என் இதய விழி நீயே-Episode 12

Advertisement

achuma

Well-Known Member
hi how are you all
next part potutaen sorry for delay
take care pls read n comments



என் இதய விழி நீயே

ஆதி அவனின் அறைக்கு செல்வதற்கு படிக்கட்டு ஏறும் இடத்தில் , உள்ள சிறிய அறையில் அபியின் இனிய குரல் கேட்டு அங்கு தேங்கினான்...
அவளின் குரலில் "இந்த வாயாடி குரல் கேட்க்குது , என்று அங்கேயே நின்று விட்டான் என்கிட்ட தான் வாய் திறக்கிறதில்ல ,"

அங்கு அவளின் பட்டாசு பேச்சினை ரசித்து நின்றான் ...
அபி அவர்களுடன் வம்பலத்து கொண்டிருந்ததை , கேட்க நேர்ந்தது ...
"நெட்டக்கொக்கா ....அடிப்பாவி! அப்போ மேடம் என்கிட்டே தான் பூனையா ...
மத்தவங்க கிட்ட எல்லாம் நல்லா பேசுறா ... உனக்கு இருக்குடி ,"
என்று மனதில் கருவி கொண்டான் ...

"இப்போ போனா அப்டியே ஆப் ஆகிடுவா ," என்று ஏதும் தெரியாது போல் அவ்விடம் விட்டு சென்றான் ...

அதன் பிறகு , அபி, ஸ்ரீ திவ்யா உடன் அங்கேயே , நேரத்தை கழித்தாள் ...
ஆதியும் அர்ஜுனிற்கு போன் போட்டு, சுந்தரம் அவர்களின் பயணம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டான் ...

மண்டபத்தில் சுந்தரம் , விஜயன் லலிதா பிரேமாவிடம் விடை பெற்று கொண்டு , நிஷா கிஷோர் தம்பதியை , அழைத்து டெல்லி புறப்பட்டனர்...

சுந்தரம் எவ்வளவோ பிரேமாவிடம் அவர்களுடன் டெல்லி வருமாறு கேட்டுவிட்டார் ...
சம்மந்தி தப்பா எதுவும் நினைத்து கொள்வார்கள் , என்றும் கூறினார் ...
சுந்தரத்தின் சம்மந்தி என்ற வார்த்தை பிரேமாவிற்கு கோவத்தினை கொடுத்தது ...

"யாருக்கு யாரு சம்மந்தி," என்று பிரேமாவால், மனதில் மட்டுமே புலம்ப முடிந்தது ...
நேரம் ஆகிய காரணத்தால் , அனைவரும் புறப்பட்டனர், பிரேமாவை தவிர்த்து ...

நிஷாவும் அதன் பிறகு, அவள் தாயிடம் பேசுவதற்கு விரும்பவில்லை , இந்த பொண்ணுக்கு அப்டி என்ன அம்மா மேல வெறுப்போ தெரில, என்று சுந்தரமும், நிஷாவை பற்றி மனதில், மட்டுமே புலம்ப முடிந்தது ...

கிஷோர் ஏதும் எடுத்து வரக்கூடாது என்று சொன்னதால், நிஷா ஏதும் வேண்டாம் என்று அவள் தந்தையிடம் கூறினாள் ...

நிஷாவின் பிடிவாதம் , தெரியும் என்பதால் , அனைவரும் அவளை வற்புறுத்தவில்லை ...

அர்ஜுன் மற்றும் சந்தீப், இருவரும், சுந்தரம் குடும்பத்தினருக்கு தேவையான விமான பயண சீட்டு ஏற்பாடு செய்து, அவர்களுடன் விமான நிலையம் வரை, சென்று வழி அனுப்பி வைத்தனர்...

சந்தீப் மருத்துவனாக நிஷாவிற்கு பல அறிவுரை கூறி அனுப்பிவைத்தான் ....
அங்கு சென்றதும், மகப்பேறு மருத்துவரை சந்திக்குமாறு கூறினான் ...

அவர்கள் புறப்பட்டதும் , இவர்களும் ஆதிக்கு அணைத்து தகவலையும் கூறி மண்டபத்தில் உள்ள மற்ற வேலைகளை முடிக்க சென்றனர் ...

அங்கு உள்ள மற்ற உறவினர் அனைவரையும் அர்ஜுன் தங்கி இருக்கும் அவனின் வீட்டிற்கு அழைத்து சென்றான் ...

அங்கு சென்று அனைவருக்கும், உணவு ஏற்பாடு செய்து, ஆதியின் வீட்டிற்கு தேவையான உணவுடன், இருவரும் வந்து சேர்ந்தனர் ...

அபியின் தயக்கம் புரிந்து அர்ஜுன் உறவினர்களை அவனின் இல்லத்திற்கு அழைத்து சென்றான் ...
அபி முதலில் இங்கு, இந்த சூழலுக்கு நன்றாக பொருந்தட்டும் என்று அபிக்காகவே இந்த முடிவினை எடுத்தனர் , வீட்டில் உள்ளவர்கள் ...

அர்ஜுன் மற்றும் சந்தீப் உணவுடன் ஆதியின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர் ...
ஆதியின் வீட்டில், திருமண விருந்தாக மதிய உணவு , சிறப்பாக அமைந்தது ...

ஸ்ரீ ஆதியை மற்றும் அபியை வற்புறுத்தி ஒருவருக்கு ஒருவர், உணவினை ஊட்டி விடுமாறு , வம்பிழுத்து கொண்டிருந்தாள் ....
ஆதிக்கு விருப்பம் இருந்தாலும் அபிக்காக , மறுத்து விட்டான் ...

சந்தீப் ஸ்ரீ அர்ஜுன், என்று இளைஞர் பட்டாலத்தின் கேலி கிண்டலுடன், ஆதி அபி, விருந்து இனிதே முடிந்தது...
சிவநேசனிற்கு , ஆதி அபி திருமணத்தால் , அவரின் மனம் அமைதி அடைந்தது...
இன்று , அவர் மகனின் கண்களில் இத்துணை நாள் இருந்த, வெறுமை நீங்கி, ஒரு மகிழ்ச்சி தெரிவதே அதற்க்கு காரணம் ....

விருந்து முடிந்ததும், அபி ஸ்ரீயின் கைகளையே ஒட்டி கொண்டு அவளுடனே சுற்றிக்கொண்டிருந்தாள் , ஆதியை தவிர்ப்பதற்கு , ஆதியும், அபியின் செயல் புரிந்து, இன்னும் எத்தனை நேரம் தான் பாப்போம், என்பது போன்று, அபியை விட்டு பிடித்தான் ...

நிஷா - கிஷோர்
விமானத்தில், லலிதாவின் தோளில் தலை வைத்து சாய்ந்து வரும் நிஷாவினையே கிஷோர் பார்த்துக்கொண்டிருக்கிறான் ...

அவனிடம் நிஷா ஒதுக்கம் காட்டுவது, கிஷோரால் நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது ...
வரவேற்பு நிகழ்ச்சியிலும் சரி, பெரியோர்களிடம் ஆசி வாங்கும் போதும் சரி , நிஷா கிஷோரின் கேள்விக்கு மட்டுமே, ஒரு வார்த்தையில் பதில் தந்து, வேறு ஏதும் பேசாமல் இருப்பது, கிஷோரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ...

இப்படி மனதிற்கு இனியவளின் ஒதுக்கத்திற்கு, தானே காரணம் என்று வருந்தினான் ...
அவளின் நம்பிக்கை உடைத்ததற்கு , இந்த தண்டனை, தனக்கு தேவையே என்று அவனிற்கு அவனே , வருத்தத்துடன், அவன் மனதை பக்குவ படுத்திக்கொண்டான் ...

நிஷா தன் தாயிடம் அனைத்தும் கண்டிப்பாக கூறுவாள் , என்று நன்கு தெரியும், தனக்காகவே வாழும் தன் தாயின் மனதையும் புண்படுத்தியதை நினைத்து, வெட்கினான் ...
மாலை ஆறு மணி போல் டெல்லி வந்து சேர்ந்தனர் ...
விமான நிலையத்தில் இருந்து ஒருமணி நேரம் பயணம் கிஷோரின் வீட்டிற்கு செல்வதற்கு ...
மண்டபத்திலேயே கிஷோர்-நிஷா திருமணம், மற்றும் நிஷாவின் குடும்பத்தார் , வருவது பற்றி கூறியதால் , ஷோபனாவும், நேரில் வந்ததும், விசாரிக்கலாம், என்று அவர்களின் வருகைக்காக காத்து இருந்தார்...

அவருக்கு நிஷா அவரின் மருமகளை வந்தது, மகிழ்ச்சியே, தன் ஒரே மகனின் திருமணத்தினை நேரில் காணமுடியாத வருத்தம் அவர்க்கு நிறையவே இருந்தது...
இருந்தும், அங்கு சூழ்நிலை என்ன என்று, அவர்கள் வந்த பின்னே தெரியும், என்று அவர்களின் வருகை நோக்கி எதிர்பார்த்து, இருந்தார் ...

நிஷாவையும், கிஷோரையும், ஆரத்தி எடுத்து, அனைவரிடமும் இன்முகத்துடன் வரவேற்று, வீட்டினுள் அழைத்து சென்றார் ஷோபனா...

அவரின் புன்னகை முகம், மென்மையாக பழகும், விதம், லலிதா மற்றும் அங்குள்ள நிஷாவின், பெரியத்தந்தை, தந்தைக்கு மிகவும், பிடித்துவிட்டது ...

நிஷா இங்கு நன்றாக இருப்பாள் , என்று மன நிம்மதி அடைந்தனர் ...

ஷோபனாவின், அன்பான பேச்சு , தன்மையாக பழகும் பாங்கு ,இவை அனைத்தும், நிஷா ஏன் இவர்கள் மீது அந்த அளவிற்கு பாசமாக இருக்கிறாள், என்று அனைவரும் தெரிந்து கொண்டனர் ...
வீட்டினுள் நுழைந்ததும், அனைவரும் வீட்டை பார்த்தனர், கூடம், சமையல் அறை , அதனை ஒட்டி , சிறிய உணவு உண்ணும் அறை , ஒரே ஒரு படுக்கை அறை , அவ்வளவே ...

வீட்டினுள் சென்றதும் நிஷா ஷோபனாவை இறுக்கி அணைத்து அழுது கரைந்தாள் ...
ஷோபனாவுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் , நிஷாவின் முதுகை வருடி கொடுத்து , அவளை ஆசுவாச படுத்தி அதன் பிறகு , அவளை அமைதி அடைய செய்தார் ...

பிறகு நிஷா அங்குள்ள ஒரு அறைக்கு ஷோபனாவை அழைத்து சென்று, அவளின் கர்பம் பற்றி கூறினாள் ...

போனில் இருவருக்கும் திருமணம் நடந்த தகவல் மட்டுமே கூற பட்டது...
ஷோபனாவுக்கு கிஷோர் இவ்வாறு செய்துள்ளான் , என்று அதிர்ச்சியே...

நிஷாவிடம் ஷோபனா இரு கை கூப்பி மன்னிப்பு வேண்டினார் ...
கிஷோர் அவன் அன்னையின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான் ...
கிஷோரை ஷோபனா அவர் கைகள் வலிக்கும் அளவிற்கு அடித்து விட்டார், அனால் இனி ஏதும் செய்வதற்கில்லையே, அவனிடம் இனி பேசுவதற்கில்லை, என்று அவனை பார்ப்பதே தவிர்த்தார் ...

பெற்று வளர்த்து , இந்த அளவிற்கு மகனை வளர்த்த ஒரு தாயால் மகனின் இச்செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது...

கிஷோருக்கு இதை விட தண்டனை வேறு என்ன இருக்க முடியும் ...

காதல் செய்யும் பெண் என்றாலும், அவள் நினைவு இன்றி இருக்கும் நேரும், இவ்வாறு ஒரு தவறு செய்தது அவரால் மன்னிக்க முடியவில்லை ...

அவரின் வளர்ப்பு மீது தவறாகி விட்டதே என்று மிகவும் வருந்தினார் ...
கூடத்தில் இருக்கும் அனைவரிடமும் சென்று, மனதார மன்னிப்பு வேண்டினார் ...

மேலும் நிஷாவை நன்றாக பார்த்துக்கொள்வதாக வாக்கு அளித்தார் ...

அனைவருக்கும் இரவு உணவு கொடுத்து ,
ஷோபனா லலிதாவுடன் அங்கு இருக்கும் ஒற்றை படுக்கை அறையில் நிஷா உடன் இருந்தனர் ...
உள்ளே இருந்த அறையில், நிஷாவிற்கு ஒரு இரவு உடை எடுத்து, ஷோபனா உடுத்துமாறு கூறினார் ,

உடைகள் ஏதும் இல்லை என்று போனில் கூறியதால் , ஷோபனா தற்போது தேவைக்கு ஏற்ற அளவிற்கு நிஷாவிற்கு உடைகள் வாங்கி வைத்தார் ...

லலிதாவிற்கு ஒரே ஆச்சிரியம் , எப்படி இந்த அளவிற்கு நிஷா ஷோபானாவுடன் ஒன்றி போனால் என்று...
திருமணம் முடிந்த பிறகு கூட அனைவரிடமும் புன்னகையுடன், பேசி சிரித்து அங்கிருந்து, இங்கு வந்து ஷோபனாவை கண்டதும், மனதில் உள்ள பாரத்தை இறக்கி உள்ளாள் ...

அவளின் மகிழ்ச்சி இங்கே இருக்கிறது, வேறு எங்கு நிஷாவினை இருக்க சொன்னாலும் அவளின் வாழ்வு அங்கு பொருந்தாது, இது தெய்வ செயல், என்று அவர் மனதிலே நினைத்து கொண்டார் ...
ஆண்கள் மூவரும் கூடத்தில் இருந்த நேரம், கிஷோர் நிஷாவின் தன்தையிடம், "அங்கிள் , என்ன மன்னிச்சிடுங்க ! நிஷா தான் ஏன் உயிர், அவளை நான் நல்ல பார்த்துப்பேன் !"

"இந்த இடம் எங்களது தான் ,ஐந்து வருடம் முன்ன தான் இடம் வாங்கினேன், அதிக தேவைகள் எனக்கும், அம்மாவிற்கும் இருந்தது இல்ல , அதான் வீடு எங்க ரெண்டு பேரு மட்டும் தான் , சின்னதா கட்டிட்டோம் ,"

" நிஷாவுக்கு தேவையான வசதி எல்லாம் நான் கண்டிப்பா என்னால முடிந்த வரை செய்து கொடுப்பேன் , இந்த சமுதாயத்துல மத்தவங்க முன்ன நல்லா வாழ்ந்து காட்டுவோம் ,"(மனதினில் நிஷாவின் அன்னை முன்பு ), என்று கூறினான் ...
கிஷோர் , இனி முடிந்த விஷயம் பேசறதால எதுவும் மாற போறதில்ல , நிஷா இந்தளவிற்கு எங்க யாரையும், உங்கள எதுவும் கேட்க கூடாது , சொல்லி இருக்கனா , உங்க இரண்டு பேரின் காதல் எங்களுக்கு புரியுது ...

நாங்களும் ஒன்னும் பிறவி பணக்காரங்க இல்ல பா , எங்க அப்பா ஒரு மளிகை கடை வைத்து ஆரம்பித்த தொழிலை தான், இப்போ நாங்க சூப்பர்மார்கெட் , லாவிற்கு கொண்டு வந்து இருக்கோம் ...

உழைப்பு இருக்கும் இடத்தில, கண்டிப்பா முன்னேற்றம் இருக்கும் பா, அதுல எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்ல ...

"நீங்க வாழ்க்கையில மேல வருவீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு ..."

"ஆனா , பொண்ண படிக்க அனுப்பனது எனக்கு பெருசா தெரில, இப்போ இவ்வளவு தூரம் , கட்டி கொடுக்கும் பொது தான் , ஒரு தகப்பனா என் மனசு கடந்து தவிக்குது ..."

"இனி பாத்துக்கோ பா," என்று அவனின் தோளில் தட்டி கொடுத்தார் ...

பிறகு அனைவரும் கிடைத்த இடத்தில ஓய்வு எடுக்க சென்றனர்...

அங்கு கூடத்தில் சுந்தரம், விஜயன் இருவரும் ஆளுக்கு ஒரு சோபாவில் படுத்து
கொண்டனர் ...

லலிதா மற்றும் ஷோபனா அங்கே சமையல் ஒட்டி இருந்து சிறு அறையில் இருவரும் கீழ போர்வை விரித்து படுத்து கொண்டனர் ...

குழந்தை வரும் மகிழ்ச்சி ஷோபனாவுக்கு இருந்தாலும், கிஷோரின் செயல், ஷோபனாவுக்கு வருத்தமே தந்தது ...

கிஷோர் அந்த அறையில் நுழைந்த நேரம், அவனின் முகத்தில் ஒரு தலையணை வீச பட்டது , அவனின் கால்களுக்கு அடியில் ஒரு போர்வை வீசப்பட்டது , அவன் எதிர்பார்த்ததே, "தேங்க்ஸ் !"என்று கூறி அமைதியாக, கீழே அந்த அறையின் ஓரத்தில் தரையில் போர்வை விரித்து, தலையணை போட்டு படுத்து கொண்டான் ...

நிஷா ஏதும் அவனிடம் பேசவில்லை ...

கிஷோர் சிறிது நேரம் கழித்து, நிஷா என்று மெதுவாக அழைத்தான் , நிஷா என்ன என்பது போல் பார்த்தாள் , இல்லை முறைத்தாள் , இந்த பார்வையே எனக்கு வரம் என்பது போல் , கிஷோர்,

"நாளைக்கு ஈவினிங் செக்கப்க்கு ஹாஸ்பிடல் போகலாம்" ,மேலும் , "உனக்கு உடம்பு ஏதாவது அனீஸியா இருந்த சொல்லு,"என்று கூறினான் ...
நிஷா அனைத்தையும் கேட்டு விட்டு "ம்," என்று மட்டும் கூறி படுத்து கொண்டாள் ...

இங்கு அபி ஆதியின் நிலை என்னவோ ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top