என் உயிர் காதலே - 10

Advertisement

Archana4496

New Member
உறக்கம் வராததால் மித்ரா தன் வீட்டு கார்டனில் போடப்பட்டிருந்த சிமென்ட் பென்ச்சில் அமர்ந்து நேற்று நடந்தவற்றை அசைபோட்டவள்

நான் என்ன வேணும்னா செஞ்சேன் பிரகாஷ் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க தயவு செய்து எங்கிட்ட பேசுங்க பிரகாஷ் என்றவாறு க்ண்ணீருடன் புலம்பியபடி அமர்ந்திருந்தாள்.

பெருத்த இடியுடன் மழை பெய்ய ஆரம்பிக்க எழுந்து செல்லாமல் வெகு நேரம் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தவள் ஒரு வழியாக தன் அறைக்கு சென்று நனைந்திருந்த உடைகளை கூட உலர வைக்காமல் படுத்துவிட்டாள்.
காலையில் வீட்டில் இருந்த அனைவரும் அவரவர் காலை வேலைகளை ஆரம்பித்திருக்க வெகுநேரம் ஆகியும் மித்ரா எழுந்திருக்காமல் இருந்ததால் பார்வதி யோசனையுடன் அவளது அறைக்கு சென்றுப் பார்க்க மித்ரா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.
"இவளுக்கு என்ன ஆசு இன்னும் தூங்குறா?'என்ற யோசனையுடன்
"மித்ரா ஏய் மித்ரா" என்று அவளை எழுப்ப முயல அவளிடம் எவ்வித சலனமும் இல்லை.அதைக் கண்டு கலக்கமடைந்தவர் அவள் நெற்றியில் கை வைத்து பார்க்க அனலாக உடல் கொதித்தது.
"ஐயோ கடவுளே" என்று பதறியவர்
என்னங்க,சூர்யா என்று உரத்த குரலில் அழைக்க
என்னவோ,ஏதோ என்று பதறியபடி வந்தனர் சிவநாதனும்,சூர்யாவும்.
"ஏங்க மித்ராவுக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது” எனப் பதற சிவநாதன் உடனே
சூர்யா கார் சாவியை எடு என்று கூறிவிட்டு விரைவில் சென்று தயாராகி வந்தார்.
சிவநாதனும்,பார்வதியும் மகளை ஒருபுறமாக கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் ஏற்ற உடன் காரில் ஏறிய பார்வதி மகளை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.
சிவநாதன் காரை ஸ்டார்ட் செய்ய பார்த்திபன்
“மாமா நான் கார் ஒட்டறேன் நீங்க அந்த பக்கத்து சீட்டுக்கு வாங்க” என்க
அந்நேரத்தில் சிவநாதனுக்கும் அது சரியாகவே பட அவர் பக்கத்து இருக்கையில் சென்று அமர்ந்தார்.
காரை பார்த்திபன் ஸ்டார்ட் செய்ய மின்னல் வேகத்தில் கே.எம்.சி.ஹெச் ஹாஸ்ப்பிட்டலில் சென்று நின்றது.
ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டிருந்த மித்ராவிற்கு ட்ரிப்ஸ் பாட்டில் இறங்கிக் கொண்டிருந்தது.
வெகுநேரம் கழித்து வீடு சென்றவன் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து அதிகாலையில்தான் உறங்க ஆரம்பித்திருந்தான்.
காலை பத்து மணிக்கு எழுந்து தன் மொபைலைப் பார்த்தவன் நிறைய மெசேஜ் வந்திருப்பதை கண்டு ஒப்பன் செய்து படித்தவன்
"ஒஹ் மைகாட் நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்.அர்த்தமேயில்லாம மித்துக்கிட்ட கோவப்பட்டுட்டேன் என்று தலையிலடித்துக் கொண்டவன் வீட்டில் எதுவும் கூறாமல் கிளம்ப மீனாட்சி.
"கண்ணா சாப்பிட்டு போடா நைட்டும் எதுவும் சாப்பிடல என்று கூற எனக்கூற
"இல்லைம்மா வேலை இருக்கு வெளியே சாப்பிட்டுக்கிறேன் என்றவாறு செல்ல அவனை கவலையுடன் நோக்கினார் மீனாட்சி.
காரை எடுத்தவன் மித்ராவின் காலேஜிற்கு சென்று அவளுக்காகமாலைவரைக்காத்துக் கொண்டிருந்தவன் காலேஜ் முடிந்ததும் தான்யா மட்டும் வருவதைப் பார்த்து ஏமாற்றமடைந்தான்.
ஹாஸ்பிட்டலில் மூன்றாவது ட்ரிப்ஸ் பாட்டில் இறங்கிக் கொண்டிருக்க மித்ரா மெதுவாக கண் விழித்தாள்.அதைக்கண்டதும் வேகமாக அருகில் வந்த சூர்யா
“அக்கா இப்ப எப்படி இருக்க” என்று கண்ணீருடன் கேட்க
முதலில் எதுவும் புரியாமல் நேற்று நடந்ததை நினைவு கூர்ந்தவள் தன் தம்பியின் கலங்கிய முகத்தை கண்டு
“எனக்கு ஒண்ணும் இல்லைடா தம்பி” என அவன் கன்னத்தில் தட்டினாள்.
அதற்குள் மருந்து வாங்க சென்ற சிவநாதனும்,பார்வதியும் வந்துவிட
மகளின் அருகில் வந்த சிவநாதன் தன் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவிகொடுத்து
"இப்ப பரவாயில்லையா பாப்பா "என்று கவலையுடன் கேட்க
அவரின் கலங்கிய முகத்தைக் கண்டு பதறிய மித்ரா
"அப்பா எனக்கு ஒண்ணும் இல்லைப்பா நான் நல்லா இருக்கேன்"என்று கண்ணீருடன் அவரின் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
(ஒரு பெண்ணுக்கு அவங்க அப்பாதான் ஹீரோ.அதுக்கு சமுதாயம் அவருக்கு தர மரியாதை மட்டும் காரணமில்ல.பெண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னாலோ இல்லை ஏதாவது பிரச்சனை என்றாலோ அவங்க முதல்ல அவங்க அப்பாகிட்டதான் சொல்லுவாங்க.என்னதான் அம்மா ஆறுதலா இருந்தாலும் ஒரு பொண்ணோட தைரியம்,நம்பிக்கை,பாதுகாப்பு எல்லாமே அவளுடைய அப்பாதான்)
பார்வதியும் மகளை ஆறுதலாக அணைத்துக்கொண்டார்.இப்பொழுது மித்ராவிற்கு தன் காதலுக்காக தன் குடும்பத்தை
வருத்திவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியாக இருந்தது.
ஒரு வழியாக ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மித்ராவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர் அவள் குடும்பத்தினர்.
தூரத்தில் இருந்து வரும்போதே பிராகாஷை பார்த்து விட்டாள் தான்யா.பின் மித்ரா வேறு இன்று வரவில்லையே சொல்லலாமா வேண்டாமா என்ற எண்ணத்துடன் தயங்கி செல்ல அவளை நோக்கி சென்ற பிரகாஷ்
"மித்ரா எங்கம்மா?" எனக்கேட்க
“அவள் காலேஜுக்கு இன்னைக்கு வரலைங்க அண்ணா.ஃபோன் பண்ணி பார்த்தேன் காலும் அட்டெண்ட் பண்ணலை” என்க
சரிமா என்றான்
சரிங்கஅண்ணா என்றுகூறிவிட்டு சென்றுவிட்டாள் மித்ரா.
அவ இன்னைக்கு காலேஜிற்கு வரலையா என்றபடி யோசனையுடன் அவளின் எண்ணிற்கு பலமுறை அழைத்தும் எதிர்புறம் அழைப்புகள் எதுவும் எடுக்கப்படவில்லை.தவிப்புடன் பிரகாஷ் காரை எடுத்துக் கொண்டு மித்ராவின் வீட்டிற்கு சற்றுத்தள்ளி நிறுத்தியவன்
“என்ன ஆனாலும் சரி மித்ராவிடம் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்”என்று காரிலேயே அமர்ந்திருந்தான்.
தன் குடும்பத்தின் கவனிப்பில் விரைவில் குணமடைந்த மித்ரா காலை எழுந்தவுடன் வாக்கிங் போகலாம் என்று நினைத்தவாறு வீட்டிற்கு வெளியே வந்தவள் வெளியே நின்றிருந்த பிரகாஷின் காரைப்பார்க்க காரின் அருகில் இருந்தவன் மித்ராவைப் பார்த்து தன் இருகைகளாலும் தன் காதுகளைப் பிடித்துக் கொண்டு "என்னை மன்னித்து விடு"என்றுக்கேட்க

அதைக்கண்ட மித்ரா சலனமற்ற பார்வையை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் உள்ளே சென்று விட்டாள்.

பிரகாஷ் மனதிற்குள் அய்யோ ரொம்ப கோவமா இருக்கா போலயே எப்படி சமாதானப்படுத்த போறேனோ
(பின்ன நீ செஞ்ச வேலைக்கு உன்னை கண்ணே மணியேனு கொஞ்சுவாளா?)
வாக்கிங் முடித்துவிட்டு காலேஜுக்கு தயாரான மித்ரா ஏற்கனவே நேரம் ஆகிவிட்டதால் பார்வதி பார்த்திபனுடன் காரில் செல்லுமாறு கூற அதை தவிர்த்தவள் தன் தந்தையுடன் காலேஜிற்கு புறப்பட்டாள்.
பிரகாஷும் அவளுடைய காலேஜிற்கு பின்தொடர்ந்து செல்ல அதை கண்டு கொள்ளாமல் தன் வகுப்பிற்கு சென்றவள் தன் வகுப்பு ஆசிரியரிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு தான்யாவின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
பின் தான்ய கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெகு சிரத்தையுடன் வகுப்பை கவனிக்க ஆரம்பித்தாள்.
வகுப்பு முடிந்து இன்டெர்வெல் ஆரம்பிக்க தான்யா
"ஏண்டி காலேஜிற்கு லேட்டு நேத்தும் காலேஜிற்கு வரலை எனக்கேட்க
"ஃபீவர்டி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருந்தேன் அதான்வரமுடியலை
ஏய் மித்து என்னடி ஆச்சு நல்லாதானே இருந்த இப்போ எப்படி இருக்க
இப்போ பரவாயில்லடி
ஏன் இன்னைக்கே வந்த?நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்துருக்கலாம்லடி.
எனக்கு ஒண்ணுமில்லைடி இப்ப ரொம்ப நல்லாதான் இருக்கேன் என மித்ரா கூறிக்கொண்டிருக்க
அவளுடைய நண்பர்கள் ஆதி மற்றும் ஹரிணி காஃபீ ஷாப்புக்கு செல்லலாம் என அழைக்க தனக்கும் சிறிது மனமாற்றமாக இருக்கும் என நினைத்தசங்கமித்ரா,
தான்யாவைஅழைத்துக்கொண்டுதன் நண்பர்களுடன் சென்றாள்.
அவளது காலேஜில் உள்ள காஃபி ஷாப்பிற்கு சென்றவர்கள் தனக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்ய மித்ரா எதுவும் கூறாமல் இருக்க தான்யாவே அவளுக்கு ஒரு கேப்புச்சினோவை ஆர்டர் செய்தாள்.
"ஹே மித்து நீ நேத்து காலேஜ்க்கு வராம நம்ம தான்யா விட்ட கண்ணீர் கடல்ல நம்ம காலேஜே மூழ்கிடுச்சு தெரியுமா?! என ஆதி கிண்டலாக கூற அவனை முறைத்த தான்யா
"ஆமாம் டா அதுக்கென்ன இப்ப இங்க பாருடி மித்து நம்ம ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு சுத்துறானே ஒரு குரங்கு நேத்து நீ ஏன் வரலைனு கூட ஒரு வார்த்தை கேட்கல தெரியுமா?இவன் எல்லாம் ஒரு ஃப்ரெண்டா சொல்லுடி என காலை வாரி விட அதனை கண்டு மித்ரா அமைதியாகப் புன்னகைத்தாள்.
சிறிது நேரம் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்க அவர்களது ஆர்டரும் வந்தது.பேரர் அவரவர் ஆர்டர்களை டேபிளில் எடுத்து வைக்க நண்பர்களுடன் பேசிக்கொண்டே குடிக்கலாம் என தனது கேப்புச்சினோவை நோக்க அதில் “SORRY” என்று காஃபி துகள்களால் இதய வடிவில் எழுதப்பட்டிருந்தது.அதை கண்டு ஒரு நொடி யோசித்தவள் மறுநொடி இது அவனது வேலைதான் என்றறிந்து உடனே ஸ்பூன் எடுத்து அந்த வார்த்தையை அழித்தவள் தான்யாவிடம் கேப்புச்சினோவை கொடுத்துவிட்டு அவளது காஃபியை மித்ரா வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.
இதை தூரத்தில் இருந்து கண்ட பிரகாஷிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் தான்யா பிரகாஷ் வந்திருப்பதை கவனித்தவள் சங்கமித்ராவின் காதருகே சென்று
"ஏய் மித்து அண்ணா வந்திருக்கார்டி"மித்ரா என்க எதையுமே கேட்காதது போல் ஆதியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
"என்ன இவ எதுவுமே சொல்ல மாட்டேங்குறா"என்று நினைத்த தான்யா
"என்னடி உனக்கும் அண்ணாவுக்கு சண்டையா?! என்று கேட்க அவளை முறைத்தவள்
"பேசாமஇருடி"என்றுமித்ரா.ஆதியையும்,ஹரிணியையும் சுட்டிக்காட்டி கூற தான்யாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
அடுத்த வகுப்பிற்கு நேரமாவதை உணர்ந்தவர்கள் கேண்டீனில் இருந்து கிளம்பினர்.
மித்ரா தனது நண்பர்களுடன் பிரகாஷை கடந்து செல்கையில்
"கண்ணால் பேசும் பெண்ணே

எனை மன்னிப்பாயா
ஒரு தவறை தவறி செய்தேன்

எனை மன்னிப்பாயா"
என்ற பாடல் ஒலிக்க மித்ரா அவனை முறைக்க பிரகாஷோ தனது இரு கைகளால் காதினை பிடித்து அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.
(குழந்தை தவறு செய்துவிட்டு தன் தாயிடம் மன்னிப்பு வேண்டுவதை போல)
அதைக் கண்டு மித்ராவின் மனம் தளர்ந்து அவளது இதழ்க்கடையோரம் சிறு புன்முறுவல் தோன்றினாலும் அதை மரைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் அவனைக் கடந்து சென்றுவிட்டாள்.
எவ்வளவோ முயற்சி செய்தும் மித்ராவை சமாதானப்படுத்த முடியாமல் தன் ஆஃபீஸிற்கு சென்றான் பிரகாஷ்.
வகுப்பிற்கு சென்று அமர்ந்த மித்ரா பிராகாஷுடன் இருந்த ஊடல் எல்லாம் மறந்து நாளைக்கு என்ன நாள் என்று அவனுக்கு தெரியுமா?என்று யோசிக்கலனாள்.
வீட்டிற்கு திரும்பிய சங்கமித்ரா முகம்,கை,கால் கழுவிவிட்டு சோஃபாவில் இருந்த டிவி ரிமோட்டை எடுக்க முயல அவளுக்கு முன் பாய்ந்து ரிமோட்டை எடுத்தான் சூர்யா.ஷின்சானை போட்டுவிட்டு தன் தமக்கையை பார்த்து
"நோ பாட்டு நோ மோர் எமோஷன் ஷின்சான் பார்த்து எஞ்சாய் பண்ணுக்கா எனக்கூற
தன் தம்பியின் கரிசனத்தில் மனம் நெகிழ்ந்தாலும் அதை மறைத்துக்கொண்டு
"பூஜை வேளை கரடி" எனத்திட்டி முணுமுணுக்க
"என்னது?!" என சூர்யா அவளை முறைக்க
"சாரிடா கரடினு தப்பா சொன்னதுக்கு குரங்குனு சொல்லியிருக்கணும் என்று அவள் குறும்புடன் கூற
"உன்னை" என்று பல்லை கடித்தவன் சோஃபாவில் இருந்த பில்லோவை தூக்கி அவள்மேல் போட அவளும் பில்லோவை தூக்கி அவன் மேல் வீசினாள்.
"இருடி அக்கா உன்னை என்ன செய்யறேன் பாரு என்று அவன் "அம்மா அம்மா"என்று உரத்தக்குரலில் அழைக்க
"என்னடா"என்று கேட்டபடியே வந்தார் பார்வதி.
அம்மா மித்து என்னை என்ன சொன்னா தெரியுமா என்று நடந்ததை கூறி தன் தமக்கை "குரங்கு" என்று தன்னை விளித்ததை தன் தாயிடம் புகார் செய்ய பார்வதி மித்ராவை முறைத்து பார்த்தவர்
"ஏண்டி என் மகனை அப்படி சொன்ன?அவன் ஒன்னும் குரங்கு மாதிரி இல்ல.அச்சு அசல் அப்படியே அழகா இலட்சணமா அந்த ஆஞ்சநேயர் மாதிரியே இருக்கான்.இனிமேல் அவனை கிண்டல் பண்ணா அவ்வளவுதான் என்று கூறி முடிக்க
"அம்மா" என்று சூர்யா கத்த
தாயும் மகளும் ஹைஃபை கொடுத்தபடி கலகலத்து சிரித்தார்கள்.
தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிவநாதன் வீட்டில் இரு நாட்களாக மறைந்திருந்த சந்தோஷமும்,சிரிப்பும்,தன்மக்களிடம் திரும்பியிருப்பதை கண்டவர் தானும் மனம் நிறைந்து மகிழ்ச்சியுற்றார்.
இரவு உணவை முடித்துவிட்டு மித்ரா தூங்க சென்றாள்.
தனது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரகாஷ் ஒரு வழியாக தன் தாய்ன் வற்புறுத்தலால் சிறிது உணவை கொறித்துவிட்டு உறங்க வந்தவன் மனம் நிறைய பாரமாக இருந்தது.
தன் எண்ணிலிருந்து மீண்டும் பிரகாஷ் மித்ராவிற்கு அழைக்க அவனின் அழைப்பை கண்டு மித்ராவின் மனம் ஏற்க மறுத்தாலும் அவள் கைகள் தானாக அவனது அழைப்பை ஏற்றது

"
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருங்கி வர ஆசைக்கொண்டு
உயிர் இளகி நிற்கிறாய்
உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட
துயர் தீர்ந்திடும் உயிரே
நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன் உயிரே
"

என பிரகாஷ் டேப்ரிகார்டரில் பாடலை ஒலிக்க விட அப்பாடலின் வரிகளில்,குரலின் துயரத்தில் தன் துயரத்தை போக்கும் வழி அறியாதவளாய் கண்ணீருடன் ஃபோனை அணைத்தாள்.மறுபுறம் அப்பாடலை ஒலிக்க விட்டிருந்த பிராகாஷின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
(என்னதான் இந்த காலத்தில் பொக்கெட்,வாட்ஸப் மெசேஜ்,வீடியோ கால்,சாக்லேட்,க்ரீட்டிங் கார்டுகள் இவையெல்லாம் இருந்தாலும் தன்னுடைய பிரியமானவருக்காக தான் காதலுடனோ அல்லது ஊடலுடனோ இருக்கும்போது பிரிவு துயர் ஆற்ற தனது மனதை கடிதத்தில் எழுதி அதை போஸ்ட் செய்து விட்டு தன்னவனிடம் எப்போது கடிதம் சென்று சேரும் என்று காத்திருத்தலும் ஒரு சுகமே.பலவிதமான உணர்வுகளை சுமந்துக்கொண்டு நிற்கும் ஒர் அற்புதமே வெள்ளை காகிதம். இதை விட வேறு எதனாலும் உண்மையான காதலை உணர்த்திவிட முடியாது.மேலும் கண்ணோடு கண்கள் பேசும் பரிபாஷைகள்.டேப்ரிகார்டரில் பாடலை போட்டு தன் பிரியமானவருக்கு அழைத்து அவர்களை கேட்க வைக்கும்போது வார்த்தைகளை விட மௌனமே காதலை விட சிறந்ததாக தோன்றும் இதுவும் ஒரு வகையான புனிதமான உணர்வே ஆகும்.)
தன் மனபாரம் தாங்காமல் அழுதுக்கரைந்த மித்ரா ஒருவாறாக உறங்கிவிட்டாள்.
ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு பன்னிரெண்டு மணி.மித்ரா அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க அவளது அறையின் விளக்கை யாரோ போட வெளிச்சத்தில் உறக்கம் கலைந்தவள் எரிச்சலுடன் யாரென எழுந்துப் பார்க்க சிவநாதன்,பார்வதி அவர்களது நடுவில் சூர்யா தனது கையில் கேக்கை வைத்து கொண்டு
"ஹேப்பி பர்த்டே மித்து " என அன்புடன் கூற
"தேங்க்ஸ்டா சூர்யா"என மித்ரா கூற மித்ராவின் அருகில் சென்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா கண்ணா என்னைக்கும் நீ சந்தோஷமா இருக்கணும் என்று தனது மகளின் கன்னத்தில் முத்தமிட்டனர் சிவநாதனும்-பார்வதியும்.
அக்கா வா கேக் வெட்டலாம் - சூர்யா
ம் சரிடா என்று புன்னகையுடன் வந்த மித்ரா தனது குடும்பத்தில் நடுவில் நின்று கேக்கை வெட்ட சூர்யா ஸ்னோ ஸ்ப்ரேவை பரவலாக அடித்தான்.
கேக்கை வெட்டிய மித்ரா முதலில் தன் தந்தைக்கு கேக்கை ஊட்ட செல்ல அவர் அவளை தடுத்து தாய்க்கு முதலில் ஊட்டுமாறு சொல்ல பார்வதியோ தந்தைக்கு முதலில் ஊட்ட செல்ல ஹ்ம்ம் என்ற மித்ராவே அந்த கேக்கை விழுங்கிவிட்டாள்.அவளது குறும்பை கண்டு சிரித்த சிவநாதன்"போக்கிரி"என்று மகளின் தலையில் செல்லமாக தட்டினார்.
அடுத்து தன் தம்பிக்கு கேக்கை ஊட்ட செல்ல
என்ன இவ கேக்க எடுத்துட்டு வர்ற மாடுலேஷனே சரி இல்லையே எதுக்கும் ஜாக்கிரதையா இருப்போம் என்ற எண்ணத்துடன் அவளை நோக்க
மித்ரா இந்தாடா என்று அவனுக்கு பாசமாக கொடுக்க செல்ல அதை வாங்காமல் பிடுங்க முயல அவனை முந்திக்கொண்டு கேக்கை சூர்யாவின் முகத்தில் அப்பிவிட்டாள் மித்ரா.
"ஏய் இதை நான் உனக்கு பண்ணனும்டி என்று மித்ராவை துரத்தி பிடித்து அவளது முகம் முழுவதும் கேக்கை அப்பிய பின்னரே திருப்தி அடைந்தான் சூர்யா.பின் மித்ராவும்,சூர்யாவும் சென்று முகத்தை கழுவிவிட்டு வர பார்வதி,
சரிடா கண்ணா டைம் ஆச்சு காலேஜுக்கு போகனும்ல போய் தூங்கு என்க
சரிம்மா என்று கூறிவிட்டு உறங்க சென்றாள் மித்ரா.
பிரகாஷிற்கு தன் பிறந்த நாள் என்று தெரிந்திருக்காதே ஒரு வேளை அவனுக்கு தெரிந்திருக்குமோ அவளை அழைப்பானோ என்று தொலைபேசியையே நொடிக்கொருதரம் பார்த்துக் கொண்டிருந்தவள் ஏமாற்றத்துடன் கண்ணயர்ந்தாள்.
.
காலையில் எழுந்தவள் பூஜையறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு காலை உணவை முடித்து காலஜுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.தான்யா தொலைபேசியில் அழைத்து மித்ராவிற்கு தன் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூற அதற்கு நன்றி தெரிவித்தாள்.
மித்து தேங்க்ஸ் சொல்லி சமாளிக்காத டி ட்ரீட் வேணும்
போடி ட்ரீட்டும் ஒன்னும் கிடையாது
என்ன பர்த்டே பேபி டென்ஷனா இருக்கீங்க.அண்ணா இன்னும் பர்த்டே விஷ் பண்ணலையா?
தெரிஞ்சுருச்சுல ஃபோனை வைடி என்று ஃபோனை கட் செய்த மித்ரா சீக்கிரமே பஸ்ஸ்டாப்பிற்கு கிளம்பி சென்று பஸ்ஸிற்காக காத்திருந்தாள்.
ஒரு குறுந்தகவலுக்கான நோட்டிஃபிகேஷன் வந்திருக்க யாரது என்று ஆர்வமில்லாமல் எடுத்து பார்க்க பிரகாஷிடமிருந்து ஒரு குருஞ்செய்தி வந்திருந்தது
குறுந்தகவலை திறந்தவள் அவன் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு அட்ரசை அனுப்பி அங்கே வருமாறுக் கூறியிருக்க அவன் வாழ்த்தவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த மித்ரா அவனை சந்திப்பதற்கான வாய்ப்பை மிஸ் பண்ணுவாளா என்ன?
உடனடியாக ஒரு கேப்பை புக் செய்து அவன் அனுப்பியிருந்த விலாசத்திற்கு சென்றாள் மித்ரா.
ஆம் பிரகாஷ் அனுப்பியிருந்தது ஒரு கருணை இல்லத்தின் முகவரி.ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கோவில்.
குழந்தையும்,தெய்வமும் சமம் என்பார்கள் எனில் அவர்கள் வாழும் இடத்தை கோவில் என்று தானே கூற வேண்டும்.
எதற்காக பிரகாஷ் தன்னை இங்கே அழைத்தான் என்று நினைத்தபடி மித்ரா உள்ளே செல்ல அவளை சுற்றி சில சிறுவர்,சிறுமியர் வழிமறித்து நிற்க புரியாமல் நோக்கியவளைக் கண்டு
"ஹேப்பி பர்த் டே டூ யூ"என்று சிறூவர்கள் கோரசாக பாடத்துவங்க அதில் மகிழ்ந்தவள் ஆனந்தத்தில் வார்த்தை வராமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க அவள் முன் வந்து நின்றான் பிரகாஷ்.
"நன்றி டா செல்வங்களே"என அவன் அவர்களிடம் கூற சிறுவர்கள் அவர்கள் இருவரையும் அன்புடன் நோக்கினர்.
வெகு சில நாட்களுக்கு பிறகு தன்னவளின் முகத்தை அருகாமையில் கண்டவன் ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை பின் அவள்து விரல்களை பிடித்து அவளது கண்ணோடு கண் பார்த்து
"தூண்டிற் புழுவினை போல் - வெளியே

சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக
எனது நெஞ்சம் துடித்ததடி!
கூண்டு கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளையெல்லாம் மனது
வெறுத்துவிட்டதடி!


என்று பாரதியார் கவிதையை அவளுக்காக கூறியவன்
"நீயின்றி எனது வாழ்வு வெறுமையடி
நான் உயிறற்ற உடல் நீயே எனது சுவாசமாவாய்
தயைக் கூர்ந்து எனை மன்னித்து
எனை சேர்ந்துவிடு சகியே!
எனப் பிரகாஷ் கண்ணீருடன் கூற அடுக்கடுக்கான ஆச்சரியங்களாலும்,தன்னவனை அருகாமையில் கண்டதாலும் ஆனந்தமடைந்தவள் தன்னவனின் கண்ணீரைக் கண்டு அவன் அருகே சென்றவள் அவன் முகமெங்கும் முத்தமிட்டு அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.பிரகாஷ் எங்கே அவள் மீண்டும் தன்னை விட்டு சென்றுவிடுவாளோ என்று அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்


"பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் பிரியமான சகிக்கு" என்று ப்ரகாஷ் அவளது காதில் கூறி அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான்.பின் நொடி நேரத்தில் தாம் இருக்கும் இடமரிந்து விலகி நின்றார்கள்.எனினும் அவனை விட்டு ஒரு அடி கூட பிரிய மனமில்லாத மித்ரா தன் கைவிரல்களை பிரகாஷின்கைவிரல்களோடு பிணைத்துக்கொண்டாள்.
"ஏன் பிரகாஷ் என்னை இங்க வர சொன்னீங்க"
பெரிய பார்ட்டி,ஃபங்க்ஷன் இதெல்லாம் விட பிறந்த நாளை கொண்டாட இதுதான் சரியான இடம் னு நினைச்சேன் மித்து.எவ்வளவோ செலவு செய்யறோம் நம்ம வாழ்க்கையில டெய்லியும் இல்லேன்னாலும் இந்த மாதிரி,பிறந்த நாள் அப்போவாவது இந்த குழந்தைகளோடு விளையாடி ,நாமளே நம்ம கையால சாப்பாடு போட்டு அவங்க சாப்பிடும்போது நமக்கும் மனசும்,வயிறும் நிறையும் பாரு அதை விட எதுவும் சிறந்தது இருக்க முடியும்னு தோணல அதான் மித்து.இப்படி ஒரு ஏற்பாடு பண்ணி உன்னை இங்கே வர சொன்னேன்.உனக்கு பிடிச்சுருக்கா என பிரகாஷ் கேட்க
மித்ரா"ரொம்ப பிடிச்சுருக்கு"என்று கண்கள் நிறைய காதலுடன் பிரகாஷை நோக்கியவாறு கூறினாள்.
எதை? என்று பிரகாஷ் குறும்பாகக்கேட்க
"முன்னாடி உங்களை பிடிச்சுருந்தது இப்ப உங்களுடைய எண்ணங்களையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு பிரகாஷ் என மித்ரா உன்மையான காதலுடன் கூற அதில் நெகிழ்ந்தவன் மித்ராவை தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறு நடந்தான்

பிறகு மித்ராவே குழந்தைகளுக்கு உணவு பரிமாறினாள்.குழந்தைகளுக்கு தேவையான பொருளை இல்லத்தின் காப்பாளரிடம் கேட்டறிந்து முன்பே வாங்கி வந்திருந்தான் பிரகாஷ்.அவற்றை மித்ரா தன் கைகளால் அவர்களுக்கு கொடுத்து அவர்களது புன்னகையில் பேரின்பம் கொண்டாள்.தன்னவளின் இன்பம் கண்டு பிரகாஷும் மனம் மகிழ்ந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top