என் இதய விழி நீயே 26

Advertisement

achuma

Well-Known Member
hi i put next epi friends
wear mask be safe
take care all:love::)(y)

thanks for all supports
keep on supporting
:):love:(y)

என் இதய விழி நீயே


அபி ஏதாவது ஒன்று தெரிந்தே முடிவெடுத்து செயலாக்குவதும், பிறகு பிரேமாவிடம் திட்டுவாங்குவதும், என்று இப்படியே நாட்கள் சென்றது ..
நிஷாவிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவதும் உண்டு அபி.
அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, பிரேமாவை பற்றி ஏதும் நிஷாவிடம் கூறுவதில்லை அபி ..

சரண் மற்றும் அங்கு பணிபுரியும் , சீனியர்கள் மூலமாக , அங்கு இருக்கும் சில நரிகள் , பூரணி வைத்த ஆட்கள் இல்லை என்று தெரிந்து கொண்டாள் ..
ஆனால் பிரேமா தான் அவர்களை வேலைக்கு வைத்தார்கள் என்று உறுதி அளிக்கும் அளவிற்கு எந்த ஆதாரமும் இல்லை அபியிடம்..

அதன் காரணம் கொண்டே , அவர்களை ஏதேனும் சில சிக்கலில் மாட்டிவிட்டு, வாடிக்கையாளர்களிடமும், மற்ற பணியாளர்களிடமும் , திட்டு வாங்க வைப்பது , என்று அவளின் பொழுது சென்றது .
இந்த விஷயத்தை அவர்கள் பிரேமாவிடம், கொண்டு சென்றாலும், ஒன்று முடியாத நிலையில் முழி பிதுங்கி இருந்தனர் அவர்கள்.

ஏன்னென்றால் , எங்கு பிரேமா இருப்பாளோ, அந்த கிளையில் அபி இருக்க மாட்டாள் . அவள் இல்லாத மற்றொரு கிளையில் உள்ளவர்களை ஒரு வழி ஆக்கி கொண்டிருப்பாள்..

இவள் தெரிந்து செய்கிறாளா , அல்லது விவரம் இல்லையா என்று அவர்கள் தான் , விதியே என்று நொந்து கொண்டனர் ..

அன்றும் அப்படி தான் குமார் , மற்றொரு வாடிக்கையாளரிடம், முன்பு ஒரு முறை அபியை சிக்க வைத்த அதே யுக்தியை கையாண்டார் ..

அபியும் இவர் எவ்வளவு தூரத்திற்கு செல்கிறார் என்று அவன் போக்கிலேயே சென்றாள் ..

ஒரு வாரம் கழித்து , அந்த வாடிக்கையாளர், வண்டி வாங்குவதற்கு வரும் போது , அபியை மாட்டி விட்டார்..

இல்லாத வண்டிக்கு அபி ஆர்டர் எடுத்ததாக , கூறினார் .
அந்த கஸ்டமரும், அபியை திட்ட வாய் எடுத்ததும், அபியே "சார்! வெயிட் பண்ணுங்க, போயும் போயும் இவர் சொல்லுறாருனு, நம்புறீங்க, சும்மா சீனியருன்னு இவர் இப்படி தான் ஏதாவது உளறுவாரு , அவருக்கு ஆனா எதுவும் தெரியாது ,நான் தான் இங்கு ஓனர் ," என்று அனைவரின் முன்பும், லோடு , அனுப்பும் கிளைக்கு அழைத்து, வண்டி வந்து விட்டதாகவும், அதனை பெற்றுக்கொண்டு செல்லுமாறும் கூறினாள் ..
குமார் தான் ஒன்றும் புரியாமல் , முழித்து நின்றான் ..

நம்ம தான் வண்டி அனுப்ப கூடாதுனு அவன் கிட்ட சொல்லி இருந்தோமே , எப்படி என்று யோசித்து கொண்டிருந்தான் ..
கஸ்டமரும், மகிழ்ச்சியுடன் வண்டி பெற்றுக்கொண்டார் ..
அபி , "வேற ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க சீனியர்ர்ர்ர்," என்று இழுத்து சொல்லி விட்டு சென்றாள் ..

குமாருக்கு தான் ரத்தழுத்தம் ஏறியது அபியின் நக்கலான பேச்சில், எப்படி என்றே யோசித்து கொண்டிருந்தான் ..
விஷயம் ஸ்ரீயின் காதுக்கு சென்றது , அவளும் எப்படி என்று கேட்டாள் ..
தான் ஆதியிடம் , டீலர் பற்றி கூறியதாகவும், அவரும் சந்தீப்பும் சென்று அவனிற்கு கொடுத்த மரியாதையில் , இனி கம்பெனிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பதாக கூறியதாகவும் கூறினாள் ..

அவ்வாறு இல்லை எனில் , அவனின் வியாபாரம் வெளி மக்களுக்கும், அவனின் மேலதிகாரிக்கும் தெரிய படும் என்று மிரட்டியதாக கூறினாள் ..
விஜயனிடம் பிரேமா ஒரு கிராமத்திற்கு சேவை செய்வதற்கு கிளம்புவதாக கூறினாள் , அதற்கு பணமும் அவரிடம் கேட்டாள் .
எப்பொழுதும், அவளின் உற்படாத தோழிகளோடு சேர்ந்து, எங்கேனும், வெளி மாநிலங்களுக்கு சுருள செல்வது வழக்கம், அங்கு போய் , குடிப்பது , தோழிகளோடு, பெருமைக்காகவே வேண்டியது வாங்குவது , என்று சேவை என்ற பெயரில் பணம் செலவாகும் ..

அப்படி தான் கம்பெனியில் அபியால் குழப்பம் என்றாலும், தோழிகளின் வருபுறுத்தலின் பெயரில் கோவா செல்வது என்று உறுதியாயிற்று ..

எப்பொழுதும் பணத்தை எண்ணாமல் மனைவியின் சேவை குணத்தில் பெருமை கொண்டு பணம் கொடுக்கும் விஜயன் , அன்று முடியாது என்று கூறிவிட்டார் ..
பிரேமாவிற்கு அதிர்ச்சி கணவரின் திடீர் மாற்றத்தில்..

"இங்க பாரு பிரேமா, முதலில் , வீட்டிற்கு, என்ன செய்யணுமோ, அதை பாரு, வீட்டுக்கு உன்னோடு கடமையை ஒழுங்கா செய்யு , அப்பறம் நாட்டுக்கு பாரு," என்று சிடுசிடுத்தார் ..
மகள் தாய் வீட்டுக்கு வர மறுத்து விட்டாளே என்ற கவலை அவரை இவ்வாறு பேச செய்தது ..

"இப்போ என்ன நான் வீட்டை பார்ககல, வீடு வேல எல்லாத்துக்கும் ஆட்கள் இருக்காங்க, என் மனா நிம்மதிக்கு நான் இப்படி சேவைன்னு செய்யறது , உங்களுக்கு பொருக்கல", என்று பிரேமாவும் கேட்டார் ..

"உன் பொண்ணுக்கு, செய்யாம , ஊருக்கு செய்யறது தான் உனக்கு மனசு நிம்மதி ஆகுமா, என் பொண்ணு இங்க வந்துட்டு போகணும் , அவ நல்ல படியா குழந்தை பெற்று இங்கு இருந்து பார்த்து அனுப்பனும் , அதுல தான் எனக்கு மன நிம்மதி , அது புரியுதா உனக்கு ," என்றார்..

ஆமா , வந்ததுல இருந்து உங்க பொண்ணு புராணமே உங்களுக்கு பெருசு, அவ புள்ளை பெத்த என்ன பெத்துக்களனா , என்ன,"
"பிரேமா!" விஜயன் அடிக்க கையோங்கியதில், பிரேமா இரண்டடி பின்னால் சென்றாள் ..

ஒரு தாயிடம் இருந்து இந்த வார்த்தை வரலாமா , என்று விஜயனுக்கு மனம் அமைதியில் இல்லை , இந்த வயசுல , நம்ம உறவு முறியக்கூடாதேன்னு பார்க்கிறேன், ஏன்ற கர்ஜனையுடன், சென்றார்.

பிரேமாவிற்கு பயத்தில் உடல் நடுங்கியது, அவள் கணவரின் வார்த்தையே காதில் ரீங்கமிட்டது ..
அன்று சிடுசிடுப்புடனே வேலையில் இருந்தாள் ..
அவளின் தோழிக்கு அழைத்து, கம்பெனிக்கு வந்து அவளிடம் காசு பெற்றுக்கொள்ளுமாறு கூறினாள் , செலவிற்கு, மற்றும் அவளின் பெருமைக்கு ..

அனைவரும் ஒரு பங்கு என்று அவரவர் வீட்டினில் ஏதேனும் பொய்யுரைத்து , பணம் எடுத்து செலவு செய்வது இவளின் தோழி கூட்டத்திற்கு கை வந்த கலை .

அன்றும், அப்படி தான் பிரேமாவை பார்க்க அவள் தோழி வந்து சில பல, புகழாரம் சூட்டி, அவளின் பங்கு பணத்தை பிரேமாவிடம் கேட்க வந்தாள் ..
கேஷியரிடம் பணம் கொடுக்குமாறு பிரேமா கூறியதற்கு , "அபி மேடம் அவரின் அனுமதி இல்லாமல், பணம் கொடுக்க கூடாது," என்று கூறியதாக கூறினார் ..

சினிமாவில் வருவது போன்று,ஒரு நிமிடம் உலகம் அப்படியே உரைந்த நிலையில் பிரேமா ..
அபிக்கு அழைத்து உடனே அவள் இருந்த கிளைக்கு வருமாறு கூறினாள் , பிரேமா .
என்னவென்ற குழப்பத்தில் அபியும் சென்றாள் .

"என்ன ஆண்ட்டி?"
"இவர் சொல்றது எல்லாம் என்ன? காசு எடுக்க கூடாதா , உன்னை கேட்காம," என்று அவளிடம் சீறீனாள்.
அறையில் இல்லாமல், அனைவரும் வந்து செல்லும் இடத்தில் , அதுவும் பிரேமாவின் தோழி என்று அபிக்கு தெரியாது, அவரும் ஒரு கஸ்டமர் என்று , அபி நினைத்து கொண்டிருந்தாள், இவர் அனைவர் முன்பும் பிரேமா இப்படி கோபத்துடன் கேட்பது, அபிக்கும் கோவம்..

ஆதி சொல்லியது நினைவு வந்தது , யாரேனும் அபியை மட்டம் தட்டினாலோ , அல்லது கேள்வி கேட்டாலோ அனைவர் முன்பும் அபியின் தகுதி , அவள் தான் கம்பெனியின் முதலாளி என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றான் அபியிடம் ..

"இங்க பாருங்க ஆண்ட்டி , எதற்கு இவ்வளவு கோவம், தேவையான காரணம், அப்படி இல்லைனா கம்பெனிக்கான நியமான செலவு இதற்கு எல்லாம், மட்டும் தான் பணம் கொடுக்கணும்னு நான் தான் சொன்னேன், இதில் என்ன தவறு," என்று நிதானமாக கேட்டாள்.

"இது எல்லாம் நீ ஏன் கேட்கிற?" என்று பிரேமா சுற்றம் மறந்து அபியை கேட்டார் , அவ்வளவு கோவத்தில் அவர் இருந்தார்.

"ஏன்னா , இது என்ன கேள்வி ,நான் தான முதலாளி , அப்போ நான் கேட்காம வேற யாரு கேட்கனும் "..

"என்ன, பிரேமா அப்போ நீ இல்லையா இந்த ஷோரூம் ஓனர்?"
அப்பொழுது தான் பிரேமாவிற்கும், அவளின் தோழி முன்பு இப்படி பேசியது உரைத்தது , என்ன கூறுவது என்று, முழித்து கொண்டிருந்தாள் ..

அபியும், "ஒஹ் இவங்களுக்கு தெரிந்தவர்களா," என்று பார்த்து
வாங்க ஆண்ட்டி என்று இருவரை அறைக்கு அழைத்து சென்றாள் ..
சாவி கொடுத்த பொம்மை போல் பிரேமா சென்றாள் .

"விஜயன் சார் , அவங்க தங்கை பாசத்துல இந்த ஷோரூம், அவங்க பெயரில் வைத்ததா, பிரேமா சொன்னா," என்றார் .
பிரேமாவிற்கு அப்படியே பூமியில் புதைந்து விடலாமா என்று ஆனது , அபியின் பார்வையில் ..

"என்ன விஷயம்?"
சுற்றி வளைக்காமல், அபி , நேராக விஷயத்திற்கு வந்து விட்டாள் , இனி பிரேமா வேளைக்கு ஆகாது, என்று அபியிடம் எப்படி பணம் கரைப்பது , என்ற சிந்தனையில் அப்பெண்மணியின் மூளை ஆதி வேகத்தில் செயல்பட்டு , "அது ஒன்னும் இல்லை மா,"
"அப்போ இங்க ஏன் வந்தீங்க?"

"என்ன ?" இருவரும்,அவளை தான் பார்த்தனர் , இவ என்ன இப்படி பேசுறா , என்று, பிரேமா ..

"நான் பிரேமா தோழி, இங்க வந்தா டொனேஷன் கிடைக்கும்னு சொன்னதால , நான் வாங்க வந்தேன்"..

இந்த கிராமத்தில் , என்று ஒரு கிராமத்தின் பெயரை சொல்லி , "அங்கு இருக்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கு , நாங்க அடுத்த வாரம் போறோம்," என்றாள் ..

பிரேமாவின் தோழி என்றதும், அபிக்கும், புதிதாக வந்த பெண்மணி எப்படி பட்டவர் என்று தெரிந்து போயிற்று ..

"ஆண்ட்டி , எங்க அத்தை பெயரில் ஏற்கனவே டிரஸ்ட் இருக்கு , நாங்க செய்ற , செய்ய போற சேவை எல்லாவத்துக்கும் , அதில் கிடைக்கும் புன்னியமே போதும் ஆண்ட்டி , இனி டொனேஷனு , இந்த பக்கம் வராதீங்க," என்று சிரித்த முகமாகவே கூறி அனுப்பினாள் ..

பிரேமாவின் தோழி பிரேமாவை ஒரு பார்வை பார்த்து ஒன்றும், சொல்லாமல் கிளம்பினார் ..

அபியை பார்க்க முடியாமல், பிரேமா அங்கு இருந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து சென்றார், ஷோரூமை விட்டு .

இப்படி தானே அபியை ஓட வைத்தோம் என்று அவருக்கு, அந்த நேரம் மனது எடுத்து உரைத்தது ..

இனி தோழிகளின் முகத்தில் எப்படி முழிப்பது, அது வேறு ஒரு கவலை , இவளை லேசில் எடை போட்டது, தவறு என்று முதன் முதலாக ஒரு பயம் பிடித்தது ..

எப்படி தான் இப்படி இருக்காங்களோ என்று, நினைத்து ஸ்ரீயிடம், புலம்பினாள் அபி..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா டியர்

ஹா ஹா ஹா
பிரேமாவுக்கும் அந்த குமார் நாய்க்கும் செமத்தியா கிடைத்ததா?
அந்த குமார் பரதேசிக்கு இது போதாது
இன்னும் ஹெவியா தண்டனை கிடைக்கணும் கை கால் உடையணும்
அபிதான் இங்கே எல்லாம்ன்னு அவனுடைய மரமண்டைக்கு புரியணும்

கிராமத்துக்கு போய் சேவை செய்யுற பிரேமா மூஞ்சியைப் பாரு
பெத்த பொண்ணுன்னு கொஞ்சம் கூட பாசமில்லாமல் எப்பிடி பேசுது பாரு மூதேவி
 
Last edited:

achuma

Well-Known Member
th
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா டியர்

ஹா ஹா ஹா
பிரேமாவுக்கும் அந்த குமார் நாய்க்கும் செமத்தியா கிடைத்ததா?
அந்த குமார் பரதேசிக்கு இது போதாது
இன்னும் ஹெவியா தண்டனை கிடைக்கணும் கை கால் உடையணும்
அபிதான் இங்கே எல்லாம்ன்னு அவனுடைய மரமண்டைக்கு புரியணும்

கிராமத்துக்கு போய் சேவை செய்யுற பிரேமா மூஞ்சியைப் பாரு
பெத்த பொண்ணுன்னு கொஞ்சம் கூட பாசமில்லாமல் எப்பிடி பேசுது பாரு மூதேவி
Thanks banu mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top