என் உயிர் காதலே -12

Advertisement

Archana4496

New Member
ஓர் பாடலை முணுமுணுத்தபடி வீட்டிற்குள் சென்ற மித்ரா அவளது தாய் சமையலறையில் இருக்க அவள்து தமையன் டிவியில் ஆழ்ந்திருக்க நைசாக சென்று அவள் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
ப்ரஷு நீங்க என்கூட இல்லாத இந்த கொஞ்சநாள் என் வாழ்க்கையிலே எதுவுமே இல்லாத மாதிரி இருந்தது.ஆனா நீங்க இப்ப என்கூட இருந்த கொஞ்ச நேரம் இந்த உலகமே என் கையில இருக்கிற மாதிரி இருந்தது.ஐ லவ் யூ ப்ரஷு எனத்தனக்குள் கூறிக்கொண்டவள் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்தவள் ட்ரெஸ்ஸிங்க் டேபிளிலில் எதோ தேடிக்கொண்டிருக்க
அதை எடுத்துப் பார்த்தவள் முகம் பிரகாசித்தது.
(மித்ராவோட முகம் பிரகாசிச்சா அதுக்கு காரணம் பிரகாஷாதானே இருக்க முடியும் ம்ம்!!!)

சொல்லுங்க ப்ரஷு
மறுமுனையில் எந்த பதிலும் வராமல் இருக்க மீண்டும் ஹலோ என்க
ஹலோ நான் பிரகாஷோட அம்மா பேசறேன்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்க
ஒரு நிமிடம் வார்த்தை வராமல் திகைத்துப்போனவள்
ஹலோ அன்ட்டி என்று தயக்கத்துடன் பேச
பிரகாஷ் எல்லாத்தையும் சொல்லிட்டான்மா அவனை நாளைக்கு உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு வர சொல்லியிருக்கேன் நீ கண்டிப்பா வரணும்டா.
ம்ம் சரிங்க ஆன்ட்டி என்ற மித்ராவிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த மீனாட்சி பிரகாஷிடம் பேசுமாறு ஃபோனைக்கொடுக்க
மித்து - பிரகாஷ்

பிரகாஷ் என்ன இது?நான் எதிர்பார்க்கவே இல்லை என்று ஆர்வம் கொப்பளிக்கும் குரலில் கேட்க
இல்லை மித்து நம்ம ரெண்டு பேரும் பேசாம் இருக்கும்போது எங்க அப்பா விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க போல அதுக்கப்புறம் அம்மாக்கிட்ட உனக்கு பிறந்தநாள்னு சொன்னதும் உங்கிட்ட பேசியே ஆகணும்னு ஃபோன் பண்ணி தர சொன்னாங்க மித்து
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க இதே மாதிரி எங்க வீட்லயும் உடனே ஒத்துக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்
நீ சொல்லு மித்து.எப்ப உங்க வீட்ல நம்மளை பத்தி பேசலாம்னு அப்புறம் உன் மச்சான் உன்னை குடும்பத்தோட பொண்ணு பார்க்க வர்றேன் என்க
அழகாய் வெட்கப்பட்டவள்
பிரஷு இந்த ஃபைனல் செமஸ்டர் மட்டும் முடியட்டும் அதுக்கு அப்புறம் வந்து வீட்ல பேசுங்க என்றாள்.
சரிடி பொண்டாட்டி என்று உரத்தக்குரலில் கூற
என்னது பொண்டாட்டியா? என்று தன் முட்டைக்கண்களை விரித்து கேட்டவள் மனம் அவனது உரிமையான அழைப்பால் பரவசமடைந்தது.
ஆமா பொண்டாட்டி எப்படியோ மாப்பிள்ளை ரெடி ஆகியாச்சு இன்னும் பொண்ணும் ரெடியாகல பொண்ணு வீட்லயும் ரெட்ய் ஆகல விடு நாம ரெடி பண்ணலாம் மித்து ம்ம் என வினவ
மித்ராவின் மனதிற்கு இதமாக இருந்தாலும் அவள் தாள முடியா வெட்கத்தால்
ப்ரஷு உங்களுக்கு என்னமோ ஆகிடுச்சு போங்க நான் ஃபோனை வைக்கிறேன் என்று கட் செய்துவிட்டாள் மித்து
அவனது ஃபோனை கட் செய்தவள் தன் எதிரில் இருந்த உருவ கண்ணாடி முன் நின்று
சங்கமித்ரா பிரகாஷ் என்று ஆசையுடன் விளிக்க அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான் பிரகாஷ்.
ஆமாம்டி மிஸஸ் பிரகாஷ் என்று அவளது முகத்தோடு தன் முகத்தை வைத்து இழைய
"பிரகாஷ்"என்று அதிர்ந்த மித்ராவைக்கண்டு அவளது உருவக்கண்ணாடி கேலிசெய்து சிரித்தது.ஏனெனில் அது அவளது பிரமை.


ச்சே என்று அவளது இரு கைகளால் முகத்தை மூடிக் கொண்டு படுக்கையில் விழுந்தவள்
ப்ரஷு நீங்க இருக்கிங்களே என்னை இவ்வளவு பைத்தியமாக்கி வச்சிருக்கீங்க என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
பிரகாஷ் தன் பெற்றோரின் எதிர்பாராத சம்மதத்தால் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தவன் தந்தையிடம்
அப்பா உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க
நீ என் பையன்டா உன் ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி என்றார் அருணாச்சலம்.
இப்படி எல்லாம் சமாலிக்காதிங்க அப்பா உண்மைய சொல்லுங்க
இல்லடா ஒரு நாள் நீ ரொம்ப நேரம் ஆகி வீட்டுக்கும் வரல ஃபோன் பண்ணா ஃபோனும் எடுக்கல அப்ப உன் பிஏக்கு கால் பண்ணி கேட்டப்ப நீ ஆஃபீஸ்க்கே வரலனு சொன்னாங்க இப்படி எல்லாம் ஆஃபிஸ் போகாம இருக்க மாட்டயேன்னு உனக்கு இன்னைக்கு எந்த அப்பாயின்மென்ட்ஸ் உம் இல்லனு தெரிஞ்சிக்கிட்டேன்.அப்புறம் தான் நீ எங்கனு விசாரிச்சப்ப அதுக்கு பின்னாடி இருக்கிற உண்மை தெரிஞ்சது என்றார் அருணாச்சலம்.
அப்பா இதுல நிஜமாவே உங்க ரெண்டு பேர்க்கும் சம்மதம்தானே என்று கேள்வியாக அவரை நோக்க
அவனது தாய் மீனாட்சி உன் சந்தோஷம் தான் எங்களுக்கு சந்தோஷம் கண்ணா என்று அவனது தலையை கோத அதை ஆமோதித்த அருணாச்சலம் மித்ராவை பத்தி தெரிஞ்சதும் அவளை பத்தி எல்லாம் விஷயமும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப நல்ல பொண்ணுதான் ப்ரகாஷ்.இதைவிட நல்ல பொண்ணு உனக்கு அமையாதுனு புரிஞ்சுக்கிட்டேன்
அப்பா இந்த மாதிரி ஸ்டேட்டஸ் அது எல்லாம் உங்களுக்கு பிரச்சனை இருக்கா?என்று பிரகாஷ் தயங்கிக்கோண்டே கேட்க
பிரகாஷ் ஸ்டேட்டஸ்ங்கிறது நம்ம தரத்தை உலகத்துக்கு முன்னாடி உயர்த்தி வைக்கிறதுதான் அது என்னைக்கும் நிலையானதும் கிடையாது.கொஞ்சம் நாம கீழே போயிட்டா போதும் இந்த உலகம் நம்மளை நிராகரிக்கும் ஆனா நம்ம வாழ்க்கை நமக்கு பிடிச்ச மாதிரிதான் அமையணும் இது உன்னோட வாழக்கை உனக்காக வாழு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.நம்ம சொந்தக்காரங்க வந்தா வெல்கம் வரலைன்னா டோன்ட் கம் அவ்வளவுதான் எனக்கும் உங்க அம்மாக்கும் உன் சந்தோஷம்தான் முக்கியம் என்று மிக பிராக்டிகலாக பேசிய தன் தந்தையின் பேச்சைக் கண்டு தெளிவடைந்தவன்
தேங்க்ஸ் அப்பா என்க
அவனை அன்புடன் பார்த்தவன்
எப்ப மித்ரா வீட்ல பேசலாம் கண்ணா என்க
அப்பா அவளுக்கு ஃபைனல் செமஸ்டர் முடிஞ்சதும் பேசலாம்பா என்று தயங்கிக்கொண்டேக்கூற
மீனு என் பையன் வெட்கப்படுறான் பாருடி என்று அருணாச்சலம் சிரிக்க மீனாட்சியும் அதைக்கண்டு ரசித்தார்.
(பெண்கள் வெட்கப்படுவது அழகு என்றால் ஆண்கள் வெட்கப்படுவது பேரழகு அல்லவா?)
அங்கு இருக்க முடியாமல் தன் தந்தையையும்,தாயையும் பார்க்காமல் தன் அறைக்கு விரைந்து சென்றுவிட்டான் பிரகாஷ்
மித்ராவிற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.ஏதாவது இனிப்பு செய்ய வேண்டும் போல் தோன்ற சமையலறைக்குள் சென்றாள்.
அம்மா என்ன பண்றீங்க?
சமையல்கட்டுல என்னடி பண்ணுவாங்க?என்று அவள் தாய் முறைக்க
என்னது இது உட்சக்கட்ட உக்கிரத்துல இருக்காங்க போல எனது தாய் என்று நினைத்தவள் தானே சென்று கேசரி செய்வதற்கான அத்தனை பொருட்களையும் எடுத்து வைத்து அவளே செய்ய தொடங்கினாள்.
அதை கண்ட பார்வதி
ஏய் மித்து என்ன பண்ற?என்று வினவ
அம்மா எனக்கு எதாவது இனிப்பு சாப்பிடணும் போல இருந்துச்சு அதான் மா கேசரி செய்யறேன்.
என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே நானே செஞ்சு தர்றேன் நீ போய் டிவி பாரு என்க
அம்மா நானே செய்யறேன் நீங்க போய் டீவி பாருங்க என்று வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு சுவையான கேசரியை செய்து முடித்தாள்.


ஆஃபீஸ் முடிந்து வீடு திரும்பிய சிவநாதன் எப்பொழுதும் சமையலறையிலே குடியிருக்கும் தனது மனைவி ஹாயாக சூர்யாவுடன் டிவி பார்த்துக்கொண்டிருப்பதைக்கண்டு
என்ன சூர்யா உங்க அம்மா இன்னைக்கு கிட்சனுக்கு லீவா? என்று வினவ
அதெல்லாம் ஒண்ணும் இல்ல உங்க இளவரசி என்னமோ செய்யறேன்னு என்னை கிட்சனை விட்டு வெளியே அனுப்பிட்டா என்று சலித்து கொள்ள
ஐய்யயோ என்று ஒரு சேர அதிர்ந்தார்கள் சூர்யாவும்,சிவநாதனும்.
என்ன இப்போ? - பார்வதி
இல்ல நம்ம மித்து சமையல் கட்டுலையா அதான் கொஞ்சம் பயமா இருக்கு.டேய் மகனே நாம வெளியே போய் சாப்பிட்டுக்கலாமா டா?உங்க அம்மாவை வேணும்னா டீல்ல விட்டுரலாம் என்ன சொல்ற என்று சூர்யாவை கேட்க
அப்பா அம்மா பாவம் பா அவங்களையும் நம்ம சேர்த்துக்கொள்ளலாம் என்று கூற
யோசித்த சிவநாதன் நீ சொல்றதும் சரிதான் என்று ஆமோதிக்க இதை எதையும் அறியாமல்
அப்பா என்று அழைத்தபடி வந்த மித்ரா டிரேயில் நான்கு கிண்ணங்களில் கேசரி போட்டுக்கொண்டு வந்திருந்தாள்.
என்னம்மா திடிர்னு கேசரி எல்லாம் என்று அவளது தந்தை வினவ
இல்லப்பா சும்மா சாப்பிடணும் போல தோணுச்சுப்பா அதான் செஞ்சேன் என்றபடி தன் தந்தைக்கு முதலில் எடுத்துக்கொடுக்க
அப்பா மெடிக்கல் இன்சுரன்ஸ் போட்டுருக்கீங்களா?என்று சூர்யா கிண்டலாக கேட்க
டேய் என்று அவனை முறைத்த மித்ரா அவளது தாய்க்கு கேசரியை எடுத்துக்கொடுத்துவிட்டு தன் தம்பியின் அருகில் சென்றவள் கிண்ணத்தில் இருந்து ஒரு வாய் எடுத்து தன் தம்பிக்கு ஊட்ட அவனும் வாயை திறக்க அவன் விழுங்குவதற்கு முன் அவன் வாயில் நிறைய கேசரியை எடுத்து திணித்தவள் இனிமே ஒவரா வாய் பேசுவியாடா ம்ம்
அக்கா ப்ளீஸ் விடுக்கா நான் பேசமாட்டேன் என்னை விட்டுடு தாயே என்று அலற
அவர்களதுசேட்டையைக்கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர் அவரது பெற்றோர்கள்.
பிறகு சிறிது நேரத்தில் பார்வதியும் இரவு உணவை தயாரிக்க உண்டுவிட்டு உறங்க சென்றனர்.
தன் அறைக்குள் வந்த மித்ரா.பிரகாஷிடமிருந்து எண்ணற்ற அழைப்புகள் வந்திருப்பதைக்கண்டு அவனை திரும்ப அழைத்தாள்.
ஹலோ மித்து பிஸியாடா? - பிரகாஷ்
இல்லைங்க இப்பதான் சாப்பிட்டு ரூமுக்கு வந்தேன் நீங்க சாப்பிட்டீங்களா?
ம்ம் சாப்பிட்டேன்டா.வீட்ல லேட்டா வந்ததுக்கு ஏதாவது கேட்டாங்களாடா மித்து.
இல்லை ப்ரஷு அதான் ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லியிருந்தேன்ல ப்ரஷு அதனால எதுவும் கேட்கல
அப்புறம் மித்து வேற எதாவது பேசலாமாடா
வேற எதாவதுன்னா? என்ற மித்ராவிடம்
ஸ்வீட் நத்திங்க்ஸ்
என்ன மித்து பதிலே காணோம்?!!ஏதாவது தப்பா கேட்டேனா மித்து...
இல்லை நான் தலையை ஆட்டினேன் என்று மித்து கூற அவளது பதிலைக்கேட்டு சிரித்தான் பிரகாஷ்.
"நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும்தான் நினைச்சேன்
நியாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
.."
இரவு 11.50மணி.
மித்து உங்க வீட்டு கார்டனுக்கு போ
எதுக்கு ப்ரஷு இந்த நேரத்துல அங்க போகணும்
சும்மா கேள்வி கேட்காதடி நான் லைனலயே இருக்கேன் நீ போ
பூனை நடைப்போட்டு மெதுவாக நடந்து சென்றவள் தனது வீட்டு கதவை மெதுவாக திறந்தபடி வெளியே சென்றாள்.
ப்ரஷு வந்துட்டேன் சொல்லுங்க
உங்க வீட்டு கார்டன்ல இருக்கிற பென்ச் மேல ஒரு கார்டு இருக்கும்டி அதுல இருக்கிற க்ளுவை வைத்து அந்த புதிர்க்கான விடையை நீ கண்டுபிடிக்க வேண்டும்
என்ன பிரகாஷ் இது இந்த நேரத்தில் இப்படி ஒரு விளையாட்டு?
ப்ளீஸ்டி?என்று பிரகாஷ் கேட்க
ஹ்ம்ம் சரி ஓகே என்று சலித்துக்கொண்டவள் முதல் க்ளூ அடங்கிய கார்டை எடுக்க அதில்
"நீ மலரென்றால் நான் மழையாவேன்" என்று எழுதியிருக்க அந்த வாசகத்தை மீண்டும் படித்தவள் தன் தோட்டத்து பூச்செடிகளில் தேடிப்பார்க்க அவள்து ரோஜாச்செடிகளிடையே ஒரு கார்டு இருந்தது அதில்
"நீ மேன்மேலும் வளர என்று உதவுதான் நான்"என்று எழுதியிருந்தது.சிறிது நேரம் புரியாமல் யோசித்தவள்
மேன்மேலும் வளர உதவுவது என்றபடி தனது ரோஜாச்செடியை பார்த்த மித்ராவிற்கு ஒருவேளை உரமாக இருக்குமோ என்று யோசித்தபடி சுவற்று பகுதியில் உரம் வைத்திருந்த இடத்தை பார்க்க அங்கே ஒரு கார்டு இருந்தது அதில்
"உன் அருகிலே நான் இருக்கிறேன்"என்று எழுதியிருக்க உர பாக்கெட்டுகளை எடுத்து துழாவியவள் அருகே இருந்த சுவற்று பகுதியில் இருக்குமோ என எட்டிப்பார்த்தவள் இனிதாக அதிர்ந்தாள்.
ஏனெனில் அங்கே பிரகாஷ் "காதலடி நீ எனக்கு"என்ற வாக்கியம் அடங்கிய போர்டுடன் நின்றுக்கொண்டிருந்தான்.
ஓர்நொடி கூட தாமதிக்காமல் மித்ரா அவனை தாவி அணைத்துக்கொண்டாள.
அவனும் அவளை ஆரத்தழுவிக்கொண்டான்.
இப்படி ஒரு பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சுருந்தா உன்னை இவ்வளவு தூரம் அலைய விட்டுருக்கமாட்டேனேடா
ஹ்ம்ம் என்று சலித்துக்கொண்டவள் அவன் தோளிலேயே சாய்ந்தாள் அவளை விலக்கி நிறுத்தியவன்
மித்து எப்படிடி இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்ச
ஹலோ நான் யாருனு நினைச்சீங்க மித்ராவாக்கும் ஹ்ம்ம்
ஆமா என் பொண்டாட்டி புத்திசாலியாதானே இருப்பா?என்று அவன் கூற என்னதான் ஃபோனில் பேசியிருந்தாலும் முதன் முறையாக நேரில் அவனது உரிமையான அழைப்பில் மனம் மயங்கினாலும்
யாரது?என்று ஒன்றுமே தெரியாதது போல் வினவினாள்.
ம்ம் மிஸஸ் பிரகாஷ் ஒன்னும் தெரியாதது போல நடிக்காதடி என்று அவள் மூக்கைப்பிடித்து ஆட்ட அவள் அவனை காதலுடன் நோக்கினாள்.
அவளது கையை பிடித்து அவன் இதயப்பகுதியில் வைத்தான் ப்ரஷு.
சைலன்டா கவனி மித்து என அவன் வாயில் விரல் வைத்துக்காட்டியவன்
இந்த இதயம் இவ்வளவு துடிதுடிப்பா இருக்குன்னா அதுக்கு நீதாண்டா காரணம்..என் இதயமே உன்கிட்டதான்டா இருக்கு "ஐ லவ் யூ மித்து" என்று உணர்ச்சிகரமாகக்கூற
ஓர் நொடி தயங்கியவள் அவனது இதயத்தில் முத்தமிட அதில் சிலிர்த்தவன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டபடி அவனது கைவிரல்களை அவளது கைவிரல்களோடு பிணைத்துக்கொண்டான்.
வாடி மித்து என்றவாறு அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்துக்கொண்டு அவனருகில் அவளை அமர்த்தி கொண்டான்.
சிறிது நேரம் ஒருவருக்கொருவர் அவர்களது துணையின் அருகாமையை ரசித்துக்கொண்டு மோனநிலையில் இருந்தனர்.சிறிது நேரத்தில் குளிர ஆரம்பித்தது.
ஒரு நிமிஷம் இரு நான் வர்றேன் என்றபடி சென்ற ப்ரஷு வெளியே பிக்னிக் செல்லும்போது கொண்டு செல்லும் புட்டானே கேஸை எடுத்து வந்தவன் தன் கையோடு எடுத்து வந்த மக்காசோளத்தை கீழே வைத்தான்.
மித்ராவின் பார்வையில் எதுவுமே தெரியவில்லை அவளது ப்ரஷுவைத் தவிர அவனையே காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கேஸை பற்ற வைத்தவன் மக்காசோளத்தில் மிளகாய் பொடி,மிளகுத்தூளை சோளத்தின் மேலே தடவி எலுமிச்சையை பிழிந்தவன் தீயில் நன்கு வாட்டியவாறு மித்ராவின் அருகில் அமர்ந்தான்.
ப்ரஷு உங்களுக்கு என்று மித்து வினவ
அவளது அருகில் சென்று அமர்ந்து கொண்ட்வன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
மக்காசோளத்தை அவள் முன் நீட்டி அவளிடம் சாப்பிடுமாறு சைகை செய்ய அவனை பார்த்தவாறு அவள் சாப்பிட அவள் சுவைத்த இடத்தின் அருகிலேயே அவன் சுவைத்தான்.ஒரே மக்காசோளத்தைஇருவரும் சுவைத்து கொண்டிருக்க
ஆஆ ப்ரஷு காரம் என மித்ரா தவிக்க தண்ணீர் வேறு அவன் எடுத்து வரவில்லை.சிறிது யோசித்தவன் அவளது முகத்தை தன்புறம் திருப்பி அவளது இதழோடு தனது இதழ்ககளை பொருத்தினான்.சுற்றுப்புறத்தையும் மறந்து தாள முடியாத முத்தத்தில் இலயித்திருந்த இருவரும் பின்புறம் வீட்டில் எரிந்த விளக்குகளையும் தங்கள் முன்னே கடுமையான முகத்துடன் நின்றிருந்த சிவநாதனையும் அறியாமல்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top