என் இதய விழி நீயே 28 2

Advertisement

achuma

Well-Known Member
Hi friends i update next part
please keep on supporting
and thanks for all
for ur previous responds
take care



என் இதய விழி நீயே 28 2

எப்பொழுதும், பூரணியின் பெயரை சொல்லி காரியத்தை சாதித்து கொள்ளும், பிரேமாவிற்கு அபியின் இந்த மாற்றம் அதிர்ச்சி..

"இந்த மாதிரி பொறுக்கிய எல்லாம் என் அத்தை வேலைக்கே எடுத்து இருக்க மாட்டாங்க , என்றாள் பிரேமாவிடம் .."

" இங்க பாருங்க, உங்க பிரச்சனைய , அப்பறம் பேசுங்க, இப்போ , எனக்கு பதில் சொல்லுங்க , வெளில உங்க ஷோரூம், ஆஹா ஒஹ்ஹனு , சொல்லுறாங்கனு வந்தா , இங்க எதுவும் சரியில்லையே , இந்த அம்மா என்னனா , இந்த நாய்க்கு வக்காலத்து வாங்குது," என்று பிரேமாவையும் திட்டினார் ..

"ஆமா , இவன போலீஸ்ல புடிச்சி குடுங்க, என்று ஆளாளுக்கு , சன்டையிட்டனர் .
"போதுமா, உனக்கு இப்போ நிம்மதியா, கம்பெனி பேரே போச்சு ," என்று, வேறு வகையில் அபியை மடக்கினாள் பிரேமா..

"இப்போ இவங்க எல்லாரும் , இந்த ஷோரூமை தப்பா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க , எல்லாம் உன்னால தான்," என்று அபியால் தான் , இது போன்ற பெயர் கம்பெனிக்கு வந்து விட்டது, என்று சிவநேசனிடம் காண்பிப்பதற்கு , இவ்வாறு பேசினார் ..
அதற்கு தகுந்தாற் போல், அங்கு உள்ள கஸ்டமர்களும் , "நம்பி கடைக்கு வந்தா இந்த கன்றாவியா எல்லா வேலைக்கு வெச்சி இருக்காங்க," என்று அவரவர் , விருப்பமின்மையை தெரிய படுத்தினர் ..
ஆனால் அபி எதற்கும், மசிவதாக இல்லை ..

"இங்க பாருங்க, உங்க பொண்ண காலேஜ் போற இடத்தில இந்த மாதிரி பிரச்னையினா , படிக்க அனுப்பமா வீட்டுலயே வெச்சி இருப்பீங்களா ?".

"இல்ல வேளைக்கு போற இடத்தில இல்ல , எங்க வெளிய போனாலும், யாரவது இந்த மாதிரி ஆளுங்க இருக்க தான் செய்றாங்க , இதுக்கு எல்லாம் பயந்து , நம்ம பொண்ணுங்க தான், எதுலயும் சாதிக்க முடியாம, வீட்டுல அட பட்டு இருக்கனும்" ..

"இப்படி ஒரு பிரச்னைனா , காலில் இருக்கிற செருப்பை எடுத்து அவனை நாலு சாத்து சாத்தனும், சொல்லி நம்ம வீட்டு பொண்ணுக்கு பழக்கனுமே தவிர , இங்க போனதால தானே பிரச்சனை, இல்லை அந்த இடம் சரி இல்லனு, சொல்லிட்டு இருக்க கூடாது , அதை முதலில் தெரிஞ்சிக்கோங்க ," என்று "பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ்மெண்ட் வீக்" , என்ற நிலையில் கை கால்கள் வெட வெ டக்க அபி அங்கு உள்ளோரிடம் பேசி கொண்டிருந்தாள் ..

அதற்குள், சரண் ஆதிக்கு , தகவல் கூறியதால் ஆதியும் அங்கு வந்து சேர்ந்தான் ..
மற்றவர்களும், அபியின் கூற்றை ஏற்று, "ஆமா எங்க போனாலும் தான் சில பொறுக்கிங்க, இருக்காங்க, இந்த பொண்ணு சொல்றது போல , நம்ம போலீஸ்க்கு போன் செய்து வர சொல்லலாம் ," என்றனர் ..

பிரேமாவிற்கு, அனைத்தும் அவர் கை மீறி போகும் நிலை, அவனோ அடி வாங்கிய நிலையில் கீழே விழுந்து எழுந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான்..
பிரேமாவின் மற்ற ஆட்களும், இப்போ ஏதும் செய்ய முடியாமல் முழித்து கொண்டிருந்தனர் ..

அபியின் தைரியமா பேச்சை கேட்டு ஆதி அங்கு வெளியே நின்று கேட்டு கொண்டிருந்தான் , பிறகு தான் அவளின் முகத்தில் வழிந்த வியர்வையில் , அவளின் பயம் அவனுக்கு தெரிய வந்தது ..
சூர புலி , நடுங்கி நிக்கிது பாரு , என்று செல்லமாக அவளை நினைத்து கொண்டே ,அவளின் அருகில் சென்று , அவனே போலீஸ்க்கு அழைத்து தகவல் கொடுத்தான் ..
ஆதியை கண்டதும், அவளின் பயம் எல்லாம் எங்கோ சென்றது , அவனும் அவளின் கைகளில்

அழுத்தம் கொடுத்து , கண் மூடி திறந்தான் , தைரியம் அளிக்கும் பொருட்டு ..
போலீசும் வந்து, அவனை அழைத்து சென்றனர் ..
பிரேமாவின் கண்ணசைவில் அவனும் சரி என்று போலீசுடன் சென்றான் ..

கஸ்டமரிடம் , ஆதியே நடந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான் ..

பிரேமாவின் பார்வையில் அவளின் மற்ற ஆட்கள் அங்கு இருந்து அமைதியாக யாருக்கும் தெரியா வண்ணம் வெளியேறினர் ..

"ஆதி," பிரேமா அழைத்ததும், "இது எல்லாம் என்ன அத்தை , இவ்வளவு நாள் எப்படி இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் உள்ள இருந்து இருக்காங்க , சரியாய் நீங்க கவனிக்கல ," என்று ஆதியே முதலில் பிரேமாவை பார்த்து கேட்டான் ..

"இவ வந்ததில் இருந்து இப்படினு, சொல்லாம் பார்த்தா இவன் நம்மையே மடக்குறானே," என்று பிரேமா தான் முழித்து கொண்டிருந்தாள் ..

அவனின் அதிருப்தியான முக திருப்பலில், பிரேமாவிற்கு தான் அவமானாக போயிற்று ..
அபியை முறைத்தாள் யாரும் கவனிக்க வண்ணம் , அபி ஆதி இருக்கும் தைரியத்தில், அவளின் ஒரு புருவத்தை ஏற்றி இறக்கி , என்ன என்று கேட்டாள் , நக்கலாக ..

ஆதி அங்கு எம் டீ அறைக்குள் சென்றதும், "அசிங்கமா இல்லை , ஒரு பொண்ணுக்கு ஒரு ஆபத்துனு, வருது, அது தட்டி கேட்காம , கண்ட கண்ட ஜந்துக்கெல்லாம் பரிஞ்சி பேசுறீங்க?"

" இந்த இடத்திலேயே நீங்க ஒரு பொண்ணா தோற்று போய்ட்டிங்க , இதுல இந்த கம்பெனி நீங்க உங்களை நம்பி, கம்பெனி பொறுப்புக்கள கொடுத்து இருக்காங்க" ..
நீங்க என்ன சாதிச்சி என்ன பண்ண போறீங்க , நல்ல பண்பு இல்லாமல் என்ன சாதிச்சும், எதுவும் பிரயோஜனம் இல்லை" ..

"முதலில் நல்ல மனசும் மனிதாபிமானமும் இருக்கனும்" ..
"நியாயத்துக்கு கட்டு பட்டு இருங்க , கிடைக்க வேண்டியது தானாகவே கிடைக்கும்" ..


"சும்மா அத்தை பேரு இந்த நாய்களுக்கு எல்லாம் இனி யூஸ் பன்னுனீங்க," என்று பிரேமாவின் முன் விரல் நீட்டி எச்சரித்தாள்..
அத்தை ஒருத்தர் முகத்தை பார்த்தாலே , எப்படினு தெரிஞ்சிப்பாங்க , இந்த ஆளுங்க எல்லாம் அவங்க எடுத்தே இருக்க மாட்டாங்க , அவங்க வேலைக்கு வைத்த ஆளுங்களும் இவங்க இல்லை .."

என்ன, பிரேமாவிற்கு இன்னும் இவளுக்கு என்ன எல்லாம் தெரிந்துள்ளதோ என்று பார்த்தார் .
நீங்க வெச்ச ஆளா , என்று அவளிடமே கேட்டாள் , இல்ல இல்லை பிரேமா தடுமாறினாள் ..

அபியின் முன்பு இப்படி பதில் அளிப்பது , பிரேமாவிற்கு , அப்படி ஒரு மன உளைச்சல் கொடுத்தது ..

அவங்க இங்க வேலை பார்க்கணும்னு, ஏன் அப்படி ஆள பறக்கறீங்க , இவனுங்க எல்லாம் பிராட் , என்ன பன்னமோ, நான் பார்த்துகிறேன் , சும்மா ஏதாவது என்னை டென்ஷன் பன்னிட்டு இருக்காதீங்க .."

"முதலில், உங்களை நம்பி பார்த்துக்க கொடுத்தவர்களுக்கு நீங்க விசுவாசமா இருங்க ," பிரேமாவிற்கு, பேச்சே இல்லை , அபியை பார்த்து இவர் கூறிய வார்த்தை ..
அங்கு இருக்க பிடிக்காமல் , ஆதியை பார்க்க சென்றாள் ..



ஆதி தலை பிடித்து அமர்ந்து இருந்தான் , இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எங்க அம்மா இருந்த இடத்தில, எப்படி , அவங்க இருந்த இந்த கம்பெனி புனிதத்தையே கெடுத்துட்டாங்க, அபி" ..
"ரிலாக்ஸ் ஆதி , என்னனு நாம்ம பார்க்கணும், "

"இந்த அத்தைக்கு, என்ன பிரெச்சனைனு , தெரியலையே, ஏன் இப்படி, ஏதோ தப்பு இருக்கு, அவங்க கிட்ட ," என்று அவனும் குழப்பத்தில் புலம்பிக்கொண்டிருந்தான் ..

"இப்படி பலதும் , யோசிச்சிட்டே இருந்தீங்கனா, எதுக்கும், பதில் கிடைக்காது , எப்படி வந்தீங்க , திடீர்னு," என்று அபியே பேச்சை மாற்றினாள் ..

"ஹ்ம், நல்ல நாளு , நீ எம் டீ சீட்ல இன்னைக்கு இருக்கணும்னு, வீட்டுல எல்லாரும் சொன்னாங்க , எல்லாருமே பிஸி ,உங்க மாமாவையும் கோவிலுக்கு அனுப்பிட்ட , சரி நான் இந்த மொமெண்ட் , உன்கூட இருக்கணும்னு , இங்க வர தான் ரெடியா கிளம்பிட்டு இருந்தேன், அதற்குள்ளே, சரண் , போன் , இங்க பிரச்சனைனு" ..

"வெல்கம் எம் டீ மேடம், ப்ளீஸ் சீட் ," என்று இடுப்பு வரை தலை குனிந்து, அபிக்கு, ஒரு சலாம் போட்டு , அவளை தோல் பற்றி எம் டீ சீட்டில் அமர வைத்தான் ..
மேடம் பெரிய ஆளு ஆயிட்டிங்க , என்று அவளை கிண்டல் அடித்து கொண்டிருந்தான் ..
அவனின் கிண்டலில், அபியும், வெட்க பட்டு உடனே பேச்சை மாற்றினாள் ..

"ஐயோ போதும், நான் அந்த ஆளுங்கள எல்லாம் இன்னைக்கு உங்களுக்கு காட்டணும்னு , பார்த்தேன், நீங்க வந்ததும், அவங்க வெளியே போய்ட்டாங்க ஆதி ,"

" அநேகமா, என்னோட கெஸ் படி பார்த்தா , இன்னைக்கு, எந்த வண்டியும், ரிப்பேர் பண்ண மாட்டாங்க ,ஆண்ட்டி , யாருக்கும் தெரியாம , அவங்கள வெளியே அனுப்பிட்டதா நெனச்சிட்டு இருக்காங்க , பட் அத சரண் பார்த்து எனக்கு சொன்னாரு" ..

"இந்த சர்விஸ்க்கு, வந்து இருக்கிற வண்டி எல்லாம், மற்ற ஒர்க்கேர்ஸ் கிட்ட கொடுக்க சொல்லிடு, நாளைல இருந்து , இவங்க யாரும் இங்க இருக்க கூடாது"..
அபியும், மற்ற வேலைகள் அனைத்தும் பார்க்க சென்று வந்தாள் , இன்னும் பிரேமா அங்கேயே நிற்பதை பார்த்து , அபியும் ஏதும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றாள், சரண் சார் , இந்த வண்டி எல்லாம் பிரபு அண்ட் செந்தில் சார் டீம் கிட்ட கொடுத்து சர்வீஸ் பண்ண சொல்லுங்க."

"நாளைக்குள்ள எல்லாம் முடிஞ்சி இருக்கனும் , நீங்க கொஞ்சம் பார்த்துக்கங்க ," என்றாள்..
அவள் கூறி அறைக்கு சென்று விட்டாள் , கண்ணாடி தடுப்பு வழியாக அபி எம் டீ , சீட்டில் அமர்ந்தது, பிரேமாவை உயிரோடு நெஞ்சில் சுரீர் என்ற ஒரு வலியை கொடுத்தது ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top