என் இதயமே நீதானே 14

ShanviSaran

Well-Known Member
#1
அதிகாலை நான்கு மணியளவில் தேவாலயத்தின் மணியோசை கேட்டு தூக்கம் கலைந்த திவ்யா, அருகில் பாட்டி உறங்கி கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டு , அவர் தூக்கம் கலையா வண்ணம் காலைக் கடன்களை முடித்தவள். குளித்து முடித்து வேறு உடை மாற்றும் போது அவர் எழுந்திரிக்கவில்லை.

நேரம் ஐந்தை தொடவும் வெளிக் கதவைத் திறந்து வாசல் தெளித்தவள் , பாட்டிக்கும் அவளுக்கு மாக கருப்பட்டி காபி தயார் செய்து பாட்டி அருகில் வந்து அவரை எழுப்பினாள்.
"பாட்டி , பாட்டி எந்திருக்கிறீங்களா , வண்டி கொண்டு வந்துருவாக , நேரமாயிருச்சு" , பாட்டியிடம் அசைவில்லை , அவரது கையைத் தொட்டவள் , சில்லிப்பை உணர்ந்தாள்.

அவரது உடல் குளுமையை உணர்ந்தவள் அவரைப் பார்த்துக் கொண்டே அமர்ந்து விட்டாள். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ , கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டு , எழுந்து போய் கதவை திறந்தவள். கதவருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, பாட்டியின் முகத்தையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

உள்ளே வந்த செல்வராசுவின் மனைவி " திவ்யா கிளம்பிட்டியா , கதவு திறக்க ஏன் இவ்வளவு நேரம் .அத்தைய எழுப்புமா நேரமாகுது"

அவரது எந்த கேள்விக்கும் பதில் இல்லை, பாட்டியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். "என்ன இவ இப்படி உட்கார்ந்து இருக்கா" என்று யோசித்துக் கொண்டே பாட்டி அருகில் சென்றவர், "அத்த " என்று தொடவுமே என்ன நிகழ்ந்தது என்பதை உணர்ந்தவர் "மச்சான் , இங்க வாங்க " என்று கத்தி அழ ஆரம்பித்தார்.

அவர் அழ ஆரம்பிக்கவுமே செல்வராசு ஓடிவந்தவர் , நடப்பை உணர்ந்து எல்லோருக்கும் தகவல் அளிக்கச் சென்றார்.

திவ்யாவின் வீட்டிலிருந்து அழுகை குரல் கேட்கவும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் வீட்டின் முன் கூட ஆரம்பித்தனர். பெண்கள் எல்லாம் வீட்டினுள் சென்று திவ்யாவை பிடித்து அழ ஆரம்பித்தனர்.

அவள் அழாமல் வெறித்து கொண்டு அமர்ந்திருந்ததை கண்டவர்கள் அவள் கன்னத்தை தட்டி " அழு தாயி, பாட்டி உன் கூடவே இருப்பாக அழு தாயி " என்று அவளை அழவைக்க தங்களால் ஆன முயற்சிகளை செய்து கொண்டு இருந்தனர்.

ம்கூம், சிறிது கூட அசைவில்லை , அப்படியே அமர்ந்திருந்தாள் , பார்வதி அழுது கொண்டே வந்தவள்" திவ்யாவை கட்டி பிடித்து "அழுதுருடி, பாட்டி தெய்வமா நம்ம கூட வேதான் இருப்பாக அழுதுருடி " என்று சொல்லி அவளை அடிக்க ஆரம்பித்தாள்.

துளி கண்ணீர் விடவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. திவ்யாவின் ஒன்று விட்ட பெரியப்பாவும் , பாண்டியனின் அப்பாவுமாகிய சண்முகபாண்டியன் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.

வேறு யாரும் உறவினர்கள் வரவேண்டிய அவசியமில்லாததால் அன்றே இறுதி காரியத்தை | நடத்தலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கும் காரணமில்லாமல் இல்லை , பாண்டியனுக்கு நாளை சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானம் என்பதால் இன்று இரவே சென்னைக்கு கிளம்ப இருந்தார்கள். வேறு நெருங்கிய உறவு இல்லாததால் இவர்தான் செய்ய வேண்டும் .

அதற்குள் சென்னையில் கார்த்தி வீட்டிற்கு தகவல் தெரிவித்தார் செல்வராசு.

செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த சாந்தி , இறுதி காரியம் முடித்துவிட்டு இரவில் கிளம்பி வாருங்கள் என்று சொல்லிவிட்டார். எனவே அவர்களும் உடனிருந்தனர். மாலையில் வள்ளி பாட்டி தன் இறுதி யாத்திரையைத் துவங்கும் போது திவ்யா அழுவாள் என்று எதிர்பார்த்தவர்கள் , அவள் மயங்கி கீழே விழுந்ததைத்தான் பார்த்தார்கள்.

அவளை உள்ளே அழைத்துச் சென்ற பெண்கள் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தும் எழவில்லை என்றதும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் அருகில் பாட்டி வேலை செய்த மடத்தின் தலைமை கன்னியாஸ்த்ரி , திவ்யாவைக் காட்டி "மடத்தில இருக்கிற முதலுதவி அறைக்கு அழைச்சிட்டு போங்க , நான் டாக்டர் வர செல்றேன். அவ அழாம துக்கத்தை நெஞ்சில் புதைக்கி கிட்டதால இப்படி மயக்கம் , பயப்படற மாதிரி இல்லை" எனவும் , சீதாவும் , சரசுவும் அவளை செல்வராசுவின் காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

எல்லா காரியங்களும் முடித்து வந்த ஆண்கள் திவ்யாவை இனி யார் பொறுப்பில் விடுவது என்று பேசிக் கொண்டு இருந்தனர் .

திவ்யாவின் பெரியம்மா முன்னே வந்தவர் "வயசு புள்ளய பார்த்துக்கிறது கஷ்டமான விஷயம் , அதான் என் அண்ணன் பையன் தூத்துகுடில ஒரு கம்பெனில டிரைவரா வேலை பார்க்கிறான், நகை நட்டு எதுவும் போடலனாலும் பொண்ணு நல்ல லட்சணமா இருக்கா அதனால எங்கண்ணன் பையனுக்கு முப்பது முடிஞ்சி கட்டி கொடுத்துதலாம்னு பாக்கோம், அதுவரைக்கும் எங்க வீட்ல வச்சுக்கிறோம்" என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். யாரும் எதுவும் பேசினால் நம் தலையில் பொறுப்பை சுமக்க வேண்டி வருமோ என்று அமைதியாக இருந்தனர்.

அவரது இந்தப் பேச்சைக் கேட்ட பார்வதி பாண்டியனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் பார்வைக்கு அவனை எரித்து விடும் சக்தி இருப்பது போல் இருந்தது அவனுக்கு.

அவன் அம்மாவிடம் பார்வையைத் திருப்பியவன்" மா சின்ன புள்ளமா , அவளுக்குப் போய் கல்யாணம் அது இதுனு பேசுறீங்க"

"உனக்கு என்ன தெரியும் நீ சும்மா இரு…" என்று ஏதோ சொல்ல வாய் எடுத்தவரை அவரது கணவர் "ஏய் வாயை வச்சுக்கிட்டு நீ சும்மா இரு" என்றவர் , அங்கிருந்தவர்களிடம் திரும்பி
"இன்னிக்கு பையன கூட்டிட்டு சென்னைக்குப் போய் அவனை வழியனுப்பிட்டு நாளை மறுநாள் மூனாம் நாள் காரியம் முடிச்சுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு பார்ப்போம். இப்போ குணா உன் பொறுப்புல பிள்ளைய விட்டுட்டு போறேன், பார்த்துக்க "என்றவர் தன் மனைவியையும் மகனையும் கண்ணசைவில் வரச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

தன் தோழியைப் பார்க்க கிளம்பிக் கொண்டு இருந்த பாருவின் முன் வந்து நின்ற பாண்டியனைப் பார்த்தவள் , "உங்க கூடப் பிறந்தவளா இருந்திருந்தா இப்படி தான் அவளை அநாதையாவிட்டுக் கிளம்புவீங்களா , படிக்கிற புள்ளைக்கு அவசரமா கல்யாணம் செய்து வைப்பீங்களா"

"அம்மா அப்படி ...." என்று சொல்ல வந்தவனை கை நீட்டி தடுத்தவள் ,
"நீங்க எதுவும் பேச வேண்டாம் , உங்கம்மா சொல்றத நீங்க வேணும்னா கேட்டுட்டு சும்மா இருக்கலாம், ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன் , எப்படியாது அவள படிக்க அனுப்பிடுவேன் , நீங்க நிம்மதியா உங்க அமெரிக்க வேலையப் பார்க்கப் போங்க , என் பிரண்ட நான் பார்த்துக்கிறேன்." என்றவள் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
முதல் நாள் இரவிலேயே வீடு வந்த கார்த்தி தான் திவ்யாவைப் பார்த்த சந்தோஷத்திலேயே வந்து உறங்கினான். எப்படி இப்படி ஆனேன் என்று தனக்குள்ளேயேக் கேட்டுக் கொண்டவன் ஒரு நாள் கூட அவளப் பார்க்கம இருக்க முடியலையே "நீ பெரிய லவ்வர் பாய்" ஆகிட்ட என்று புகழ்ந்து கொண்டன்.
காலையிலயே அலுவலகம் சென்றவன் இரவு பத்து மணிக்குத் தான் வீடு திரும்பினான்.

ஹாலில் அமர்ந்திருந்த சௌமினி" அண்ணா டேபிள் ல உனக்கு சாப்பாடு இருக்கு சாப்டுக்கோ, நான் தூங்கப் போறேன்." என்றவள் சொல்லிக் கொண்டே மாடியேறி விட்டாள்.

தன்னறைக்குச் சென்றவன் , அவன் படுக்கை அறைக்கு நேர் கீழே இருக்கும் பாட்டி அறையில் விளக்கு எதுவும் எரியாமல் இருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்து , குளித்து உடை மாற்றி சாப்பிட வந்தான்.

"என்னம்மா நானே சாப்பிட்டுக்க மாட்டேனா , நீங்க ரெஸ்ட் எடுக்கலாமே"

"இல்லப்பா இருக்கட்டும் , நானும் மினியும் நாளைக்கு ஊர்க்குப் போறோம் , அதான் உன்னை காலையிலயே டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு இப்ப சொல்றேன்"

" என்ன திடீர்னு , நான் நேத்து தானபோய்ட்டு வந்தேன்" சாப்பிட்டுக்
கொண்டே கேட்டு கொண்டிருந்தான்.

"உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பா , நம்ம திவ்யாபாட்டி தவறிட்டாங்கப்பா , பாவம் சின்ன பொண்ணு இருந்த ஒரு உறவையைும் இழந்துட்டு நிக்கிறா , ….. " என்று செல்வராசு மூலம் கேட்ட விஷயங்களை மகனிடம் பகிர்ந்து கொண்டு இருந்தார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அதற்கு மேல் முடியாமல் அப்படியே வைத்துவிட்டான். அதற்கு மேல் அவன் நினைவு எல்லாம் திவ்யா வே நிரம்பி இருந்தாள்.

" உனக்கு நான் இருக்கேன"் .. என்று சொல்ல வேண்டும் போல் அவனது உடலும் உள்ளமும் பரபரத்தது.

அவனுக்கும் அங்கே போக வேண்டும் போல் இருந்தது. எந்த காரணத்தை சொல்லி கிளம்ப என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

பேசிக்கொண்டே இருந்த சாந்தி "என்னப்பா சாப்பிடாம வைச்சுட்ட... வேற கொண்டு வர வா"

"இல்லமா போதும் , நீங்க எப்போ எப்படி கிளம்புறீங்க ."

"செல்வராசு வந்ததும் சீதா கிட்ட அத்தைய பார்த்துக்க சொல்லிட்டு நம்ம ஆபிஸ்லருந்து குரு வ கார் ஓட்ட வர சொன்னேன் பா "

"ஓ, அப்படியா , எனக்கு தூத்துக்குடி மறுபடி போற வேலை இருக்கு மா, அதனால மார்னிங் நானே கூட்டிட்டு போறேன் , நீங்க ரெடியா இருங்க"

"ரொம்ப நல்லதாப் போச்சு , நீ போய் தூங்கி ரெஸ்ட் எடு , நானும் அப்பாகிட்ட பேசிக்கிறேன்." என்றவர் தங்கள் அறை நோக்கிச் சென்றார்.

அதிகாலையிலையே கிளம்பியவன் செல்வராசு வண்டி வந்ததும் பாட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.செளமி பின்னால் சீட்டில் சாந்தியின் மடியில் தூங்கி கொண்டு வந்தாள்.

அதைக் கண்டவன் எண்ணங்கள் தன்னவளிடம் சென்று விட்டது."ஏஞ்சல் , அழாம இருக்கியா மே , எந்தங்கச்சி எங்கம்மா மடியில படுத்து தூங்குறது போல , உனக்கு அப்பா அம்மா எல்லாம நான் இருந்து மடி தாங்குவேன்டா , உன்கிட்ட எப்படி என்னை புரிய வைக்குறது தெரியலயே … " என்று புலம்பிக் கொண்டு இருந்தவன் , காரை ஓட்ட முடியாமல் சட்டென்று நிறுத்தி விட்டான்.

காரை நிறுத்திய வேகத்தில் , பதறி எழுந்தவர்களிடம் , " "அர்ஜென்ட் போன் பேசிட்டு வாரேன்மா" என்றான்.
 

ShanviSaran

Well-Known Member
#10
அப்டேட் Incompeted-டா
முடியாதது போல
இருக்கே, ஷான்வி டியர்?
இன்னும் கொஞ்சம்
அப்டேட் பாக்கி இருக்கா?
அதுவும் வருமா-ப்பா,
ஷான்வி டியர்?
கொஞ்ச நேரத்தில் போடுறேன் சிஸ்டர்
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates