என் உயிர் காதலே-4

Advertisement

அன்று கல்லூரிக்கு விடுமுறை நாள்..தன் மனம் ஏனோ பாரமாக இருப்பது போல் தோன்ற தன் தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் சென்று வருவதாக கூறிச் சென்றாள் சங்கமித்ரா.

தன் செல்லும் வழியில் கவனமன்றி ஏதோ நினைவில் மித்ரா தன் scooty யில் சென்று கொண்டிருக்க திடிரென்று ஒரு கார் அவளை உரசி க் கொண்டு சென்று அவள் scooty யின் முன் நிற்க சுதாரித்து நின்று விட்டாள் மித்ரா..

அக்காரில் இருந்து இறங்கியவன் அவள் நினைவின் நாயகனே தான்..
அவனை கண்டதும் முதலில் திகைத்தவள் பின்பு அவனை முறைத்தாள்

"ஹலோ மிஸ்டர் என்ன ரோட்ட பார்த்து வண்டி ஓட்டுங்க 'என திட்டியபடி தன் வண்டியின் ஸ்டார்ட் செய்த அவளின் வண்டி சாவியை பிடுங்கி கொண்டவன்

"ஹே என்ன மறந்துட்டீங்களா நான் பிரகாஷ் அன்னைக்கு காலேஜ் ல மீட் பண்ணோமே மறந்துட்டீங்களா???'

"சோ வாட்??என அவள் முறைப்புடன் கேட்க
Sorry இவ்ளோ நாள் நீங்க இருப்பீங்க னு தேடாத இடம் இல்லை thank god இன்னிக்கு உங்கள பாத்துட்டேன்(அந்த வார்த்தைகள் மித்துவின் மனதிற்கு தித்திப்பை கொடுக்க ஓகே ஓகே மித்து பரக்காதடி என தன் உணர்வை மறைத்தவளாய்)
நீங்க எதுக்கு என்ன பார்க்கணும்??என அவனை கேள்வியாய் நோக்க

அவன் தன் பின்புறம் மறைத்து வைத்திரு ந்த சிகப்பு நிற ரோஜக்கோத்தை எடுத்தவன் அவள் முன் மண்டியிட்டான்
அவள் அவனை ஆவலுடன் என்ன செய்ய போகிறான் என ஆவலுடன் நோக்க

"நான் பிரகாஷ் சொந்தமா ஒரு கன்ஸ்டருக்ஷன் கம்பெனி ரன் பண்ணிட்டு இருக்கேன் இத்தனை வருஷம் நல்லாத்தான் இருந்தேன் உன்னை பார்த்த அந்த நிமிஷத்தில இருந்து நான் நானா இல்ல எனக்கும் இப்படி ஒரு பீலிங் வரும் னு உன்னை பார்த்ததும் தான் தெரிஞ்சது.. நான் உன்னை உயிரா நேசிக்கிறேன்..யெஸ் ஐ யம் இன் லவ் வித் யூ ஐ லவ் யூ அஸ் அ மேன் லவ்ஸ் அ வுமன் மித்ரா உன்னை பார்த்ததும் புரிஞ்சுகிட்டேன் நீதான் எனக்கானவ னு வில் யூ லவ் மீ அஸ் யம்?? என பூங்கொத்தை அவளிடம் நீட்ட

"சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்"
என பாடல் ஒலிக்க

அவள் ஆனந்த கண்ணீருடன் அவனை நோக்கியபடி

என்னை தேடி வர உனக்கு இவ்ளோ நாளாச்சு ல இடியட் என அவனை அடிக்க ஆரம்பிக்க
வில் யூ லவ் மீ??மித்து என அவன் அவளை ஏக்கத்துடன் நோக்க
யெஸ் இடியட் அ யாம் மாட்லி இன் லவ் வித் யூ என கத்தினாள்
அவன் கலகலவென்று
சிரித்தபடி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்..
பின்பு அவள் விழியோடு ஒன்றரக் கலந்தவன் தன் காதலுக்கு அச்சரமாய் தன் முதல் முத்தத்தை அவள் இதழில் பதித்தான்" முதலில் திகைத்தவள் பின்பு அதனை ஏற்றுக் கொண்டாள்.

வானம் பொத்துக் கொண்டு மழை வர ஆரம்பிக்க அம்மழையும் அவ்விரு காதலர்களையும் ஆசிர்வதித்தது..
பின்பு கோவிலுக்கு சென்று விட்டு தன் மனம் விட்டு பேசியபடி தங்கள் எங்களை பகிர்ந்து கொண்டனர்.. பின்பு பிரகாஷ் மித்ராவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு சென்றான்
"வண்டி எங்கே" என அவள் தாய் கேட்க
"வண்டி பஞ்சர் மா தன்யா வீட்ல தான் இருக்கு ஆட்டோ ல வந்தேன் என பொய் கூறி விட்டு உள்ளே ஓடி விட்டாள்'
காலையில் உலகத்தின் மொத்த சோகத்தையும் குத்தகைக்கு எடுத்து சென்ற தன் அக்கா வா இவள் என சூர்யா அவளை வாயை பிளந்தவாறு நோக்கி கொண்டிருந்தான்.
அதை கண்ட மித்ரா
"வாயை மூடுடா பாச மலரே மொத்த உலகும் தெரியுது" என தன் தம்பி யின் தலையில் ஓங்கிக் கொட்ட
சற்று முன் நடந்ததெல்லாம் நிஜமா கனவா என பரிசோதிக்க தன் தம்பியின் கையை பலமாக கிள்ள அவன்
"ஐயோ அம்மா"என அவன் வலியில் கத்த
சாரி டா செல்லம் நிஜம் தான் என அவன் கன்னத்தை கிள்ளி விட்டு தன் அறைக்குள் ஓடி விட்டாள்
தன் தொலைபேசியில் message வந்திருந்தது (யாரு எல்லாம் நம்ம ஐயா தான்)
"ஹாய் டி'
என்னது டி யா கொன்றுவேன் என மீத்து மிரட்ட
ஐயோ நான் பயந்துட்டேன் டி என அவன் பயப்படுவது போன்று நடித்தவன்

"இன்னைக்கு நடந்தது எல்லாம் கனவாடி மித்து நீ என்னை எத்துப்பேன் னு நினைக்கவே இல்ல" என கூற

அவளும் அதையே கூறிவிட்டு தன் தம்பியை பரிசோதித்தை கூற அவன்

பாவம் என் மச்சான் இன்னும் என்ன எல்லாம் பாடு பட போரானோ என சிரிக்க
மித்துவும் அதில் இணைந்து கொண்டாள்.
பின்பு பேசி முடித்து விட்டு தன் மொபைலில் பாட்டு கேட்கலாம் என அவள் போட
"மழை தூறும் சாலையோரம் உன்னைக் கண்டேனே
குடைக்குள்ளே ஓடி வந்தாய் குடை சாய்ந்தேனே"
என பாடல் ஒலிக்க
அம்மழை நேர நிகழ்வை நினைத்து முகம் சிவந்தாள்
பிரகாஷ் யும் அவளை பற்றி நினைத்து கொண்டிருந்தான்
(சரி சிறிது அக்காதலர்களுக்கு இடைவெளி கொடுத்துவிட்டு நாம் அடுத்த பகுதியில் சந்திப்போம் மக்களே)
 
வணக்கம் மக்களே நான் என்னுடைய கடவுச்சொல் மற்றும் மின்னணு தகவலை மறந்து விட்டதால் போஸ்ட் போட முடியவில்லை மன்னிக்கவும் இனி தொடர்ந்து போடுவேன்..நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top