என் இதய விழி நீயே 25

Advertisement

achuma

Well-Known Member
Hi friends
i put nest epi
thanks for all your likes and comments
please comment for this also
all take care
be safe:)(y):love:


என் இதய விழி நீயே

இரண்டு நாடக்ஸ்ல் அபி வீட்டினில் இருந்தாலும், பற்றிய அனைத்தும், கூகிளில் , தெரிந்து கொண்டு, ஸ்ரீயிடம், அவளின் சந்தேகங்கள் அனைத்தும், தெளிவு பெற்று கொண்டாள் ..

"அபி நீ இப்போவே ரொம்ப எல்லாம் போட்டு குழப்பிக்காத , ஏன் இவ்வளவு ஸ்ட்ரைன்,என்று ஸ்ரீயும் , அபியை அமைதி படுத்தினாள் ..
"அக்கா , உங்களுக்கு நிறைய நான் சொல்லணும், ஆனா அதற்கு இப்போ நேரம் இல்லை , சின்ன வண்டி சர்வீஸ் வந்த ரெண்டு நாட்களில் , உங்க பிராஞ்சுல ரெடி பன்றாங்க , ஆனா இங்க ஒரு வாரத்துக்கும் மேலே ஆகுது" ..
"இங்கயே வண்டி வாங்கிட்டு போனதால அவங்களும், எந்த டிமான்டும், இல்லாம ஒத்துக்றாங்க" ..
"என்ன அபி , சொல்லுற , ஒரு வாரமா," ஸ்ரீக்கும், அதிர்ச்சியே ..

"சித்திக்கு தெரியுமா?" என்று, அபியின் குழப்பம் படிந்த முகம் கண்டு ஸ்ரீ கேட்டாள் ..

அக்கா, நீங்க என்னை நம்புறீங்களா, என்று, அபி ஸ்ரீயின் கண்களை பார்த்து கேட்டாள் , அபி என்ன டா இப்படி சொல்லுற , ச்ரயின் வருத்தம் அபியை வருந்தினாலும், அபி அவளின் கண்களை பார்த்து கொண்டே இருந்தாளே தவிர வேறு ஏதும் பேச வில்லை ..

"நம்ம குடும்பத்து பெயர் , அத்தை நடத்தி வந்த கம்பெனி, இது எல்லாம் காப்பாற்றனும்னு, நினைத்தீங்கனா , அவங்களுக்கு தான் நம்ம முதலில் எதுவும், சொல்ல கூடாது , "என்று அபி கூறினாள் ..
"அபி என்ன மா என்னென்னவோ , சொல்லுறே , அங்க ஏதாவுது பிரெச்சனையா "..

"அக்கா எனக்கு சரியா சொல்ல தெரியல, ஆனா பிரேமா ஆண்ட்டி கிட்ட மட்டும் இப்போ எதுவும் நம்ம சொல்ல கூடாது , சிலர் அங்கு நிறைய தப்பு பன்றாங்க , இதுல ஆன்ட்யும், இருக்காங்களா , இல்ல அவங்களுக்கும் தெரியலையானு எனக்கு தெரியணும் , அது தான் எதுவும், சொல்லாதீங்கன்னு நான் சொன்னேன்" ..

"புரியுது மா , அந்த பிராஞ்சயும் , நான் பார்த்து இருக்கனும், எனக்கு இங்கயே வேலை சரியாய் போகுது , ஆரவ் கூடயும், நேரம் ஒதுக்கும் , "என்று வருத்த பட்டாள் ..

"அக்கா பார்த்துக்கலாம் விடுங்க , எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்க, சிலர் உண்மை முகத்தை வெளியே காட்டணும் , அதுவரை இந்த விஷயம், யாருக்கும், தெரிய கூடாது," என்று இருவரும், அதை பற்றிய சிந்தனையில் இருந்தனர் ..

நாட்கள் அதன் போக்கிலே விரைந்து, ஒரு வாரம், கடந்த நிலையில், டெல்லி புறப்படும் நாளும் வந்தது ..
பிரேமாவை எவ்வளவு வற்புறுத்தியும், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, பிரேமா அவர் மகளை பார்க்க மறுத்து விட்டார்..

விஜயனுக்கு, இந்த விஷயத்தில் இருவர் மீதும் கவலையே , நிஷாவும், அவள் அன்னையிடம் பேசுவதில்லை.
பிரேமா நிஷாவை பற்றியே சிந்தனையே இல்லாமல் இருக்கிறார் ..

இந்த உறவு இப்படியே முடிந்து விடுமோ, என்று இவருக்கு தான் வருத்தம் அதிகம் ஆகியது ..
ஆதி வேலை நிமித்தம் காரணமாக வர முடியாது, என்று கூறி விட்டான் , நிஷாவிடம் போனிலும் அவன் வர இயலாத காரணத்தை கூறினான் ..
அபி மற்ற அனைவருடனும், சென்றாள் நிஷாவை பார்க்க ..

அதுவரை, நிஷாவை பற்றி ஒரு கற்பனையில் இருந்த அபிக்கு,அங்கு பிரேமா கூறியதற்கு நேர்மாறாக , நிஷா அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தை , என்று தெரிந்து கொண்டாள் ..
பெற்ற மகளை இந்த நிலையில் எப்படி பிரேமாவால், நினைத்து பார்க்காமல் இருக்க முடிந்தது , என்று அவர் மீது ஆத்திரம் வந்தது ..

நிஷாவிற்கு மருந்து கொடுக்கும், சடங்கு இனிதே நடந்து முடிந்தது ..
இரண்டு நாட்கள், சென்றதே தெரியாத அளவிற்கு, அங்கு அனைவர்க்கும் நேரம் இனிதே கழிந்தது ..

அபியின் கலகலப்பான பேச்சு நிஷாவிற்கும் ஒரு நல்ல தோழி கிடைத்த மகிழ்ச்சி ..
அப்பொழுது தான், நிஷா , திருமணத்திற்கு முதல் நாள் , ஆதி அவளுடன் திருமணத்தை நிறுத்துமாறு கூறியதை அபியிடம் கூறினாள்..

"அடப்பாவி, இது எல்லாம் செய்து இருக்கானா," என்று ஸ்ரீ கூட ஆச்சர்யம் கொண்டாள் ..
"ஆமா அக்கா , மேடம் எந்த அளவுக்கு, அவர் மைண்ட்ல டீப்பா இருந்து இருக்காங்க பார்த்துகோங்க,"என்று நிஷாவும் கிண்டலில் இறங்கினாள் ..

அபிக்கு அப்படியே ஜிவ்வென்ற உணர்வு தான் இந்த தகவலில் ,அவளின் முகத்தை எங்கு மறைக்க என்று தெரியாமல் தலை குனிந்து அமர்ந்தாள் வெட்கத்தால்
இதனால் , அவளை இன்னும் கிண்டல் செய்தனர், அவ்விருவரும் ..
விஜயனுக்கு, மகளின் மகிழ்ச்சி கண்டு உள்ளம் நிறைந்தது ..
கிஷோர் இன்னுமொரு அறை பெரிதாக கட்டி அவனின் அன்னைக்கு என்றும், மாடியில் விருந்தினர் வந்தால் தங்குவதற்கு என்று ஒரு அறையும் கட்டினான் ..

நிஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் அறைக்கும், வீட்டிலும் சிறு சிறு மாற்று வேலைகளும் செய்தான்..

இரட்டை குழந்தைகள் என்று உறுதி ஆனதும் , நிஷாவிற்கும், அவள் உடலை பற்றிய பயமும், பதட்டமும் கிஷோரிடம், முன்பு போல் கோவத்தை பிடித்து கொண்டிருக்காமல் , அவனுடன், பேச வைத்தது ..

கிஷோருக்கு அதுவே பெரிது என்று, அவன் நிஷாவை இன்னும், நன்றாக கவனித்து கொண்டான் ..
"நிஷா குட்டி, நாளைக்கு நாங்க கிளம்பனும் டா , ஏழாம் மாதம் வளைகாப்பு முடிந்து, உன்னை நான் கண்டிப்பா அழைத்து கொண்டு போவேன்," என்று கூறினார்.

நிஷா முகம் வெளுத்து , அவளின் புடவை முந்தானையால் அவளின் வயிற்றை மறைத்து கொண்டாள் எதில் இருந்தோ காப்பது போல்..
கிஷோரின் சட்டையை இருக்க பிடித்து பயத்திலே "நான் அங்க போக மாட்டேன், என்னை அனுப்பாத ," என்று அவனிடம் பயத்திலே புலம்ப ஆரம்பித்தாள் ..
உடனே ஷோபாவும், "நிஷா இங்க பாரு டா , உன்னை நாங்க எங்கயும் அனுப்ப மாட்டோம்,சரியா, இதுக்கா பயம்," என்று அவளின் வேர்வையை துடைத்து விட்டார் ..

விஜயன் சங்கடம் கொண்டார் , பெற்ற மகள் பிறந்த வீட்டிற்கு வருவதற்கு பயம் கொள்வதா , என்று ..
அவரின் கவலை கண்டு, விஜயனின், அண்ணன் அவரை வெளியே அழைத்து சென்றார் ..

கிஷோரும், நிஷாவை அறைக்கு அழைத்து சென்று, இதமாக, அவளின் தலை வருடி , கால் பிடித்து விட்டு , அவளை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று உறுதி அளித்து , அவளை உறங்க செய்தான் ..

பிறகு, தோட்டத்தில் , அவன் மாமனாரிடம், சென்று , "மாமா, ஏற்கனவே ட்வின்ஸ் டாக்டர் சொன்னதில் இருந்து , அவ ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கா , அவ விருப்பப்படியே எதுவும் நடக்கட்டும்," என்றான் ..
"அவளுக்கு டெலிவரி இங்கயே நடக்கட்டும் மாமா, நீங்க எல்லாரும் வேணும்னா இங்க வாங்க ," என்றான் .

லலிதாவும், "மாப்பிளை சொல்றதும் சரி தான் , இந்த நேரத்துல அவ விருப்பம் படியே இருக்கட்டும்,நான் இங்க வந்துடுறேன் , இந்த நேரத்துல , அவளையும் எதுலயும் வற்புறுத்தாம இருங்க," என்று அப்பேச்சினை முடித்து வைத்தார் ..

அடுத்த நாள் அனைவரும், நிஷாவிடமும், அவள் குடும்பத்தினரிடம் , விடை பெற்று கிளம்பினர்.
"இவ எதுக்கு இப்படி இருக்கிறா," என்று ஸ்ரீக்கும், அபிக்கும் ஒரே குழப்பம் , அம்மா வீட்டுக்கு வருவதற்க்கு எதற்கு பயம், என்று இருவரும் அதை பற்றியே பேசி கொண்டு வந்தனர் வீடு வந்து சேரும் வரை ..

ஆதி வீட்டிற்கு வந்ததும், அங்கு நடந்தது , அனைத்தும் அவனிடம் பேசி கொண்டே இருந்தாள் , ஆதி தான் நொந்து போனான் , வாய் ஓயாமல் பேசுகிறாளே என்று ..

பிறகு அவளை இழுத்து அருகில் படுக்க வைத்ததும், அவளின் வாய் அடங்கியது ..
"ஊருக்கு போனியா , அங்கு எல்லார் கூடயும் டைம் ஸ்பென்ட் பன்னியா , அது வரைக்கும், சொன்ன போதாது , இப்படியா டீ, அங்க குருவி பறந்தது , குளுரு அடித்ததுனு , எல்லாம் சொல்லுவே , என்னை பற்றி யோசிக்கவே மாட்டியா அபி மேடம் ," என்று அவளை நெருக்கி அனைத்து கன்னத்தில் முத்தம் வைத்தான் ..
அபியின் உதடு படபடக்க , அவனிடம் இருந்து, விலக முயற்சித்தாள் , ஆனால் அவனின் பிடியில் அது
வெறும் முயற்சியாவே இருந்தது, விடுபட முடியவில்லை ..

"என்ன மேடம், உதடு இப்படி டைப் அடிக்குது , நான் ஒண்ணுமே செய்யலையே , ரிலாக்ஸ் மேடம், இங்க உங்க விருப்பம் இல்லாம ஒன்னும் நடக்காது ," என்று அமைதி படுத்தினான் ..

"அதுக்காக , இந்த ஹக் , கிஸ் இதுக்கு எல்லாம் தடா போட முடியாது, என்றான்
"ஹ்ம்ம் , இது சொல்லிட்டு அப்பறம் நம்ம விஷயம் பேசுலாம்னு நான் இருந்தேன் , நீங்க இப்படி செய்தா , எனக்கு பேச்சே வர மாட்டிங்குது," என்று அவன் கையின் இறுக்கம் தளர்ந்ததும், தள்ளி படுத்து கூறினாள் ..
"நான் நாளைக்கு, ஷோரூம் போறேன் , அபி நீ போகனுமா , இன்னும் கொஞ்சம் நாட்கள் வெயிட் பண்ணு ," என்றான் .
அவனிற்கு சந்தோஷ் பற்றிய தகவல் சேகரிக்க கொஞ்ச நாட்கள் தேவை பட்டது ..

"இல்ல ஆதி , ஏற்கனவே ரொம்ப நாட்கள் ஆகிடுச்சு," என்றாள் .

"சரி அபி போ , ஆனா பார்த்துக்கோ," என்றான் .

"சரி ஆதி, நான் சொன்னது எல்லாம் நினைப்புல இருக்கு தானே , எதுவும் மாமா காதுக்கு போக கூடாது , உங்க ஹெல்ப் தேவை படும் போது நான் உங்களுக்கு சொல்லுறேன் ," என்றாள் ..

"எல்லாம் நினைவு இருக்கு, மேடம், பட் நான் சொன்னது போல் சரண் அங்க இருப்பாரு , அவர் ரொம்ப நம்பிக்கை ஆனவர், இப்போ அவர் மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்ட் ஹாண்டில் பன்றாரு, நீ இனி எந்த ஷோரூம் போனாலும் சரி , காம்ப்ளெக்ஸ் போகணும் என்றாலும் சரி , அவர் கூட தான் போயிட்டு வரணும்" என்றான் ..
விடிந்ததும், அபி கல்லூரி , சென்று பிறகு, மாலையில் ஷோரூம் சென்றாள் ..

பிரேமாவிற்கு , ஏற்கனவே, அபி நிஷா வீட்டிற்கு சென்றது பிடிக்கவில்லை ..
இருவரும் பழகுவது, தனக்கு ஆபத்து ,என்று அபி மீது கோவத்தில் இருந்தார் ..

அபி அங்கு உள்ளே நுழைந்ததும், எப்பொழுதும் போல் அங்கு அவளிடம் இன்முகத்துடன் பழகுவரிடம்,மாலை வணக்கம் , கூறி அறைக்கு சென்றாள் ..
அவர்களும், அபி மீண்டும், வந்ததை நினைத்து மகிழ்ந்தனர் , எங்கு அன்று அபி பயத்தில் ஓடியதால் , இனி வர மாட்டாளோ என்று அவர்களும் வருத்தத்தில் இருந்தனர்..

பிரேமாவை கண்டதும், அவளின் கோவம், வெறுப்பு, அனைத்தும் மறைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டு , அவரிடம், வணக்கம் கூறினாள் அபி ..

"முதலில் வேலை முக்கியம், இப்படி அடுத்தவங்க வீட்டுக்கு, போய்ட்டு ஊர் சுத்திட்டு வந்தா இங்க கம்பெனி விளங்குனா மாதிரிதான் ..இங்க ஒரு தப்பு செய்துட்டு , ஓடிட்டியே , அது பற்றிய கவலை ஏதாவது இருக்கா," என்று அவர் சகட்டு மேனிக்கு அவளை திட்டி கொண்டிருந்தாள் ..

அனைத்தும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த அபி , "ஆண்ட்டி , நான் அந்த கஸ்டமர் கிட்ட போன்ல சாரி, அடுத்த மறு நாளே கேட்டுட்டேன்," ஆதியை வைத்து பேச வைத்ததை கூறாமல் இது மட்டும் கூறினாள் ..

"ஹான், உங்களுக்கும் சொல்ல மறந்துட்டேன் பாருங்க , அவர் கேட்ட மாடல் விட , ஆல்ரெடி ஸ்டாக்ல இருக்கிற வேற மாடல் நாளை ஈவ்னிங் வந்து வாங்கி வராத அவரும் சொல்லிட்டாரு, அவருக்கு இப்போ நான் சொன்ன மடலே ரொம்ப பிடித்து இருக்காம் .

அதே அமௌன்ட் தானே ,அதன் பிரச்சனை இல்லை .
"அதோட ஒரு காப்பிய உங்களுக்கு மெயில் பண்றேன்," என்றாள் ..

"யாரு கேட்டு முடிவு பன்னே," என்று சீறினாள் ..
"நான் செய்த தப்பு, நானே சரி செய்துட்டேன் ஆண்ட்டி .."

"நீங்க எனக்கு குரு, உங்க பெயர் கெட கூடாது பாருங்க , அதுக்கு தான்," என்று அசராமல், அவர் மீது ஐஸ் கூடை தூக்கி வைத்து, அங்கு இருந்து சென்றாள்

சேல்ஸ் டீமிற்கு செல்லாமல், சர்வீஸ் நடக்கும் இடத்திற்கு சென்றாள் , எப்பொழுதும் போல் அந்த நான்கு தடியன்களும், ஒரு காரின் மீது அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தனர்..

"ஐயோ, திமிரா , தெனாவட்டா சண்டை போடுறவன் கிட்ட கூட எதிர்த்து நிற்கலாம், இவனுக இப்படி பொறுக்கியா இருக்கிறாங்களே, அவனுக பார்வையே சரி இல்லை , இவனுகள எப்படி அடக்குறது," என்று தன்னையே நொந்து கொண்டு , வந்த வழியே சென்று விட்டாள் ..

அதற்குள் அங்கு சரண் வந்து சேர்ந்தார், "மேடம் எங்க இருக்கீங்க?"

" சார் நான் இங்க ரூம் கிட்ட போயிட்டு இருக்கேன்," என்றாள்.

"இங்க யாருக்கும், நீங்க ஆதி சொல்லி வந்ததா இருக்க கூடாது," என்றாள் ..

"புரியுது மேடம், ஆதி சார் திடீர்னு, என்ன நடக்குதுன்னு பார்க்க சொல்றாரு, உங்களுக்கு துணையாவும் இருக்க சொல்லுறாருன்னா , ஏதோ எங்க கண்ணுக்கும் தெரியாம இங்க என்னவோ நடக்குது" ..

"நான் எதுவும் யாருக்கும் சொல்லலே, நீங்க எந்த பிரான்ச் போறீங்களா, அப்படியே நான் அங்கு வருவது போல் வரேன், என்ன நடக்குதுன்னு, நானும் பார்த்துகிறேன் ," என்றார் ..

"சரி சார் சில லூசுங்க அங்க வேலை செய்யாமா டைம் ஓட்டிட்டு இருக்காங்க, அவங்களை கொஞ்சம் நோட்பன்னுங்க," என்று கூறினாள் ..

அபி அறைக்கு ,சென்றதும் பலத்த யோசனையில் இருந்த பிரேமாவின் முகமே காட்சி கொடுத்தது ..

"இவ்வளவு தெளிவா பேச மாட்டாளே , என் பொண்ணு காத்து இவளுக்கும் பட்டு இருக்குமோ?"

"ஆண்ட்டி, இப்போ நான் என்ன செய்யணும்?" என்று அப்பாவியாக முகத்தை வைத்து, எப்பொழுதும் , போல் பிரேமாவின் முன் வந்து நின்றாள் ..

அவளின் குரலில் சிந்தனை களைந்து , "அபி, இனி என்னை கேட்காம நீயா வேற மாடல் கஸ்டமர் கிட்ட சொல்ல கூடாது புரிந்ததா ."

"சரி ஆண்ட்டி , உங்க பெயர் கெட கூடாதுனு, நான் அன்னைக்கு நானே டெஸிஸன் எடுத்துட்டேன் , இனி நீங்க சொல்றதையே செய்யறேன்," என்று ஒன்னும் தெரியாத அப்பாவியாக முகத்தை வைத்து கூறினாள் ..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா டியர்

பிறந்த வீட்டுக்கு வர நிஷா பயப்படுறாள்ன்னா பிரேமா எவ்வ்வ்வ்வ்வ்வளவு நல்லவளா இருக்கணும்?

ஹா ஹா ஹா
ஆதி இவளுக்கு கூட ஒரு ஆள் கொடுத்திருக்கும் நிலையில் அபி என்ன செய்ய போகிறாள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top