என் இதயமே நீ தானே 11

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#1
"கார்த்தி " என்ற குரலில் வேகமாக எழுந்தவன், அவளும் எழ கைக் கொடுத்தான். ஆனால் அதற்குள் சமாளித்தவள் எழ முயலும் போது தான் கவனித்தாள் , அவளது வலது தோள்பட்டை ஓரம் சுடிதார் கிழிபட்டு இருப்பதை , சட்டென்று தரையில் கிடந்த துப்பட்டாவை தோள்களில் போட்ட வள் சுவரோரம் சென்று நின்று கொண்டாள்.

சாந்திதான் உள்ளே வந்து கொண்டு இருந்தார். திவ்யா சுவரோரம் மிரண்ட பார்வை பார்த்துக் கொண்டு நின்றதை கவனித்தவர் , அவள் அருகே சென்று "என்ன மா பயந்துட்டியா , நீ இங்க இருக்கன்னு சொல்றதக்குள்ள உள்ள வந்துட்டான்" .

கார்த்தியிடம் சென்றவர் "பாட்டியப் பார்க்க அவ்வளவு அவசரம், பாரு சின்னப் பொண்ணு நீதி திடீர்னு உள்ள வந்ததும் எப்படி பயந்துட்டானு.கார்த்தி ,இது திவ்யா பாட்டிக்கு துணைக்கு வந்து இருக்கிறாப்பா உன் தங்கச்சி செட்தான்."

திவ்யாவிடம் திரும்பி" திவ்யா மா , இவன் என் பையன் கார்த்தி ஹால்ல இவன் போட்டோ இருக்குமே பார்த்து இருப்பே , ஆனா அது இங்க படிக்கும் போது எடுத்தது , இப்போ அவங்கப்பா விட வளர்ந்து நிற்கிறான் " என்று ஒரு தாயின் பெருமையோடு சொன்னார்.

"ஓ அப்படியா அத்த செளமி அண்ணாவா , நீங்க பேசிட்டு இருங்க நான் போய் சீதா அக்காக்கு ஹெல்ப் பன்றேன்." என்று சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் அறையை விட்டு வெளியேறும் வரை அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி , அவள் வெளியே சென்றதும் தான் பார்வையை பாட்டியை நோக்கிச் செலுத்தி வன் , அவர் அருகில் சென்று அவர் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டவன், "பாட்டி , இங்க பாருங்க உங்க ஐயா வந்து இருக்கேன்"

கார்த்திக்கு பாட்டியின் மேல் உள்ள பிரியம் தெரியுமாதலால் சாந்தி அமைதியாக அருகில் நின்று கொண்டு அவனது தோள்களைப் பற்றி நின்றுக் கொண்டு இருந்தார் . பேரனின் தொடுகையில் கண் விழித்தவர் "ஐயா , ராசா, இந்த கிழவிய பார்க்க வந்துட்டியா , உன்னைப் பார்க்கிறதுக்காகவே இந்த உயிர பிடிச்சு வச்சு இருக்கேன் " என்று கண் கலங்கினார்.

அவரது கண்களை துடைத்து விட்டுக் கொண்டே "பாட்டி இப்படியெல்லாம் பேசா திங்க , நான் தான் வந்துட்டேன்ல , இனி உங்களுக்கு ஒன்னுமில்ல சரியா , சீக்கிரம் எந்திருச்சு நடக்க ஆரம்பிச்சுருவிங்க " என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அறையை தட்டிவிட்டு , கைகளில் காபி கப்புகளுடன் திவ்யா உள் நுழைந்தாள்.

அவர்கள் அருகில் வந்தவள்" பாட்டியும் முழிச்சுட்டாங்களா, அத்த நீங்க ரெண்டு பேரும் குடிங்க , நான் போய் பாட்டிக்கு எடுத்துட்டு வாரேன் ." என்றவள் திரும்பி அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் அறைக்குள் வரும்போதே அவளையே பார்வையால் தொடர்ந்தவன், அப்பொழுதுதான் கவனித்தான் , அவளது நீண்ட பின்னல் பிரிக்கப்பட்டு அவளது கூந்தல் அலை அலையென தவழ்வதை , "வாவ் …ஏஞ்சல் வந்துட்டியா என்கிட்ட …." கண்கள் மூடி ரசித்துக் கொண்டு இருந்தவனை , " கார்த்தி டயர்டா இருக்கா , இந்தா காபி குடிச்சிட்டு போய் ரெஸ்ட் எடு , பாட்டிகிட்ட அப்புறம் பேசிக்கலாம்"

"ம் சரி மா ,யார் மா அந்த பொண்ணு உங்கள அத்தைனு சொல்றா"

"ஊர்ல உங்க சரசு சித்திக்கு சொந்தக்கார பொண்ணுப்பா, பாவம் சின்ன குழந்தையா இருக்கும் போதே தாய் தகப்பன இழந்துருச்சு ... " என்று சொல்லிக் கொண்டே சென்றவர் , தன் மாமியாரைப் பார்த்து , "அத்தை நீங்க சொல்லுவீங்களே வள்ளியம்மை னு அவங்க மகன் பேத்தி தான் "

அதைக் கேட்ட பெரியவர் "என்னது வள்ளி பேத்தியா… நல்லா வாழ்ந்த குடும்பம் , யார் கண்ணு பட்டுச்சோ , இப்படி நிலைமைல கொண்டு வந்து விட்டுருக்கு , அவள நல்லா பார்த்துக்கோ சாந்தி "

"சரி அத்தை நீங்க திவ்யா கொண்டு வரத குடிச்சுட்டு தூங்குங்க, வாப்பா கார்த்தி நாம போலாம் "

அவர்கள் வெளியேறவும் திவ்யா பாட்டிக்கு தேவையானதை ஒரு பெரிய தட்டில் வைத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே மாடிப்படிகளில் கால் வைத்தவன் , வீட்டிற்கு வந்த அவசரத்தில் அவனது பொருட்கள் எல்லாம் காரிலேயே இருப்பதை எண்ணி வெளியே சென்றான்.

அதற்குள் அங்கு செல்வராசு வந்து இருந்தார். கார்த்தி படியிறங்கி வரவும் , முகம் சந்தோஷத்தில் மூழ்க அவனிடம் வந்தவர் " என்ன மருமகனே சொல்லாம கொள்ளாம வந்து நிக்கீக , அக்கா நீங்க நாளைக்குத்தான் வருவீக விடிகாலையில் கிளம்பனும் சொன்னாக "

"மாமா , உங்க முகத்துல என்னைய திடீர்னு பார்த்ததும் வருது பாருங்க இந்த சந்தோஷம் அதான் இன்னிக்கே வந்துட்டேன்" என்று சொல்லிக் கொண்டே கார் டிக்கியைத் திறந்தான்.

"மருமவனே இருங்க நான் போய் எல்லாத்தையும் வச்சுட்டு வந்துருறேன்" என்று சொல்லிக் கொண்டே அவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். காரைக் கொண்டு ஷெட்டில் பார்க் செய்தவன் , திரும்பி நடக்கும் போது , பாட்டி இருக்கும் அறையில் இருந்து சத்தம் வரவும் , திவ்யாவைப் பார்க்கும் ஆவலில் பால்கனி யோரம் இருந்த செடியின் மறைவில் இருந்துப் பார்த்தான்.

"ஆச்சி , இன்னும் ரெண்டு வாய் குடிங்க , அப்போதான் சீக்கிரம் எந்திரிச்சு நடக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே ஏதோ ஊட்டிக் கொண்டு இருந்தாள். அவனுக்கு அவள் முகம் தெரியவில்லை. விரித்து விடப்பட்டு இருந்த அந்த நீளக் கருங்கூந்தல் தான் தெரிந்தது.

அதையே ரசித்துக் கொண்டு இருந்தவன் " ஏஞ்சல் , இந்த கூந்தல் தான் என்ன டிஸ்டர்ப் பன்னுதுடா, பக்கத்தில வந்து தொட்டுப் பார்க்கணும் போல இருக்கு , நீயே நான் இருக்கும் இடத்துக்கு வருவனு நான் நினைக்கல , யு ஸ்வீட் ஏஞ்சல்" என்று கண்ணில் அவளை நிறைத்துக் கொண்டே அங்கிருந்த மரத்தில் சாய்ந்து கைகளைக் கட்டி ரசித்துக் கொண்டு இருந்தான்.

திடிரென்று பாட்டி வாந்தி எடுக்கும் சத்தத்தில் நினைவுக்கு வந்தவன் , அப்பொழுதுன் கவனித்தான் , திவ்யா தன் கூந்தலை உயரமாகத் தூக்கி கொண்டையிட்டு அவரை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள். அதைப் பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்.

பாட்டிக்கு அறுவறுப்பு இல்லாமல் பணிவிடை செய்வதைக் கண்டு அல்ல , அவள் கொண்டையிட்டு இருந்ததால் அவளது நைந்து போன ஆடை கிழிபட்டு அவளது பின் முதுகின் உள்ளாடை அப்பட்டமாக தெரிந்தது.

சட்டென்று பார்வையை விலக்கி வீட்டை நோக்கி நடத்தவன் மனதில் பெரும் பாரம் ஏறிக் கொண்டது.உடனே அவளுக்கு வேறு உடைகள் வாங்கித் தர வேண்டும் போல் எண்ணம் தோன்ற அனிச்சையாக தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டவன் தன் மொபைலை பாட்டி அறையிலையே வைத்து விட்டு வந்ததை உணர்நது் , அந்த அறை நோக்கிச் சென்றான்.

சென்றவன் அவளுக்கு சங்கடம் தர விருப்பமின்றி , "பாட்டி " என்று சொல்லி கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றான். அவன் குரல் தந்துவிட்டு உள்வரவும் ,கையில் வைத்திருந்த பாத்திரத்தை கீழ் வைத்து விட்டு தன் கூந்தலை மறுபடியும் விரித்து விடலானாள்.

அவளது செய்கைகளையேப் பார்த்துக் கொண்டு வந்தவன்" ஏஞ்சல் என்போன் " என்று பாட்டி அருகே கைக் காண்பித்தான்.

அவன் காண்பித்த இடத்தில் இருந்து அதை எடுத்துக் கொண்டு அவனருகே வந்தவள்" செளமியண்ணா , நீங்க அப்பதையும் ஏஞ்சல்னு சொன்னீங்க , என் பேரு திவ்யஸ்ரீ, அத்தை அப்போ சொன்னாங்க இல்லையா , நீங்க ஏஞ்சல்னு தப்பா நினைச்சுட்டிங்கபோல இருக்கு" என்று அவனிடம் வந்துப் பேசிக் கொண்டு இருந்தாள்.

"அப்புறம் , சாரி செளமியண்ணா நீங்க வீட்டில இருக்கிற போட்டோல எல்லாம் ஒல்லியாகுச்சி மாதிரி …."செல்லிக் கொண்டே வந்தவள் தன் நாக்கைக் கடித்து பேசுவதை நிறுத்திவிட்டு அவன் கண்களைப் பார்த்தாள் , கோபம் ஏதும் கொள்வானோ என்று , அங்கு கோபம் தென்படவில்லை என்றதும் , "அதான் எனக்கு அடையாளம் தெரியாம பயந்துட்டேன், சாரி கோவிக்கக் காதிங்க " என்று சொல்லி அவன் முகம் பார்த்தாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தானே ஒழிய ஒன்றும் பேசவில்லை , ஆம் அவனால் பேச முடியவில்லை அவள் கண்களின் பாவங்களையும் , நாக்கை கடித்த உதடுகளையும் ரசித்துக் கொண்டு இருந்தவனை "செளமியண்ணா" என்ற அவளது வேகமான அழைப்பு நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

மொபலை வாங்கிக் கொண்டு வேகமாக வெளியேறிவன்"மை டியர் ஏஞ்சல் உன்னோட அந்த கூந்தல் என்னை மயக்கி அதுல கட்டிப் போடறதுக்காக னு நினைச்சேன், உனக்கு ஆடையாய் இருந்து உன் மானத்தைக் காக்கனு தெரியாம போச்சே டா " என்று நினைத்துக் கொண்டே அவனது அறைக்குச் சென்று கட்டிலில் ப்படுத்துகைகளை தலைக்கு கீழே கொடுத்து இருந்தவன் , அப்பொழுதான் அவள் தன்னைக் கூப்பிட்ட விதத்தை நினைத்து முகத்தை சுருக்கி "என்னது செளமியண்ணா வா" என்று கட்டிலை விட்டு எழுந்து உட்கார்ந்தான்.

அவனது அறையிலிருந்த பால்கனிக்கு சென்று அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் எதிரில் கதிரவன் தன் காலைக் கதிர்களை கடலில் பரப்ப விட்டுக் கொண்டு இருப்பதை ரசித்துக் கொண்டே "ஹே ஏஞ்சல் , என்னையப் பார்த்து அண்ணா நொண்ணானு சொன்ன நடக்கிறதே வேற , அம்மாவ அத்தைனு சொல்ற இல்லையா சோ அத்தை பையன் நான் உனக்கு அத்தான். …. யெஸ் அத்தான்னு கூப்பிட்டு பழகு" என்று தனக்குள்ளேயே எண்ணி சிரித்துக் கொண்டவன் புன்னகையோடு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

தன் மொபைலை எடுத்து இளையராஜா பாடல்களை ஒலிக்கவிட்டான்.

'ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா
உயிரிலே கலந்தது நீயில்லையா …
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா …..'

, " நிஜம் தான் , நிஜமே தான் " என்று தலையணையை அணைத்துக் கண்கள் மூடிக்கொண்டான் .
 
Suvitha

Well-Known Member
#10
அத்தை மகனை யாராவது அண்ணான்னு கூப்பிடுவாங்களா...கண்டிப்பா உன்னோட ஏஞ்சல் உன்னை அத்தான்னு தான் கூப்பிடுவா...
அதனால கவலைப்படாதே கார்த்திக்.
 
Last edited:

Advertisement

New Episodes