என்றென்றும் அன்புடன் அழகி - 12

Advertisement

Dharanika

Active Member
மதி சென்னை வந்து ஒரு மாதம் ஆகிறது. ஆரம்பத்தில் புது இடத்திற்கு வந்தது ஒரு மாதிரி இருக்க, வள்ளியம்மை, மீனாட்சி, மனோ, ஜனனி என தினமும் யாராவது ஒருவர் அவளுடன் பேச அவளின் தனிமை உணர்வு சிறிதுசிறிதாக மறைந்தது. கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகியிருக்க மதிக்கு விடுதியில் இடம் கிடைக்க சிரமம் இருக்கவில்லை. ஏற்கனவே இருவர் தங்கியிருந்த அறையில் அவளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. மூன்றாம் வருட மாணவிகள் நித்யா மற்றும் ஆதிராவுடன் மதிக்கு அறை கொடுக்கப்பட்டது. நித்யாவும் மதியும் ஒரே பாடப்பிரிவு. ஆதிரா கணினி பாடப்பிரிவு. மதியழகி வந்த முதல் ஒருவாரம் இருவரும் அவளிடம் பொதுவாக பேச ஆரம்பிக்க இந்த ஒரு மாதத்தில் மூவரும் நெருங்கிய தோழிகளாகினர்.

நித்யா இருந்ததால் இப்போது கல்லூரியும் அவளுக்கு ஓரளவு பழகியிருந்தது. மனோ இன்னும் மதியழகியை இந்த கல்லூரியில் சேர்த்ததை பற்றி அன்பழகனிடம் சொல்லவில்லை. சொன்னால் அன்புவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என கணிக்கமுடியாமல் இந்த விஷயத்தை சொல்வதை தள்ளி போட்டு கொண்டு வந்தான். மதியழகி அன்பு வேலை செய்யும் கல்லூரியில் படித்தாலும் இருவரும் இதுவரை பார்த்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் இருவரும் ஒரே பாடப்பிரிவில் இருந்தாலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் வேறொரு கட்டடம் என்பதால் இருவரும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

"ஏய் நித்யா.. நம்ம கிளாசுக்கு இந்த பக்கம் தானே போகணும்? நீ எதுக்கு சினீயர்ஸ் பில்டிங் பக்கம் போற?"

"ச்சு.. பேசாம வா.. சொல்றேன்.." என மதியின் கையை இழுத்து கொண்டு நடந்தாள்.

"கிளாசுக்கு நேரமாக போகுது பா.. பர்ஸ்ட் ஹவர் சங்கீதா மேம் வருவாங்க.. லேட்டா வந்தா வெளியே தான் நிக்கணும்"

"புலம்பாம வா.. சீக்கிரம் போயிடலாம்.."

"இப்போ நீ சொல்ல போறீயா? இல்லையா?" என மதி தன் கையை உருவியவள் நகராமல் நின்றாள்.

"நம்ம சீனியர் சுஜா அக்கா தெரியும்ல உனக்கு? அவங்க நேத்து மெஸ்ல சாப்பிடும் பொது அவங்க பிரண்ட்ஸ் கூட யாரோ ஒரு சாரை பத்தி ஆஹா!! ஓஹோனு!! பேசிட்டு இருந்தாங்க.. அது யாருன்னு பார்க்கணும்.."

"சரி நீ இப்போ பார்த்து என்ன பண்ண போற?"

"நம்ம டிபார்ட்மெண்ட்ல இவ்ளோ அழகா ஒரு ப்ரோபஸ்ஸோர் இருக்கார்னு தெரிஞ்சும் அது யாருன்னு பார்க்கலைனா எனக்கு தலை வெடிச்சிடும்.."

"நீ தான் அவரை பார்த்ததே இல்லையே.. இப்போ எப்படி கண்டுபிடிப்ப?"

"காலைல சுஜா அக்காகிட்ட பேசிட்டு இருக்கும் போது ஸ்டாப் ரூம்ல அவரோட இடம் எதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.."

"அவரை பார்க்க நீ போக வேண்டியது தானே? என்னையும் எதுக்கு இழுத்துட்டு போற?"

"நான் மட்டும் தனியா போனா சீனியர்ஸ் கிட்ட மாட்டிப்பேன்.. அதனால தான் உன்னையும் இழுத்துட்டு போறேன்" என பேச்சினூடே ஆசிரியர்களின் ஓய்வறையை அடைந்திருந்தனர். அவர்கள் சென்ற நேரம் நித்யா சொன்ன அந்த ஆசிரியரின் நாற்காலி காலியாக இருக்க "ச்சே.. இன்னும் சாரை காணோமே? சரி ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணி பார்க்கலாம்"

"நாளைக்கு வந்து பார்த்துக்கோ.. இப்போ கிளம்பலாம் வா" என மதி அழைக்க, "இவ்ளோ தூரம் வந்துட்டோம்.. இன்னும் பத்து நிமிஷம் தானே? இரு.."

அதற்குள் இவர்களை பார்த்து விட்டு இறுதியாண்டு மாணவி ஒருவர் "நித்யா.. இங்க என்ன பண்றீங்க?"

"அது.. ஒண்ணுமில்ல அக்கா.. இவ என்னோட பிரண்ட்.. இப்போ தான் காலேஜ் சேர்ந்து இருக்கா.. இவளுக்கு தெரிஞ்சவங்களும் நம்ம டிபார்ட்மென்ட் தானாம்.. அது தான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்.." என்றாள் சமாளிப்பாக..

"ஓ அப்படியா? பேறு என்ன சொல்லு.. நானே வர சொல்றேன்.." என அந்த மாணவி கேட்க லேகா என்றாள் வாயில் வந்த பேரை.

மதி அவளை முறைத்து கொண்டு இருக்க "அப்படி யாரும் இல்லையே" என அந்த மாணவி கூற "மதி.. நீ அந்த பேறு தானே சொன்ன? ஒரு வேளை வேற டிபார்ட்மெண்டா இருக்குமோ?" என நித்யா அவளிடம் கேட்க அதற்கும் மதி அவளை முறைத்து கொண்டு நின்றாள்.

"சரிக்கா.. நாங்க நல்லா விசாரிச்சிட்டு வரோம்" என அங்கிருந்து தப்பித்தால் போதுமென இருவரும் நகர "ஏன்டி.. உனக்கு அந்த சாரை பார்க்கணும்னா நீ போக வேண்டியது தானே? என்னையும் எதுக்கு இப்படி கூட்டிட்டு வந்து கோர்த்து விடுற?"

"சரி விடு.. நாளைக்கு வந்து சாரை பார்த்துக்கலாம்.."

"என்னது நாளைக்கா? ஆளைவிடு.. நான் வரலை.." என இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு செல்ல எதிரே வந்த அன்பழகனை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள் மதியழகி.

"மதி என்னாச்சு? சீக்கிரம் வா.. கிளாசுக்கு டைம் ஆகிடுச்சு.." என்ற நித்யா மதியின் கையை பிடித்து இழுக்க தன் சுயநினைவிற்கு வந்தவள் திரும்பி பார்த்து கொண்டே நடந்தாள்.

மதியை பார்த்த அன்புவிற்கும் பலத்த அதிர்ச்சி தான். "ஒருவேளை நமக்கு தான் அப்படி தோணுதோ? வேற யாரையோ பார்த்துட்டு மதின்னு நினைச்சுட்டோமோ?" என அவனும் திரும்பி பார்க்க அதே நேரம் மதியும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். "நாம சரியாக தான் பார்த்து இருக்கோம்.. ஆனா இது எப்படி சாத்தியம்?" என யோசித்து கொண்டே தன் இருக்கைக்கு வந்தவனை "ஹாய் அன்பு" என்றான் மனோ.

அவனை முறைத்து கொண்டே தன் பையை வைத்து விட்டு "மனோ உனக்கு எப்போ கிளாஸ்?"

"மதியம் தான் அன்பு.. லன்ச் முடிஞ்சு பர்ஸ்ட் ஹவர்.." என்று தானாக வாய் கொடுத்து மாட்டினான்.

"ஓ சரி.. வா ஒரு வாக் போய்ட்டு வரலாம்.." என அழைக்க "என்னடா வந்ததும் கூப்பிடுறானே.. ஏதோ சம்பவம் இருக்கு மனோ உனக்கு.. உஷாராயிரு" என மனசாட்சி எடுத்து கொடுக்க "அது.. அன்பு.. இன்னைக்கு முக்கியமான டாபிக் எடுக்கணும்.. கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும்.. சாயங்காலம் போகலாமா?" என தப்பிக்க பார்க்க " ஒரு டென் மினிட்ஸ் தான்.. வா" என மனோவின் கையை பிடித்து அழைத்து கொண்டு போக மற்றவர்கள் முன்னாள் ஒன்றும் சொல்ல முடியாமல் அன்புவுடன் சென்றான்.

"என்கிட்ட ஏன் மதி இந்த காலேஜ் தான் சேர்த்தனு சொல்லல?" என்றான் நேரடியாக மனோவிடம்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மனோ பதில் சொல்ல தடுமாற "நீ என்ன பண்ணி வச்சிருக்கன்னு உனக்கு புரியுதா? இங்கேயே அவளை சேர்த்தா அவளோட கவனம் படிப்புல இருக்காதுன்னு தானே உன்கிட்ட ****** காலேஜ்ல சேர்க்க சொன்னேன்? நீ என்ன பண்ணி வச்சிருக்க?"

"அது.. வள்ளியம்மை ஆச்சி தான்.." என்று மனோ இழுக்க "அவங்க சொன்னாங்கனு நீயும் யோசிக்காம அவளை இதே காலேஜ்ல சேர்த்துட்ட? நீங்கல்லாம் என்னைய பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? இவன் ஒரு முட்டாள்.. இவனுக்கு ஒன்னும் தெரியாதுனா?"

"அப்படிலாம் இல்ல அன்பு.. நீங்க ரெண்டு பேரும் பார்க்காம இருந்தா உங்களுக்குள்ள இருக்குற இடைவெளி அதிகமாயிடும்னு தான்.."

"ஏற்கனவே என்னை ஒருத்தி முட்டாள்னு சொல்லிட்டு போயிட்டா..இப்போ என் கூட இருக்குற நீங்களும் என்னை முட்டாளாக்கிட்டிங்க.." கூறிவிட்டு அன்பு மனோவை பார்க்காமல் வேகமாக சென்றுவிட்டான்.

"எல்லாம் இந்த ஆச்சியால வந்தது.. இந்த ஆச்சி பேச்சை கேட்டுட்டு நானும் இப்படி செஞ்சிருக்க கூடாது.. அன்புவோட இடத்துல இருந்து யோசித்து பார்த்து இருக்கணும்.. ச்சே தப்பு பண்ணிட்டேன்.. என்று நினைத்தவன் உடனே வள்ளியம்மைக்கும் அழைத்துவிட்டான்.

"என்ன மனோ.. இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க?"

"ம்ம்.. நீங்க பண்ணி வச்ச வேலைக்கு உங்களை நேர்ல வந்தே பார்த்து இருக்கணும்.. இப்போ காலேஜ்ல இருக்கறதுனால நேர்ல வர முடியல.."

"நா என்ன பண்ணேன்?"

"ஆச்சி.. வேண்டாம் என்னை பேச வைக்காதிங்க.."

"சரி பேசாத.. நா வச்சிடுறேன்.."

"ஆச்சிசி.."

"ஏண்டா கத்துற.. மெதுவா தான் பேசேன்.. காத்து ஜவ்வு கிழிஞ்சிடும் போல.."

"நீங்க உங்க பேரனுக்கு மேல இருக்கீங்க.. ஒரு அப்பாவிய ரொம்ப கொடுமை படுத்திருங்க.."

"முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.."

மனோ, அன்பு பேசியது அனைத்தையும் சொல்லி முடிக்க "இவ்வளவு தானா? இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம் பண்ற?"

"என்னது இவ்வளவு தானா வா? உங்க பேரனை மலையிறக்க இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அவனுக்கும் மதிய அங்க பார்த்தது மனசுக்குள்ள சந்தோஷமா தான் இருக்கும்.. ஆனா வெளிய காமிச்சுக்க மாற்றான்.. அவ்ளோ தான்.."

"அப்படியா சொல்றிங்க?"

"ம்ம்.. நீ ஒன்னு யோசிச்சியா? மதிக்கு ஏதாவது ஆபத்துனா முதல்ல அன்புவை தான் தேடுறா.. அதே மாதிரி அன்புவும் அவளுக்கு ஒரு கஷ்டம்னா முன்னாடி போய் நிக்குறான்.. இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு.. ஆனா ஒதுக்க தான் மாட்டிக்குதுங்க"

"நீங்க சொல்றதும் சரி தான் ஆச்சி..இப்போ தான் எனக்கும் புரியுது.."

"உனக்கு எல்லாமே லேட்டா தான் புரியுது.. நீயெல்லாம் பாடம் எடுத்து.."

"ஆச்சி போதும்.. ரொம்ப டேமேஜ் பண்ணாதீங்க.. எனக்கு நேரமாச்சு.." என போனை வைத்துவிட்டு தன் இடத்திற்கு வந்தான். அவன் வந்த நேரம் அன்பு தன் வகுப்பிற்கு சென்றிந்தான்.

அன்புவை பார்த்துவிட்டு வந்த மதிக்கும் அதே நிலைமை தான். "இவன் இங்க தான் வேலை செய்றானா? இவன் ப்ரொபஸரா? ச்சே.. எங்க வேலை பாக்குறான்னு கூட தெரிஞ்சுக்காம இருந்திருக்கோமே..எல்லாம் தெரிஞ்சும் இந்த மனோ மாமா இதே காலேஜ்ல சேர்த்து விட்டு இருக்காங்களே.. இல்லை.. நம்மை கோர்த்து விட்டு இருக்காங்க.."

"யாரை கோர்த்துவிட்டு இருக்காங்க மதி?" என்றாள் பக்கத்தில் அமர்ந்திருந்த நித்யா..

"என்ன..?"

"நீ தானே இப்போ கோர்த்துவிட்டு இருக்காங்கனு சொன்ன?"

"ஹையோ.. மனசுக்குள்ள பேசுறதா நினைச்சு சத்தமா சொல்லிட்டோமோ? ஹி..ஹி.. ஒன்னும் இல்ல நித்யா.. "

"நீ காலைல இருந்தே சரியில்ல மதி.. அதுவும் சீனியர்ஸ் பில்டிங் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரு மார்க்காம தான் இருக்கே.. என்ன விஷயம்?"

"நித்யா, மதி.. வாட்ஸ் கோயிங் ஆன்? கிளாஸ் அட்டென்ட் பண்ண பிடிக்கலைனா தாராளமா வெளிய போகலாம்.." என ஆசிரியர் சொல்ல "சாரி மேம்" என்றனர் இருவரும்.

"அப்பாடா தப்பிச்சோம் இவகிட்ட இருந்து.." என நினைத்த மதி பின் பாடத்தை கவனிப்பது போல் இருந்து கொண்டாள் நித்யாவிடம் இருந்து தப்பித்துக்கொள்ள.

அன்பு
தொடரும்...
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Enda, kalyanam katti pinnae wife veetuku kootti varathu hostel la serthu vittu irrukira,photo parthathu therinju pattam poochi ellam paranthathey ellam waste ah ???
Intha naskan payanmar samalika ungaluku kastam ah enna?? pesama Mathiya veetuke kooti vanthu irrukalam aachu.
 

தரணி

Well-Known Member
அன்பு படிப்பு கெட்டுட கூடாது னு தான் மதி கிட்ட பேசாம இறுகீயா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top