என் இதயமே நீ தானே 28

ShanviSaran

Well-Known Member
#1
இன்று

கீழே விழுந்துக் கிடந்தவள் அப்படியே அழுது அழுது தூங்கி இருந்தாள். கண்களை திறக்கவே சிரமப்பட்டவள் , சுற்றிப்பார்க்க, இருட்டாக இருந்தது. வெளியே இருந்து வந்த மெல்லிய வெளிச்சம் மட்டுமே ….

"இருட்டிருச்சா, குட்டி தேடுவானே..."

வேகமாக எழுந்தவள் குளியலறையில் புகுந்து முகம் கழுவி விட்டு , கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டுக் கொண்டே வெளியே வந்தாள். கீழே சமையலறையில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.செளமி அறையைத் தட்டினால் , .அறைத் திறந்துக் கிடந்தது.

கீழே வந்தவள் சமையலறையை எட்டிப் பார்த்து , " சித்தி எல்லாரும் சாப்பிட்டு தூங்கியாச்சா , செளமி எங்க"

" வாம்மா , நீயும் சாப்பிட்டு கிறியா , இல்லதம்பி வந்துக்கிட்டு மா?

"அத்தான் இன்னும் வரலாயா , சரி சித்தி நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் .நீங்க போய் ரெஸ்ட் எடுங்க"

அவள் அருகில் வந்தவர் , "திவிமா , ரகுபடிச்சு இங்கயே பெரிய வேலையில சேர்ந்துட்டான். அதனால சாந்தி மயினியும் அண்ணனும் எங்கள ஊர்ல இருக்கிற வீட்டையும் நிலத்தையும் பார்த்துக்க அனுப்புறாங்கமா , ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தாங்க , நாங்க தான் கார்த்தி தம்பி கல்யாணம் முடிஞ்சதும் கிளம்புறோம்னு சொல்லிட்டு இருந்தோம். இப்ப நீ வந்ததும் சந்தோஷமா கிளம்புறோம்.

பேரன பார்த்ததும் இங்கயே இருக்கலாம்னு ஆசை வந்துச்சு , ஆனால் கார்த்தி தம்பி நீங்க அங்க தான் இருக்கனும்னு செல்லிட்டாங்க , இனி நீ தான் இங்க எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துக்கனும் சரியா" என்றவர் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு கிளம்பினார்.

"சித்தி , உங்களுக்கு என் மேல கோபமோ வருத்தமோ இருக்கா " என்று தலையை கீழே குனிந்துக் கேட்டவளிடம் வந்தவர் ,

அவள் முகத்தை அவளைப் பார்க்குமாறு வைத்தவர் "நீ எப்ப எங்க ரெண்டு பேரையும் இன்னொரு அப்பா அம்மானு சொன்னியோ , அப்பவே நான் பெறாத மகளாயிட்ட , என் பொண்ணு எது செய்தாலும் அவநல்லதுக்காக செய்யாம அடுத்தவங்க நல்லாருக்கனும்னு தான் செய்திருப்பா , அப்படி இருக்கும் போது உன் மேல கோபம் எப்படி வரும். ஆனால் வருத்தம் மலையளவு இருக்கு , கார்த்தி தம்பிய தவிக்க விட்டுட்டு போய்ட்டியே … "

"சித்தி நீங்க …. உங்களுக்கு … எங்களை …." கேட்க முடியாது தவித்தவளைப் பார்த்தவர்.

" திவ்யா மா , நாம என்ன தான் சொந்தக்காரங்களா இருந்தாலும் ,இந்த வீட்ல வேலைக்குன்னு தானேடா வந்தோம், அவங்க நம்மள அப்படி நடத்தலனாலும் , நாம நம்ம எல்லையத் தாண்ட முடியாது தானே ,அப்ப நாம நடக்கிறதப் பார்க்கத்தான் முடியும் .எதுலயும் உரிமையா கலந்து பேச முடியாது இல்லையா , அப்படிப் பார்க்கும் போது கார்த்தி தம்பி மனநிலையும் , உன் மனநிலையும் புரியாமலா இருக்கும். எல்லாம் நல்லதா நடந்தா சந்தோஷம்னு நானும் உங்க சித்தப்பாவும் பேசிக்குவோம்.

ஆனா நீ விட்ட விட்டுப் போனதும் தம்பி தவிச்சதவிப்பு எங்களுக்குத்தான் தெரியும். இனியாவது எல்லாம் நல்லபடியா நடக்கனும். தம்பி வந்தா சாப்பிடத் தந்துட்டு நீயும் சாப்பிடு. எல்லாம் நல்லதா நடக்கும்.

இன்னும் ஒன்னு , என் பொண்ணு எப்பவுமே தப்பு செய்ய மாட்டாங்கிற நம்பிக்கை எனக்கு எப்பவும் உண்டு." என்று அவள் கன்னம் தட்டிச் சென்றார்.

"கடவுளே இவங்க எல்லாம் என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சுருக்காங்க, அப்ப நான் தான் இவங்க மேல எல்லாம் நம்பிக்கை இல்லாமப் போய்ட்டனா….. " தன்னுள் உழன்றுக் கொண்டு இருக்கவுமே , வெளியே கார் சத்தம் கேட்கவும் வாசலை நோக்கி ஓடினாள்.

அங்கு ரகு டிரைவர் சீட்டிலிருந்து இறங்கியவன் , இந்தப் புறம் வந்து , கார்த்தியை மெதுவாக காரை விட்டு இறக்கி அழைத்து வந்துக் கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்தவளுக்கு அத்தனை அதிர்ச்சியாகிப் போயிற்று , வேகமாக அருகில் சென்று அவனைப் பிடிக்கப் போனாள்.

சட்டென்று விலகியவன் ரகுவின் தோளைப் பற்றிக் கொண்டு " ரகு , என்னைய ரூம்லக் கொண்டு நீ விடு , இல்ல நானேப் போய்க்கிறேன்…." என்றவன் அவனை விட்டு விட்டு நடக்க ஆரம்பிக்கவும் கீழே சரிய ஆரம்பித்தான்.

வேகமாக அவனைத் தாங்கிய ரகு" இல்லத்தான் ரூம்ல விடுறேன் வாங்க" என்று அழைத்துச் சென்று தள்ளாடியபடியே வந்த அவனைப் படுக்கையில் விட்டான்.

அவனது உடையை மாற்றப் போனவனை "வேண்டாம் என்று கை நீட்டித் தடுத்தவன்" குப்புற விழப் போனான்.

"ஜயோ கை, கை… " என்று வந்தவள் , அவனை நேராக படுக்க வைத்துவிட்டு , ரகு குவிடம் திரும்பி , "நீ போ ரகு , நான் பார்த்துக்கிறேன்"

அறையை விட்டு வெளியே வந்தவர்கள் , "அக்கா அத்தான் என்ன என்னவோ சொல்லி புலம்புறார். எனக்கு எல்லாம் புரியலனாலும் , ஒன்னே ஒன்னுப் புரிஞ்சதுக்கா….அது அத்தான் உங்கள அளவுக்கதிகமா விரும்புறாங்க … நீங்க யாரையோ கல்யாணம் பன்னிட்டு வந்துருக்கிங்க நினைச்சேன் … ஆனா …….., இனி அவங்களப் பிரிஞ்சு மட்டும் போகாதிங்க , நான் படிச்சு முடிச்சு இந்த வேலையில சேர்ந்ததிலிருந்து கார்த்தி அத்தானப் பக்கத்திலயேப் பார்த்துட்டு இருக்கேன்… புரிஞ்சுக்கோங்க … " என்றவன் வேகமாக கீழிறங்கிச் சென்று விட்டான்.

உள்ளே போகவா வேண்டாமா , என்று யோசித்துக் கொண்டு இருந்தவள், ஒரு முடிவுடன் அறையினுள் சென்றாள்.

உள்ளே சென்றவள் , கட்டிலில் அவனருகிலேயே அமர்ந்து கொண்டு அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

தலையை புரட்டிக் கொண்டு இருந்தவன் கண்களில் அவள் பின்னல் கையில் படவும், அதை இழுத்தவன் முகத்தருகே வந்தாள் திவ்யா.

"ஏஞ்சல், நிஜமா இங்க தான் இருக்கியா , இல்ல எப்பவும் போல என்னை ஏமாத்துறியா" என்று அவள் பின்னலை கையில் சுருட்டினான்.

"ஆ.. அத்தான் வலிக்குது.. நான் நான் இங்க தான் இருக்கேன்."

"வலிக்குதா , இங்க வலிச்சத விடவா ….. " தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்தவன்....

"ஏஞ்சல் உன் கையைத் தா"

அவனிடம் நீட்டப்பட்ட கையை திருப்பி , உள்ளங்கையில் முத்தமிட்டு , அதை கன்னத்தில் வைத்து தேய்த்தவன், " இந்த கையில அன்னைக்கு சத்தியம் பன்னித் தந்தேன் , இனி டிரிங்ஸ் , ஒரு சிப்கூட வாயில வைக்க மாட்டேன்னு , இப்ப அழிச்சிட்டேன் (கன்னத்தில் நன்கு தேய்த்துக் கொண்டே) "

கண்ணீர் வர "அத்தான் "என்றவளைப் பார்த்தவன் , " என் மேல கண்மூடித்தனமா நம்பிக்கை வச்சிருந்த ஏஞ்சல் கேட்ட சத்தியத்துக்காக இத்தனை நாள் இத ( விரல்களை மடக்கி குடிப்பது போல் செய்தவன்) தொட்டுக் கூடப் பார்க்கல , ஆனா இப்ப தான் தெரிஞ்சது , என் மேல நம்பிக்கை இல்லாம விட்டுட்டுப் போனது திவ்யஸ்ரீ ங்கிறது, ", என்றதும் , "அத்தான் அப்படிச் சொல்லாதிங்க ப்ளீஸ் " என்று அழ ஆரம்பித்தவளைப் பார்த்தவன் ,

"அழாத ஏஞ்சல் , நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா"

மெதுவாக எழுந்தவன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து,
அவளை அருகில் அமர்த்தி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

"ஏன்டா இப்படிப் பன்னின, நீ அன்னைக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை தந்தியோ , அதே அளவு துக்கத்தையும் தந்துட்டுப் போய்ட்ட , எவ்வளவு பதறிட்டேன் தெரியுமா... ம்"

அவள் தலை மீது தன் கன்னம் சாய்த்துக் கொண்டவன்" நான் மும்பய் போக உனக்கு பிளைட் க்கு புக் பன்னி இருந்தேன் , நீ செக்யூரிட்டிட்ட ரெயில்வே ஸ்டேஷன் போகனும் ஆட்டோ பிடிச்சி தாங்கன்னு சொன்னியாம், "

இங்க எல்லாரும் நீ மும்பய் போயிருக்கனு நினைச்சிட்டு இருந்துட்டாங்க. ஆனா எனக்குத் தானே தெரியும் .. நீ என்னைய நம்பாம , என் காதல நம்பாம கிளம்பிப் போயிருக்கனு" என்றவன் அவளை மெத்தையில் தள்ளிவிட்டு கோபமாக எழுந்தான்.

எழுந்தவன் நிற்க முடியாது மறுபடியும் மெத்தையில் அமர்ந்து விட்டான்.

அவளைக் கைப்பிடித்து இழுத்தவன் , " உன்னையக் கானும்னு நான் தவிச்சதவிப்பு இருக்கே அது உனக்குப் புரியாது திவ்யா.… என் ஏஞ்சல் எல்லாமே நான் தான்னு இருப்பாளே , எங்க போனாளோ , எங்க தவிக்கிறாளோனு எப்படி துடிச்சுருப்பேன் தெரியுமா …. "

"அத்தான் படுங்க நாளைக்குப் பேசிக்கலாம்"

"ஏன் என்னையத் தூங்க வச்சுட்டு திரும்ப கிளம்பிருலாம்னா " …

" இல்லத்தான் இனி உங்கள விட்டு எங்கயும் போகமாட்டேன் .இனி இந்த வீட்ட விட்டு போனா என் பிண …."

அவள் உதடுகளை தன் உதடுகளைக் கொண்டு வன்மையாக சிறையிட்டு இருந்தவன் ….அதனை விடுவித்து விட்டு "அந்த வார்த்தையச் சொன்ன "
என்று அவளைத் தள்ளி நிறுத்தியவன், "உனக்கு உயிரோட மதிப்பு தெரியும் திவ்யா. அதனால நீ எந்த குழ்நிலை வந்தாலும் உயிரை விடனும்னு நினைக்கிற சாதாரண திவ்யா கிடையாதுனு எனக்குத் தெரியும். என் ஏஞ்சல் தைரியமா உலகத்தை எதிர்கொள்றவங்கிறது தெரியப் போய் தான் , இது் இப்ப வரைக்கும் நிற்காம ஓடிக்கிட்டு இருக்கு" என்று இதயத்தை தொட்டுக் காண்பிக்கவும் ,

வேகமாக அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டவள் "அப்படிலாம் பேசாதிங்க அத்தான் , நீங்க நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கனும்னு தானே , நான் போனதே ….. ஒரு வார்த்தை உங்களை யாரும் தப்பாவோ குறைவாவோ பேசிடக் கூடாதுன்னுதான நான் போனேன்.....ப்ளீஸ் இப்படி பேசாதிங்க...''

அவள் முகத்தை தன் முகம் பார்த்து நிமிர்த்தியவன், தன் கண்களை அவள் கண்களோடு கலக்கவிட்டான். போதையில் சிவப்பேறியிருந்த அவன் கண்கள் , இப்போது கோபத்தில் இரத்த நிறம் கொண்டு இருந்தது.

"நீ இல்லாம நான் நல்லா இருந்துருவேனா ஏஞ்சல் …. அப்போ எல்லாம் பிளான்ட் (planned).…. ,திட்டம் போட்டு வெளியேறி இருக்க…. அத்தனை வருஷ காதல உன்கிட்ட ஒவ்வொரு செகன்ட் ம் உன் கிட்ட காட்டினது உனக்குத் தெரியல இல்ல. எவ்வளவு நம்பிக்கை என் மேல வச்சிருந்து இருக்க …
 

ShanviSaran

Well-Known Member
#2
ச்ச …. நான் நினைக்கல திவ்யா … என் ஏஞ்சல் எதையும் உரிமை இல்லாம ஏத்துக்க மாட்டாளே , எந்த சின்னப் பொருளா இருந்தாக்கூட தனக்கு உரிமையான, தனக்கு மட்டுமே சொந்தமானத மட்டும் தான் எடுத்துக்க விரும்புவா , அது போல அன்னைக்கு நான் கேட்டேன்றதுக்காக தன்னையே தந்துட்டு , ஒரு பெண்ணா குற்றவுணர்ச்சில போய்ட்டியோனு தான் இது நாள் வரை நினைச்சுட்டு இருந்தேன்.

இல்லடா ஏஞ்சு , உனக்கு அந்த குற்றவுணர்ச்சி தேவையில்லை , நாம கணவன் மனைவி , வெறும் வார்த்தையால இல்ல , சட்டப்படி நாம கணவன் மனைவினு சொல்லி உன்னைக் கூட்டிட்டு வரனும்னு தேடிட்டே இருந்தேன்.

அவன் சட்டப்படி மனைவி என்றதும் திகைத்தவள் "அத்தான் நீங்க ….நீங்க.... என்ன சொல்றீங்க" என்றதும் , அன்று அவளுக்கு பரிசு என்று அளித்து திறக்கப்படாமலயே அவள் விட்டுச் சென்ற பார்சலை க போர்டிலிருந்து எடுத்து அவள் முன்னால் போட்டவன், அங்கிருந்த சோபாவில் கால் நீட்டி தலையை மேலேப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டான்.

அந்தப் பார்சலைக் கையில் எடுத்துப் பரபரவெனப் பிரித்தாள். உள்ளிருந்த அவர்களது திருமண பதிவுப் பத்திரத்தையும் , அருகில் இன்னொரு நகைப் பெட்டியில் இருந்த , அவர்களது குடும்ப வழக்கத்திலான தாலிஇணைக்கப்பட்ட தங்க சங்கிலியையும் பார்த்து , துடைக்க துடைக்க கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது.

"அதெப்படி உன் அத்தான் மேல உனக்கு நம்பிக்கை இல்லாமப் போச்சு. காலேஜ் சேரப் போனப்போ வயித்துவலில துடிச்சுட்டு , ஒரு பொண்ணு , தான் தகப்பன் , சகோதரன் கிட்ட கேட்டு வாங்க கூச்சப்படுற ஒரு விஷயத்தை என் கிட்ட சொன்னப் பார்த்தியா, அப்ப முடிவெடுத்தேன் … என் ஏஞ்சல் என்கிட்ட கேட்கிறானா , இனி அவளுக்கு எல்லாமே வா நான் இருக்கனும்னு, என் மனைவிங்கிற உரிமைய அவளுக்குத் தரனும்னு….

நீ சின்னப் பொண்ணு உன் கவனம் எல்லாம் உன் படிப்புல இருக்கனும் , உனக்கு என்னையப் புரிய வச்சுட்டு சொல்லனும்னு இருந்தேன். ப்ச் … தைரியம் இல்ல … எங்க நீ என்னையத் தப்பா நினைச்சுருவியோனு பயம் ….

ரிஜிஸ்ட்ரேஷன் பன்னது நிலப்பத்திரம் இல்ல, நம்ம கல்யாணப் பத்திரம் " .

"அப்ப அப்ப தீபக் கண்ணா"

"ம் …. அவனுக்கு அங்க வந்துதான் தெரியும். உனக்காக என்கிட்ட சண்டப் போட்டான். என் தங்கச்சி திவ்யா , அவள ஏமாத்திகையெழுத்து வாங்கிட்டனு என்னைய அடிக்கக் கூட செய்தான்.

அப்புறம் என்னை என் காதல அவன் புரிஞ்சிகிட்டான். இப்ப வரைக்கும் அவன் வாய் திறந்து யார்க்கிட்டயும் சொல்லல ….என் நட்ப மதிச்சு அவன் மனைவி கிட்டக் கூட… என் தங்கச்சியாவே இருந்தாலும் சொல்லி இருந்திருக்க மாட்டான்.

மே பீ இப்ப உன்னையப் பார்த்தப்பிறகு சொல்லிருக்கலாம். அவன் என் நட்பு மேல நம்பிக்கை வச்சு இருந்தான் ஏஞ்சல் , நீ ஏன் என் காதல் மேல வைக்கல...
வேகமாக அவனருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டவள் ,

"இல்லத்தான் … அப்படி இல்ல … நீங்க யார்க்கிட்டயும் எந்தப் பேச்சும் வாங்க கூடாதுனு …."

அவள் கையை உதறியவன்" மூச்… " என்று விரலை உதட்டின் மேல் வைத்து சொன்னவன் ,

"பார்வதிக்கூட சொன்னா , அவங்க பெரியம்மா ஏதேதோ பேசி அவளக் குழப்பிட்டு இருந்தாங்க, அதனால போய்ட்டாளோனு, ஆனா நான் நம்பல , என் ஏஞ்சல் அடுத்தவங்க பேசறத கேட்டுட்டு என்னை விட்டுட்டுப் போயிருக்க மாட்டானு உறுதியா நம்புனேன் டா, அன்னைக்கு என் அம்மாக் கேட்டப்போகூட , உங்க மருமக என்னால போயிருக்க மாட்டாள் , எனக்காக போயிருப்பானு சொன்னேன். நீ அப்படி இல்லனு நிருபிச்சிட்டியே ,யார் என்ன சொன்னாலும் என் கிட்ட வந்து சொல்லிருந்தருக்கனும் இல்லையா , நீ என்கிட்டக் கூட சொல்லாம … என்னை நம்பாம …

என்னால என் மேல நம்பிக்கை இல்லாம யாரோ ஏதோ சொன்னாங்கனு கிளம்பி போயிருக்க …..

சட்டென்று அவளருகில் வந்தவன், அவள் முகவாயைப் பிடித்து "ஏஞ்சல் நீ முன்னவே முடிவுயெடுத்து இருக்கன்னா , அன்னைக்கு எப்படி என் கூட இருந்த ….ஓ அப்போ என் கூட படுத்தது காதல்ல இல்லையா …. கடமைக்கு படுத்தியா" என்றவன் வாயை வேகமாக கரம் கொண்டு முடியவள்.

"ப்ளீஸ் அத்தான்.….ப்ளீஸ்..… அப்படி சொல்லாதிங்க … என் கழுத்துல இதப் போடலனாலும் …. இதோ இந்தப் பத்திரம் இல்லனாலும் , நான் உங்களுக்கு என்னையத் தந்துதான் இருப்பேன். எப்போ நீங்க என்மனசுக்குள்ள வந்தீங்களோ அப்பவே நீங்க என் கணவர் தான் , நான் உங்க மனைவிதான் "

அவள் கையை உதட்டிலிருந்து இருந்து பிரித்தவன், "ஓ அப்போ ஏன் உன் படிப்பு சர்டிபிகேட்ஸ் மட்டும் எடுத்துட்டுப் போன , உன் பேங்க் அக்கவுன்ட் அப்படியே ஒரு ரூபாக் கூட எடுக்கப்படாம இங்கயே இருக்கு , இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம் …. ஏன் அன்னைக்கு போட்டு இருந்த நகையெல்லாம் கூட கழட்டி வச்சுட்டுப் போயிட்ட ….. அப்போ …. நான் கார்டியனா இருந்து உன்னையப் பார்த்து கிட்டத்துக்கு இதுக்கு அதுனு ….. "

தன் தலையில் வேகமாக அடித்துக் கொண்டவள் "தப்புதான் நான் உங்கள நம்பாமபோனது தப்புதான் …."
அவன் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள் "என்னை மன்னிசிருங்க அத்தான் ….என்னால நீங்க சொல்றது எல்லாம் கேட்க்க முடியல. நான் உங்களுக்காக உங்க நன்மைக்காகனு , சொன்னது , செய்தது எல்லாம் உங்கள இவ்வளவு வேதனைப்படுத்தும்னு நினைக்கல" என்று அழுதவளை ஒரு கைக் கொடுத்து தூக்கியவன் , அவளை அந்தக் கட்டிலருகே கூட்டிச் சென்றான்.

"ஆம்பிள்ளைங்க அழமாட்டாங்க , அழுதா அவங்க கோழை, ஏன் அவன் ஆம்பிள்ளையேக் கிடையாதுனு சொல்வாங்க இல்லையா ….. சொல்லிட்டுப் போகட்டும் …. என்னைய சொல்லிக்கட்டும் அப்படி …. ஆனா உனக்குத் தெரியும் தானே நான் ஆம்பிள்ளைனு…."

"ஏன் அத்தான் என்னை வதைக்கிறது பத்தாதுனு உங்களையே வதைச்சுக்கிறிங்க … " என்று அவன் நெஞ்சில் அடித்து அழுதவளைப் பார்த்து விரக்தி சிரிப்பு சிரித்தவன், "எத்தனை நாள் னைட் இந்த மெத்தைல, என் ஏஞ்சல் எங்க இருக்காளோ எப்படி இருக்காளோ அவளை என்கிட்ட சேர்த்துறுக் கடவுளேனு அழுதுருப்பேன் தெரியுமா"

"அத்தான் , கொஞ்ச நேரம் தூங்குங்க , காலைலப் பேசிக்கலாம் " என்று அவனைப் படுக்க வைத்தவள் கையை இறுகப்பற்றியவன் …

"வா நீயும் வந்து என் கூடப் படு"

"இதோ " என்றவள் அவனருகே வந்துப் படுத்துக் கொண்டாள். அவனது அடிபட்ட கை வலிக்கவும் , ' ஷ்' என்றவன் முகத்தை சுருக்கவும் ,

"பார்த்து பார்த்து "என்று சொல்லிக் கொண்டே அதைத் தடவிக் கொடுத்தாள்.

"ஏஞ்சல் கை எப்படி அடிபட்டுச்சு தெரியுமா , உன்னைய தனியாளா இத்தனை வருஷம் தேடுன எனக்கு , நீ கிடைச்சிட்ட அதுவும் எம் பிள்ளைய கைல வச்சிட்டுனு விக்ரம் போன் பன்னினான் …. எப்படி இருக்கும் சொல்லு எனக்கு ….. அதுலதான் கார் பேலன்ஸ் தவறிருச்சு"

அவனை நெருங்கி இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் , "போதும் நாளைக்கு பேசிக்கலாம் அத்தான் தூங்குங்க"

" ஆனாலும் உங்க ரெண்டு பேரையும் பார்க்கிற ஆசையில எப்படியோ கன்ட்ரோல்க்கு கொண்டு வந்தேன் … அப்படியும் அடிப்பட்டுருச்சுடா…. நம்ம பிள்ளையக்கூட இத்தனை வருஷம் என் கண்ல காட்டலயே நீ … போ …ஐ ஹேட் யூ , ஐ ஹேட் யூ " என்று அவளைத் தள்ளிவிடப் பார்த்தவனை ,

"ஐ லவ் யூ அத்தான் , ஐ லவ் யூ …. நான் இனி உங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன் …."

"அப்புறம் எப்படி நீ அப்படி கேட்கலாம்…. நீ போயிட்டா அடுத்த நிமிஷம் இன்னொருத்தி கழுத்துல தாலி கட்டி நான் குடும்பம் நடத்திருப்பேன்னு …. அப்படித்தானே நினைச்சிருக்கே….என் காதல் மேல அவ்வளவு நம்பிக்கை ,போ போ , என் மேல காதல் இல்லாத நீ வேண்டாம் போ போ "

சொல்லிக் கொண்டே வந்தவன் , அவளது அருகாமையிலும் , மனதில் உள்ள பாரம் இறக்கி விட்ட நிம்மதியிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டான்.

திவ்யாவிற்குத் தான் உறங்கா இரவாகியது. குற்றவுணர்ச்சியில் தவித்தவள் எப்போது உறங்கினாளோ …. சூரிய வெளிச்சம் கண்களைக் கூச செய்யவும் தான் எழுந்தாள்.

எழுந்தவளுக்கு அப்போதுதான் தான் அவனறையில் அவன் மெத்தையில் படுத்திருப்பது உறைத்தது. வேகமாக எழும்பியவள் மணிப் பார்க்க அதுப் பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது.

" என்ன இங்க வந்ததிலிருந்து இப்படி தூங்கிட்டே இருக்கேன்."
வேகமாக எழுந்து அறையை விட்டு தன் உடைமைகள் இருந்த அறைக்குச் சென்று குளித்து முடித்து அழகிய காட்டன் புடவை அணிந்து கொண்டு கீழே வந்தாள்.

கீழே தன் மகனிடம் விளையாடிக் கொண்டு இருந்த கார்த்தி , "மா , நாங்க ரூம்க்குப் போறோம். எல்லாம் தயார்னா சொல்லுங்க , நான் கீழே வாறேன்" என்றவன் மகனைத் தூக்கிக் கொண்டு மாடியேறினான்.

இரவு முழுவதும் அவளிடம் பேசிக் கொண்டே இருந்தவன் இப்பொழுது அவளை ஏறெடுத்தும் பாராது சென்றான்.

நேராக சாந்தியிடம் சென்றவள், "அத்த நான் கொஞ்சம் ஊருக்குப் போயிட்டு வரட்டுமா , உடனே போய்ட்டுக் கிளம்பி வந்துருவேன்."

அவளை அதிசயமாகப் பார்த்தவர் " இப்ப நாம எல்லாருமே ஊருக்குத்தான் கிளம்பிட்டு இருக்கோம் … உனக்குத் தெரியாதா ?"

"அப்படியா எனக்குத் தெரியாது அத்த"

"செல்வராசுவும், சீதாவும் இனி ஊர்ல இருக்கிற நிலங்களப் பாத்துக்க சொல்லி அங்க குடி வைக்கப் போறோம் … அப்படியே நம்ம குலதெய்வக் கோயிலுக்கும் போய்ட்டு வரப் போறோம்… எங்க குலத்துக்கு வாரிசு வந்து இருக்கும் போது அங்க போய் நன்றி சொல்லனும் இல்லையா .." என்றவர் நகர்ந்து விட்டார்.

இதோ அனைவரும் கார்த்தியின் தாய்மாமா பண்ணை வீட்டுக்கு வந்தனர்.
 

ShanviSaran

Well-Known Member
#3
காரில் அங்கு வந்து சேரும் வரை திவ்யாவிடம் பேசவில்லை கார்த்தி .அவளாக பேச வந்தாலும் அவர்கள் காரை ஓட்டி வந்த ரகுமூலமே பேசினான்.

ரகு வந்து நிறுத்திய இடத்தில் இறங்கிய கார்த்தி, " ரகு உங்க அக்காவ இறங்க சொல்லு … "

வேகமாக காரில் இருந்து இறங்கியவள் அந்த இடத்தைப் பார்த்து வியந்து விட்டாள். ஓர் அழகிய பூந்தோட்டத்திற்கு நடுவில் அவளது பாட்டிக்கு சமாதி எழுப்பப்பட்டு எப்பொழுதும் விளக்கு இருப்பது போல் அமைக்கப்பட்டு இருந்தது.

கைகளில் விஷாகனை தூக்கிக் கொண்டு சென்று … அங்கு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். குழந்தை நழுவி தந்தையிடம் சென்று விட்டான். அப்பாவை கண்டுகொண்ட நாளிலிருந்து அவன் அவளிடம் இருப்பதே இல்லை.

தன் வேதனைகள் , சந்தோஷங்கள் அத்தனையும் அமைதியாக பாட்டியிடம் கொட்டியவள் , எழுந்து வந்து காரில் அமர்ந்து கொண்டாள்.

அங்கு ஏற்கனவே வேறொரு காரில் கார்த்தியின் பெற்றோரும் செல்வராசுவும் சீதாவும் வந்திருந்தனர்.

வீட்டிற்குள் சென்றவள் நேராக கார்த்தியின் பெற்றோர் முன் சென்று நின்றாள். என்ன செய்யப் போகிறாள் என்பதை ஊகித்தக் கார்த்தி , அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

கையில் புடவை முந்தானையை சுருட்டி சுருட்டி எடுத்தவள் … தயங்கி தயங்கி … "மாமா ..அத்தை … நான்.. நான் "

"திவி … எதையும் மனசுல வச்சுட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி …. எங்களையும் தவிக்க விடாத … சொல்ல வர்றத சொல்லிரு."

அவரை நேராகப் பார்த்தவள்" அத்த நானும் கார்த்தி அத்தானும் விரும்பினோம் …. திடீர் சூழ்நிலை கல்யாணமும் பன்னிக்கிட்டோம். அத்தான் ….அந்தான் உங்ககிட்ட எல்லாம் சொல்லத்தான் போனாங்க..... நான் தான் தடுத்து செளமி கல்யாணம் முடியட்டும்னு சொன்னேன்.. ஆனா ஆனா "அழுத வளை ஆதரவாக அணைத்த சாந்தி ..

" உன்னைய தாய்ப் போல தானம்மா நான் பார்த்துக்கிட்டேன் … சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லி இருந்தா எத்தனையோ பிரச்சினைகள தவிர்த்து இருக்கலாம். உன் மேல இருக்கிற வருத்தத்த விட அவன் மேல தான் எனக்கு வருத்தம் அதிகம் … "

"அத்த அத்தான ஒன்னும் சொல்லாதிங்க , அத்தனை முட்டாள் தனமும் செய்தது தான் …. என்னைய மன்னிச்சிருங்க" என்று காலில் விழுந்தவளை ஆதரவாக தூக்கி நிறுத்தினார்.

" எதுவானாலும் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க .. அதுதான் நல்லது "

கார்த்தியைப் பார்த்தவர் "ரெண்டு பேரும் போய் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. காலையில யே கோயிலுக்குப் போகனும்."

வேலு கார்த்தியிடம் வந்து தோள் தொட்டு "அப்பா இப்போ வரை உன்னை எதுவும் கேட்டதில்லை. நம்ம பிஸ்னஸ் மொத்தமும் ஹான்டில் பன்ற உனக்கு நான் சொல்லிப் புரிய வைக்கனும்னு அவசியமில்லை." என்று அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பது போல் செய்து விட்டு அவர் அறைக்குச் சென்றார்.

திவ்யாவிடம் திரும்பிய சாந்தி "அந்த ரூம்ல நீங்க ரெண்டு பேரும் தங்குங்க" என்றவர், கணவன் பின்னோடு தங்களறைக்குச் சென்றுவிட்டார்.

குழந்தையை தூக்கிக் கொண்டு போய் சாப்பாடு ஊட்டியவள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள்.

மொபைலில் ஒரு கையால் ஏதோ செய்துக்கொண்டு இருந்தவனைப் பார்த்துக் கொண்டே குழந்தைக்கு உடை மாற்றினாள் .

குழந்தை ஓடி வந்து அப்பாவின் மேல் படுத்துக் கொண்டவன் … அவனிடம் கதைப்பேச ஆரம்பித்து விட்டான். இருவரது பேச்சையும் ரசித்துக் கொண்டே குளியலறைச் சென்று குளித்து உடைமாற்றி வருவதற்குள் குழந்தை தூங்கி விட்டிருந்தான்.

அவனருகிலேயே கார்த்தியும் கண்ணை மூடி இருக்கவும் அருகில் வந்தவள் .." நீங்களும் டிரஸ் மாத்திக்குறிங்களா அத்தான் "

பதில் இல்லாது போகவும் , அவனருகில் சென்று அவனைத் தொட்டு "அத்தான் " என்றாள்.

பட்டென்று அவள் கையை எடுத்து விட்டவன். போர்வையை எடுத்து தனக்கும் குழந்தைக்குமாக போர்த்திக் கொண்டுப் படுத்துக் கொண்டான்.

மனதிற்கு வேதனையாக இருந்தாலும் , அவனின் கோபம் நியாயமானதே என்று சமாதானப்படுத்திக் கொண்டவள் . அந்தப்புறம் போய்ப் படுத்துக் கொண்டாள்.

அதிகாலை துயில் கலைந்தவள் அருகில் குழந்தையும் , அவனும் இல்லை. வெளியேப் பேச்சுக் குரல்கள் கேட்கவும் , எழப்போகவும் … உள்ளே பட்டுப்புடவை அலங்காரத்தில் செளமியும் , பார்வதியும் வந்தனர்.

"செளமி , பாரு நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்திங்க , சொல்லவே இல்ல."

"செளமி உங்கண்ணிகாரிய சீக்கிரமா போய் குளிச்சிட்டு இந்தப் புடவையை கட்டச் சொல்லு , பெரியம்மா கோயிலுக்கு போக நேரமாச்சு சொன்னாங்க"

"இதோ கிளம்புறேன்" என்றவள் குளித்து பட்டுப்புடவைக் கட்டித் தயாரானாள்.செளமி அவளை நிறைய நகைகள் பூட்டி அலங்கரித்துக் கொண்டு இருந்தாள்.

"செளமி ஏன் இவ்வளவு நகை… வேண்டாம்டி"

"இதெல்லாம் எங்கண்ணன் பொண்டாட்டிக்கு சேர வேண்டியது. அதனால நீ போட்டுத்தான் ஆகனும். அப்புறம் என்ன ஏதுனு கேட்க்காம எங்கக் கூட கிளம்புறவழியப்பாரு " என்று அதட்டி அவளை அலங்கரித்து விட்டாள். பாருவோ செளமி மூலமாகவே அவளிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

கோவிலுக்கு சென்று விட்டு வந்து பாருவை சமாதானப் படுத்தலாம் என்று அவர்களுடன் கிளம்பிச் சென்றாள். வெளியே வரிசையாக அவர்கள் வீட்டுக் கார்கள் நின்றுக் கொண்டு இருந்தது. இவள் வண்டியில் ஏறவும் , எல்லா வண்டிகளும் ஒன்றன் பின் ஒன்றாக
திருச்செந்தூரை நோக்கி செல்லவும், " திருச்செந்துராப் போறோம் , முதல்லயே சொல்லி இருந்தா இன்னும் சீக்கிரம் ரெடியாகி இருக்கலாம்"

திருச்செந்துர் முருகன் சந்நிதானத்திற்குச் சென்ற திவ்யா கார்த்திக்கு மாலை அணிவித்துமனையில் அமர வைத்து திவ்யாவின் பெற்றோர் சார்பில் செல்வராசு சீதா தம்பதியினர் கார்த்திக்கு தாரை வார்த்து தர … கெட்டிமேளம் முழங்க, கார்த்தி தன் ஒற்றைக்கையால் தன் தங்கையின் உதவியுடன் திவ்யாவின் கழுத்தில், அவளுக்காக வாங்கி வைத்திருந்த திருமாங்கல்யத்தை அணிவித்தான்.

வந்து இறங்கியதிலிருந்து மெளனமாக நடப்பதை ஏற்றுக் கொண்டிருந்தவள்…. மாங்கல்யம் அணிவித்து அவன் நெற்றியில் குங்குமம் இட்டதும் கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டது.

அவள் அருகில் வந்த செளமினியும் பார்வதியும் கண்களைத் துடைத்து அவளை ஆதரவாகப் பற்றிக் கொண்டனர்.

பாண்டியனின் பெற்றோரும் , பார்வதியின் பெற்றோரும் கூட வந்திருந்தனர்.

அவர்களைப் பொருத்தவரை இது தோஷம் நீங்க செய்யப்பட்ட திருமணம் அவனது அடிபட்ட கையைப் பார்த்தவர்கள் … அதை உண்மை என்றே நம்பினர்.

இது தனக்காக தன் கெளரவம் காப்பற்றப்பட கூறப்பட்டது என்பதை அறிந்தவளுக்கு ….இப்படிப்பட்ட உறவுகளைப் பெற்ற நான் பாக்கியவதி என்றே நினைத்தாள்.

எல்லோரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்களுக்கு , ஓர் உயர்தர உணவகத்தில் விருந்து அளித்து விட்டு மணமக்களை அழைத்துக் கொண்டு திவ்யாவின் பிறந்த ஊரை நோக்கி கார் சென்றது.

விஷாகனை சாந்தி கீழிறக்கவில்லை அவரோடையே வைத்திருந்தார் .குழந்தையும் தன் வயதுக் குழந்தைகளான , பார்வதி , செளமியின் புத்திரர்கள் ஆதி ,கவினோடு விளையாடியதால் தன் அன்னையை அதிகம் தேடவில்லை.

முக்கால் மணி நேரப் பயணமே , ஆனால் அதிகாலை எழுந்தது , மணப்பெண்ணாக சடங்குகள் செய்தது என அயர்வில் இருந்தவள் , காரில் தன் கணவனின் தோள் மீது சாய்ந்து நன்கு தூங்கி விட்டாள்.

வீடு வரவும் அவளைத் தட்டி எழுப்பியவன் , ஒன்றும் பேசாமல் இறங்கி வந்து நின்று கொண்டான். அவளும் இறங்கி அவனருகே நின்று கொண்டாள். ஆரத்தி கரைத்து எடுத்து வந்த செளமி அவர்களுக்கு ஆலம் சுற்றி , "அண்ணா அப்படியே பர்ஸ் எடுத்துக் கொடுத்துரு, ரொம்ப வருஷம் கழிச்சி இந்த வாய்ப்பு வந்துருக்கு … சோ கையிலத் தா " என்றாள்.

"மினிமா உனக்கில்லாததா இந்தா " என்றவன் அவள் கையில் தன் பர்ஸை எடுத்து வைத்தான்.

அண்ணன் தங்கையின் இந்தப் பேச்சை ரசித்துக் கொண்டு இருந்தவள் . அப்பொழுதுதான் கவனித்தாள் இது காலையில் தாங்கள் தங்கி இருந்த வீடு போல இல்லையே , என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்களில் பட்டது , அந்த ஒங்கி ,அதிக கிளைகள் பரப்பி வளர்ந்திருந்த வேப்பமரம்.

ஆம் அது அவள் பிறந்த, வளர்ந்த ஆசையாக ஊஞ்சல் கட்டி விளையாடிய அவள் வீட்டு வேப்பமரம் தான்.

அந்த இடத்தில் இருக்கும் மரத்தை விட்டு விட்டு எதுவும் செய்யுங்கள் …. என்று தன் கணவனிடம் சொன்ன மரம் தான் அது. அதைச் சுற்றி அழகிய புல்வெளி அமைத்து அருகில் ஓர் அலங்கார ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தது.

அந்த வீடும் ஒரு சிறிய மாளிகைப் போன்றுதான் இருந்தது. அருகில் இருந்த நிலத்தையும் வாங்கி இந்த வீட்டைக் கார்த்தி கட்டியிருந்தான்.

காதல் பொங்க தன் கணவனைப் பார்த்தவள் … "இத்தனைக் காதலை சுமந்தவனையா நான் விட்டுச் சென்றேன் … பாவி நான் … பெரும் பாவம் செய்து விட்டேனே , கடவுளே
என்னை இவரோடு நீண்ட நாள் வாழவிடு ..... இத்தனை வருடங்கள் அவருக்கு கிடைக்காமல் செய்த என் அத்தனை காதலையும் உங்களுக்கு அள்ளித்தருவேன் அத்தான் …..

"இப்படி பட்ட அருமையான காதலையும் , கணவனையும் விட்டுப் போன நான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் … கடவுளே எங்களை மகிழ்ச்சியாக வாழ விடு ….என் அத்தானின் கோபத்தை தணிக்க வச்சுருவேன். அவர் பேசலனா என்ன , நான் பேசுவேன். எனக்காகவே பார்த்து பார்த்து செய்யுற ….என் அத்தான இனி சந்தோஷமா வச்சுக்குவேன்.

" ஐ லவ் யூ அத்தான்… ஐ லவ் யூ சோ மச்" அவனை நெருங்கி நின்றவள்,
அவன் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தவள் , அந்த வானில் சிறகில்லாமல் பறப்பது போன்ற உணர்வில் இருந்தாள்.

அவள் கை கோர்க்கவுமே அவளை ஆழ்ந்து ஒரு நொடிப் பார்த்தவன் …. கைகளை விலக்காது , பார்வையை மட்டும் விலக்கிக் கொண்டான். கார்த்தியின் கோபம் தணியுமா? தணிப்பாளா திவ்யா?

இடையில் இழந்த கணவனோடான காதல் நாட்களை எப்படி மீட்டு எடுத்தாளா என்பதை அடுத்தப் பதிவில் காண்போம் நட் பூக்களே….
 

Saroja

Well-Known Member
#7
அருமையான பதிவு
எல்லாம் அருமையாக நல்ல விதமாக நிறைவேற
எத்தனை நல்ல உள்ளங்கள்
கார்த்திக் திவ்யா காதல் வாழ்க்கை
இனிமையாக இருக்க வேண்டும்:D
 

Suvitha

Well-Known Member
#10
திவ்யா, கார்த்திக் இரண்டு பேருமே பரிதாபத்துக்குரியவரே..
இதில் யாரை குறை சொல்வது..
எப்படியோ ஜோடிப்புறாக்கள் இணை சேர்ந்தாயிற்று...
கார்த்திக் பேசா விடில் என்ன??
திவ்யா இனி கார்த்திக்கை பேச வைத்து விடுவாளென்று நம்பலாம்...
 

Advertisement

New Episodes