என் இதய விழி நீயே - Episode 1

Advertisement

achuma

Well-Known Member
என் இதய விழி நீயே


தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி...
தேவி கருமாரி
துணை நீயே மகமாயி ...
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக்கண்ணாலே
பார்த்தருள்வாய்
காலமெல்லாம்
காத்தருள்வாய் (தாயே)....

என்று பாடல் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஒலித்து கொண்டிருக்கும் காலை நேரம், அம்மனுக்கு மாலை சூட்டி, விளக்கேற்றி ,மனமுருக வேண்டி கொண்டிருக்கிறாள் அபி, என்னும் அபிராமி…

நினைவு தெரிந்த நாள் முதலாய் தன் அன்னையின் கை பிடித்து இக்கோவிலுக்கு வருகிறாள்…

அபியின் பெற்றோரின் இழப்பிற்கு பிறகு இக்கோவிலே அவளின் மன நிம்மதி என்றாகிற்று ;..

அபியின் அணைத்து இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ள கூடிய அவளின் ஒரே தோழி , கருமாரி அம்மனே…தினமும் காலையும் மாலையும் , கோவிலுக்கு வந்து விடுவாள்…
வழக்கமாக ஆலயத்திற்கு வரும் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும், அபியை தெரியும்…

அனைவரிடமும் அபி இன்முகத்துடன் பழகுவாள்… ஆகையால் அபி என்றால் அவ்வளவு பிடித்தம் அனைவர்க்கும்.

அபி மிகவும் தைரியமான பெண் , பெண்களின் சராசரி உயரம், கலையான முகம் ,கடல் போன்ற கண்கள், என்று பார்க்க மிகவும் அழகாக இருப்பாள்.
இடை தாண்டி நீண்டு தொங்கும் கருங்க்கூந்தல் ,மொத்தத்தில் இனிமையானவள்,அழகானவள்.


“அபிமா எப்போ வந்த?” என்று கேட்டுக்கொன்டே வந்தார் அம்புஜம் மாமி…

“இன்னிக்கி என்ன உன் பெரியம்மா உன்ன இவ்ளோ சீக்கிரம் ரிலீஸ் பண்ணிட்டா?” என்று அவர் அபியிடம் கேட்க , அவரிடம் ஒரு புன்னகை புரிந்து , “நீங்க விளக்கு போட்டுட்டு உங்க பூஜையை முடிச்சிட்டு வாங்க மாமி ,பேசலாம் “, என்று அவ்விடம் விட்டு அகன்றாள் அபி.

குழந்தைகள் அனைவரும் விளையாடுவதை வேடிக்கை பார்த்த படி ஒரு இடத்தில அமர்ந்தாள் .


அபி--வேங்கடம் தேவியின் அருமை புதல்வி.,

ராமமூர்த்தி, வேங்கடம் இருவரும் சகோதரர்கள்.,

ராமமூர்த்தியின் மனைவியின் பெயர் லீலாவதி,

இவர்களின் பிள்ளைகள் தினேஷ் மற்றும் அணு.

சென்னையில் அம்பத்தூரில், குடியிருக்கிறார்கள் ,சொந்த வீடு,
சகோதரர்கள் இருவரும் அரசு துறையில் ஒரே வேலையில் இருப்பவர்கள் , நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள்,

லீலாவதி மூத்த மருமகள், தான் வைத்தது தான் சட்டம்., என்னும் குணமுடையவள் , சுயநலம் பொறாமை ஆகிய கீழ் குணங்களின் மொத்த உருவம்…

தேவி அதற்கு நேர் எதிர், அமைதி, அனைவர்க்கும் உதவும் பண்பு, மன வலிமையை உடையவர்.
அவரின் இத்தகைய குணமே அக்குடும்பத்தை உயிர்ப்புடன் வைத்தது ….

தினேஷ் மற்றும் அணு லீலாவின், அணைத்து கெட்ட குணத்துடன் வளர்க்கப்பட்டனர்.

ராமமூர்த்தி பிள்ளைகளை கண்டித்தால் கூட , அவர்கள் குணம் மாறவில்லை.


ஆனால் அபி தேவியின் வளர்ப்பால் சிறந்த குணசாலியாகி உருவாக்க பட்டாள் ... அபியின் சிறிய வயதிலியே அனைத்து வீட்டு வேலைகளும் அவளுக்கு அத்துப்படி, இயற்கையிலேயே புத்திசாலி , நன்றாக படிப்பாள் …

தேவி மற்றும் வேங்கடம் அபியை பாசத்துடனும், கண்டிப்புடனும் வளர்தனர்... ராமமூர்த்திக்கு அபி என்றால் மிகவும் செல்லம் ... அபி 12 ம் தேர்வு முடித்து விடுமுறையில் இருக்கும் நேரம், அவளின் பெற்றோர் நண்பனின் வீட்டு விசேஷத்திற்கு ஆட்டோவில் சென்றனர்.அபிக்கு சிறிதாக ஜலதோஷம் இருந்ததால் அவள் செல்லவில்லை .

எதிரே குடி போதையில் வந்த லாரி டிரைவரால் , அபியின் பெற்றோர் வந்த ஆட்டோ விபத்துக்குள்ளாகியது .

அந்த இடத்திலேயே அபியின் பெற்றோர் இறந்தனர் …



அபியின் அழுகை பாறையும் உருகும் அளவிற்கு இருந்தது , சிறிது நாட்களில் அபி, தனக்குள்ளயே ஒடுங்க செய்தாள்.
அவ்வீட்டில் அபியிடம் பாசத்துடன் இருக்கும் ஒரே ஜீவன், அவளின் பெரிய தந்தை மட்டுமமே.

நாட்கள் செல்ல செல்ல ராம்மூர்த்தி தன் தம்பியின் மரணம் ,அபியின் துக்கம் , லீலாவின் அராஜகம் என்று மனதளவில் மிகவும் ஒடுங்கி விட்டார்.

அதன் விளைவு ,ஒரு கை கால் செயலிழந்து ஒரு அறைக்குள் அடங்கும் நிலை வந்தது.

பெற்ற பிள்ளைகள் கூட ராமமூர்த்தியின், அறைக்குள் வர யோசிப்பார்கள்,அபியே அவரை கவனித்துகொள்கிறாள் .பி.எஸ் சி (கணிதம்) முடித்து அடுத்து எம்.எஸ் சி. படிக்க விண்ணப்பம் பதிவு செய்து இருக்கிறாள்…

காலை அனைத்து வீட்டு வேலைகளும் முடித்து, கல்லூரி சென்று மாலை வீடு திரும்பி, மீண்டும் வீட்டு வேலை , இரவு உணவு , அதன் பிறகு அவளின் படிப்பு பெரிய தந்தையை கவனித்து கொள்வது, என்று ஒரு நாள் முழுதும் அபிக்கு நேரம் சரியாக இருக்கும்.

கல்லூரி மூன்றாம் ஆண்டு விடுமுறை என்பதால் இன்னும் சிறிது நேரம் கோவிலில் இருந்து விட்டு செல்வாள் . இன்றும் அது போலே விளக்கு ஏற்ற வந்தாள் .

அம்புஜம் மாமி பூஜையை முடித்து விட்டு அபி இருக்கும் இடம் நோக்கி வந்தார்.

“இப்போ சொல்லுடி அபி, என்ன விசேஷம் ?” அபி அவரிடம் புன்னகைக்க,
“அது எப்படி தான் லீலா ,கூட இருந்துட்டு, நீ சிரிக்கிறியோ, எனக்கு தெரியல” .

“உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு, நான் இந்த அம்மாவ வேண்டாத நாளே இல்ல” , என்று மனதில் உள்ள பாரத்தை இறக்கினார் மாமி.

“மாமி உங்களுக்கு அவங்கள எதாவுது கரிச்சி கொட்டணும் , இல்லனா உங்களுக்கு நாளே ஓடாது… “

“நீங்க எதுவும் என்ன நினைச்சி வருந்தாதிங்க மாமி, காலத்தோட போக்குல போய்க்கிட்டே இருக்கணும்..எனக்கு என் அம்மா சொன்ன பாடம் , இது தான்”...

நான் இரண்டு நாட்களுக்கு பெங்களூரு போறேன் மாமி.
பூரணி அத்தை பையனுக்கு நாளைக்கு காலையில கல்யாணம் …

இன்னிக்கி மதியம் போல கிளம்பணும் .

“வீட்ல எல்லா வேலையும் முடிச்சிட்டேன். அதான் நேரமே வந்துட்டேன்” .

“இது வரைக்கும் அவங்க வீட்ல நடந்த எந்த விசேஷத்துக்கும் நான் போகல , இது அவங்க கடைசி பையன் கல்யாணம் ,இப்போவும் போகலனா இனி அந்த பக்கம் போற வாய்ப்பு இல்ல…”

“சிவநேச மாமா நேர வந்து பத்திரிக்கை வச்சிட்டு போனாரு, அவரு அப்போவே அழைச்சிட்டு போறேன்னு சொன்னாரு , ஆனா பெரியம்மா புது இடத்தில எப்டினு, இப்போ அனுப்புறாங்க .”

“ஆமா , நீ அப்போவே போயிருந்தா வீட்டு வேலை எல்லாம் யார் பாக்குறது ?”

“அதான் மகராசி இப்போ அனுப்புறா, “என்று லீலாவின் எண்ணத்தினை சரியாக கணித்து கூறினார் மாமி .

“நீங்க நேரம் கிடைக்கும் போது ஒரு நடை வீட்டு பக்கம் வந்து பெரியப்பாவ பாத்துட்டு போங்க மாமி"…

நான் சனிக்கிழமை சாயங்காலம் இங்க வந்துடுவேன் “
“சரிடி, நீ பத்திரமா போயிட்டு வா.”

“இந்தா அபி, கழுத்துக்கு இந்த சங்கிலியாவது போட்டுக்கோ …“
என்று அவர் கழுத்தில் உள்ள தங்கம் மற்றும் முத்து கலந்த மாலையை எடுத்து கொடுத்தார் .
பதறிய அபி , “மாமி முதல நீங்க மாலையை உங்க கழுத்துல போட்டுக்கோங்க, எனக்கு ஏன் கழுத்துல இருக்குறதே போதும்,” என்று கூறினாள் அபி.

“ஹ்ம்ம் லீலா , உன்னோட அம்மா நகையாவது , உனக்கு குடுக்கலாம் ,”என்று சலித்துக் கொண்டார் . “இப்போயாச்சும் கேட்டு போட்டுக்கோ அபி ,”என்று கூறினார் மாமி …

வீட்டில் அம்மா நகை கேட்டால் வரும் பிரச்சனை பற்றி நன்கு அறிந்த அபி, எதுவும் கூறாமல் புன்னைகைத்து வைத்தாள் ..

”சரி மாமி ரொம்ப நேரம் ஆயிடுச்சு நான் வரேன்,” என்று கூறி விடை பெற்று வீடு நோக்கி சென்றாள்.

லீலா அபியை “,போனா போன இடம் ,.வந்தா வந்த இடம்,” என்று திட்டிக் கொண்டிருந்தார் , எப்பொழுதும் போல் அபி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், அனைவருக்கும் காலை உணவு கொடுத்து, ராமமூர்த்தி அறை நோக்கி சென்றாள் …

அவரை எழுப்பி அமர வைத்து, காலை வணக்கம் கூறி பிறகு அவரை சுத்தப்படுத்தி உணவு கொடுத்தாள். அதன் பிறகு வீல் சேரில் அமர வைத்து கூடத்திற்கு அழைத்து வந்தாள் அபி.

முந்தின இரவே சாதத்தில் நீர் ஊற்றி இருக்கும் பழைய சாதத்தில் சிறிது மோர் கலந்து உண்டு முடித்து, இரண்டு நாட்களுக்கு தேவயான உடைகள் எடுத்து வைத்தாள் .

”ஏய் அபி இந்தா, தினேஷு கறி எடுத்தான்.., நீ பிரியாணி செஞ்சிடு”
என்று அடுத்த வேலையை ஏவினாள் லீலா. சரி பெரியம்மா என்று கூறி ,பிரியாணி செய்து, வீட்டை சுத்தப்படுத்தி , மீண்டும் அனைத்து பாத்திரங்களை தேய்த்து வைத்து நிமிர, அபி கிளம்பும் நேரமும் வந்தது.

அபி அவளின் பயணத்திற்கான பையுடன் கூடத்திற்கு வந்து சேர லீலாவின் முகம் மாறிற்று, அதனை கண்ட அபிக்கு திக்கென்றானது.
லீலா,” நீ இப்போ போகணுமா? “ என்று கேட்டார்;

“பெரியம்மா ப்ளீஸ் … இப்போ மட்டும் போய்ட்டு வந்துடுறேன் , அவங்க இது வரைக்கும் வந்து அழைச்சிட்டு போன எந்த விசேஷத்துக்கும் போகல, கடைசியா அத்தை இறப்புக்கும் போகல”..
(சொல்லும் போதே அபியின் தொண்டை அடைத்தது)

”இதுக்கு மட்டும் போய்ட்டு வரேன் பெரியம்மா,” என்று அழுதாள் ...
“நான் அப்போ அனுப்புல , அதான, சொல்ல வர,” என்று சண்டைக்கு தயார் ஆனார் லீலா.

“எனக்கு உடம்பு முடியாம போய்டுச்சு , அதான் அப்போ உன்ன அனுப்ப முடில… சரி, ஊர் சுத்துறதுனா ரெடியா இருப்பியே.
ரெண்டு நாள்ல வந்து சேரு, “
என்று கடுப்புடன் சம்மதம் தெரிவித்தார் லீலா.

அபியின் முகத்தில் புன்னகை, ( தன் அன்னையின் உயிர் தோழி அல்லவா அன்னபூரணி )

இருவரின் நட்பிற்கு குடுக்கும் மரியாதையாக கருதி திருமணத்திற்கு செல்கிறாள் .
“நான் மாவு அரைச்சி வச்சிட்டேன் , பெரியம்மா… இரண்டு நாட்களுக்கு , கமலா அக்கா வந்து பெரியப்பாவ பாத்துப்பாங்க . நான் சொல்லிட்டேன்..”

அதே அந்த கமலா (நர்ஸ் ) “ நான் உதவிக்கு அழைச்சா மட்டும் வர மாட்டா , ஹ்ம்ம் இவ சரியான மாயக்காரி ,”
அக்கம் பக்கத்தில இருக்குறவங்க, இவ ஏதாவுது சொன்னா மட்டும் அப்டி உதவுறாங்க, என்று மனதிற்குள் அபியை திட்டி தீர்த்தார் லீலா.

“சரி சரி போய்த் தொலை,” என்று வழி அனுப்பி வைத்தார் .
அதன் பிறகு தன் பெரிய தந்தை , அக்கா , அண்ணன், என்று அனைவரிடமும் கூறி விடைபெற்றாள்...

ஒரு வழியாக வீட்டில் இருந்து நிம்மதியாக வெளியே வந்தாள் அபி.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏறி அவளின் இருக்கை எண்ணை சரி பார்த்து அமர்ந்தாள் .
தன் அன்னையின் பட்டன் போனில் இருந்து ரயிலில் வந்துகொண்டு இருக்கும் தகவலை சிவநேசனுக்கு தெரிவித்தாள் .

பெங்களூரில் அபிக்கு என்ன காத்துக் கொண்டிருக்கிறதோ..? அடுத்த பதிவில் பார்ப்போம்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என் இதய
விழி நீயே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top