என் உயிர் காதலே - 6

Advertisement

ப்ரகாஷும் சங்கமித்ராவும் சிறிது நேரம் கழித்து யாராவது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துவிட்டால் என்னாவது என கூறி விடைபெற்றனர் இருவரும் வீட்டிற்கு போய் தன் படுக்கையில் விழுந்த மித்ராவிற்கு உறக்கம் சிறிது கூட எட்டி பார்க்கவில்லை.
விடியும் வேளையில் சிறிது கண்ணயர்ந்தவளை
அக்கா அக்கா!!மித்து என சூர்யா எழுப்ப
அவன் தன் தூக்கத்தை கலைத்த கோபத்தில் மித்ரா

"என்னடா"என எரிச்சலுடன் கேட்க
"இந்தா காபி அம்மா குடுக்க சொன்னாங்க" என அவன் நீட்ட
அதை வாங்கியவள் மெதுவாக குடிக்க ஆரம்பித்தாள்.

"மித்து நேத்து நைட் என்ன நடந்தது தெரியுமா" என்றவனை மித்ரா கேள்வியுடன் நோக்க
"ஒரு 1 மணி இருக்கும் தூக்கம் வரலை னு ஜன்னல் பக்கம் வந்து சும்மா எட்டி பார்த்தேன் யாரோ ரெண்டு பேரு நம்ம வீட்டு கார்டன் ல பேசிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சுது மித்து - சூர்யா
தன் தம்பி கூறியதை கேட்டபடி காபி குடித்து கொண்டிருந்தவளுக்கு புரையேறியது.
"என்னடா சொல்ற" என மித்து அதிர்ச்சியாகக் கேட்க
"கேட்கற உனக்கே இப்படி இருக்கே பார்த்த எனக்கு எப்படி இருக்கும் ஏதோ பேய் பிசாசோ னு பயந்து போய் திரும்ப வந்து தூங்கிட்டேன் - சூர்யா

(ஹப்பாடா தன் தம்பி சரியாக கவனிக்கவில்லை என பெருமூச்சு விட்டவள் அவன் கூறிய பேய் பிசாசில் நகைத்தவள் மனதிற்குள் அமாம்டா தம்பி சாதாரண பேய் பிசாசு இல்ல காதல் பிசாசு என தனக்குள் கூறி கொண்டாள்)

"காலையிலே என்ன அரட்டை டைம் ஆச்சு கிளம்புங்க" என்றபடி அங்கே வந்தார் பார்வதி.

"இல்ல அம்மா அது வந்து நேத்து" என சூர்யா ஆரம்பிக்க
"இன்னைக்கு என்ன டிபின் அம்மா"என மித்ரா குறுகிட்டாள்.
"இட்லியும் சாம்பாரும் சிக்கிரம் போய் குளிச்சுட்டு வந்து சாப்பிட உட்காருங்க என்றபடி திரும்பி செல்ல எத்தனித்தவர்
தன் மகளின் லேசாக வீங்கிய முகத்தையும் சிவந்த கண்களையும் கண்டவர்
என்னடி மித்து கண்ணேல்லாம் சிவந்திருக்கு உடம்புக்கு ஏதும் சரியில்லையா என பதறி போய் கேட்க
"இல்லைமா லைட்டா தலைவலி இப்போ பரவால்ல"என கூறி மழுப்பி விட்டாள்
தன்னை சந்தேக கண்ணோடு நோக்கிய தன் தம்பியை கண்டு கொள்ளதாவாறு காலேஜீக்கு தயாராக சென்றாள்.
காலை உணவை முடித்துவிட்டு கிளம்பியவளை

"வண்டி எங்க இருக்கு இன்னும் கொண்டு வரல" என பார்வதி கேட்க
"இல்லைமா தன்யா வீட்ல இருக்கு சொன்னேன்ல இன்னைக்கு ஈவினிங் எடுத்துட்டு வந்தரேன் - மித்ரா
"சரி இரு அப்பா வ ட்ராப் பண்ண சொல்றேன் "- பார்வதி
"இல்லைமா ஆட்டோவில் போய்க்கறேன்" என்றபடி கிளம்பிவிட்டாள் மித்ரா
சிறிது தூரம் நடந்து சென்றவள் தெருமுனையில் ஆட்டோ ஏதும் தென்படுகிறதா என பார்க்க ஒரு சரேலென அவள் முன் சென்று நின்றது
(யாருங்க எல்லாம் நம்ம ஹீரோதான் அவனுக்கு வேற வேலையே இல்லையாங்கிற உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்குது ஆனா நம்ம ஹீரோ க்கு கேட்கலயே)

அதை எதிர் பார்த்தவள் போல் புன்னகையுடன் நோக்கியவளை கண்டவன்
"குட்மார்ர்னிங் மை லவ்" என கூற

"குட் மார்னிங்" - என மித்ரா கூற
"வா நானே உன்னை காலேஜ்ற்கு ட்ராப் பண்றேன் என்று மறு புறம் காரின் கதவைத் திறக்க

"ம்ம் என்றபடி மித்ரா காரில் ஏறி அமர்ந்தாள்.

"காலேஜ்க்கு இன்னைக்கு லேட்டா" - பிரகாஷ்
"ஆமா பிரகாஷ் " - என கூறிய மித்ரா
"ஆமா நீங்க என் பேமிலி பத்தி இதுவரைக்கும்எதுவுமே கேட்கலயே பிரகாஷ்"
"உங்க அம்மா பார்வதி அப்பா சிவநாதன் தம்பி சூர்யா ஸ்கூல் படிக்கிறான் நீ அப்பா செல்லம் உன் தம்பி அம்மா செல்லம்" கரெக்ட்

"இதேல்லாம் எப்படி?" என்று புரியாமல் பார்த்தவளை
உன்னை பார்த்த பர்ஸ்ட் நாளே ஐயா உன்ன பத்தின எல்லாம் டீடெயில்ஸ் உம் கலெக்ட் பண்ணிட்டேன் அம்மிணி நீங்கதான் லேட்டு"
"பாராஹ் அப்புறம் " என மித்து ஆவலாக கேட்க
"என்னடி அப்புறம் நான் என்ன கதையா சொல்லுறேன்" என பிரகாஷ் கேட்க
"சும்மா பிரகாஷ்"என கூறினாள்.
"நைட் நல்லா தூங்குனயா மித்து" என குறும்புடன் பிரகாஷ் கேட்க
நேற்று நடந்ததை நினைத்தவள் முகம் சிவந்து வெட்கினாள்.
அவளின் சிவந்த முகத்தை ரசித்தவன் உரக்க சிரித்தான்.
"என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு" என மித்து அவனை பொய்யாக முறைக்க

"ஒன்னும் இல்லைங்க மேடம்" என போலி பணிவுடன் கூறியபடி அவளை நோக்கி கண்ணடித்தான்

"ரௌடி காதல் ரௌடி என அவள் கூற
"ஹான் காதல் ரௌடி னா என்ன பண்ணுவான்னு தெரியுமாடி உனக்கு என்றபடி காரை வழியில் நிறுத்தி விட்டு அவன் அவள் முகம் நோக்கி குனிய
" பிரகாஷ் இது ரோடு யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க" - மித்ரா
"காதல் ரௌடிக்கு அதெல்லாம் தெரியாதுடி என கூறியபடி அவள் இதழில் முத்தமிட்டபடி சிறிது நேரம் கழிக்க மேலும் முன்னேறி செல்ல

"சீ போங்க பிரகாஷ் நீங்க ரொம்ப மோசம் " என்றபடி மூச்சுமுட்ட அவனை தள்ளி விட்டவள் மூச்சுக்காக எட்டி தவிக்க

"நான் காதல் ரௌடில டி அதனால அப்படி தான்டி இருப்பேன் என பிரகாஷ் கூற
"ஐயோ சாமி தெரியாம சொல்லிட்டேன் காரை எடுங்க பிரகாஷ் காலேஜ்ற்கு டைம் ஆச்சு - மித்ரா.
காரை கிளப்பியவன் காரில் ரேடியோ வை ஆன் செய்ய

"கடவுளா கடவுளா குடம் ஒண்ணு மனசுக்குள் உருளுமே

பூன வந்து உருட்டவுமில்ல

காற்று வந்து தூக்கவும் இல்ல

இந்த சத்தம் ஏன் கேட்ட்குதோ
வந்த தூக்கம் ஏன் போனதோ

வந்த தூக்கம் ஏன் போனதோ
உனது மனசுக்குள்ளே பெண்ணே
நான் புகுந்து புகுந்து கொண்டேன் முன்னே

நீ புரண்டு படுக்கையிலே பெண்ணே
நான் உருண்டு விழுந்து விட்டேன் கண்ணே

காயம் உண்டாச்சோ தேகம் புண்ணாச்சோ

மருந்து போடடி சிட்டுக்குருவி
முந்தானை முன்னேற்ற கழகத்தின் தலைவி"
என பாடல் ஒலித்தது

அவள் தன் காதல் உணர்வுகளை மறைத்தபடி அவனை முறைக்க
"நானா எதுவும் செட் பண்ணல டி மித்து காட் ப்ராமிஸ்"என புன்னகைத்தவன்
பின் மேலும் அவளை சோதிக்காமல் காலேஜ்ல் இறக்கிவிட்டவன் தன் கம்பெனிக்கு சென்றான்.
தூரத்தில் இருந்து இதை கண்ட தன்யா மித்ராவிடம்
"ஏய் மித்து அன்னைக்கு function ல பார்த்த உன் ஹீரோ தானே டி அது" எனக் கேட்க
"உன் ஹீரோ"என்ற விளிப்பில் முகம் சிவந்தவள் பதிலேதும் கூறாமல் ஆமாம் என தலையாட்டினாள்.

"ஹே அப்போ உனக்கும் அவருக்கும் சம்திங் சம்திங் ஆ " - தன்யா

மித்ரா ஆமோதிப்பாக தலையை ஆட்டினாள்.
"சூப்பர் டி மித்து குட்டி ஐ யம் சோ ஹாப்பி பார் யூ" - தன்யா
"தேங்க்ஸ்" என மித்ரா கூறினாள்
பின் இருவரும் க்ளஸிற்கு சென்றனர் அன்று மார்க்கெட்டிங் வகுப்பு globalization(உலகமயமாக்குதல்)என்ற தலைப்பில் பாடம் எடுத்து கொண்டிருக்க தன்யா மித்ரா வின் அருகில் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள்

(அப்போ நம்ம மித்ரா கிளாஸ் ஐ கவனிக்கறா னு நீங்க நினைச்சா இல்லை மக்களே கிளாசே உலகமயமா இருக்க நம்ம மித்ரா பிரகஷமயமா இருந்தாள்,)
 

banumathi jayaraman

Well-Known Member
சங்கமித்ரா பிரகாஷ் இருவரும்
இரவில் லவ் பண்ணுவதை
எட்டிப் பார்த்த இருவரில் ஒருத்தன்
மித்ராவின் தம்பி சூர்யா
இன்னொருத்தர் யாரு?
அவர்தான் வில்லன் or வில்லியா,
அர்ச்சனா டியர்?
அந்த இன்னொருத்தர்தாங்க
சூர்யான்னு சொல்லப் போறீங்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top