என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 3

Advertisement

Sasideera

Well-Known Member
மூன்று கடிதங்களிலும் ஒவ்வொரு விதமான புரிதலையும் உணர்வுகளையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ... மனைவியை சக மனுஷியாக கூட மதிக்காமல் இருப்பவர் ஏராளம்... அதிலும் குடும்பத்திற்கு ஆதரவாக ஏதேனும் ஆலோசனை சொல்லும் போது அதை ஏளனம் செய்வோர் பலர்... அப்படி இருக்க கண் பார்த்து புரிந்து கொள்வது எங்கே?

குடும்பம், பொறுப்பு, குழந்தைகள், சொந்தங்கள், அவர்களின் பந்தம் என்று அனைத்தையும் தாண்டி தனக்கென்று ஓர் உறவு ஒருவரின் எண்ணத்தை மற்றவரின் உணர்வுகளா பிரதிபலிக்கும் உறவு தோழியாக தோழனாக வாழ்க்கையை நிறைவடைய செய்யும் அழகை அழகாக சொல்லி இருக்கீங்க சகோ... வாழ்த்துக்கள்...

மனமொத்த தம்பதியரான உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...:):)
 
அன்புள்ள சகோதரிக்கு வணக்கம். தற்போதுதான் தங்களின் விமர்சனம் பார்த்தேன். எனக்கும் என் மனைவிக்குமாக தாங்கள் அளித்திருந்த வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களாக எங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அதை நாங்கள் கையாண்ட விதம், போன்றவற்றை உணர்வுபூர்வமாக ஒரு இடத்தில் அழுத்தமாக பதிவிட விரும்பினேன். அது தான் இந்த கடிதத் தொடர்.
எங்கள் வாழ்வில் ஏற்பட்ட அனைத்தையும் இருவருமாக தான் எதிர்கொண்டோம். சமரசம் செய்து கொள்ளவில்லை. அனைத்துக்கும் என்னை மிகவும் தயார் செய்து செயல்பட வைத்த பெருமைக்கு உரியவள் என் சிநேக மனைவி. இன்று ஒரு எழுத்தாளனாக நான் உங்கள் முன் நிற்கவும், உங்களை போன்ற உடன்பிறவா சகோதரிகளை சம்பாதித்து கொள்ளவும் அந்த பிரியசகியே காரணம். சிறிது என்னுடைய ஆற்றல் குறைகிறது என்று நான் நினைத்தால் கூட, அவள் மடியில் தலை சாய்த்து விடுவேன். அந்த மடிக்கு என்னை ஆற்றுப்படுத்தி ஆற்றல் ஊட்ட முடியும்.
கண்கள் பார்த்து புரிவது எங்கே என்று கூறியுள்ளீர்கள். கண்கள் பார்த்து புரிந்து கொள்ளும் சமாச்சாரங்கள் ஒன்றும் சிதம்பர இரகசியம் இல்லை. அது ஒரு உணர்வு. கொஞ்சம் நீங்கள் உங்கள் தோழரை தோழமையுடன் பாருங்கள். இயலும். முடியாதது என்பது முடிவு பெறட்டும். முடியும் என்பது தீர்க்கமாக முடியட்டும். நிச்சயம் அனைத்து தம்பதிகளும் சரியான புரிதலில் நம்பிக்கையுள்ள ஜோடியாக வாழலாம்.

மிக்க நன்றி
அன்புடன்
சகோதரன்
பாரதிபிரியன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top