என் உறவென வந்தவனே 10

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
hii.. frds& siss... en uravena vandhavane epi 10 pottachu... happy reading..:giggle::giggle::giggle:



அத்தியாயம்- 10

ஆசைகள் அதிகமானாலும்...
அதில் நிறைவேறுவது குறைவுதான்...
அந்த குறைவான ஆசைகளே...
வாழ்க்கையின் நிறைவாகும்...

"அப்பாவா.. " என்று தனுவும் எழுந்து நின்று கொண்டாள்... பதட்டமாக இருந்தவளின் கையை தன் கைக்கொண்டு அழுத்தினான் ஜான்... அதைப்பார்த்த ராஜ் தன் மகனை நினைத்து மனதில் சந்தோஷம்கொண்டார்... வெளியில் "என்னடா.. நடக்குது இங்க..." என்று கேட்க... "அது..வந்துப்பா.. உங்ககிட்ட இன்னைக்கு சொல்லலாம்னு இருந்தேன்... அதுக்குள்ள நீங்களே பார்த்துட்டீங்க..." என்று ஜான் விளக்கம் சொல்ல... பேசாமல் அமைதியாக நின்றிருந்தார் ராஜ்... "தனு.. இவர் என் அப்பா..." என்று ஜான் சொல்ல... "வணக்கம்.. மா..அன்கல்..." என்று சொன்னவளை முறைத்தவர்... "ம்ம்.. அன்கல் வேண்டாம்... அழகா மாமான்னே கூப்பிடுமா..." என்று சொல்ல... அந்த வார்த்தையில் சந்தோஷப்பட்டவள்... "சரிங்க மாமா... ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா... " என்று அவர் காலில் விழ... "நல்லா இருடா..." என்றுஅவரும் ஆசீவழங்க... திடீரென்று சகுந்தலா நியாபகம் வர "டேய்.. உங்க அம்மாவும் வந்துருக்காடா.." என்று சொல்ல... "என்னப்பா.. சொல்றீங்க அம்மாவா...ஓ காட்... அவங்க கண்ணுல மாட்டினேன் அவ்ளோதான்..." என்று சொல்லிய ஜான்... ராஜின் பின்னால் பார்க்க... சகுந்தலா வந்துக்கொண்டிருந்தார்...

ராஜ் "டேய்.. நீ போய் அந்த பக்கம் போய் மறஞ்சிக்கோ... நீ இங்க இருமா... அப்படியே எங்கிட்ட கேஷுவலா பேசுமா... ஓகே... நீ ஏன்டா இன்னும் இங்க நிக்கற போடா.." என்று ஜானை விரட்டினார்... ஜானும் அவர்சொன்னது போல் மறைந்து நின்று கொண்டான்... "அப்புறம்.. என்ன வேலமா செய்யற.." என்று தனுவிடம் ராஜ் கேட்க... "அது..வந்.. வந்து மா.. அன்கல் டீச்சரா இருக்கேன்..." என்று தனு சொல்லவும்... "யாருங்க இந்தப்பொண்ணு..." என்று வந்து நின்றார் சகுந்தலா... "அதுவாமா... எனக்கு தெரிஞ்சப்பொண்ணு... நம்ம.. (அய்யோ டக்குனு பொய் வரமாட்டிங்குதே) ஆன்.. சிவபிரகாசம் ஸ்கூல் நடதுதறான்ல அங்க தான் டீச்சரா இருக்காங்க..." என்று சொல்ல... சகுந்தலா தனுவின் அழகான முகத்தை அளவெடுத்துக்கொண்டே "உன் பேரு என்னம்மா..." என்று கேட்க... "தனுஸ்ரீ.. அத்.. ஆன்ட்டி..." என்று சொன்னவளிடம்... "முடிய அழகா பிண்ணிப்போட்ருக்க... ஆனால் பூ மட்டும் வைக்கல... இந்தாமா.. இத வச்சிக்கோ..." என்று கூடையில் உள்ள பூவை எடுத்துக்கொடுத்தார் சகுந்தலா... தனு அதை வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்... இதுவரை நடந்த அனைத்தையும் பார்த்து ஜான் சிலையாகி நின்றுவிட்டான்...

"சரிமா.. நாமப்போகலாமா..." என்று ராஜ் கேட்க.. "என்னங்க நீங்க... கோவிலுக்கு வந்துட்டு கொஞ்ச நேரம் உட்காராமப் போனா எப்படி... வாங்க அப்படிப்போய் உட்காரலாம்... நீயும் வாமா..." என்று சகுந்தலா தனுவை அழைக்க... "அது வந்து ஆன்ட்டி... அல்ரெடி டைம்மாயிடிச்சி... நீங்கப் போய் உட்காருங்க... நான் போயிட்டு வரேன்..." என்று சொல்ல "ம்ம்.. சரிமா... பார்த்துப்போ..." என்று சொல்லிவிட்டு இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர்... தனு வேகமாக ஜானிடம் வந்தவள் அவனை அழைக்க... அவனோ ஏதோ ஒரு நினைவில் இருக்க... அவன் தோளில் கைவைத்து அழைக்க... அதில் சுயநினைவுப் பெற்றவன்... "சொல்லு தனு.. அம்மா என்ன சொன்னாங்க..." என்று கேட்க... "ஏன் நீங்க அங்க நடக்கறதப் பார்த்துட்டுதான இருந்தீங்க..." என்று தனு சொல்ல... "ம்ம்... அப்பா ஏதோ ப்ளான் பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன்... சரி என்ன நடந்தாலும் நன்மைக்கே..." என்று தனக்குத்தானே சொன்னவனை பார்த்தவள் "என்னாச்சி இவருக்கு... ஏதோ சொன்னாரு என் காதுல விழலயே..." என்று அவன் அருகில் இன்னும் நெருங்கி நிற்க... ஜான் அப்போது பார்த்து வேகமாக திரும்ப இருவரும் நன்றாக இடித்துக்கொண்டனர்... "ஆ... அம்மா.. தஷு இப்படியா வேகமாக திரும்புவிங்க... வலிக்குது..." என்று நெற்றியை தேய்த்துக்கொண்டே கண் கலங்க நின்றாள் தனு... "ஒ.. சாரிடா சாரிடா..." என்று இவனும் அவள் நெற்றியை தேய்க்க.. இன்னும் இரண்டு வலிக்க ஆரம்பிக்க லேசாக அழுதாள்... அவளின் கண்ணீரைப் பார்த்தவன் அவர்கள் இருக்கும் இடத்தை சுற்றிப்பார்த்தான்... யாரும் அந்த இடத்தில் இல்லை என்றதும் அவளை தன்பக்கம் இழுத்தவன் "சாரி.. கடவுளே..." என்று சொல்லிவிட்டு அவளின் நெற்றியில் தன் இதழ்களை வைத்தான்...

"இப்பவும் வலிக்குதா..." என்று பைக்கில் தன் பின்னால் அமர்ந்துவருபவளை கேட்டான் ஜான்... "வலிப்போயிடுச்சி... பட் லைட்டா வீங்கிடுச்சி..." என்று சொன்னவளை நினைத்து தலையிலேயே அடித்துக்கொண்டான் ஜான்... தனு "இப்போ.. ஏன் தலையிலேயே அடிச்சிக்கிட்டீங்க தஷு..." என்று அப்பாவி போல் கேட்டவளை... "பின்ன என்னடி... நான் எவ்ளோ ரொமன்டிக்கா பேசறேன்... நீ என்னடான்னா வீங்கிடுச்சி அது இதுன்னு சொல்ற..." என்று ஜான் கடுப்பாக சொல்ல அதோடு வாயை மூடிக்கொண்டாள் தனு...

ஹாஸ்டல் வந்ததும் இறங்கியவள் உம்மென்று நிற்க... அவளின் செய்கையை ரசித்து சிரித்தவன் "என்ன பேபி... ஒவராப்பேசிட்டனா... சாரிடா... உனக்கொன்னு தெரியுமா.. இதுவரைக்கும் எந்த ஒருப்பொண்ணையும் டிப்போட்டு பேசுனதில்ல.. ஏன் என்னோட தங்கச்சியக்கூட அப்படி கூப்டதுகிடையாது... ஆனா.. உன்ன அப்படி கூப்டும்போது எப்படி இருக்கு தெரியுமா... நீ எனக்கு மட்டும் எனக்கு மட்டுமே தான்..." என்று ஜான் சொல்ல... அவனின் சொல்லில் முகம் சிவந்தவள் "ம்ம்... நான் எப்பவுமே உங்களுக்கு மட்டும் தான்.. சரி நான் ரூமுக்கு போறேன்... அப்பறம் மாமா சான்சே இல்ல... ரொம்ப நல்லவர்... அத்தையும் அப்படிதான்..." என்று சொல்ல...
"ம்ம்... சரி உள்ள போ..." என்று சிரித்துக்கொண்டே ஜான் சொல்ல... "ம்ம்.." என்று தலையை ஆட்டவிட்டு சென்றாள்... அவள் திரும்பி "தன்னை பார்ப்பாளா..." என்று போவதையே பார்த்துக்கொண்டிருந்த ஜான் ஏமாந்து போனது தான் மிச்சம்... "இந்த மில்க் பேபிய வச்சிகிட்டு என்னப்பண்ண போறேனோ..." என்று இரண்டாவது முறை புலம்பியபடியே வீட்டை அடைந்தான்... தனுவுக்கும் தெரியும் அவன் தன்னையே பார்ப்பது... இருந்தும் திரும்பவில்லை... வெட்கத்துடன் தனது அறைக்கு சென்றடைந்தாள்...

இரவு உணவின்போது சகுந்தலா "என்னங்க... இன்னைக்கு கோவில்ல பார்தோமே அந்த பொண்ணு.. ஆன் தனுஸ்ரீ.. அவள பத்தி கொஞ்சம் விசாரிச்சி சொல்லுங்களேன்..." என்று சொல்ல... ஜானுக்கு பொறையேறியது... "தண்ணீ எடுத்துக்குடியேண்டா..." என்று சொன்னவர் மீண்டும் ராஜிடம் அதையே கேட்க... "இப்போ எதுக்கு அந்தப்பொண்ண பத்தி கேட்கற..." என்று இவர் கேட்க... "பொண்ணு ரொம்ப லட்சணமா இருக்கா... குணமும் அப்படிதான்னு நினைக்கிறேன்... அதான்... இவனுக்கு பார்க்கலாமே..." என்று ஜானை பார்த்துவிட்டு கேட்க... "என்னம்மா சொல்றீங்க..." என்று எழுந்தேவிட்டான் ஜான்... ராஜ் தனது திட்டம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை... "கழுத வயசாகுது... கல்யாணம் பண்ணிக்கோடான்னு சொன்னா... எந்த பதிலும் கிடையாது... டேய்...ஒருவேல யாரையாவது லவ் பண்றியாடா..." என்று சகுந்தலா கேட்க... எந்த பதிலும் சொல்லாமல் "உங்க இஷ்டப்படியே எதாவது பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்... "நான் என்ன கேட்கிறேன்.. இவன் என்ன சொல்லிட்டு போறான்..." என்று நினைத்தவர்... ராஜிடம் திரும்ப... "விசாரிச்சிட்டு சொல்றேன்மா..." என்று சொல்லிவிட்டு அவரும் மேலே சென்றார்...

அங்கே அறையில் ஜான் கனவில் டூயட் ஆடிக்கொண்டிருந்தான் தனுவுடன்.... கதவு திறக்கும் சத்தம் கேட்க ஆடிக்கொண்டே திரும்பியவன் அப்பா என்றதும் அவரை பிடித்துக்கொண்டு ஆடினான்... "வெரி வெரி தேங்ஸ்பா..." என்று சொன்ன மகனிடம்... "எதுக்குப்பா தேங்ஸ்..." என்று கேட்டவரிடம்.. "ம்ம்.. நீங்க ப்ளான் பண்ணிதான தனுவ அம்மாக்கூட பேச வச்சிங்க..." என்று கேட்டவனிடம்... "கண்டுபுடிச்சிட்டியா மகனே.. சரி தனுவ ரவியோட மேரஜ்ல பார்த்தேன்னு தெரியும்... லவ் ஓகே ஆகிடிச்சின்னு ஒரு வார்த்தை சொன்னியாடா..." என்று கேட்க... அங்கே நடந்த எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னான் ஜான்... "சரி... தனுவோட அப்பா அம்மா...அவங்க வீடு எங்கன்னு சொன்னா... நாளைக்கு போய்ட்டு வந்து உங்க அம்மாகிட்ட சொல்லனும்..." என்று கேட்டவரிடம்.. "அப்பா.. அது வந்து அவளுக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் கிடையாது..." என்று அவளை பற்றி முழுமையாக ஜான் சொல்ல... ராஜ் தனுவை நினைத்து வருந்தியவர்... பின்... "அதனால என்னடா... இங்க வந்துட்டா.. அவளுக்கு அப்பா அம்மாவா நாங்க இருப்போம்... சரி நல்லா தூங்கு... குட் நைட்..." என்று சொல்லிவிட்டு சென்றார்...

ஜான் வீட்டில் நடந்ததை தனுவிடம் "சொல்லலாமா வேண்டாமா..." என்று நினைத்தவன்... பின் "சர்ப்ரைசாக சொல்லலாம்..." என்று நினைத்துக்கொண்டான்... பிறகு தனுவிற்கு கால் செய்ய... இருவரும் போனில் பேசியபடியே தூங்கினர்...

காலையில் எழுந்து கீழே இறங்கி வந்தவன்.. தன் தங்கை சரோ இருக்கையில் அமர்ந்திருக்க... "ஓய்.. சரோஸ்.. எப்படி இருக்கீங்க மேடம்..." என்று சொல்லியபடியே அமர... "எங்கிட்ட பேசாத... இப்போ தான் தெரியுதா.. நான் உன் தங்கச்சின்னு... அட்லிஸ்ட் ஒரு போனாவது பண்றியா..." என்று சரோ கேட்க... "சாரிமா... கொஞ்சம் பிசியா இருந்ததுல மறந்துட்டேன்... எங்க நீ மட்டும் வந்தியா... இல்ல பிரகாஷ் வந்துருக்காரா..." என்று இவன் கேட்க... "இல்லண்ணா... அவர் பெங்களூர் போறார்... அப்படியே என்னையும் ஹேமாவையும் இங்க விட்டுட்டுப் போனார்..." என்று சொல்ல... "ஒ.. அப்படியா..." என்று சொன்னவன்... நியூஸ் பேப்பரை பார்த்துக்கொண்டே "அம்மா.. காஃபி..." என்று சொல்ல... "இந்தாங்க மாமா.." என்று நீட்டினாள் ஹேமா... அவளை ஒரு பார்வை பார்த்தவன்... "உனக்கு காலேஜ் இல்லையா..." என்று கேட்க.. "ஸ்டடி லீவ் மாமா..." என்று அவள் சொல்ல... "ம்ம்..." என்று காஃபியை வாங்கிக்கொண்டான்... ராஜ் மனதில் "ஏதோ.. சரியில்லை இந்த பெண்ணிடம்..." என்று நினைத்தார் எப்போதும் நினைப்பதுப்போல்...

-தொடரும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
மாட்டிக்குவாங்கன்னு பார்த்தால்
கிளிகள் இரண்டும் எஸ்கேப்
ஆகிடுச்சே, காயூ டியர்
சக்குபாய் சகுந்தலா கொஞ்சூண்டு
நல்லவள்தானோ?
தனுவை மருமகளாக ஏற்றுக்
கொள்ள ரெடியாயிட்டாள்
அனாதைன்னு தெரிந்தால்.......?

சரோப் பொண்ணுக்கு ஹேமா
இடைஞ்சல் பண்ணினால் சக்கு
மாறிடுவாளோ?
 

Gayus

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
மாட்டிக்குவாங்கன்னு பார்த்தால்
கிளிகள் இரண்டும் எஸ்கேப்
ஆகிடுச்சே, காயூ டியர்
சக்குபாய் சகுந்தலா கொஞ்சூண்டு
நல்லவள்தானோ?
தனுவை மருமகளாக ஏற்றுக்
கொள்ள ரெடியாயிட்டாள்
அனாதைன்னு தெரிந்தால்.......?

சரோப் பொண்ணுக்கு ஹேமா
இடைஞ்சல் பண்ணினால் சக்கு
மாறிடுவாளோ?
:giggle:;):giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top