என் உயிர் காதலே - 11

Advertisement

Archana4496

New Member
பிறந்தநாளை மனப்பூர்வமாக கொண்டாடிவிட்டு வெளியே வந்தனர் மித்ராவும்-பிரகாஷும்.
"மித்து காலேஜ் முடிய இன்னும் டைம் இருக்குல்ல? - பிரகாஷ்.
"ம்ம் இருக்கு ஏன் பிரகாஷ்?"
"நாம கொஞ்ச நேரம் எங்காவது வெளியே போயிட்டு வரலாமா?மித்து"
"எங்கே பிரகாஷ்?"
"வா சொல்றேன் மித்து"
"இப்பவே டைம் 4மணி ஆச்சுங்க.லேட் ஆச்சுன்னா வீட்ல தேடுவாங்க என்று கூற
"ம்ம் சரி மித்து"ஏமாற்றத்துடன் சென்ற பிரகாஷின் கையை பிடித்த மித்ரா
"போகலாம் ப்ரஷு"என்று கூற
"இல்லை மித்து வேணாம் விடு" என்றவனை மித்து பின்னிருந்து அவனைக் கட்டி கொள்ள
"ம்ம் இப்ப ஒகே போகலாம்" என்று சிரித்தவனைக் கண்டு சிரித்தாள் மித்ரா.
பின்னர் தன் தாய் தந்தைக்கு அழைத்து தனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால் தன் வீட்டிற்கு வர 7 மணி ஆகும் என்று தகவல் கூறிவிட்டாள்.
(காதல் என்று வந்து விட்டாலே அங்கு கள்ளமும் புகுந்து விடுமல்லவா?)
காரில் ஏறியவுடன் ஒரு ரிப்பன் கொண்டு மித்ராவின் கண்ணைக் கட்டி விட்டான் பிரகாஷ்.
பிரகாஷ் என்ன பண்றீங்க எதுக்கு இதெல்லாம்?
சொல்றேண்டா அதுவரைக்கும் நீ கண்ல கட்டிருக்குற ரிப்பனை கழட்ட கூடாது என்று செல்லமாக ஆணையிட்டான் பிரகாஷ்.
ம்ம் சரிங்க என்று மித்ரா கூறினாலும் அவளது மனதில் என்னவாக இருக்கும் என்ற ஆவல் தோன்றியது.
பிரகாஷ் ரொம்ப தூரம் போறோமா என்ன?
இப்படி கேள்வி கேட்டுகிட்டே வந்தேன்னா உங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுவேண்டி என்று



பிரகாஷ் கூற அதற்கு பிறகு மித்ரா வாயே திறக்கவில்லை.
அவன் குறிப்பிட்ட இடம் வந்ததும் காரிலிருந்து இறங்கியவன் மித்ராவின் பக்கம் சென்று கதவை திறந்து இறங்க அவளுக்கு உதவியவன் அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு செல்ல
பிரகாஷ் இப்பவாவது கண்ணை திறக்கலாமா என்று கேட்க பதிலேதும் கூறாமல் அவளை சிறிது தூரம் அழைத்து சென்றவன் அவளது கண்கட்டை அவிழ்த்துவிட கண்ணை திறந்ததும் கண்டக்காட்சியில் மித்ரா அப்படியே அசந்துப்போனாள்.
ஏனெனில் அவள் எதிரே அழகான பஞ்சுபொதி போன்ற அருவி ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருந்தது.
ஆழியாறு அணைக்கட்டிலிருந்து 6கிமி தொலைவில் இருந்த மங்கி ஃபால்ஸ்.
மிக்க மகிழ்ச்சி அடைந்த மித்ரா ஓடிச்சென்று அருவிக்குள் புகுந்துக்கொண்டாள்.
அவளது செயலைக்கண்டு சிரித்த பிரகாஷ் மறுநொடி மூச்சற்று போனான்.
என்றுமில்லாமல் அன்று சேலை அணிந்து வந்திருந்தாள் மித்ரா.


அவளை மொத்தமாக் நனைத்த நீர்த்திவலைகள் அவள்து பெண்மையின் நளினத்தை தெள்ளதெளிவாக எடுத்துக் காட்ட அதில் நிலைகுலைந்துப்போனான் பிரகாஷ்.
சிறிதுநேரம் நீருக்குள் விளையாடிவிட்டு வெளியே வந்த மித்ரா
பிரகாஷ் ட்ரஸ் ஈரமாகிடுச்சு இப்படியே எப்படி வீட்டுக்கு போறது என்று வினவ
இங்கே வா என்று சைகையால் அழைத்தவனின் அருகே சென்றவளின் காதில் பிரகாஷ் தனது யோசனையைக் கூற மித்ராவின் முகம் செவ்வானமாக சிவந்தது.
“என்ன சொல்ற நல்ல ஐடியாதானே?”என்று பிரகாஷ் கேட்க
“ம்ம்” என்று யோசித்தவள் அவனை முறைக்க
என்னடி மித்து முறைக்கிற
“ஆமாம் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்” என்று அவனை சந்தேகமாக பார்க்க
“ஐயோ இதெல்லாம் படத்தில எதாவது படத்தில பார்த்துருப்பேண்டி நான் ஏகபத்தினி விரதன்.உன்னை தவிர எந்த பொண்ணையும் சும்மா கூட திரும்பி பார்த்ததில்ல” என்று கூற அதில் கர்வம் கொண்டது அவள் பெண் மனம்.
“சரி நீங்க அந்தப்பக்கம் திரும்பி உட்காருங்க
ஏண்டி?” என்று வினவ
“ச்ச் சொல்றேன்ல செய்யுங்க” என்று மித்ரா முறைக்க
“முறைச்சா கூட நீ அழகாத்தாண்டி இருக்க செல்லம்” என்று கூறிவிட்டு அவளருகே முதுகுக்காட்டி அமர்ந்துக்கொண்டான் பிரகாஷ்.
பின் தனது முந்தானையின் ஒருபுறத்தை சேலையை மரத்தில் கட்டிவிட்டு மித்ரா அமர்ந்தாள்.
“மித்து உனக்கு என்னோட சர்ப்ரைஸ் பிடிச்சுருக்காடா?”
“ரொம்ப பிடிச்சுருக்கு பிரகாஷ்.நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று மித்ரா அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
பிறகு சேலைகாய்ந்ததும் நன்கு அணிந்து வந்தவள் பிரகாஷின் அருகில் அமர்ந்தாள்.
இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பிரகாஷ் அவளை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்தபடியே பேசிக்கொண்டிருக்க அதை கவனித்த மித்ரா பிரகாஷ் என்று அவனது முகத்தை தன்புறம் திருப்பியவள் அவனது பார்வையின் வீச்சின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவன் மார்பில் சரிந்தாள்.
அவள் முகத்தை தன் ஒற்றை விரலால் நிமிர்த்தியவன் அவளது நெத்தியில் முத்தமிட்டான்.பின் முகமெங்கும் முத்தமிட்டவன இதழ்கள் தன் இணையை தேடிச்சென்று அதனோடுப் பொருத்திக் கொண்டது.பின் அவளது கழுத்தில் முத்தமிட "ஹோ"வென்ற பேரிரைச்சலுடன் வந்த அலையில் சிக்கிக்கொண்டதை போல சிக்கித்தவித்தது அவள் பெண் மனம்.அவனது கைவிரல்களோ அவளது ஸ்பரிசமெங்கும் பரவி புதுக்கதைகளைக் கூறிக்கொண்டிருந்தது.தாளமுடியாமல் பிரகாஷ் மொத்தமாக அவள் மேல் சரிந்தான்.
மீண்டும் அவள் இதழ்களில் முத்தமிட நீண்ட முத்தத்தில் மூச்சுக்காக எட்டி மித்ரா அவனைத் தள்ளிவிட பிரகாஷ் அவளது உச்சந்தலையில் முத்தமிட்டுவிட்டு அவளைவிட்டு விலகிசென்று காரில் அமர்ந்தான்.
மித்ராவிற்கு ஒரு நொடி ஏமாற்றமாக இருந்தாலும் தன்னவன் தன்னிடம் எல்லை மீறாமல் கூடலே இல்லாமல் கூடிவிட்டு கண்ணியமாக எழுந்து சென்றுவிட்டதை நினைத்து "இவன் என்னவன்"என்று அவள் மனம் பெருமிதம் அடைந்தது.
தன்னை சீர்படுத்திக்கொண்டு கார்க்கதவை திறந்து பிரகாஷின் பக்கத்து சீட்டில் அமர்ந்துக்கொண்டாள்.
பிரகாஷை எதிர்க்கொள்ள முடியாமல் வெட்கத்துடன் தலை குனிந்துக்கொண்டாள் மித்ரா.
தன் ஒற்றை விரலால் அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தவன் அவளது வெட்கத்தை ரசித்து சிரிக்க அதில் அவள் மேலும் செவ்வானமானது.
மித்து ஒரு நிமிஷம் கண்ணை மூடு"
கேள்விக்கேட்க வாயெடுத்தவள் எதுவும் கேட்காமல் கண்ணை மூட
தனது கோட் பாக்கெட்டிலிருந்து ஒரு செயினை எடுத்து மித்ராவின் கழுத்தில் போட்டான்.
ம்ம் ஒகே இப்ப கண்ணைத்திற என்க.
பிரகாஷ் தனக்கு அணிவித்திருந்த செயினை பார்த்தவள்
எதுக்கு பிரகாஷ் செயினெல்லாம் எனக்கு இது வேணாம் என்று கூற
உடனே வேணாம்னு சொல்லுவியே இங்க பாருடி என்று இதயவடிவிலான செயினில் இருந்த லாக்கெட்டை திறந்துக்காட்ட அதில் மித்ராவும்-பிரகாஷும் சேர்ந்து எடுத்த ஃபோட்டோ இருந்தது மேலும் அவன் அந்த திறந்த கணம் ஐ லவ் யூ மித்து என்று ஒலித்தது

ஆச்சர்யத்தில் அவளது மொட்ச்சைக்கொட்டை கண்கள் நன்கு விரிந்தது.ஏனெனில் அது பிரகாஷின் குரல்.
"இது வெறும் செயின் இல்லைடி இங்க பாரு நம்ம ஃபோட்டோ அப்புறம் நீ என்னை மிஸ் பண்ணும்போது எல்லாம் இந்த டாலரை ஒபன் பண்ணி என் குரலை கேட்கலாம் பிடிச்சுருக்காடா உன்னோட பிறந்தநாள் பரிசு
ரொம்ப பிடிச்சுருக்கு பிரகாஷ் என்று அந்த டாலரை வருடியபடி அவன் தோளில் சாய்ந்தாள்.
மித்து அந்த கார் ட்ராயரை ஒபன் பண்ணு
ம்ம் என்றபடி அவள் அதை திறக்க அதில் மற்றோரு பரிசு இருந்தது.
இது என்ன?என்ற கேள்வியுடன் அவள் அதைத் திறக்க அதில் பிரகாஷும்-மித்ராவும் ஒருவரையொருவர் காதலுடன் பார்த்தபடி இருந்த 3d லேம்ப் அது.மித்ராவை கார் சார்ஜர் ஸ்விட்சில் ப்ளக்கை போட சொல்ல அதை செய்து ஆன் செய்தவுடன் அவர்களது ஃபோட்டோ ஒளிர்ந்தது.
நல்லா இருக்குங்க என்றவள்
இவ்ளோதானா இல்லை வேற எதுவும் இருக்கா? என்று வினவ
இல்லடி மித்து ஏன் இப்படி கேட்கிற டி?
பின்ன இப்படி நீங்க கிஃப்ட் குடுத்துட்டே இருந்தா வீடு முழுக்க கிஃப்ட்டை நிரப்பிட்டு நான்,எங்கப்பா,எங்கம்மா,தம்பி எல்லாம் எங்க போறது என்று சிரிக்காமல் கூற
அதைக்கேட்டு சிரித்த பிரகாஷ்
இதுக்கு பேருதான் கோயம்புத்தூர் குசும்பாடி?உனக்கு மாமா சங்கமித்ரான்னு பேர் வச்சதுக்கு பதிலா வாலுனு பேர் வச்சிருக்கலாம் எங்க
மித்ரா அவனை முறையோ முறையென்று முறைக்க
உன் மச்சானை இப்படி வெச்ச கண் எடுக்காம பார்க்காதடி வெக்கமா இருக்குல்ல
ஹ்ம்ம் என்று முகத்தை திருப்பிக்கொண்டாள் மித்ரா.
அவன் காரில் பாடலை ஆன் செய்ய
"யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்"
என்று பாட மித்ரா அவனை வைத்த கண் எடுக்காமல் அவனையே காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதை கண்டவன்
என்ன மேடம் லுக் எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு"
"என்
ஆளு நான் பார்க்கிறன் அதுல உங்களுக்கு என்ன வலிக்குது?என்று கெத்தாக கேட்க
ம்ம் அது சரி என்க
பிரகாஷ் அடுத்த பாடலை மாற்ற
"காதல் காதல் காதல்

என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
நான் கொஞ்சம் அணைக்க
"
என்றுப்பாட
பிரகாஷ் அதனுடன் இணைந்து பாடியவன் எதிர்பாராத நேரத்தில் அவளைப்பார்த்து கண்ணடித்தான்
அதில் அவள் முகம் சிவக்க
"என் கன்னம் சிவக்க"
என்று அடுத்த வரிகள் அவர்களது நிலைமைக்கு ஏற்றவாறு ஒரு பெண் குரல் பாடியது.
"ஹலோ"
யார்கிட்ட ஃபோன் பேசற இப்போ ஹலோ கிலோன்னு
வேற யாருகிட்ட பேசுவேன் உங்ககிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்
ஆஹான் சொல்லுங்க மேடம்
என்ன காரில் பாட்டு செட் பண்ணி வச்சுருக்கீங்களா?என்று அவனை முறைக்க
நான் எங்கடி செட் பண்ணேன் அந்த மியுசிக் ப்ளேயருக்கு கூட நம்ம சிச்சுவேசன் புரிஞ்சுருக்குடி
மித்து நம்பாமல் பார்க்க
நிஜமாடி நான் எதுவும் பண்ணலை
ம்ம் என்று எதுவும் கூறாமல் அவன் தோளில் சாய்ந்தவள் அவன் கைவிரல்களோடு தன் கைவிரகளைப்பிணைத்துக்கொள்ளும் ஆசை தோன்ற இருந்தாலும் அவள் தயங்க ப்ரகாஷ் அவள் மனமறிந்தவன் போல் அவளது ஒரு கையை கியரின் மேல் வைத்து அவள் கை மேல் தன் கைகளை வைத்து பிணைத்துக்கொண்டான்.

சங்கமித்ராவின் வீடு இருக்கும் பகுதி வந்தது.
காரில் ஸ்லோ ரேஸ் போட்டி வைத்திருந்தால் அவனே முதல் பரிசு வென்றிருப்பான் ஏனெனில் அந்த அளவு ஸ்லோவாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
சரியாக ஏழு மணிக்கு மித்ராவின் வீட்டு தெருமுனையில் காரை நிறுத்தியவன் அவளை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை போல் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள
சற்று நேரம் முன் தன்னை முழுமையாக ஆக்ரமித்தவன்தானா இவன் என்று மனதிற்குள் சிரித்தவள்
பை பிரஷு என்று கூற
அவனிடம் பதிலில்லை.காரிலிருந்து இறங்கப்போனவள் வேகமாக பிரகாஷின் முகத்தை தன் பக்கம் திருப்பி அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு
"குட்நைட் மச்சான்"என்று கூறி சிட்டாகப் பறந்து விட்டாள்.
அதில் இலயித்தவன் தன் காரை கிளப்ப முயன்று ஒர் நிமிடம் அவளது வீட்டு வாசலையே நோக்க வீட்டிற்குள் நுழைந்த மித்ரா மறுநொடி ஒரக்கண்ணால் அவள் வீட்டுவாசலை எட்டிப்பார்க்க அதை எதிர்பார்த்தவன் முகம் நிறைய சிரிப்புடன் பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு காரை கிளப்பினான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top