என் இதய விழி நீயே - Episode 2

#1
என் இதய விழி நீயே

"ஓ மை காட் ", "இன்னும் எவ்ளோ தான் , எனக்கு மேக்கப் போடுவீங்க ?" என்று கத்தி கொண்டிருந்தாள் மணப்பெண் நிஷா . "மேடம் , உங்க அம்மா தான் போட சொன்னாங்க" , என்று கூறினர் , அங்குள்ள அழகு நிலைய பெண்கள் . "ஐ சே டு மாம் , யூ ஆல் ப்ளீஸ் கோ அவுட் !" என்று கத்தினாள் நிஷா."ஏய், என்னடி உன் குரல் வெளிய கேட்குது ?" என்று கேட்டு கொண்டு வந்தார் நிஷாவின் அன்னை , பிரேமா.

"மாம் , அந்த துர்வாச முனிவர்க்கு இந்த மேக்கப் போதும் , நானும் டெல்லில இருந்து இங்க வந்து ரெண்டு மாசம் ஆச்சு , இன்னும் மாப்பிளைய பாக்கல . அவனும் வந்து என்ன பாக்கல . அவன சின்ன வயசுல பாத்தது .
அப்பவே அவன் சரியான சிடு மூஞ்சி , இப்போ எப்படி இருக்கானோ , தெரில."... "அவன் ஒரு டாக்டர்னா யாரும் நம்ப மாட்டாங்க , எப்படி தான் அவன் ஹாஸ்பிடல , வைத்தியம் பாக்கிறானோ தெரில" , என்று புலம்பி தீர்த்து விட்டாள் நிஷா.

"உன்ன அவனுக்கு சும்மாவா கட்டி வைக்கிறேன் , பூரணி நகை , பூரணி (car show room, complex), எல்லாமும் ஏன் பொண்ணுக்கு வரணும் தான உன்ன கட்டி வைக்கிறேன் , பெரிய வீட்டு சம்மந்தினு , வெளில எனக்கு பேரு கிடைக்கணும்னுதான் நான் உன்ன அந்த வீட்டு மருமகளா அனுப்புறேன், " என்று மனதினில் நினைத்து கொண்டு ,வெளியே சிரித்து வைத்தாள் பிரேமா ...

******************************************************************************************

பூரணி குடும்பத்தின் சிறு அறிமுகம்

அன்னபூரணி ,பிறந்த வீடு ஓசூர் , தேவியின் பிறந்த வீடும் ஓசூர்,தான் . இருவரின் இல்லமும் ஒரே தெருவில் இருந்தது. இருவரும் ஒரே பள்ளி , ஒரே வகுப்பு , இருவரின் குணமும் ஒத்து சென்றதால் தோழிகள் ஆயினர் .
தேவி ஒரே மகள் . நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் ...

அன்னபூரணியின் பெற்றோர் , வசதி உள்ளவர்கள்.,, பல சரக்கு தொழில் செய்து வருகின்றனர்...

அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் , அன்னபூரணி உடன் பிறந்தவர்கள் , இரு சகோதர்கள் விஜயன் மற்றும் சுந்தரம் , அன்னபூரணி இளய மகள் ...
நாளடைவில் பூரணி குடும்பமும் தேவி குடும்பமும் நட்பாகியது .


அன்னபூரணி கல்வி நிறைவு பெரும் நேரம், மிகவும் வசதி படைத்த சிவநேசத்துடன் அன்னபூரணியின் திருமணம் நடந்தது ... பூரணியின் புகுந்த வீடு பெங்களூரு .

கல்லூரி படிப்பு நிறைவடைந்தவுடன் , தேவி ஒரு வருடம் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்...

அதன் பிறகு வேங்கடத்துடன் தேவி திருமணம் நடந்து, தேவி சென்னை வாசியானார் . திருமணத்தினால் இரு தோழிகளும் வெவ்வேறு திசையில் பயணம் செய்ய நேர்ந்தது . இருவரின் கணவன்மார்களும் தோழிகளின் நட்பிற்கு துணையாக நின்ற காரணத்தினால் , காலம் கடந்தும் இருவரின் நட்பு டொர்ந்தது ...

பூரணியின் மூத்த அண்ணன் விஜயனுக்கு, லலிதாவுடன் திருமணம் நடந்தது அவர்களுக்கு, நித்யா ஸ்ரீ என்னும் பெண் .

இரண்டாம் மகனான சுந்தரத்துக்கு பிரேமாவுடன் திருமணம் நடந்தது, அவர்களின் ஒரே மகள் தான் நிஷா .

விஜயன் மற்றும் சுந்தரம் அவர்கள் குடும்ப தொழில் எடுத்து நடத்தி வருகின்றனர் ...
லலிதா இருப்பதனை வைத்து திருப்தி படும் ரகம் என்றால் , பிரேமா பேராசை , கொண்டவள் ...


எப்பொழுதும் பிரேமாவுக்கு பூரணியின் பூகுந்த வீடு மீதும் , பூரணியின் நகைகள் மீதும் ஒரு கண் .

சொந்தம் விட்டு போக கூடாது என்று , பூரணியின் முதல் மகன் அர்ஜூனுடன் விஜயனின் மகள் நித்திய (நித்திய ஸ்ரீ ) ஸ்ரீக்கு திருமணம் என்றும்,

இரண்டாம் மகன் ஆதித்யாவிற்கு சுந்தரத்தின் மகள் நிஷா என்றும் அவர்களின் சிறு வயதிலேயே பேசி வைத்தனர் .


பூரணிக்கும் அவரின் சகோதர்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ....
நித்யா ஓசூரிலே படித்தாள் ...

நிஷா 12 ம் வகுப்பு வரை ஓசூரில் படித்து பிறகு கல்லூரி படிப்பிற்காக ஹாஸ்டல் சென்றாள்...


பொண்ணு வெளியூர்ல படிக்கிறானு பெருமையாக கூற வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களிடம் வாக்கு வாதம் செய்து, பிரேமாவினால் ஹாஸ்டல் அனுப்பப்பட்டாள் நிஷா.

நிஷா, கல்லூரி காலம் முடிந்து திருமணத்திற்கு இங்கு வர வைக்க பட்டாள்


நிஷா மிகவும் அழகானவள், எதார்த்தவாதி . பிரேமாவின் குணத்திற்கு நேர் எதிர்.

விஜயன் மற்றும் சுந்தரம் தொழிலினை விரிவு படுத்தி திறம் பட நடத்தி வருகின்றனர் .

அர்ஜுன் ( எம் . பி .ஏ) , தந்தையின் தொழில் எடுத்து நடத்தி வருகிறான் .
மூன்று வருடம் முன்பு தான் நித்திய ஸ்ரீயுடன் , அர்ஜுன் திருமணம் நடந்தது ,
அவர்களுக்கு ஆரவ் என்று இரண்டு வயது மகன் ...

ஆதி அமெரிக்காவில் மருத்துவம் பயின்று , பெங்களூரில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகிறான் ...
இப்பொழுது நிஷாவுடன் திருமணம் நடக்க உள்ளது ...

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes