என் இதய விழி நீயே-episode 6

Advertisement

achuma

Well-Known Member
hi friends 6 th epi potutaen read n ple comment take care :)






என் இதய விழி நீயே
அடுத்த நிமிடம் நிஷாவை சந்திப்பதற்கு அவள் கூறிய இடம் நோக்கி சென்றான் கிஷோர் .
"மண்டபத்ர்க்கு எதற்கு நிஷா அழைக்கிறாள்? " என்ற குழப்பத்துடன் சென்றான் . கிஷோரிடம்

நிஷாவின் தோழிகள் கூட அவளின் திருமண தகவல் கூறவில்லை . இது எதுவும் தெரியாது கிஷோர் இருந்தான் .

அதன் பிறகு நிஷாவிடம் மண்டபத்தின் வெளியில் உள்ளதாக கூறி அவள் இருக்கும் இடம் எங்கு என்று, கேட்டான்.

நிஷாவும் அவளின் அறை கூறி , அங்குள்ள அவள் உறவினரிடமும் பெற்றோரிடமும், தான் பேசி கொள்வதாகவும், யாரும் இதில் தலையிட கூடாது என்றும் கட்டளையிட்டாள் ...

கிஷோர் நிஷாவினை அவள் அறையில் கண்டவுடன், அவன் கண்களுக்கு யாரும் தெரியவில்லை . அவளின் சோர்வான முகமே கிஷோரின் கண்களுக்கு முதலில் பட்டது ...

நிஷாவின் அருகில் சென்றதும், நிஷா அவனின் கைகளில் பிடித்து அங்குள்ள மற்றொரு அறைக்கு அழைத்து சென்றாள் ...

அங்கு சென்றதும், நிஷாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு , அவளின் கைகளை அவனின் கண்களில் ஒற்றிக் கொண்டு கதறி அழுதான் ...

நிஷாவும் எதுவும் பேசவில்லை, கிஷோர் சொல்லட்டும் என்று அமைதி காத்தாள் .
"நிஷா சாரி சாரி "

அன்று லாஸ்ட் எக்ஸாம் என்று நீயம் உன் தோழிகளும் , ********* வந்த ஹோட்டலுக்கு தான் என் கிளைன்ட் உடன் நானும் ஒரு மீட்டிங்காக வந்தேன் ...

"நீ என்றும் இல்லாம உன் தோழி லீனா சொன்னானு, ஒரு போட்டிக்காக ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்ட"...

நானே வந்து தடுக்குறதுக்குள்ள , நீ பாதி பாட்டில் குடிச்சிட்ட , உன்னோட மற்ற தோழிகள் தடுத்து நிறுத்திட்டாங்க , ஆனாலும் நீ கொஞ்சம் மயக்கத்துல போய்ட்ட..."

உன் ஹாஸ்டல் ரொம்ப ஸ்டரிக்ட் வேற . ஆனா உன் மற்ற பிரெண்ட்ஸ் ஹாஸ்டல் கிளம்பிட்டாங்க ...

" லீனா வீட்டுக்கு போவேணு நீ உளறிட்டு இருந்த , சரி நீ லீனா வீட்டுக்கு போற வரைக்கும் நானும் உங்களுக்கு துணையா நீங்க போற வரைக்கும் இருக்கலானு அங்கேயே இருந்தேன் ... "

கிளைன்ட் கிளம்பனும் சொன்னாரு , அவருக்கு பார்க்கிங் ஏரியா போய் வழி அனுப்பி விட்டு வரதுக்குள்ள அங்க லீனா போதையின் தல்லாட்டத்தில் ஒரு கார்லா தனியா போய்ட்டா ...

நீ லீனாவுடன் இல்லையேன்னு உன்ன திரும்பியும் ஹோட்டல் வந்து பாத்தா அங்கேயே ஏதோ தனியா பேசிட்டு பாதி மயக்கத்துல இருந்த ...

உன்ன பல முறை எழுப்பி பாத்துட்டேன் , எங்க வீடும் ஒரே தெரு , ஹாஸ்டல்ல , வேல செய்றவங்க யாராவுது பார்த்தா என்ன செய்யறது ?"

அதான் அங்கயே ஒரு ரூம் எடுத்து உன்ன தங்க வைத்தேன் , என்று ஒரு வித பதற்றத்துடன் கூறி கொண்டிருந்தான் ...

நிஷா கிஷோரிடம் எதுவும் கூறாமல், கிஷோரையே பார்த்துக் கொண்டிருந்தாள் ...

கிஷோரால் அவளின் பார்வையின் சீற்றம் தாங்காமல் அவனின் தலை தன்னால் தாழ்ந்தது ...

மேல கூறு என்பது போன்று நிஷா அமைதியாக இருந்தாள் ... கிஷோர் அந்நாளுக்கு சென்றான் ...

அவனின் காதல் தெரிந்த தெரிய வந்த இனிமையான நாள் அல்லவோ அது ...

"அங்க நீ ஏதோ பேசுன மயக்கத்துல இருந்த , நான் நிஷா
நா- நான் உன்ன அப்பவும் எந்த தப்பான எண்ணத்துலயும் பார்க்கல . விடியும் வரை இங்க தங்கிட்டு, இனி கவனமா இருன்னு சொல்லிட்டு போய்டணும்னு நினைத்தேன் .
ஆனா நீ திடிர்னு

"உன்னோட காதல ! உனக்கு ஏன் மேல உள்ள காதல ,நீ, சொல்லிட்டிருந்த ...
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில ," டேய் கிஷோர்"
ஐ லவ் யு டா
ஐ லவ் யூ டா
ஏன் டா என் கண்ல பட்ட?
இன்னும் என்ன என்னவோ, சொன்ன
உன்னையும் மீறி நீ ரொம்ப அழுகை ஆரம்பிச்சுட்ட, எனக்கு ஒன்னும் புரியல

ஒரு பக்கம் உன் ஆழ் மனசுல இருக்குற காதல் , தெரிந்த மகிழ்ச்சின்னா இன்னொரு பக்கம் நீ வேதனையோடு அழுதது எனக்கு ரொம்ப வலித்தது .

என்ன விட்றாத கிஷோர் , நீ ஏன் மனசுல எப்போ வந்தேன்னு தெரியாது டா ,
உன்னோட அம்மா பாசம் எனக்கு வேணும் ,
உன்னோட உண்மையான அக்கறை எனக்கு பிடிச்சி இருக்கு டா , நான் தான் உன்ன கல்யாணம் கட்டிப்பேன் , நீ எனக்கு மட்டும் தான் , ஏன் என்னோட பேசுறது இல்ல , எனக்கு மனசு வலிக்குதுனு அழுத...

நீ ஏன் மேல எடுத்த உரிமை எனக்கு ரொம்ப சந்தோஷத்தை குடுத்தது நிஷா , திடிர்னு என்ன அடிச்ச, நான் எதிர் பாக்கல , ஏன் ஷர்ட் காலர பிடிச்சி இழுத்து கிஸ் குடுத்து ,
ஆனா அதற்கு பிறகு?
நிஷா ஐம் சாரி!

உன்னோட காதல் தெரிந்ததும் என்னால உன்ன விட முடில ,
நான்
கிஷோர், உமிழ் நீர் விழுங்கி
நான் எல்லை மீறிட்டேன் ,
என்று கிஷோர் அழுகையுடன் கூறி முடித்தான்...

விடிந்ததும் உனக்கு நான் நிலைய புரிய வைக்கணும் முடிவு எடுத்தேன் ...

எப்டியோ உனக்கு பக்குவமா இந்த விஷயத்த சொல்லிட்டு , பெரியவங்க சம்மதத்தோட சீக்கிரம் திருமணம் செய்யணும் , இப்டி எல்லாம் முடிவு எடுத்தேன்...

காலையில லீனா உனக்கு கால் செய்தாங்க .
அவங்க உன்ன விட்டுட்டு போனத சொல்லி , அவங்கள ஹோட்டல் ரூம்க்கு வர வச்சி, உன்ன லீனாவ கூட்டிட்டு போக சொன்னனே ...

அவங்க வீட்டுக்கு உன்ன அழைச்சிட்டு போக சொன்னனேன் ...
உன்ன நேர பாக்கவே எனக்கு ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருந்தது...

ஒரு பொண்ணு சுய நினைவில் இல்லாத நேரம் இப்டி னு , ஆனா நிஷா, உன் காதல் தெரிந்ததும் இனி ஒரு நிமிடமும் உன்ன பிரிய முடியல , என் காதல், காத்திருந்ததுக்கான பரிசு , நீ சொன்ன பதில் ...

எப்டியோ நானும் ,லீனாவும் உன்ன எழுப்பி நிக்க வைத்து வெளில கூட்டிட்டு வந்துட்டோம் , நீ அப்பவும் ஒரே சோர்வா இருந்த ... கார் பார்க்கிங் வரை நான் வந்தேன் ...

லீனாவிடம் அவங்க விட்டுட்டு போனதால ,ஒரு ரூம் உனக்கு எடுத்ததை மட்டும் சொன்னேன், லீனாவும் வேற எதுவும் என்ன கேட்கல , எனக்கு அதுவும் ஒரு வகை குற்ற உணர்ச்சி ஆயிடுச்சு நிஷா.

உன்னோட பிரெண்ட்ஸ் என்ன அந்த அளவுக்கு நம்பறதுக்கு காரணம் , நீ ஏன் மேல வைத்த நம்பிக்கை தானே ,

அந்த நம்பிக்கை பொய் ஆக்கிட்டேன் நிஷா, என்று கிஷோர் முகத்தில் அறைந்து கொண்டு அழுதான் ...

நானும் கொஞ்ச நேரத்துல என்னோட வீட்டுக்கு போய்ட்டேன் ...
லீனா போன் போட்டா, நீ இன்னும் தூங்குறதா சொன்னாங்க .

சரி வேலைக்கு போயிட்டு வந்து சந்திக்கலான்னு இருந்தேன் ...
நான் அன்று மாலை வேலை முடிந்து வந்தா , நீ ஊருக்கு போய்ட்டாத உன் பிரெண்ட்ஸ் சொன்னாங்க ...

ஒரு வழியா உன் அட்ரஸ் கேட்டு , உன்ன பாக்க இங்க வந்தா, உன்னோட அம்மா உன்ன பாக்கவே விடலே ... அப்போ தான் உன் வீட்டு வசதி எனக்கு தெரிந்தது...

நம்ம பொதுவா நிறைய பேசுனோம் , ஆனா குடும்ப விஷயம் எனக்கு எதுவும் தெரில...

உன்னோட அம்மா , இங்க வர வேல வச்சிக்காத,

உனக்கு கால் போட்டேன் , மெசேஜ் செஞ்சேன் , எதுக்கும் பதில் இல்லை ,
அதன் பிறகு உன் தோழி யாரும் என் போன் எடுக்கல . ஒரு 5 நிமிடம் மட்டும் உன்னோட பேசணும்னு நான் உன் பிரென்ட் லீனாவுக்கு மெசேஜ் பண்ண , அவங்களும் எனக்கு உதவுல ...

உனக்கு தெரியாம இந்த விஷயம் இருக்குறது, எனக்கு தினம் தினம் செத்து பிழைக்குறதா இருந்துது , உன்ன எப்படி அணுகுறதும் தெரில . எங்கயாவது உன்ன பாக்கமாட்டோமான்னு , இங்கயே ஒரு ஹோட்டல்ல ரூம்ல இருக்கேன் ...பொதுவா நீ மால் பார்க் அப்டி எங்கயாவது என் கண்ல தெரியமட்டியானு ரொம்ப ஏங்கினேன் ...
இதை பற்றி உன்னிடம் சொல்லாம , உன் அப்பா அம்மாகிட்ட நம் காதல சொல்றது எனக்கு சரியா படாதுனு தோணுச்சு , என்று அனைத்தும் கூறி முடித்தான் ...
என்ன நல்லா அடி நிஷா .

"ஏன் ஏதும் பேசமாட்ற்ற ?"
என்று நிஷாவின் கைகளை எடுத்து அவனின் கன்னங்களில் நன்றாக அறைந்து கொண்டான் ...
நிஷா கிஷோரிடம் இருந்து அவளின் கைகளை உருவி கொண்டாள்
தரையில் அமர்ந்து மௌனமாக கண்ணீர் வடித்தாள் ...

"ஹே நிஷா! ப்ளீஸ் மா , நான் தான தப்பு பண்னேன் , நானே இங்க எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் , இப்போவே கல்யாணம் செய்துக்கலாம் , வா !"
என்னால உன்ன பாக்காம இருக்க முடில , இல்ல எனக்கு எந்த தண்டனை வேணும்னாலும் நீ குடு நான் ஏற்று கொள்கிறேன் ", என்று பிதற்றினான் ...

அப்பொழுது தான் நிஷா அவளின் மௌனம் கலைத்து பேச ஆரம்பித்தாள் ...

"கிஷோர்! நீ மட்டும் தப்பு செஞ்சனு , நான் சொல்ல மாட்டேன் , நானும் தான் , முதல் தப்பு என்னோட சுய நினைவு இழக்குற அளவுக்கு , நான் மது குடித்ததது ,இரண்டாவது தப்பு உன்ன நம்பனது ,"

நிஷா ! கிஷோரின் கண்களில் மீண்டும் கண்ணீர் ,

" ஆமா உன் மேல எனக்கு எப்பவுமே நம்பிக்கை , ஆனா நீ?"

"போ கிஷோர்", என்று அழுதாள் நிஷா ...

"ஆனா நம்ம குழந்தை என்ன தப்பு செஞ்சுது கிஷோர் ?"
நிஷா!

"ஆமா இப்போ தான் எனக்கே தெரிஞ்சது , அன்று நடந்தது அப்பப்போ ஏதோ ஒரு நினைவா வரும் , உன்ன பற்றின சிந்தனையிலேயே இருக்குறதாலயோ என்னவோன்னு நினைச்சன் ...

"உனக்கு ஒன்னு தெரியுமா?"
இன்னிக்கு எனக்கு என் அத்தை மகனுடன் திருமணம் ,
இது கிஷோருக்கு அடுத்த அதிர்ச்சி ,

"எனக்கு இதுல பெருசா உடன்பாடில்ல , நீ என் மனசுல இருந்தா எப்படி ?"

"ஆனா பெரியவங்களுக்கு மரியாதை குடுத்து ஒத்துக்கிட்டேன் , நேற்று உன்ன பற்றி அதிக சிந்தனை , இனியும் என்னால முடியாதுனு தோணுச்சு , எதுனாலும் பரவ இல்ல , காலையில திருமணத்துக்கு சம்மதம் இல்லனு சொல்லிடணும்னு நினைச்சிட்டே இருந்தேன், என் அத்தை மகனுக்கும் இதுல விருப்பம் இல்ல , அவனும் ஏதோ கடனேனு தான் இந்த திருமணத்துல இருக்கான் ... அதுனால பெருசா ஏதும் பிரச்சனை வராதுன்னு இருந்தேன் ..".
கிஷோர் , அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

"அங்க ரூம்ல இருக்காங்களே , அவங்க முன்னாடி இனியும் ஒரு நிமிடம் கூட என் குழந்தை அவமான பட கூடாது"

" உடனே என்ன திருமணம் செய்யணும், என்று கட்டளையிட்டாள்" .
இன்னும் ஒன்று ,

" நம்ம அந்தரங்கம் யாருக்கும் சொல்றதுல எனக்கு விருப்பம் இல்ல , வெளில நான் என்ன சொல்றனோ அது மட்டும் நீ பண்ணு ," என்று அடுத்த கட்டளை ...
கிஷோர் அனைத்துக்கும் சம்மதம் கூறினான் ...

நிஷா , எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் எனக்காக செய் ப்ளீஸ் ,
என் ன என்று நிஷா பார்த்தாள், "இப்போ போட்டு இருக்க நகை எதுவும் இல்லாம வெறும் கட்டியிருக்க துணியோட நீ வந்த மட்டும் போதும்.
நீனு இல்ல, எனக்கு வர மனைவியிடம் வரதட்சனைனு எதுவும் வாங்க கூடாதுனு நான் ஒரு முடிவுல இருந்தேன்...

உன்ன பாக்க உங்க வீட்டுக்கு வந்த அப்போ உன்னோட அம்மா என்ன ரொம்ப கேவலமா பேசிட்டாங்க , பனகார பொண்ணு நட்பு, கிடைத்தா சொகுசா இருக்கலானு நினைச்சியா , அப்டிலாம் என்ன கேவல படுத்திட்டாங்க ...

அதான் , ப்ளீஸ் என்னோட முடிவுல இன்னும் உறுதியா இருக்கேன்...
சே! "இந்த அம்மா என் இப்டி செஞ்சாங்க? இவன் வந்ததும் எனக்கு சொல்லலியே ," என்று யோசித்தாள் நிஷா ...

நிஷா" சரி" என்று கூறினாள் , கிஷோர் "தேங்க்ஸ்" என்றான் ...
வேறு பேச்சு இருவருக்கும் அதன் பிறகு இல்லை.
இருவருக்கும் எதுவும் உடனேயே சரி ஆகாது என்று தெரியும் என்பதால், இருவரும் அமையிதியாக வெளியே வந்தனர் ...

ஸ்ரீ, அர்ஜுன், சிவநேசன் மற்றும் ஆதி இவர்கள் ஒரு புறம் இருக்க , நிஷாவின் பெற்றோர் , விஜெயன் லலிதா மற்றும் லீனா, திவ்யா , சந்தீப் என்று அந்த அறையே, நிஷாவின் சொந்தங்களில் நிரம்பி இருந்தது .
மற்ற சொந்த பந்தங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது, மண்டபத்தில் அமர்ந்து இருந்தனர்.சிவநேசனும் அனைவரையும் இருக்க சொல்லியிருந்தார் ...
ஆகையால் கிடைத்த விஷயத்தினை அவர் அவர் எண்ணங்களுக்கு ஏற்ப பேசிக்கொண்டிருந்தனர் ...

அர்ஜுன் மற்றும் சந்தீப் கிஷோரினை அடிக்க செல்ல , ஆதி அவர்கள் இருவரையும் தடுத்தான் ...
கிஷோர் நேராக சுந்தரத்தின் முன் சென்று நின்று, இரு கை கூப்பி மன்னிப்பு வேண்டினான் ...

"அங்கிள் , என் பெரு கிஷோர் "
************ வேலை செய்வதயும் கூறினான் , அவனின் படிப்பு , வேலை இவை அனைத்தும் கேட்ட உடன் , கிஷோர் மீது மற்றவர்கள் வைத்திருந்த ஏளன பார்வை மெச்சுதல் பார்வை ஆகா மாறியது ...

தன் வீட்டு பெண் மீது தவறில்லை , ஆனால் சூழ்நிலை ஒரு சூழலில் நிஷாவினை சிக்க வைத்துள்ளது என்று ஒரு பக்கம் வருந்தினார், இருப்பினும், கிஷோருடன் நிஷா வாழும் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் என்று ஒரு பக்கம் மகிழ்ந்தனர் , நிஷாவின் வாழ்க்கை மீது அக்கறை உள்ளவரகள் ...

அதுவரை ஏதோ சிலை போல் இருந்த பிரேமா, திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள முடியாது என்று கர்ஜித்தாள் ...

நிஷா , அவளின் அன்னை முன் சென்று , "சரி மா வேண்டனா நான் இப்டியே இருக்கேன்,

என் குழந்தைக்கு என்ன வழி மா?" என்று அவள் அன்னையிடம் கேட்டாள் ...

பிரேமாவிற்கே அதிர்ச்சி ," இது என்ன விஷயம் தெரிந்த உடனே தாய் பாசம் ?"என்று மறு கேள்வி நிஷாவிடம் கேட்டாள்...

பின்ன உன்ன மாதிரி இருக்க சொல்றியா , உனக்கு உன் கிளப் பிரெண்ட்ஸ் , சொசைட்டி இது தான் முக்கியம்,

என்ன எங்க கவனிக்க நேரம் .

ஆ னா எனக்கு ஒரு குழந்தை பொறந்தா எப்படி எல்லாம் வளக்கணும்னு நான் எவ்வளோவோ கற்பனை செய்வேன் தெரியுமா ... இது பெண்ணுக்கே உரிய குணம் தானே , ஆனா நீ அதுல டிஃபரென்ட் ...

ஒரு வகையில என்னோட இந்த நிலைமைக்கு நீயும் காரணம் தான் மா , கிஷோர் நம்ம அளவுக்கு வசதி இல்ல , ஆனா அவங்க அம்மா ரொம்ப ஸ்வீட் ...

எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது உன்ன விட அவங்களுக்கு தெரியும் ...

கிஷோர் ஏன் மேல உயிரே வச்சி இருக்காரு , எனக்கு அன்ப விட ஏதும் பெருசா தெரில மா , என் குழந்தையோட மதிப்பு இதுல அடங்கி இருக்கு , உனக்காக நான் இவரை திருமணம் செய்யாம இருக்கலாம் , ஆனா வேற யாரையும் திருமணம் இனியும் செய்யமாட்டேன் .

நீ என்ன நெனைக்கிரேனு எனக்கு தெரியும், அதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன் ...பிரேமாவிற்கு பெரும் அதிர்ச்சி ... அவரால் இதனை ஏற்று கொள்ள முடியவில்லை ...
யாரும் பிரேமாவின் பேச்சிற்கு மதிப்பளிக்காமல் நிஷாவை மணமேடைக்கு அழைத்து சென்றனர்.

அனைவரின் முன்பும் கிஷோர் தன் நண்பனின் மகன் என்று கிஷோரை அறிமுகம் செய்தார் சுந்தரம்.வேறு யாருக்கும் எதுவும் தெரியாது, பெரிய வீடு விஷயம் ஆயிரம் இருக்கும் என்று அனைவரும் அமைதி காத்தனர் ..

அங்கு எதற்கும் நேரம் இல்லை, அர்ச்சதை, மேல வாத்தியங்கள் , ஹ்ம்ம் எதுவும் இல்ல ...
நேராக சென்று, ஏற்கனவே திருமணத்திற்கு என்று வாங்கி இருந்த மாங்கல்யம் சுந்தரம் குடுத்தார் கிடோரிடம்...

நிஷாவின் கழுத்தில் கிஷோர் தாலி கட்டி சரி பாதியாக ஏற்று கொண்டான் ...
சிவநேசன் விஜயன் தம்பதியர், மற்றும் சுண்டரத் திடமும் ஆசிர்வாதம் வாங்கினான் ...
பிரேமா அறையில் இருந்து வெளியே வரவில்லை . அவருக்கு யாரின் முகமும் , பார்க்க பிடிக்க வில்லை ...

ஆதி கிஷோருக்கு வாழ்த்து கூறினான், அர்ஜுன் மற்றும் சந்திப்பும் வாழ்த்தினர்.

நிஷா லீனாவின் வாழ்த்தினை ஏற்று, இனி லீனாவை மது பழக்கம் நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுரை கூறினாள் ....ஸ்ரீ அவளின் அன்னை லலிதா , திவ்ய ஆகியோர் மற்ற வேலைகளை செய்து கொண்டிருந்தனர் ...

சுந்தரம் மற்றும் விஜயன் கிஷோரிடம் ஷோபனாவிற்கு அழைப்பு விடுத்து , நடந்து முடிந்த நிகழ்வுகள் பற்றி கூறி கொண்டிருந்தனர் ...



ஆதிக்கு எதில் இருந்தோ பெரிய விடுதலை , நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டு கொண்டான் , இது யார் கண்ணுக்கு தெரிய வில்லை என்றாலும், சிவநேசன் பார்த்து விட்டார்.

தந்தைக்கு தெரியாததா பிள்ளைகளை பற்றி , அனைவரும் ஆதி பற்றி பேச்சு எடுக்கும் போது , ஆதி அவ்விடம் இருக்க பிடிக்காமல் அவன் அறை சென்று அடைந்தான் ...

தந்தை தன்னை பார்ப்பதை தெரிந்து கொண்டான் , இவரை ரொம்ப படுத்துறோமே என்று ஒரு பக்கம் வேதனை அடைந்தான் ...

சிவநேசனும் ஆதி அறையில் அர்ஜூனுடன் நுழைந்தார். ஆதி தந்தை வந்ததும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்று கொண்டான்..
உட்கார ஆதி !

" நீ உடனே ரெடி ஆகு பா , இன்னும் அரை மணி நேரம் தான் முகுர்த்த நேரம் இருக்கு , உனக்கு கல்யாணம் செய்யணும்ல ,"
என்றார் , நான் உன்னை விட மாட்டேன் என்பது போன்று ...

அப்பா என்ன பா விளையாட்டு இது , அதுக்குள்ள என்ன இன்னொரு இக்கட்டுல தள்ள பாக்குறீங்க என்று மனதில் பயம் இருந்தாலும் வெளியே விளையாட்டாகவே கேட்டு
வைத்தான் ...

சீக்கிரம் ஆதி, விளையாட நேரம் இல்ல , நீயும் சின்ன பயன் இல்ல, என்று கண்டன குரலில் கூறினார் ...

அப்பா ப்ளீஸ்! "எனக்கு இனி மேரேஜ் பற்றி பேசாதீங்க என்று விரக்தியான குரலில் பேசினான் ...
இப்போ திடிர்னு உங்களுக்கு வானத்துல இருந்து அதுக்குள்ள எந்த மருமக குதிச்சிட்டானு சொல்லுங்க, நானே நேர்ல போய் எனக்கு திருமணத்துல விருப்பம் இல்லனு சொல்லிட்டு வரேன்" என்று நக்கலாக கூறினான் ...

அவனின் பேச்சினை அசட்டையாக்கி , அர்ஜுனிடம் வீட்டிற்கு சென்று பூரணியின் மாங்கல்யம் எடுத்து வருமாறு கூறினார் ...

அர்ஜுனிற்கு ஏதுவோ புரிவது போல் இருந்தது, உடனே இன்முகத்துடன், வீடு நோக்கி தன் அன்னையின் மாங்கல்யம் எடுத்து வர சென்றான் ...

அர்ஜுனிற்கு ஸ்ரீயிடம் சொல்வதற்கும் நேரம் இல்லை ...

மண்டபம் அங்கிருந்து பத்து நிமிட தூரம் என்பதால், சந்தீப்பிடம் அனைவரையும் கவனித்துக்கொள்ளுமாறு கூறி சென்றான் ...

ஆதிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை , கண்கள் இரண்டும் சிகப்பேறி , என் அம்மாவோட தாலி,வேற ஒரு பொண்ணு கழுத்துல ஏறதுக்கும் ஒரு தகுதி வேணும் அந்த தகுதி யாருக்கும் இல்ல" என்று கிட்ட தட்ட கர்ஜித்தான் ...
அபிக்கு இருக்கு ஆதி என்று சிவநேசன் மிகவும் நிதானமாக கூறினார்...

அப்பா!

என்று அவ்விடத்தை விட்டு எழுந்தே விட்டான் ஆதி , அவனின் கண்களில் நீர் , அவனுக்கு ஒன்றும் புரியவில்லை , ஓடி சென்று தன் தந்தையின் கால்களுக்கு அடியில் அமர்ந்தான் ...

நான் உன்னோட அப்பா ஆதி என்றார் சிவநேசன் ...


இவை எதுவும் நம் அபி மேடம்க்கு தெரியாது,விடியும் நேரம் , ஸ்ரீ திவ்யா மற்றும் அபி திருமணத்திற்கான வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது உறக்கத்தில் இருந்து ஆரவ் ஒரே அழுகை .

எப்பொழுதும் ஆரவுக்கு கூட்டம் என்றால் பயம் , அப்பொழுது மண்டபத்தின் வலது பக்கம் தெருவில் ஒரு கோவில் உள்ளதாகவும் , அபி நேற்று இரவு வரும் நேரம் பார்த்ததாகவும், அங்கு

ஆரவை அழைத்து செல்வதாகவும் கூறினாள் ...

ஸ்ரீயும் மற்ற வேலைகள் இருப்பதால் , ஆராவ் சமாதனம் செய்து சீக்கிரமே வந்து சேருமாறு கூறி அனுப்பினாள் ...

ஆகையால் அபி ஆரவ்க்கு தேவையான் பால் மற்றும் இதர பொருட்கள் யாவும் எடுத்துக் கொண்டு கோவில் சென்றாள் ...
விடிந்தும் விடியாத காலை பொழுது ஆரவ் மற்றும் அபி , இருவரும் மிகவும் ரசித்தனர்.

அங்கு கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது, அபி குழைந்துக்கு அங்குள்ள பறவைகள் , மற்றும் அங்குள்ள இயற்கை காட்சிகள் என்று ஒன்று ஒன்றாக வேடிக்கை காட்டி குழந்தைக்கு பால் ஊட்டினாள் ...

"டேய்! ஆரவ் கண்ணா இப்போ மேல சூரியன் கொஞ்சம் கொஞ்சமா வராரு பாரு," என்று ஒவ்வொவன்றும் , வேடிக்கை காட்டி குழந்தை உடன் விளையாடினாள் ...

சிறுது நேரத்தில் ஆரவும் இரவு சரியாக உறங்காதது, விடயலிலே எழுந்தது ,
என்று, உறங்கினான் ...

ஸ்ரீயும் நேரம் பார்த்தாள் , "இப்போ போனா சரியாய் இருக்கும் ," என்று மண்டபம் நோக்கி சென்றாள் ...

ஸ்ரீரியும் அப்பொழுது தான் மகனின் நினைவு வந்தது, அந்நேரம் சரியாக அபி குழந்தையுடன் ஸ்ரீ அறை சென்றாள் ...

ஏதோ மண்டபத்தின் சூழல் அபிக்கு வித்யாசமாக பட்டது, ஆனாலும் எதுவும் சிந்திக்காமல் குழந்தையை படுக்க வைத்து அந்த அறையிலே ஓர் இடத்தில அமர்ந்தாள் ...

ஸ்ரீயின் அறைக்கு சிவநேசன் நுழைந்தார், அபியிடம் பேச ...
cleardot.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top