என் இதய விழி நீயே- episode 7

Advertisement

achuma

Well-Known Member
hi friends 7 th episode potutaen unga likes and comments ku romba thanks, pls ellarum safe ah irunga read this part also n thanks


என் இதய விழி நீயே

மனிதர்கள் எவ்வளவோ ஒரு செயலுக்கான திட்டங்கள் தீட்டினாலும், இறைவனின் அருள் அன்றி எக்காரியமும் நடவாது, இது தெரிந்தாலே, "தான்" என்று செருக்கு யாருக்கும் இருக்காது...
"அபியை திருமணம் செய்வதற்கு , தனக்கு தகுதி இருக்கிறதா என்று தன் தந்தையிடம் கதறுகிறான்" ஆதி,


வேறு வழி இன்றி திருமணம் செய்வது அபிக்கு மரியாதை குறைவு என்றும், இதற்கு ஒற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆதி , பல வழிகளில் தன் தந்தையிடம் மறுப்பு கூறுகிறான்.

அவருக்கு ஆதி அபி மீது வைத்துள்ள காதல் தெரியும், தன் தாயின் வாக்கை காப்பதற்கு , அவன் காதலை மறைத்து தவிப்பதும் தெரியும்...

இன்று இத்தனை சூழலில் நிஷாவுடன் திருமணம், நின்று இருக்கிறது என்றால் , இது தெய்வத்தின் செயல் அன்றி வேறு இல்லை ...

இன்னாருக்கு இன்னார் தான் பொருந்தும் , என்று தெய்வத்துக்கு மட்டுமே தெரியும், ஆதியுடன் அபிக்கு திருமணம் நடந்தால் மட்டுமே இருவரின் வாழ்வும் பொருந்தும்...

"ஆதி இனி உன்னக்காக வாழு பா ..."


ஆதி, நம்ம இந்த திருமணம் எந்த தடங்கலும் இல்லாம தான பா செஞ்சிட்டு வந்தோம் , ஆனா முகுர்த்த நேரத்துக்கு முன்ன இப்டி நடந்து இருக்குனா , நம்ம என்ன சொல்லறது, இது தெய்வ செயல் பா . உன் அம்மாவோட விருப்பமும் இது தான் ...

சிவநேசன் இவ்வாறு சொன்னதும், ஆதி திடுக்கிட்டான் , முதல் நாள், நிச்சயம் முடிந்ததும் , அவனால் இனியும் முடியாது, என்று, நிஷாவிடம் திருமணத்திற்கு விருப்பம் இல்லை என்றும் , தன் தந்தையை இனியும் வருத்தம் அடைய விருப்பம் இல்லை என்றும், நிஷாவிடமே திருமணம் நடக்காமல் இருக்க வேறு ஏதாவது ஆலோசனை இருக்கிறதா என்றும் கேட்டான்...

நிஷாவும் அவளுக்கும் இதில் விருப்பம் இல்லை என்றும், அவளே தன் தந்தையிடம் இதை பற்றி தெரிவிப்பதாகவும் கூறினாள்...
மேலும் அவள் தந்தியிடம் அவளின் கிஷோர் மீதான விருப்பத்தை பற்யும் கூறினாள் ...


இதன் பிறகே ஆதி நிம்மதியுடன் அவன் அறைக்கு சென்றான்...
இவை அனைத்தும் லீனா இல்லாத நேரம் நடந்தது...
அதன் பிறகே நிஷா இதை பற்றய சிந்தனையில், உழன்று , ஜூஸ் என்று நினைத்து , லீனாஎடுத்து வந்த மது எடுத்து அருந்தினாள்...


னால் நிஷாவிற்கு வேறு மாதிரி பிரச்சனைகள் வந்து விட்டது ...
ஆதி இந்த யோசனையில் இருந்து வெளி வந்து, தன் தந்தையிடம், மறுப்பதற்கில்லை என்று, நேற்று இரவு நிஷாவுடன் நடந்த பேச்சுவார்த்தை பற்றி கூறினான்....


சிவநேசன் முதலில் ஆதியின் செயலால் வருந்தினாலும், அவன் எந்த அளவிற்கு அபி மீது அன்பு வைத்துள்ளான் என்று தெரிந்து கொண்டார் ...

இனி ஒரு தகப்பனாக அவரின் கடமை இனிதே நிறைவேற்ற , ஆதியிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல கூறினார் ...

இதுக்கு மேலயும் உன்ன நீ வருத்திக்காத பா , பூரணியின் ஆத்மா இப்போ தான் மன நிம்மதியா இருக்கும் ஆதி...

ஆதி, ஒரு தாய்க்கு, மகனுக்கு பிடிச்ச பொண்ணோட, திருமணம் நடந்தா வேற, என்ன நிம்மதி இருக்க முடியும்.

எந்த அம்மாவின் வாக்க காப்பாத்த உன் காதலை மறைத்து நீ வருந்தினியோ, இப்போ அந்த அம்மாவே உன் மனசுக்கு பிடிச்சவளுடன் சேர்த்துவைக்கிறா பா ...

"இது தான் எனக்கும், என் பூரணிக்கு விருப்பம்," என்று கூறினார்.ஒரு வழியாக ஆதி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்...

அபி அறை நோக்கி சென்றார் சிவநேசன்...



இனி தந்தையை வருந்த செய்ய விருப்பமில்லாமல், எப்படியாவது அவனின் காதலை அபிக்கு உணர செய்து நன்றாக வாழ முடிவு செய்தான் ... திருமத்திற்கும் தயார் ஆனான் ...

அவருக்கு அபியை எப்படி சமாளிப்பது , எப்படி சம்மதம் வாங்குவது என்றே தெரியவில்லை ...

அர்ஜுனும் பூரணியின் மாங்கல்யத்துடன் வந்து சேர்ந்தான் ...

சிவநேசன், ஸ்ரீ மற்றும் அர்ஜுன் இருவரையும் , அபி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றனர் ...

அங்கு அபி குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்து இருந்தாள் ...
ஸ்ரீக்கு ஏதோ விஷயம், என்றளவிற்கு தெரிந்து,அவர்களுடன் சென்றாள் ...


மூவரையும் கண்டதும், அபி புன்னகையுடன் , எழுந்து ஸ்ரீயின் பக்கம் சென்று நின்று கொண்டாள் ...

சிவநேசன் எந்த மறைவும் இன்றி ,
"அபி கண்ணா , என் மகன் ஆதிய கல்யாணம் செய்துக்குரியா மா ?" என்று இரு கை கூப்பி நேரிடையாகவே கேட்டுவிட்டார் ...


"மாமா! "

அபி வாயசைப்பு மட்டுமே , வார்த்தை வெளிவரவில்லை ...
தான் கேட்டது சரியா என்று மீண்டும் மாமா என்கிறாள், இந்த முறை மிக சிறிதாக அவளின் குரல் வெளி வந்தது...


ஸ்ரீக்கும் இது அதிர்ச்சியே, ஆனால் அர்ஜுன் அவளின் கைகளுக்கு அழுத்தம் கொடுத்து ஸ்ரீயை பார்க்க செய்து , அவனின் கண்ணசைவில் பிறகு சொல்வதாக கூறினான் ... ஸ்ரீயும், சரி என்று தலையாட்டினாள் ...

அபிக்கு தான் என்ன , எது என்று ஒன்றும் புரியவில்லை ...

நிஷாவின் அணைத்து விஷயங்களும் சொல்லாமல் , கிஷோர் மற்றும் நிஷாவின் காதல் , ஆதலால் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது , என்ற வரை கூறினர்.

"சே! இந்த பொண்ணு , லவ் பன்னத முதல்லயே சொல்லி இருக்கலாம், இவங்களுக்கு இப்டி அவமானம் குடுத்துட்டாளே, "என்று அவள் பூரணி அத்தையின் குடும்பத்திற்க்காக மனம் வருந்தினாள் , அனால் அதற்கு மேல யோசிக்கவில்லை ...

"மாமா நீங்க வருந்தாதிங்க..."

ஆதிக்கு சீக்கிரமே நல்லா பொண்ணு கிடைக்கும் என்று அவர்களை தேற்றினாள் ...
மீண்டும் சிவநேசன் அபிமா , ஆதிக்கு உன்ன விட வேற நல்ல பொண்ணு எங்கயும் இருக்க மாட்டா .


அவனுக்கு நீ மட்டும் தான் பொருந்தும்...
இன்னும் என்ன சொல்லி இருப்பாரோ...


ஆதியின் காதல், அவன் மூலமே தெரியட்டும் என்று சிவநேசன் மற்றும் அர்ஜுன் அமைதி ஆகினர் ...

அபி அவளை நினைத்து அவளே வருந்தினாள் ...
மாமா ! நான் என்ன optinala , இவங்க இல்லனா இவளை புடிச்சி கல்யாணம் செய்யலாம்னு , கேக்க , என்று இது போன்று பேசாத அபி இன்று இவ்வாறு பேசினாள் ...


யாராக இருந்தாலும் அவர்களின் தன்மானம் அவர்களுக்கு
முக்கியம் தானே ...
"எனக்கு , அம்மா அப்பா , யாரும் இல்ல ..."


"ஏன் மனசுக்கு பிடிச்சது என் அம்மா அப்பா, பிறகு உங்க குடும்பம் மட்டும் தான் ..."
"நீங்க இப்டி கேப்பீங்கனு நான் நினைக்கில , நான் இது வரைக்கும் திருமணம் , அத பற்றி நினைக்கில மாமா..."
படிப்பு முடிஞ்சதும், ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல போய்டணும், ஒரு வேலையில செட்டில் ஆகிடனும் ...


எனக்குன்னு ஒரு நலம் விரும்பியா உங்க குடும்பம் இருக்கு ... அது போதும்னு இருக்கேன் ...

ஆனா நீங்க , ஆதிக்கு திருமணம் நின்றதும், என்ன வந்து கேட்கறது, எனக்கே என்ன நெனச்சா , இறக்கமா தோணுது மாமா ," என்று மனம் வருந்தி சிவநேசனிடம் அழுதாள் ...

இது போன்று அபியிடம் கேட்டிராத பேச்சுக்கள் சிவநேசனுக்கு மிகவும் மன வருத்தத்தை குடுத்தது ...

அபிமா இந்த வீடு பெரியவங்க இந்த திருமத்தை நடத்தணும்னு விருப்ப பட்டாங்க, ஆனா அதுல ஒரு திருமணம் இந்த மாதிரி ஆகிற்று ...

"ஆனா நான் ஆதிக்கு , நீ சொன்னியே நல்ல பொண்ணு , அந்த நல்ல பொண்ண வெளில பார்க்க இருந்துதுன்னா , உங்க வீட்டுக்கு வந்து உன்ன மட்டும் தான் பார்த்து இருப்போம் மா ... "என்று மிகவும் ஆணித்தரமாக கூறினார் ...
இது அபிக்கே அதிர்ச்சி ...


உன்ன பூரணிக்கும் சரி, எங்க குடும்பத்லயும் சரி , எவ்வளவு பிடிக்கும்னு ...

நாங்க பூரணியின் அம்மாவுக்கு எந்த வாக்கும் தராம இருந்திருந்தா ,உன் பெற்றோரிடம் உன்ன தான் ஆதிக்கு கேட்டு இருப்போம் ...

அபி , நீ பொறந்ததும் உன்ன முதல பூரணி தான் மா தூக்குனா , அவளுக்கு அவ்வளோ ஒரு மகிழ்ச்சி , அவ தேவதை மா நீ , உன்ன ஆதிக்கு கட்டி வைக்க விருப்ப பட்டு தேவி கிட்ட ஒரு நாள் கேட்ட மா , தேவிக்கும் விருப்பம் தான்.

ஆனா வசதி, உறவினரின் சொற்கள் இவை, அனைத்தும் தேவி யோசித்தார் ...

பூரணி அது போன்று இல்லை என்றாலும், இவ்வுலகம் மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது அவர் அவர் பணம் வசதி பொறுத்தே இவ்வுலகில் மனிதனுக்கு மரியாதை ...
தேவி அவளின் ஆசை இருந்தாலும் அவளின் தயக்கத்தயும் அவள் தோழி பூரணியிடம் கூறினாள் ...


ஆனா பூரணி மற்றும் தேவி இரண்டு பேரும் , பசங்க மேல எந்த விருப்பத்தையும் நம்ம தின்னிக்க கூடாது , ஆனால் விதியின் விருப்பமும் _ (ஆதி- அபி திருமணம்) இதுவே என்றால் , அதன் படி இனிதே நடக்கட்டும் என்று உறுதியாக இருந்தனர்...

அதான் இந்த விஷயம் உங்க பசங்க யாருக்கும் தெரியாது. உனக்கும் அர்ஜூக்கும் பத்து வர்ஷத்துக்கும் மேல வயது வித்யாசம், அதான் ஆதியுடனான திருமணதிற்கு பூரணி தேவியிடம் கேட்டது...
பூரணிக்கு அவ செல்ல அபி மருமகளா அந்த வீட்டுக்கு வரணும், அவ்வளவே...

ஆனா பூரணியின் அம்மா மரண படுக்கையில் பூரணியிடம் , அவரின் ஆசையான, அர்ஜுன் ஸ்ரீ மற்றும் நிஷா ஆதி திருமணம் பற்றி கூறவே, வேறு வழி இன்றி தன் தாயின் இறுதி விருப்பதிற்காக பூரணியும் சம்மதம் என்று வாக்கு கொடுத்தாள் ... என்று சிவநேசன் அபியிடம் அனைத்தும் கூறினார் ...


"ஆனா உன் பெற்றோர் மரணம் , அதன் பிறகு, உன்ன அங்க தனியா விட முடியாம நானும் பூரணியும், தவிச்ச தவிப்பு எங்களுக்கு தான் மா தெரியும்..."

"வேற வழி இல்ல , நீயும் வயது பொண்ணு , ஆண்டு இருந்த சொந்த பந்தம் யாரும் இதற்கு சம்மதம் கூறவில்லை , நீயும் அப்போ மைனர் , உன்ன ராமமூர்த்தி(அபியின் பெரியத்தந்தை ), நல்லா பார்த்துக்குறோம்னு சொன்னாங்க, சரினு உன்ன அங்க விட்டாலும் , எங்களுக்கு மனசு கேக்காம, அடிக்கடி அங்க வந்து உன்ன பார்த்துட்டு போக ஆரம்பிச்சோம்..."

"ஆனா பூரணி மட்டும் உன் எதிர்காலம் பற்றி எப்பவுமே யோசிப்பா , உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை உருவாக்கி தர கடமை இருக்குனு என்னிடம் சொல்லிட்டே இருப்பா , அவ இப்போ இந்த உலகத்துல இல்லனாலும் , எனக்குள்ள இருக்கா மா, அவ கடமையை, முக்கியமா , அவ விருப்பத்தையும் உன் அம்மா தேவி விருப்பதினை யும் நிறைவேற்றும் கடமை எனக்கு இருக்கு" என்று கூறினார் ...
என்ன தப்பா நினைக்காத அபிமா , பெரியவங்க ஆசைக்காக பூரணி இது ஒற்றுக்கொண்டாள் , அவளுக்கு நீ என்றால் உயிர் மா , என்று மனைவிகாகவும், அவளின் விருப்பத்திற்காகவும் போராடினார் ...


உடனே அபி அவரிடம் சென்று அவர் கைகளை பிடித்து கதறினாள் . மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா, நீங்க எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாதை அப்டினு ஒரு உணர்வு எனக்கு இருந்தட்டே இருக்கு, "

"எனக்கு திருமணம்? இது வரை அதை பற்றிய சிந்தனை இல்லை என்றும், அதில் விருப்புமும் இல்லை என்றும் கூறினாள் ..."

மேலும் "ஆதி இதுக்கு சம்மதம் சொன்னாரா ?"

" உங்க குடும்பத்துக்கு நான் தகுதியா ?

" பெரியன்னை என்ன சொல்வாங்க? "

"இது திருமணம், இரு மனமும் ஒற்று போகணும் , ஊரு உலகம் என்ன சொல்வாங்க ? நான் உங்க அளவுக்கு வசதி இல்ல , எல்லாவற்றையும் விட முக்கியம், கடமைக்காக என்று அவளின் திருமணம் நிறைவேற்றுவது என்பது," என்று அவளின் அனைத்து பயங்களையும் , சிவநேசனிடம், தயக்கம் இன்றி அபி கூறினாள் ...

சிவநேசன், "அபி எனக்கு நீ ஒரு மக டா , பூரணி விருப்பம்னு சொன்னா , எனக்கு அந்த விருப்பம் இல்லாமையா பூரணி சொல்லி இருப்பா , உனக்கே தெரியாதா?"

" நாங்க எந்த ஒரு முடிவும் ஒண்ணா தான் எடுப்போம்னு ,"

" எனக்கு நீ ஏன் மருமகளா வரதுல மனப்பூர்வ விருப்பம் மா " என்று கூறினார் ...

"மரண வாசல்ல இருகுற நேரத்துல அவங்க விருப்பம் நிறைவேற்ற நாங்க அவங்களுக்கு வாக்கு குடுத்துட்டோம்..."
" ஆனா இதையும் மீறி இத்தனை செயல்கள் நடந்து இருக்குன்னா , பூரணி - தேவி, இவங்க ஆத்மா உங்கள தான் ஜோடியா பார்க்க ஆசை படறாங்க
அபி ,"
அவங்க மட்டும் இல்ல என்னோட கனவும் இதுவே," என்று கூறினார் ...


"அபிமா , என்று அவரின் இரு கை கூப்பி, நீ இப்போ உயிரோட இருக்கிற இந்த மாமாக்காக , என் விருப்பத்தை நிறை வேற்று மா" என்றார் ...

பதறிய அபி, கேவலுடன் அவரின் கைகளை பற்றி திருமத்திற்கு ஒற்று கொண்டாள் ...

"அம்மா , பூரணி அத்தை! உங்க ஆசை இது தான , நான் உங்க விருப்ப படி நடந்துக்குறேன், இவ்வளவு நாளும் , நீங்க தான் எனக்கு வழி நடத்துறீங்க , இனியும் உங்க வழி படியே நான் வரேன், எனக்கு எப்பவுமே துணையா இருங்க, எனக்கு உங்க மடில , படுக்கணும் போன்று இருக்கு, என்று மனதில் நினைத்து, கண் கலங்கினாள் , அபி".

மேலும், அவளின் தந்தை போன்ற உண்மையான பாசம் வைத்துள்ளவரின் ஆசைக்காக , திருமணத்திற்கு ஒற்று கொண்டாள் ...

ஸ்ரீ மற்றும் அர்ஜூனுக்கும் மகிழ்ச்சி ...

ஸ்ரீக்கு அவளின் தோழியே அந்த வீட்டிற்கு மருமகளாக வருவது அத்துணை இன்பம்...
அபியிடம் சேலை மாற்ற சொன்னதற்கு, "வேண்டாம் அக்கா , காலையில் அம்மா இந்த திருமணம் பார்ப்பாங்க , என்று அவங்க புடவை எடுத்து கட்டுனே , ஏதோ அவங்களே என் கூட இருந்து பார்ப்பது போன்று ஒரு உணர்வு..."
"ஆனா இப்போ இந்த சேலையில அவங்க பொண்ணு திருமணத்தினை பார்க்க போறாங்க , என்றாள் ..."
அபி திருமணதிற்கு தயார் ஆனாலும் , ஏதோ ஒரு பயம், ஒரு உணர்வு, அது என்னவென்று அவளிற்கே விளங்கமுடியாத ஒன்று...
ஸ்ரீ சொல்வதிற்கிணங்க ஒரு இடத்தில் அமர்ந்தாள்...


சிவநேசன் மற்றும் அர்ஜுன் வெளியில் வந்து ஐயரிடம் பூரணியின் மாங்கல்யம் குடுத்து பூஜை செய்து தர சொல்லினர் ...

ஐயரும் வந்ததற்கு ஒரு திருமணத்தியாவது அவர் பங்கிற்கு செய்வோம் என்று பூஜை வேளைகளில் இறங்கினார் ...

அங்கு நின்று இருந்த யாருக்கும் எந்த விளக்கமும் தரவில்லை, விளக்கம் குடுக்கும் நேரமும் இல்லை ...

அனைவரும் என்ன நடக்குறது என்பது போன்று பார்த்து இருந்தனர்...

அதன் பிறகு மங்களம் வாத்தியங்கள் இசைக்க பட்டது, இந்த சத்தத்தில், பிரேமா அவரின் இரு காதையும் இருக்க மூடிக்கொண்டார். அவர் இப்பொழுது தான் நிஷாவிற்கு திருமணம் என்று நினைத்து அமர்ந்து கொண்டார்...
அங்கிருந்த பரபரப்பில் யாரும் பிரேமாவை பற்றி சிந்திக்கவில்லை ...


ஆதியும் புகைப்படம் எடுபவர்களிடம் புகைப்படம் எடுக்குமாறு கட்டளையிட்டான் ...

நேற்று ஒரு போஸ் போட்டோக்கு நிக்க சொன்னதுக்கு இன்ட்ரெஸ்ட் , இல்லனு, முகத்த இறுக்கமா வெச்சி இருந்துட்டு , இப்போ இந்த முகத்துல எங்க இருந்து இந்த அளவிற்கு பிரகாசம் என்று, குழம்பினார்...

அதன் பிறகு அவர்களின் வேலைகளும் ஆரம்பமானது...

சந்தீப் , "என்னடா நடக்குது இங்க ? " என்று குழப்பத்துடன் பார்த்தான் ...
அர்ஜுன் வந்து ஐயற் சொல்லும் பொருட்களை , எடுத்து தருமாறு கூறவே சந்தீப் அவனின் சிந்தனையில் இருந்து வெளிவந்தான்...


அபியின் தலைமுடி அழகாக ஸ்ரீயால் அலங்காரம் செய்யப்பட்டது , அபியும் நிஷாவிற்கு எடுத்த ஜடை, மாலை எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டாள் ...

அவளின் மனநிலை அறிந்த ஸ்ரீயும், அபிக்கு அழகாக மல்லிகை மலர் மற்றும் ரோஜா மலரால் அவளின் கூந்தலை அலங்கரித்தாள் ... "

"அபி! உனக்கு இந்த மெஜந்தா கலர் சாரீ சூப்பர்!" என்று கூறினாள் ஸ்ரீ.

ஸ்ரீயின் நகைகள் சிலவற்றை அபியின் கெஞ்சலையும் மீறி அபிக்கு அணிவித்து அழுகு படுத்தினாள் ஸ்ரீ ...

பிறகு அபி அறையில் இருந்து ஸ்ரீ அழைத்து வந்தாள் . மிகவும் எளிமையான அலங்காரத்தில் தேவதை என ஜொலித்தாள் அபி ... அபியின் ஆடம்பரம் இல்லாத அமைதியான அழகு அங்குள்ள அனைவரையும் ஈர்த்தது...

அங்குள்ள அனைவர்க்கும் ஒரு ஒரு எண்ணம் , சுந்தரம் , விஜயன், லலிதா ஆகியோர்க்கு , பூரணி மற்றும் தேவியின் சிந்தனை , அவர்களின் நட்பின் மீது விந்தை, அதே நேரத்தில் மகிழ்ச்சியும் கூட...
ஏதோ ஒரு உணர்வு அங்குள்ள அனைவருக்கும் ...


சந்தீப் மற்றும் திவ்யா குழப்பம் ...

நிஷா யாரு இவங்க , என்பது போன்று சிந்தனையில் இருந்தாள்...
திருமணத்திற்கு வந்து இருந்த உறவினர்கள் நண்பர்கள், இந்த பொண்ணு தான் ஆதி விரும்பும் பெண் போல, என்று ஒரு ஒரு சிந்தனை...


ஆதிக்கு பல வருடம் கழித்து அபியை பார்க்கும் தருணம், என்னவென்றே அவனின் எண்ணம் என்ன என்று அவனிற்கே புரியவில்லை , அவனின் மனம் ஒரு வித பரபரப்பில் இருந்தது,

அதன் பிறகு ஆதியின் அருகில் அபி அமர வைக்க பட்டதும், அவனின் பரபரப்பு அடங்கி, ஒரு வித அமைதி வந்தது...
அந்த பரபரப்பு ஆதியுடன் அமர்ந்ததும் அபிக்கு இடம் பெயர்ந்தது , ஐயர் மாங்கல்யம் தந்ததும் , அபியின் கண்கள் அதனை கண்டதும், தானாக ஒரு துளி கண்ணீர் அவளின் கண்களில் இருந்து வெளிவந்தது , அவளின் கண்ணீர் துளி கண்டதும் முதலில், ஆதிக்கு, சினம் வந்தது, "ஏன் நான் யாரோ தெரியாதவனா , ஏதோ தெரியாதவன திருமணம் செய்ற மாதிரி அழுறா ,? என்று சினம் கொண்டான்...


அதன் பிறகு அவளின் நிலை அறிந்து சிறிது அமைதி காத்தான் .
கழுத்தில் தாலி ஏறும் நேரம் அபி எதை பற்றியும் நினைத்து வருந்தக்கூடாது என்று, மிகவும் மென்மையாக அபி! என்று அழைத்தான் .


அபி அவனை பார்க்கலாம் என்றல் அவனின் சட்டை பொத்தான் தான் அவளின் கண்களுக்கு தெரிந்தது ,
மீண்டும் ஒரு முறை ஹே குள்ள வாத்து ! என்று அழைத்ததும்,அபி அவனை முறைப்புடன் விலுக்கென்று நேராக நிமிர்ந்து ஆதியை பார்த்தாள் ...


அவளின் முறைப்படி பார்த்ததும் ஆதி புன்னகையுடன், "இது ஒரு முக்கியமான தருணம் ..."

"இந்த நேரத்துல , நீ நல்ல இருக்கணும்னு யார் நினைப்பார்களோ அவங்கள கண்ணா மூடி நெனச்சிக்கோ, என்று அவளின் சிந்தனையை திசை திருப்பினான் ...

ஏதோ அபி ஆதியை ,அதிலும் அவனின் கண்களை கண்டதும், கட்டுண்டு இருந்தாள் ...

ஆதி சொன்னது போன்று அபி அவளின் தாய் தந்தை மற்றும் பூரணி இவர்களின் உருவத்தினை அவள் கண் முன் கொண்டு வந்தாள் ...
பிறகு அபி கண்கள் திறந்ததும் ,


" நான் சொன்னது போல் நினைத்தாயா ?" என்று குழந்தையிடம் பேசுவது போன்று பேசிக்கொண்டிருந்தான்...

அபியின் தலையும் தானாக இருபக்கமும் ஆடியது ...
அவளிடம் பேச்சு கொடுத்து கொண்டே , அபிக்கு வேறு எந்த குழப்ப சிந்தனைகளும் இல்லாமல், அவளை அவன் கண்களை நேராக பார்க்க செய்து மாங்கல்யம் அணிவித்தான் ...


ஏதோ அவனின் இதயம் அத்தனை அமைதி , "அம்மா! நீ என்ன வாழ்த்து மா , உன் மருமக, எப்படி நீ சொல்றா மாதிரியே தேவதை மாதிரி ஜொலிக்கிற பாருமா ..."

" எங்க வாழ்க்கை நல்ல முறைல வழி நடத்துமா," என்று பூர்ணயிடம் மனதோடு வேண்டுதல் வைத்தான் ஆதி...

அங்குள்ளோர்க்கு இந்த காட்சியினை பார்ப்பதே அத்துணை ஆனந்தமாகவும், வியப்பாகவும், இருந்தது...

அனைவர்க்கும் இருவரும் பொருத்தமான ஜோடியாக தெரிந்தனர் ... வாய்க்கு வந்ததை பேசியவர்களும் இந்த காட்சியில் வாய் அடைத்து போயினர்...

அங்குள்ள நிறைய உறவு பெண்களுக்கு ஆதியின் வசீகரத்தில் ஒரு மயக்கம், இப்பொழுது , அபியின் மீது பொறாமையும் வந்தது...

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டே, இருந்த காட்சியினை புகைப்படமும் அழகாக படம் பிடித்து கொண்டது...


திவ்யா சந்தீப்பின் கைகளை சுரண்டினாள் , "சந்திப்பும் எனக்கும் அதே சந்தேகம் தான், இவன் என்ன ஏதோ குழந்தைக்குஊசி போடும் போது அவங்கள திசை திருப்பி ஊசி போடுற மாதிரியே இந்த பொண்ணுக்கு என்ன என்னவோ பேசி அவ கழுத்துல தாலி கட்டிட்டான் ...

"அவன் mesmarize பன்றான் அபி, நீ அவன இனி பாக்காத ," என்று அவளுக்கு அவளே பேசி கொண்டாள் அபி ...

பிறகு அபியின் நெற்றி மற்றும் வகிட்டில் குங்குமம் இட்டு, அணைத்து சாங்கியங்களும் முடிந்து, சிவநேசன், சுந்தரம், விஜயன் தம்பதியினர் என்று பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்...

நடந்து முடிந்த நிகழ்வில் இருந்து அபியால் வெளிவர முடியவில்லை...

"திருமணத்தில் கலந்து கொள்ள வந்த நான் இன்னிக்கி மன பெண்ணா?" என்று ஒரு அதிர்ச்சி.

அபியின் கால்கள் மறுத்து கொண்டது போல் அடுத்த ஆதி எடுத்த வைக்க முடியாமல் , தடுமாறினாள் ...
உடனே ஆதி ஸ்ரீ யிடம் அபியை அவளின் அறைக்கு அழைத்து சென்று ஓய்வு எடுக்குமாறு கூறி அனுப்பினான்.


அபியும் இந்த கூட்டத்துல இருந்தும் முக்கியமாக ஆதியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஸ்ரீயுடன் அறைக்கு சென்றாள் ...

ஆதியும் அவன் தந்தையிடம் சிறிது நேரம் அவன் அறையில் இருப்பதாக கூறின் அவன் அறைக்கு சென்றான் ...

சந்திப்பிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றால் அவன் மண்டை வெடித்து விடும் போல், இருந்தது, அவனும் ஆதியின் அறைக்கு சென்று, அவன் எப்பொழுது கண் திறப்பான் என்று காத்துக்கொண்டிருக்கிறான்...
இதோ இத்துன்னை விஷயங்களும் நடந்து முடிந்து அபி இது பற்றின சிந்தனையிலே இருக்கிறாள் ...


இனி ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top