என் இதய விழி நீயே-Episode 8

Advertisement

achuma

Well-Known Member
hi friends oru vazhiya marriage nadandhu pottu mudichitaen, ini dhaan avanga lifela nadaku changes, romance, quarrel ellam ini varum episodela paarunga... ippo please padichittu comments pannuga, be safe:):D comments n likes potta ellarukum thanks...

என் இதய விழி நீயே



அபி என்ன சிந்திக்கிறாள் , என்று ஒன்றும் புரியாமல், ஸ்ரீ அபியின் கைகளை ஆறுதலாக பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்....

அபியின் கண்களில் மட்டும் கண்ணீர் நின்ற பாடில்லை ...

"அபி! இன்னும் என்ன டா அழுதுட்டே இருக்கே , உனக்கு, இது ஒரு விதமான அதிர்ச்சி, குழப்பம், மன சஞ்சலமான சூழலா , உன்ன போட்டு படுத்தலாம் ..."

"ஆனா உனக்கும் சரி ஆதிக்கம் சரி நல்லது தான் நடந்து இருக்கு ..."

"இந்த நாள் உனக்கு ஒரு முக்கியமான நிகழ்வு , அதனால இந்த நிமிடம் தருணத்தை இப்டி கண்ணீர்ல கழிக்காம இரு ..."

இன்னும் சொந்தகாரங்க எல்லாரும் ஒருத்தர் ஒருத்தரா சொல்லிட்டு கிளம்புவாங்க , அவங்களுக்கு நம்ம காட்சி பொருளா இருக்க வேண்டாம்,"
என்று ஒரு வழியாக தேற்றி வைத்தாள் , அந்த குடும்பத்தின் மருமகளும், அபியின் தோழியுமான ஸ்ரீ ...

அபியும் ஸ்ரீயின் மடியில் அமைதியாக தலை வைத்து படுத்து கொண்டாள் ...
அவள் ஊருக்கு எப்பொழுது செல்வது, பெரியன்னையிடம் என்னவென்று சொல்வது, வீட்டில் மூத்தவள் அணு இருக்கும் பொழுது, அபிக்கு முதலில் திருமணம் நடந்தது என்றால் , அனுவின் திருமணம் பற்றய குழப்பம்,

இது போன்று பல எண்ணங்கள், அவளின் சிந்தனையில்...

இவை அனைத்தையும் விட ஆதியின் பார்வை, எப்பொழுதும், நட்புடன் பழகும் , பார்க்கும் , அவன் பார்வையில், இன்று ஏதோ ஒரு வித்யாசம், அவனின் பார்வை அபியை தடுமாற வைக்கிறதே, என்று இவ்வாறு எல்லாம் குழப்பங்கள் , என்று அபி எதுவும் கூறாமல், அமைதியாக சிந்தித்து படுத்து இருந்திருந்தாள் ...


இங்கு ஆதியும், அபியை பற்றிய சிந்தனையிலே இருந்தான்," இவ என்ன ரொம்ப இளைத்து போய் இருக்கா, இவ பெரியத்தந்தை கவனித்து கொள்வதாக சொன்னதால் தானே , அபி வீட்ல, அப்பா
அபிய விட்டு இருக்காங்க..."

"அங்க அபி வீட்ல அபிய சரியாய் பார்த்துக்குறதில்லயா ?"............."

"நான் எதுவுமே தெரிஞ்சிக்கம்மா இருந்துட்டேனே ..."

"நான் இது எல்லாம் இவ்வளவு நாள் கவனிக்காம விட்டுட்டேன்னே ...","

" முதல அவ மனசுல என்ன பிரச்னை இருக்குனு தெரிஞ்சி சரி பண்ணனும்,... "
இவ்வாறு எல்லாம் அபியை பற்றிய சிந்தனையில் , ஆதி மூழ்கி இருந்தான் ...

சந்தீப் ஆதியை உலுக்கி எழுப்பிய பிறகே , அவனின் சிந்தனையிலிருந்து வெளிவந்தான் , ஆதி ...

அதன் பிறகு நேராக சிவநேசனிடம் சென்று, "அப்பா ! இப்போ அபிக்கு இந்த திருமணம் எதிர்பார்க்காம நடந்ததா இருக்குலாம் , ஆனா எந்த ஈவென்ட்டும் , மிஸ் பண்ணாம எல்லாமே நினைவுல இருக்கணும்னு நினைக்கிறேன்..."

"இப்போ வந்து இருக்குற சொந்தக்காரங்க முன்னாடி, இந்த திருமணம் ஒரு அவசரத்துல நடந்து முடிஞ்சிது, வந்தவங்க எல்லாரும் ஒரு ஒரு எண்ணப்போக்குள்ள இருந்துட்டு போய்டுவாங்க, "

"இந்த ஆதியின் மனைவி அபியா எல்லார் மனசுலயும் , நாங்க இருக்கணும்னு நினைக்கிறேன் , நம்ம ஜஸ்ட் pohotos எடுக்கலாம், அப்டியே ஒரு சின்ன , reception மாதிரி அந்த ஸ்டேஜ்ல நடக்கட்டும்...."

"எங்களுக்கு மட்டும் இல்ல , நிஷா- கிஷோர் க்கும் ஒரு reception போல இருக்கும்..."

"இன்னும் காலங்கள் கடந்தும் இந்த நினைவு , புகைப்படம் எல்லாம் எங்களுக்கு ஒரு பொக்கிஷம் தானே அப்பா ..."

"அபிக்கும் அவ திருமணத்துல எந்த குறையும் , இருக்கக்கூடாதுனு நான் விருப்ப படுறேன், நீங்க என்ன சொல்றீங்க அப்பா ..."

"ஆதி சொல்றது சரி தான் பா, எல்லாம் சாங்கியமும் நடந்துச்சு..."

" அதே மாதிரி போட்டோ , வீடியோ மட்டும் ரெண்டு ஜோடி நிக்க வைத்து எடுத்துடலாம் அப்பா , ஒரு reception மாதிரியும் ஆச்சு , அவங்க திருமணம், அவங்க மனசுக்கு ஒரு நிறைவு..."

" சரி பா அப்டியே செஞ்சிடலாம்..."என்றார் சிவநேசன்...
இன்னும் டிபனுக்கு நேரம் இருக்கு , நானும் போய் இதை பற்றி சுந்தரத்திடம் சொல்லிட்டு வந்துடுறேன்,

நீ , அபியை ரெடியா வர சொல்லு , என்று சுந்தரித்திடம் சென்றார் சிவநேசன்...
அடப்பாவி, நேற்று எப்படி இருந்தான், இன்று என்னவாகிற்று என்று ஆதியை பற்றி குழம்பிக்கொண்டிருந்தான் சந்தீப் ...

அர்ஜுன் , ஸ்ரீயின் அறை சென்று, அபியை சிவநேசன் அழைத்து வர கூறியதாக கூறினான் ...

அபி அழுதுததால் கண்களில் தீட்டிய மை, கண்களுக்கு வெளியில் அங்கு அங்கு ஈஷிக் கொண்டு , மூக்கு நுனி சிவந்து , சோக சித்திரம் என காட்சி தந்தாள் ...

ஸ்ரீயும் அபியை முகம் கழுவி வருமாறு கூறினாள் ...

அபி சென்றதும், அர்ஜுன் அங்குள்ள மற்றொரு அறைக்கு , ஸ்ரீயை தூக்கி கொண்டு சென்றான்.

"ஹே ! என்ன பண்றீங்க அர்ஜுன்? அங்க ஆரவ் எழுந்துக்க போறான்..."
"விடுங்க என்ன , அபி வர போறா ..." என்று அவனிடம் சினுங்கினாள் ஸ்ரீ...

" என்ன மேடம் , முகத்தை தூக்கி வச்சுகிறீங்க ,அபியோட பேசும் போது நல்ல பேசுறீங்க , என்ன பார்த்த உங்க கண்ல அப்டியே அனல் வீசுது ,நான் உன் அர்ஜு தானே !

" உன்ன என்ன டீ செய்தேன் ?" என்று கேட்டு கொண்டே ஸ்ரீயின் முகம் எங்கும் முத்தங்கள் தந்தான் அர்ஜுன்...

"ஆமா , விடு அர்ஜு, என்ன... எனக்கு தெரியாம , எதையோ மறைக்கீறிங்க ..."

அதுவும், ஆதி அபி திருமணம் , எனக்கு ஏதோ விஷயம் இருக்குனு தெரியுது, ஆனா , நீங்க எனக்கு இன்று வரை சொல்லல , என்று கணவனிடம், குறை பட்டாள் ஸ்ரீ...

"ஸ்ரீ குட்டி, அது ஒன்னும் இல்ல டா... நம்ம ஆதிக்கு அபி மேல லவ்ஸுனா லவ்ஸு , அப்டி ஒரு லவ்ஸு ,"

"அவனுக்கு சின்ன வயசில இருந்து அபினா உயிர்,"

" ஆனா உனக்கே தெரியும்.... வீட்ல பெரியவங்க, நம்ம திருமணத்தினை பற்றி பேசியது உனக்கே தெரியும், அதான் அவன் அம்மாக்காக அப்டியே மறச்சிட்டான்,"

"அதன் பிறகு தான் அவனுக்கு எதுலயும் ஒரு இன்ட்ரெஸ்ட் , இல்லாம போச்சு..."

"ஆனா இப்போ அபி ஆதிக்கு மனைவியா வந்ததும், என் தம்பி ஹாப்பி ..."

"அதான் நானும் ஹாப்பி இப்போ உனக்கு புரிஞ்சிடுச்சா ..."

"உனக்கு மறைக்கணும்னு இல்ல டீ , அதான் நடக்குலயே எதுக்கு அந்த விஷயத்தை சொல்லணும்னு இருந்துட்டோம்..."

"எனக்கும் அப்பாக்கு மட்டும் தான் இது தெரியும்..."

"அவனும் எங்களுக்கு சொல்லல , நாங்களா தெரிந்து கொண்டது தான் ..."

" இப்பவும், நீயும் எதுவும் அபிக்கு தெரிந்ததா காட்டிக்காத , ஆதியே அவன் காதல அபிக்கு புரியவைக்கட்டும் ..." என்று மனைவிடம் கூறினான் அர்ஜுன்...

ஸ்ரீக்கும் , அதன் பிறகு சிறிது குழப்பம், நீங்கிற்று, அவசர திருமணம் என்றாலும் இரு இதயம் இணையும் பந்தம் அல்லவோ திருமணம் ...

அதிலும் அபி அழுதுகொண்டிருப்பது, "இதன் பிறகு ஆதி அபி இருவரின் வாழ்க்கை எப்படி?" என்று வெளியில் அபிக்கு ஆறுதல் கூறினாலும், ஸ்ரீயும் , இதை பற்றின சிந்தனையில் இருந்தாள் ...

இப்போ கூட பாரு , "ஏன் பொண்டாட்டிக்கு கல்யாணத்துல எந்த குறையும் இருக்க கூடாது , ஒரு வரவேற்பு நிகழ்ச்சி மாதிரி இப்போ ஒன்னு நடத்தணும் ,போட்டோ எடுக்கணும்னு , எங்க ரெண்டு பேரையும்,ஒரு வழி செஞ்சிட்டு இருக்கான், என்று பெருமையாக தம்பியின், செயல் பற்றி மனைவியிடம் புகழ்ந்து கொண்டிருக்கிறான்," அர்ஜுன்...

"ஒஹ்! வெளில இவ்வளவு, அலப்பறை நடக்குதா... என்று ஸ்ரீயும் பதிலுக்கு அர்ஜுனிடம் கிண்டலடித்து கொண்டிருக்கிறாள் ...

"ஐயோ! ஹே பொண்டாட்டி! உன்னோட இருந்தா என் மூடு வேற எங்கோ போகுது, நீயும் சீக்கிரம் ரெடி ஆகு , நான் , அப்பாவுக்கு உதவியா இருக்கேன் , என்று மனைவியை ஒரு முறை இறுக்கி அணைத்து வெளியேறினான் அர்ஜுன்...

இந்த பொண்ணு சீக்கிரம் ஆதிய புரிஞ்சி , சந்தோஷமா வாழனும் , என்று மனதில் அபி ஆதியை வாழ்த்தி அபியை அலங்கரிக்க காத்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ...

நிஷா மற்றும் கிஷோரும், ஆதியின் வார்த்தைக்கு சம்மதம் கூறி, அங்கு மணமேடையில் சென்று நின்றனர் ...

சுந்தரம், நிஷாவிடம் சென்று பிரேமவாவை அழைத்து வருமாறு கூறினார்.
தாயும் மகளும் ஏட்டிக்கு போட்டி...

நிஷாக்கும், சுந்தரத்தை நினைத்தால்,மிகவும் கவலையாக உள்ளது,"

இந்த அளவிற்கு தன் அன்னையை நம்புகிறார்,

" பின்னாளில் அன்னையை பற்றி தெரிய வந்தால் ?"
ஆனால் எக்காரணம் கொண்டும் தந்தையை வருந்த செய்யக்கூடாது என்று, நிஷா உறுதியாக

பிரேமாவை பற்றி எதுவும் கூறாமல், வெளியில் சிரித்து வைத்து, அப்பா இப்போ தான் பொழுது விடிஞ்சி இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல , அம்மாவின் பிரெண்ட்ஸ் , முகத்துக்கு நல்லா பட்டி டிங்கரிங் , எல்லாம் போட்டுக்கிட்டு வந்துடுவாங்க,

அவங்களுக்குகாக , அம்மா வெளில வருவாங்க , நீங்க இப்போ உங்க ஆசை பொண்ணோட வரவேற்பு நிகழ்ச்சில மகிழ்ச்சியா கலந்துபிங்க தானே, நானும் கொஞ்ச நேரத்துல டெல்லி போய்டுவனே , என்று வருத்தத்துடன் கூறினால் ...

நிஷாவின் இந்த வார்த்தை சுந்தரத்தை அசைத்தது ...சுந்தரமும் பிரேமாவை பிறகு சமாதானம் செய்து விடலாம் என்று நிஷா மற்றும் கிஷோருடன் நின்று கொண்டார்...

அதன் பிறகு, ஆதி - அபி, மற்றும் நிஷா- கிஷோர் ஜோடிகள் மணமேடையில், வீடியோ போட்டோ, என்று எடுத்து கொண்டனர் ...

ஆதி சிவநேசன் , அர்ஜுன் ஸ்ரீ, உடன் புகைப்படம் எடுத்து கொண்டான்.

பிறகு அவன் மாமன் குடும்பம், மற்றும் அவனின் நெருங்கிய உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டான் ...

சந்தீப் திவ்யாவுடன் எடுக்கும் நேரம், சந்தீப் மற்றும் தீயவை அபிக்கு அறிமுகம் செய்து வைத்தான்...

திவ்யா முந்தின இரவே இருவரும் அருகமாயினர் என்று கூறி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தாள் ...

சந்தீப்பிற்கு தான் குழப்பம் தெளியமால், மண்டை காய்ந்து திரிந்து வந்தான் ...

ஆதியை திட்டிய பெரியவரை அழைத்து ஆதி அவரின் காலில் அபியுடன் விழுந்து ஆசி வாங்கினான் .

அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர், தானாகவே முன் வந்து, இரு ஜோடிகளுடனும் நின்று, வாழ்த்தி, புகைப்படம் எடுத்து விடை பெற்றனர் ...

உறவினர்கள் அனைவர்க்கும் அபியை அறிமுகம் செய்து வைத்தான், , அங்கு வந்த பெரியவர்கள் பலர், ஆதிக்கு அபியே சரியான ஜோடி பொருத்தம் என்று வாழ்த்தி சென்றனர்... அபி வாய் பிளக்காத நேங் என்று விழித்து நின்று இருந்தாள் ...

அதன் பிறகு ஆதியின் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், கல்லூரி தோழர்கள் , என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்தவர்களுக்கு எல்லாம், ஆதி அபியை இன்முகத்துடன் அறிமுகம் செய்து வைத்தான் ...

அனைவரின் மனதிலும் ஆதியின் மனைவி அபி என்றும், அபியே அவனின் வாழ்வு என்றும் பதிய வைத்தான் ...

நண்பர்களின் கேலி கிண்டல் என்று அங்கு அபியின் திருமணம் , திருமணத்திற்கே உரிய கலகலப்புடன் நடந்து கொண்டிருந்தது ...

சிவநேசனுக்கு அத்துணை ஒரு மன நிறைவு ...

நிஷா கிஷோர் ஜோடியும் , இனிதே பங்கேற்றனர் ...
அணைத்தும் இனிதே முடிந்து , காலை உணவு முடிந்து, உறவினர்கள் பலர், அருகில் உள்ள ஊர்களில் , இருப்பதால் மண்டபத்தில் இருந்து , நேராக சென்றனர்...

சில உறவினர்கள் மட்டும் அங்கு மண்டபத்தில் இருந்தனர்...
அப்பொழுது, சுந்தரம், நேராக டெல்லிக்கு நிஷா கிஷோரை அழைத்து சென்று, ஷோபனாவிடம் பேசுவதாக கூறினார்...

உடன் விஜயன் மற்றும் லலிதாவை அழைத்து செல்வதாக கூறினார்...
பிரேமாவை பற்றி கேட்டதற்கு அவள் நிஷாவை பார்க்க பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாக கூறி வருந்தினார்...

சிவநேசன் பிரேமாவை அழைத்து வருமாறு லலிதாவிடம் கூறினார் ...
cleardot.gif



லலிதா பிரேமாவை வற்புறுத்தி அறையின் வெளியில் அழைத்து வந்தார்...
அங்கு வந்த பிரேமாவிற்கு பெரும் அதிர்ச்சி, அவளின் கண்களை நன்றாக கசக்கி விட்டு, மீண்டும் உற்று பார்த்தார், ஆதியுடன், அபி நின்று கொண்டிருந்தாள் ...

" இவ அந்த தேவி பொண்ணு, தான? என்று குழப்பத்துடன் அங்குள்ளோரை பார்த்து கேட்டாள் பிரேமா ..."

ஆமா பிரேமா , உன்ன எத்தனை முறை வந்து அழைக்கிறது, நம்ம ஆதிக்கு அபியோட நல்ல படியா திருமணம் முடிந்தது பிரேமா , என்று மகிழ்ச்சியுடன் கூறினார் , சுந்தரம்...
என்ன! என்று உச்ச கட்ட அதிர்ச்சியுடன் கூவினாள் பிரேமா.நம்ம எது நடக்க கூடாதுனு நினைத்துமோ அதுவே நடந்துடுச்சே ...

அதுவும் பூரணியின் தாலி இவ கழுத்துல , ஏன் பொண்னுக்குன்னு கேட்ட அப்போ, இந்த ஆதி, காட்டு பையன் மாதிரி கத்தினான் ...

இந்த அம்மா ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறாங்கன்னே தெரிலயே , நமக்கும் தெரியாம இன்னும் ஏதோ இருக்கோ என்று குழப்பம் அடைந்தாள், நிஷா ...


"போயும் போயும் ஒன்னும் இல்லாத இவளா, அண்ணன், உங்க மருமக என்று கத்தினாள்," பிரேமா...
அங்குள்ள அனைவருக்கும் பிரேமாவின் புது முகம் கண்டு அதிர்ச்சி...

அபி ஸ்ரீயின் கைகளை இருக்க பற்றி கொண்டு மௌனமாக அழுதாள் ...
அதற்குள் ஆதி, "அத்தை ! ..... வார்த்தை வார்த்தை முக்கியம் பாத்துக்கோங்க , அவளுக்கு நான் இருக்கேன், வேற என்ன வேண்டும், ஆமா என்ன இல்ல ..."


"ஏன் மனைவியை பற்றி வாய்க்கு வந்தத பேசுறத நான் அனுமதிக்க முடியாது ..."

"என்னோடது எல்லாமே இனி அவளுக்கு தான் ..."

"இனி பாத்து நடந்துக்குங்க , அப்புறம் உறவு முறை நீடிக்காது," என்று வெடித்தான் ஆதி ...

ஹ்ம்ம் பெத்த பொண்ணு இங்க நிக்கிறேன் , என்ன பற்றின கவலை இல்லை...
ஆதி வீட்டு சொத்து அபிக்கு போனது தான் இவங்களுக்கு வருத்தம் போல ...

சுந்தரம் என்ன இது உன் பேச்சு காலையில இருந்து சரி இல்ல என்று பிரேமாவிடம் சீறினார் சுந்தரம்...

நான் நினைத்தது நடக்காம போச்சு, அது எப்படி உன்னோடது எல்லாம் அவளுக்கா , அது எப்படினு நானும் பார்த்துறேன் ..." இனி அடக்கி வாசிக்கனும் ..."

ஆனா இவள அவனுடன் வாழ விட மாட்டேன் என்று மனதில் சபதம் எடுத்து, வெளியில்

"அதில்ல ஆதி, காலையில இருந்து ஏதோ ஒரு வருத்தம், குழப்பம், சரி சரி நல்ல இருங்க பா, நல்ல இருங்க, ஏதோ அத்தை தெரியாம பேசிட்டேன், மனசுல வச்சிக்காத பா... என்று சமாளித்தாள்...

நிஷாவும் பிரேமா அறையில் நுழைந்ததும், அவர் பின்னோடு சென்று, "அந்த பொண்ணுக்கு ஏதாவது செய்யணும்னு, நினைத்தீங்க , இனி நான் சும்மா இருக்க மாட்டேன், மா ..."
" ஹ்ம்ம்!"

"நான் கிளம்புறேன் , நீயா விருப்ப பட்டு என்ன பார்க்க விருப்ப பட்டு அங்கு வரதுனா வா, அது வரை நான் உன்ன கூப்பிட மாட்டேன் ..."

"என் குழந்தை ஒரு நல்ல சூழல்ல வளரணும்னு நான் ஆசை படறேன், எனக்கு இங்க உன்னோட அது சாத்திய படாது..."

"உனக்கு இப்பவும் ஒண்ணே ஒன்னு சொல்லிக்கிறேன் , என்ன தான் சொசைட்டி, நிறைய மாற்றம் வந்து இருந்தாலும், திருமணம் ஆனா ஒரு பெண்ணிடம், உங்களுக்கு எத்தனை குழந்தைங்க அப்டினு தான் கேட்க்கிறார்களே, தவிர... "

" யாரும் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கு, பேங்க்ல எவ்வளவு, காசு இருக்குனு கேட்க மாட்டாங்க..."

"இனி இதை பற்றி உனக்கு சொல்றது வேஸ்ட் ..."

"அந்த வீட்ட பற்றிய உன் சிந்தனையை விட்டுட்டு, உன்ன நம்புற என் அப்பாக்காக , இனியாவது உண்மையா இரு..."என்று கூறினாள் நிஷா ...

அதன் பிறகு லலிதா ஸ்ரீ மற்றும் அபியிடம் சென்று அவர்கள் டெல்லி கிளம்பும் பற்றி கூறியதற்கு, "சரி மா , நீங்க அந்த வீடு பெரிய மருமகளா உங்க வீட்டு வேலையை பாருங்க... "

"நான் எங்க வீட்டுக்கு வந்து இருக்குற புது மருமகள் கவனிக்கணும்,"
என்று கிண்டல் அடித்து கொண்டிருந்தாள் ஸ்ரீ...

"அடி போக்கிரி! இனி இந்த அபியம் உன்னோடே சேந்துட்டாளா , அண்ணனும், என் மாப்பிளைங்களும் தான் பாவம்..."

"அபி கண்ணா உனக்கு நானும் ஒரு அம்மா மாதிரி தான் மா . உனக்கு எது ஒன்னு வேணும்னாலும் என்னிடம் தயங்காம கேக்கணும், சரியா..." என்று அபியிடம் அன்பு கட்டளை விடுத்தார் லலிதா ...

"இனி இரண்டு பேரும் பொறுப்பான மருமகளா இருந்து, இந்த குடும்பத்துக்கு, மேலும் பெருமை சேர்க்கணும் , "என்று ஸ்ரீ மற்றும் அபிக்கு அறிவுரை கூறினார். லலிதா ...

நல்ல நேரம் முடிவதற்குள்,ஆதியும் அபியும் வீட்டிற்கு அழைத்து செல்ல சிவநேசன் அங்கு வந்து சேர்ந்தார்.

நிஷாவும், கிஷோரும், மதியம் டெல்லி பயணமாக தயாராகினர் ...
இனி இவர்களுடன் நாமும் பயணம் செய்வோம் ...
 

banumathi jayaraman

Well-Known Member
சின்ன வயசுலேருந்து வெறுமனே லவ் மட்டும் செஞ்சால் போதாது
அபி எப்படி இருக்கிறாள் என்ன ஏதுன்னு முன்னாடியே நீ பார்த்திருக்கணும்டா ஆதி டாக்டர்
வீட்டில் அவ்வளவு வேலையையும் வாங்கிக்கிட்டு பழைய சோறைப் போட்ட பெரியம்மாவின் பொண்ணு அனுவுக்கு கல்யாணமானால் என்ன? ஆகாட்டி என்ன?
நீ உன்னுடைய வாழ்க்கையை மட்டும் பாரு அபிப் பெண்ணே
அடிப்பாவி பிரேமா
உனக்கு இவ்வளவு கெட்ட எண்ணமா?
அந்த பெரியம்மா மூதேவியோட இந்த பிரேமா பீடையையும் சேர்த்து அபி சமாளிக்கணுமா?
 

achuma

Well-Known Member
சின்ன வயசுலேருந்து வெறுமனே லவ் மட்டும் செஞ்சால் போதாது
அபி எப்படி இருக்கிறாள் என்ன ஏதுன்னு முன்னாடியே நீ பார்த்திருக்கணும்டா ஆதி டாக்டர்
வீட்டில் அவ்வளவு வேலையையும் வாங்கிக்கிட்டு பழைய சோறைப் போட்ட பெரியம்மாவின் பொண்ணு அனுவுக்கு கல்யாணமானால் என்ன? ஆகாட்டி என்ன?
நீ உன்னுடைய வாழ்க்கையை மட்டும் பாரு அபிப் பெண்ணே
அடிப்பாவி பிரேமா
உனக்கு இவ்வளவு கெட்ட எண்ணமா?
அந்த பெரியம்மா மூதேவியோட இந்த பிரேமா பீடையையும் சேர்த்து அபி சமாளிக்கணுமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top