என் இதய விழி நீயே 24

Advertisement

achuma

Well-Known Member
Hi friends, i have put next ud
please read and give comments
thanks for all your supports, likes n comments
takecare all:):love:(y)



என் இதய விழி நீயே

அபிக்கு திருமணம் ஆனா நாட்களில் இருந்து, இன்று நிகழ்ந்த வரை ஒன்றொன்றும் நினைத்து கொண்டிருந்தாள் , கம்பெனியில் பிரேமாவின் செயல் ஒன்றொன்றும் அவள் கண்களில் காட்சிகளாக தோன்றி மறைந்தது..

"அப்போ எதற்கு ஆதி நிஷாவா லவ் பன்னதா சொல்லணும், ஏன் கிட்ட , நிஷாவை பற்றி இப்படி அப்படி சொல்லணும் , அங்க இருக்கிற சிலர் என்னை அலட்சியமா நடத்தும் போது , சும்மா வேடிக்கை பார்த்திட்டு நிற்கணும்"..

இவருக்கும் நிஷா மீது விருப்பம் இல்லை, அந்த பொண்ணுக்கும் இல்லை , அப்போ , என்னை இவர் கூட வாழ விடாம செய்யணும்னு இவங்க ஏன் நினைக்கணும், என்னோட தாழ்வு மனப்பான்மையே இவங்க யூஸ் செய்து , என்ன சாதிக்க போறாங்க?"

"எதற்கு இவங்களுக்கு இந்த புத்தி , இன்னும் சார்ஜ் எடுக்கலையேன்னு , கேட்டாரே , என்ன எங்க அவங்க அங்க உரிமையா வேலை பார்க்க விட்டாங்க."
"ஹான்!" இப்பொழுது தான் அபிக்கு, அனைத்தும் விளங்கிற்று ..

அவங்களுக்கு நான் இந்த கம்பெனி பார்த்து கொள்வது பிடிக்க வில்லை ..

அவங்களே இவ்வளவு நாட்கள் பார்த்து கொண்டது , இப்பொழுது தன் கையில் என்ற உடன் அதனை ஏற்கும் மனது இல்லை பிரேமாவிற்கு ..

"அதனால் தானே என்னை எதை பற்றயும் சிந்திக்க விடாது செய்தது , எப்பொழுதும் ஆதி எனக்கு உரிமை இல்லை என்பது போன்று நினைக்க வைத்தார்களே,"என்று பிரேமாவின் மீது கோவமும் , அவளை நினைத்தே அழுகையும் ஒரே சேர, என்று தவித்தாள் அபி ..

"எனக்கு எதுவும் கிடைக்க கூடாது , அதான் நான் சின்ன வயசுல இருக்கும் போதே என் ரோஷத்தை தூண்டி விட்டு என்ன இங்க பழக விடாம செய்து இருக்காங்க , ஆதி என்னிடம் பழகும் நேரம் எல்லாம் அவரின் காதல் உணர முடியாமல் , பேருக்கு திருமணம் வாழ்க்கை என்பது போன்று என்னை உணர வைத்து இருக்காங்க" ..

இதற்கு காரணம் , "என் மீதும் தவறு இருக்கிறது , என்னையே நான் மட்டமா நினைத்து இருக்கேன் , மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு குடுத்து அமைதியா போனது தான் என்னோடு தவறு" ..

"எவ்வளவு அன்பா என்னை பார்த்துக்கிட்டாரு , என்னோட விருப்பம் ஒவ்வொன்றும், கேட்டு எனக்காக நேரம் கொடுத்து , அவர் இருந்தா , நான் என்ன லூசு தனமா நடந்து இருக்கேன்" ..

"சரியான பைத்தியம் அபி நீ ," என்று அவளே அவளை திட்டி கொண்டாள் ..

"இப்போ போய் பிரேமாவை பற்றி எல்லாம் சொல்லலாமா , என்னை நம்புவார்களா , அவங்களே கம்பெனி அபி பார்த்துக்கட்டும் , அவங்க விலகுவது போன்று, நடித்து உள்ளாரே, எப்படி நம்புவார்கள்" .

பிரேமாவின் லட்சியம் முழுவதும், ஷோரூமில் மட்டும் தான் என்பதும், அதற்கு, அபி ஆதியின் வாழ்வில் இருந்து சென்றால் மட்டுமே சாத்தியம் என்றும், பிரேமா இவ்வாறு செய்கிறாள் ..

"ஷோரூம் திறம்பட நடத்தும் தகுதி தனக்கு இல்லை என்பது போன்று, என்னை உணர வைக்கும் செயலில் இறங்கியுள்ளார்," என்பது தெளிவாக அபிக்கு புரிந்து போயிற்று ..

இந்த அளவிற்கு பிரேமா இவ்வீட்டில் நடந்துள்ளார் என்றால் , அவரிடம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும் என்றும் , அவர் போக்கிலே போய் , எப்படி அவரை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் , யோசிக்க ஆரம்பித்தாள் ..

"நானும் ஏன் பிரேமாவை அப்படியே விடணும், என் வாழ்க்கையை கெடுக்கணும்னு நினைத்தாங்கல , நான் மட்டும் ஏன் சும்மா விடணும், இவங்க சுயரூபத்தை எல்லார் முன்னும் காட்டுனா தான் , மற்றவர்களுக்கும் நல்லது" ..

"எவ்வளவு தப்பா ஆதியை பேசிட்டேன், இனி என்ன செய்றது," என்று யோசித்து கொண்டே எப்பொழுது உறங்கினால் என்று தெரியாமல் அபி உறக்கத்தில் இருந்தாள் ..

ஆதி அங்கு மாடியில் உள்ள தூணில் சாய்ந்து அமர்ந்த வாக்கிலே உறங்கிக்கொண்டிருந்தான் , பிறகு பொழியும் பணியில் , அவன் உடலில் குளிர் உணர்ந்து அறைக்கு சென்றான் ..

ஆதி அடித்த விரல் தடம், அப்படியே அபியின் கன்னத்தில் தெரிந்ததை கண்டு, ஆதி தன்னையே நொந்து கொண்டான் ..

அவன் கை வலிக்கும் அளவிற்கு, அங்கு செவுற்றில் , அவன் கைகளை குத்தி கொண்டான் .
பிறகு அவளின் அருகினில் , மருந்து எடுத்து சென்று, இதமாக தடவி விட்டான் ..

அதிசயமாக அபி அன்று கட்டிலில் படுத்து இருந்தாள் ..

அப்பொழுது தான் ஒன்று தெரிந்தது, அவன் வீட்ட அறையில், கட்டிலில் சென்று விழுந்ததில் அப்படியே உறங்கி விட்டாள் அபி ..

"தேவையா டீ உனக்கு , இப்படி அடி வாங்கிட்டு?"
" வாயில ஏதாவது, நல்ல வார்த்தை வருதா பாரு, இன்னும் நானும் எவ்வளவு நாட்களுக்கு தான் பொறுமையா போறது, தேவை இல்லாம பேசி அடியும் வாங்கிட்டு ,ஹ்ம்ம்,"
.அவளின் கன்னத்தை தடவி கொண்டே அவளின் அருகில் படுத்து விட்டான் ..
இவன் அடித்ததில் எந்த தவறும் இல்லை என்பது போன்று இவனின் நியாயம் இருந்தது ..
ஆதிக்கு சரியாக தூக்கம் வராமல் , விடிந்ததும், அவனின் காலை வேலைகள் செய்ய கீழே கிளம்பி விட்டான் ..

அபியும், சிறிது நேரம் கழித்து, முதலில் ஒன்றும் புரியாமல், முழித்து, பிறகு, முதல் நாள் நடந்த அனைத்தும், நினைத்து, ஆதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று முடிவு செய்து அவளும் தயாரானாள் ..

அங்கு கீழே அபியின் முகம் கண்டு ஸ்ரீ ஆதி மீதே கோவம் கொண்டாள் ..
அபொழுது தான் அபியும், அவளின் முகத்தை கண்ணாடியில் பார்த்து, அக்கா என் மேல தான் தப்பு , அவரை திட்டாதீங்க , என்று ஸ்ரீயை சமாதானம் செய்து, ஆதி எங்கு என்று கேட்டாள் , அவன் வெளியே சென்று உள்ளான் என்று ஸ்ரீ கூறினாள் ..

பிறகு இருவரும், காலை உணவு தயார் செய்தனர்.
"மாமா என்னோட முகத்தை பார்த்தா வருத்த படுவாங்க, நான் உள்ளேயே இருக்கேன் அக்கா , அவர் கிளம்பியதும், எனக்கு குரல் கொடுங்க," என்று அவளின் அறைக்கு சென்றாள் ..

வீட்டினுள் ஆதி நுழைந்ததும், "ஆதி! புருஷன் பொண்டாட்டி நடுவுல வரக்கூடாது , ஆனா நீ அபியை அடித்தது , எனக்கு உன் மேல வருத்தம் , அவளே அங்க எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கா , நம்ம அவளை நல்ல பார்த்துக்கணும், நீ என்னடானா இப்படி செய்ற, உன் கிட்ட நான் இதை எதிர்பார்கலை ஆதி," என்று வருந்தினாள் .

"அண்ணி !"என்று ஸ்ரீயின் முகம் பார்க்க ஆதி தயங்கி, பிறகு, அர்ஜுன் மற்றும், சிவநேசன் உணவு நேரத்திற்கு, அங்கு வந்ததும், இருவரும் அமைதி ஆகினர் ..

அவர்கள் உணவு முடிந்து, அவரவர் வேலைக்கு சென்றதும், அபி அங்கு வந்து சேர்ந்தாள் , ஆதியை ஓர பார்வையில் பார்த்து கொண்டிருந்தாள் , அவனின் பார்வைகாக .
அவன் அபியை கண்டு கொள்ளாமல் , உணவு உண்பதே கடமை என்று இருந்தான் .
"ஆதி! சாரி , ப்ளீஸ்," என்று அபி ஆரம்பித்ததும், "அபி! போதும், நீ எதுவும் மாற போறது இல்லை , அடுத்தவங்க என்ன நினைப்பாங்க , நம்ம இடம் இதுவா , நாம யாரும் ஒரு சொல்லு பேசாம பார்த்துக்கணும், இப்படியே தான் இருக்க போற" ..

"உலகம் போயிட்டு இருக்கிற வேகத்துல, யாரும் யாரை பற்றயும் கவலை படறது இல்லை , நீ மத்தவங்க என்ன நினைபாங்கனு, உன் வாழ்க்கை வாழமா இருக்கிற, நீ இப்படியே தான் இருக்க போற, எதுக்கு, சாரி" ..
"சாரி எப்போ சொல்லனும் தெரியுமா,திரும்பவும் அந்த தப்ப செய்யாம இருக்கனும்" .

"அப்போ தான் அந்த வார்த்தைக்கும் மதிப்பு , நீ நாலு நாள் கழித்து, ஏதாவது இப்படி தான் லூசு தனமா நினைப்பே, திரும்பவும், நிஷாவோட கம்பர் செய்வ , இது எல்லாம் தேவையா , வேண்டாம் தாயே, இனி என்னால எதுவும் தாங்கிக்க முடியாது ".

"என்ன ஆதி நீ சொல்றது , அபி நீ இப்படியா பேசுன,ஆதியை பற்றி உனக்கு தெரியாத அபி," என்று அபியை திட்டினாள் ஸ்ரீ .

"ஐயோ அக்கா, நான் சொல்ல வரது என்னனு கேளுங்க , என்னோட பெத்தவங்க விட்டுட்டு போய்ட்டாங்க , எனக்குன்னு யாரு இருக்கா சொல்லுங்க , அதுவும், நிஷாவோடு நடக்க இருந்த கல்யாணம் நின்றதும்,மாமா சொன்னாருன்னு தான் எனக்கு இவரு தாலி கட்டுனாரு, என் நிலைமை யோசித்து பார்த்தீங்களா , இன்னொருத்தர் வாழ்க்கை நான் வாழ்ந்துட்டு இருக்கேனு, எனக்கு ஒரு பீலிங் , இவர் மனசுல நான் இருக்கேனா இல்லையானு தெரியாம , எனக்குன்னு யாருமே இல்லாத ஒரு நினைப்பு, அவர் என்னை தான் காதல் செய்றதா , எனக்கு சொன்ன தானே தெரியும்" ..

அப்பொழுது தான் ஆதிக்கும் தெரிய வந்தது , அவன் நேற்று அவளிடம் உளறியது .

"ஹே அபி! அவன் லவ் சொல்லிட்டானா , சூப்பர்," என்று ஸ்ரீயும், மற்றதை எல்லாம் மறந்து, கேள்வி கேட்டாள் ..

"ஹம்ம! சொன்னாரு சொன்னாரு, இப்படி யாரும், அவங்க லவ் சொன்னதா நான் இது வரைக்கும் கேள்வி பட்டது இல்லை," என்று அவள் கையை, அடி வாங்கிய கன்னத்தில் வைத்து கொண்டே சொன்னாள் ..

அது வரைக்கும், அவளையே பார்த்து கொண்டிருந்த ஆதி அவளின் அருகில் நெருங்கி, கன்னத்தில் வைத்திருந்த கையை பிடித்து, "அபி சாரி டா , ரொம்ப வலிக்குதா , என் காதல் எப்படி எல்லாமோ உனக்கு உணர்த்த முயற்சி செய்தேன், நீ என்னை புரிஞ்சிக்கலையேன்னு, வருத்தத்தில் தான் இப்படி , ரியல்லி சாரி , இனி இது போன்று நடக்காது," என்று அவளின் நெற்றியில் முதல் முத்திரை பதித்தான் ..

"உன்னை நான் எதுவும் வற்புறுத்துல , ஆனா கொஞ்ச நாளுல , உனக்கான உரிமை, உன் கம்பெனி இது எல்லாம் நீ கவனிக்கும், அந்த அளவு தயாரா இருக்குனும், இது எல்லாம் நீயே செய்ய வரணும் ,
நான் உனக்கு எப்பவும் துணையா இருப்பேன்னு நீ நம்புனா போதும் , இது எல்லாம் தான் நான் உனக்கு சொல்ல வருவது ."

"ஆதி எனக்கு புரியுது , நான் இரண்டு நாள் கழித்து , கம்பனிக்கு கிளம்புறேன் , இனி தைரியமா ஹாண்டில் செய்றேன், நீங்க தான் இருக்கீங்களே , எனக்கே எனக்காகன்னு , எனக்கு அது மட்டும் போதும் , கண்டிப்பா அத்தை பெயரை காப்பாற்றுவேன் ..

"இப்போ ரெஸ்ட் எடு டா , அங்க கொஞ்சம் கம்பெனில சில ஆட்கள் சரி இல்லைனு எனக்கு தகவல் வந்து இருக்கு, இப்போவே அப்பாக்கு சொல்ல வேண்டாம்னு பார்க்கிறேன், அது எல்லாம் என்னனு பார்த்துட்டு , அதுக்கு பிறகு நீ கிளம்புனா போதும்."

"ஆதி ப்ளீஸ் , எனக்கும் அங்க சில பேருக்கு பதில் கொடுக்கணும், நானே ஹாண்டில் செய்றேன், என்னால முடியாதுங்கிற நிலைமைல உங்க சப்போர்ட் , கேட்கிறேன்," என்று தலை சாய்த்து முகம் சுருக்கி கேட்டாள்..

"நீ இப்படி கேட்டா , வேற என்னென்னவோ செய்ய தோணுது , இது செய்ய மாட்டேனா," என்று அவளின் முகம் முழுவதும் முத்தம் வைத்தான் , இறுதியில் அவனின் இதழ் அவளின் இதழில் வந்து தஞ்சம் அடைந்தது ..

இருவருக்கும், உயிர் வரை தீண்டும் இதழ் முத்தம் ..
அபி , அவனின் செயலில் அவன் முகம் பார்க்காமல், அவனின் நெஞ்சிலே முகம் புதைத்தாள் ..

பிறகு இருவரும் ஸ்ரீயை நினைத்து அதிர்ச்சியுடன், விலகி சுற்றும் முற்றும் பார்த்தால் , அங்கு அவள் எப்பொழுதோ வெளி கதவை சாற்றி விட்டு சென்று விட்டாள் ..

அபி அவனை தள்ளி விட்டு வெட்க புன்னகையுடன் அறைக்கு சென்று விட்டாள் ..

மாலை பிரேமா ஷாந்தி நகர் ஷோரூமில் இருந்து, அபி இங்கு வரவில்லை, அங்கு உள்ள கம்பெனிக்கு வந்தாளா என்று குமாரிடம் கேட்டதற்கு, அவனும் இல்லை என்றான்.

இப்படியே இவளை ஓட விடணும் , என்று இருவரும் பேசி கொண்டனர் ..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா டியர்

ஒரு வழியா அபிக்கு பல்ப் எரிஞ்சிருச்சு
எல்லாம் அலசி ஆராய்ந்து விட்டாள்
பிரேமாவின் சதியை தெரிந்து கொண்டு விட்ட அபி குமார் பிரேமா இவங்களுக்கு பாடம் கத்துக்கொடுப்பாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top