம்... ஒருவேளை அப்படியா இருக்குமோ..." என்று நினைத்தவள்... மறு நொடியே "அத்தைக்கு தெரியாமா மாமா லவ்லாம் பண்ணமாட்டாரு..." என்று அவளே சமாதானம் பண்ணிக்கொண்டு உறங்க முயற்ச்சித்தாள்... ஏனோ இந்த நொடியிலிருந்து "தனு" என்ற பெயரை வெறுத்தாள் ஹேமா...

- தொடரும்....
 
eanandhi

Well-Known Member

Super sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top