என்றென்றும் அன்புடன் அழகி - 6

Advertisement

Dharanika

Active Member
மன்னிக்கவும் தோழிகளே!! ரொம்ப நாள் இடைவெளியாகிடுச்சு.. வேலை பளுவால் தொடர்ந்து எபிஸோட்ஸ் கொடுக்க முடியல.. அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.. சின்ன அத்தியாயம் தான்.. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க..

அத்தியாயம் - 6

அடுத்த நாள் மாலை மனோவும், ஜனனியும் அன்புவின் வீட்டிற்கு சென்றனர். "அடடே.. வா மனோ.. வாம்மா.. உள்ள வாங்க. அத்த.. யாரு வந்து இருக்காங்க பாருங்க" என குரல் கொடுத்தார் மீனாட்சி.

"உன் பேரு என்னமா? அன்னைக்கு இருந்த சூழ்நிலைல உன் பேரை சரியா நியாபகம் வச்சுக்க முடியல"

"என் பேரு ஜனனி மா..மன்னிச்சுடுங்க.. எங்களால தான் கல்யாணத்துல இவ்ளோ பிரச்சனை" என்றனர் இருவரும் கைகளை கூப்பி.

"அட விடுப்பா.. பெரியவங்க மேல தப்பை வச்சுக்கிட்டு நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க? நடந்தது எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுக்குவோம்".

"ஆச்சி, எங்களை தப்பா நினைக்காதீங்க. வர ஞாயிற்றுக்கிழமை கூட வேலை பாக்குறவங்களுக்காக சின்னதா ஒரு வரவேற்பு வச்சிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும். எங்களுக்குனு பெரியவங்க யாரும் இல்ல. உங்களுக்கே தெரியும்.. எங்க வீட்ல எங்க மேல எவ்ளோ கோபமா இருக்காங்கனு.. ஜனனிக்கு யாரும் இல்ல. அதனால நீங்களும் பெரியம்மாவும் வந்து எங்களை ஆசீர்வதிக்கணும்".

இதுல தப்பா நினைக்க என்ன இருக்குப்பா? நாங்க ரெண்டு பேரும் சந்தோசமா வரோம்.

"அப்புறம் ஆச்சி.. அன்பு என் மேல ரொம்ப கோபமா இருக்கான். இந்த வரவேற்புக்கு அவனையும் நீங்க கூட்டிட்டு வரணும்".

"அன்புவை உனக்கு ஏற்கனேவே தெரியுமா?"

"உங்க கிட்ட அன்பு ஒன்னும் சொல்லலையா? நாங்க மூணு பெரும் ஒரே காலேஜ்ல தான் வேலை பார்க்கிறோம்".

"என்னது ஒரே காலேஜ்லயா?" என வள்ளியம்மை மீனாட்சி இருவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். அவர்களின் கேள்வியிலேயே இவர்களுக்கு இது புது விஷயம் என புரிந்தது மனோ மற்றும் ஜனனிக்கு.

"நாங்க காதலிச்ச விஷயம் அன்புக்கு ஏற்கனவே தெரியும். ஆனா அழகம்மை ஆச்சி ஏற்பாடு பண்ணியிருந்த கல்யாணத்தை பத்தி அன்புக்கிட்ட நான் எதுவும் சொல்லலை. கல்யாணம் முடிஞ்சு சொல்லிக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவனே இந்த கல்யாணத்துக்கு நேர்ல வருவான், அவனுக்கும் மதிக்கும் கல்யாணம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை. நாங்க காதலிச்ச விஷயத்தை வீட்ல சொல்லாம இப்படி மதியோட வாழ்க்கையும் சேர்த்து சிக்கலாகிட்டேனு என் மேல கோபமா இருக்கான்" என சொல்லி முடித்தான் மனோ.

"ம்ம்ம்.. இவ்ளோ பக்கத்துல இருந்தும் இதுவரைக்கும் நாங்க உன்ன பார்த்ததே இல்லை. நம்ம இரண்டு குடும்பமும் சொந்தக்காரங்களா இருந்தும் எதுவும் தெரியாமலே நீயும் அன்புவும் சிநேகிதர்களா இருக்கீங்க. நமக்கு மேல இருக்கவன் இது தான் நடக்கும்னு எழுதியிருந்தா அதை மாத்த யாராலா முடியும்? அன்புவுக்கு உன் மேல எதுவும் கோபம் இல்ல. பழைய விஷயத்தை தூக்கி போடமா இன்னும் மனசுக்குள்ள நினைச்சிட்டு உன்கிட்ட அப்படி நடந்துக்கிறான். எல்லாம் சரியாகிடும்..நீ ஒன்னும் கவலை படாத" என்றார் வள்ளியம்மை. ஆத்தா மீனாட்சி.. முதமுதல்லா கல்யாணம் முடிச்சு புள்ளைங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. சீக்கிரம் போய் விருந்துக்கு ஏற்பாடு பண்ணு".

சரிங்க அத்த.. என்று அடுப்படிக்குள் நுழைத்தவருடன் ஜனனியும் சேர்ந்து கொள்ள மீனாட்சி மறுத்தும் அவருக்கு ஜனனி உதவி செய்ய இரவு உணவை முடித்துவிட்டு சென்றனர்.

**********************************************************************************************

ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு மனோ ஜனனியின் வரவேற்புக்கு கிளம்பி கொண்டிருந்தான். மெரூன் வண்ண முழுக்கை சட்டை அவனின் நிறத்தை எடுத்து காட்டியது. அவன் தயாராகி வெளியே வரவும் மீனாட்சியும் வள்ளியம்மையும் வெளியே வந்தனர். "எய்யா அன்பு.. கிளம்பலாமா?"

"அப்பத்தா நீங்க எங்க கிளம்பிட்டீங்க?"

"நம்ம மனோ வீட்டுக்கு வந்து எங்களை கண்டிப்பா இன்னைக்கு வரவேற்புக்கு வரச்சொல்லிருக்கான்"

"மனோவா? அவன் எப்போ வீட்டுக்கு வந்தான்? அவனுக்கு எப்படி நம்ம வீடு தெரியும்?"

"என்ன மீனாட்சி மனோ வந்தது சொல்லலையா நீ?" என்றவரிடம் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தார்.

"அப்போ நீ வீட்டு விலாசம் கொடுக்கலையா? ஒரு வேளை உன் பொண்டாட்டி கொடுத்திருப்பாளோ?" என்றவரை தீப்பார்வை பார்த்தான். கல்யாணம் முடிந்து சென்னை வந்ததில் இருந்து தினமும் ஏதாவது ஒருவிதத்தில் "உன் பொண்டாட்டி" என்று வள்ளியம்மை அவனின் திருமணத்தை நினைப்படுத்துவார்.

"இப்போ என்ன நீங்களும் வரீங்க. அவ்ளோ தானே? வாங்க போகலாம்" என அதற்கு மேல் பேச்சை வளர்க்க பிடிக்காமல் காரை நோக்கி சென்றான். தாம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் மனோ, ஜனனி. சுமார் ஐந்தரை மணி அளவில் ஹோட்டலுக்கு சென்றவர்கள், மனோவிற்கு மோதிரமும், ஜனனிக்கு செயிணும் பரிசளித்தனர். வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் கிளம்பிவிட சிறிது நேரம் பேசிவிட்டு இரவு ஒன்பது மணிபோல் வீட்டிற்கு புறப்பட்டனர்.

இன்றுடன் மதியழகி தன் விடுதிக்கு வந்து ஒரு வாரமாகியது. தனது திருமண செய்தியை தன் நெருங்கிய தோழியான கனிமொழியிடம் மட்டும் பகிர்ந்திருந்தாள். இருவரும் விடுதியில் ஒரே அறையில் இருக்கின்றனர். இரவு உணவை விடுதி மெஸ்ஸில் முடித்துவிட்டு இருவரும் தங்கள் அறைக்கு வர மதியழகியின் கைபேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தவள் மனோவிடம் இருந்து புலனத்தில் (வாட்சப் - புலனம்) செய்தி வந்திருந்தது. செய்தியை திறந்து பார்த்தவள் கண் இமைக்காமல் அதையே பார்த்து கொண்டிருந்தாள். "ஏய் மதி.. எரும மாடு மாதிரி நின்னுக்கிட்டே இருக்கே? எவ்ளோ நேரம் கத்துறேன்" என்ற கனியின் உலுக்கலில் நிகழ்காலத்திற்கு வர, "என்.. என்ன கனி?"

"அப்படி என்ன பார்த்துட்டு இருக்க? கூப்பிடறது கூட காதுல விழாம?" என்றவளிடம் தன கைபேசியில் வந்த புகைப்படத்தை காட்டினாள்.

"யாரு மதி இது?"

"இது தான் மனோ மாமா.. இது அவங்க மனைவி"

"ஓ.. இவங்க தான் அந்த காதல் புறாக்களா? பக்கத்துல இருக்க இந்த மெரூன் கலர் ஷர்ட் போட்டவர் செம்மய்யா இருக்கார்ல? உன்னோட சொந்தக்காரங்களா? இல்ல உங்க மாமாக்கு தெரிஞ்சவங்களா?" என அவள் கேள்வி கேட்டு கொண்டிருக்க, மதியழகியிடம் பதில் இல்லாமல் போக "அடியே.. மறுபடியும் கனவு காண போய்ட்டியா?'

"அது.. அது.. அவர் தான்..'

"அவரா? யார் அந்த அவர்?"

"இதோ இதை கட்டினவர்" என தன தாலியை எடுத்து காண்பித்தாள்."

"ஏண்டி சுத்தி வளைக்காமா "என் புருஷன்" சொல்ல வேண்டியது தானே? என்றவளை முறைத்துவிட்டு தன் கைபேசியை பிடிங்கி கொண்டு தன் படுக்கைக்கு சென்றாள்".

மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தையே பார்த்து கொண்டிருந்தாள் மதி. திருமணத்தன்று அவனின் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை. இன்று தான் அன்பழகனை முழுமையாக பார்க்கின்றாள். கண்ணிமைக்கவும் மறந்து அவனையே பார்த்து கொண்டிருக்க "மேடம் நாளைக்கு செமிஸ்டர் எக்ஸாம் இருக்கு.. நியாபகம் இருக்கட்டும்.. கனவுல டூயட் பாடிட்டே பரீட்சைல கோட்ட விட்றாதீங்க" என்ற கனியின் குரலில் தன கைபேசியை அணைத்துவிட்டு அடுத்த நாள் பரீட்சைக்கு தயாராகினாள்.

அன்பு தொடரும்...
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு
புருசன போட்டோல பாத்து
மயங்கிட்டாளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top