என்ன சொல்ல போகிறாய் பாகம் 2

Advertisement

harimalar

New Member

View attachment 8817


தம்பி அஞ்சலி யோட பேசினீங்களா"


"அவருடைய முகத்தினை நேராக நிமிர்ந்து பார்த்து எனக்கும் அவுங்களுக்கும் ஒத்து வராது அதனால் எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை வேற ஒரு நல்லா இடமா பார்த்து உங்கள் பொண்ணைத் திருமணம் செய்து கொடுங்கள். முகத்தைக் கடு கடு வென்று வைத்துக் கொண்டு கூறினான்."


"தான் தங்கைகளிடம் திரும்பி வாங்கம்மா கிளம்பலாம். என்று யாருக்கும் எந்தவித பதிலும் சொல்லாமல் யாருடைய முகத்தையும் பார்க்காமல் விரும்பாமல் விறு விறு என்று வீர நடையிட்டு கிளம்பிவிட்டான்."


"அவனைப் பின் தொடர முடியாமல். ஓட்டம் நடையுமாக அவனுடன் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டனர். அவனுடைய இரு தங்கைகளும் "


"ஏண்டி அண்ணன் முகத்தைப் பார்த்தால் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் போலையே என்னடி பிரச்சனைய இருக்கும். அவளோட பேசுறதுக்கு நல்லதானே போனிச்சி ஆன திரும்பி வரும் போது ரொம்பக் கோவமா வந்து இருக்கு என்னவா இருக்கும். என்று இருவரும் ரகசியமா பேசிக்கொண்டு வந்தனர்"



"வீடு வந்தது கூடத் தெரியாம அப்படி என்ன யோசனை வேண்டி கிடக்கு என்று அதிகாரமாய்க் கேட்டான்."


"ஹான் ஒன்னும் இல்லைண்ணா"


"சரி சீக்கிரம் இறங்குங்க "


"ம்..... ம்......"


"நான் காரை தோட்டது வீட்டுல விட்டுட்டு அப்படியே வயலுக்குப் போய்டுவேன். நான் நைட்டுக்கு தான் வருவேன் வீட்டை பூட்டிகிட்டு பத்திரமா இருங்க சரிண்ணா "


"அண்ணா இன்னைக்குக் காலேஜ் இருக்கு நீ கொண்டாந்து விடுறியாண்ணா"



"நீ காலேஜ் போகவேண்டாம். அண்ணா இன்னைக்கு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு"


"ஓ.... அப்டியா சரி நான் நந்துவை வர சொல்லுறேன். நீ கிளம்பி இரு"


"ம்...


"தோட்டது வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் மித்ரன் . அவளுடைய வாசம் இன்னும் அவனுடைய உடம்பில் மிச்சம் இருப்பது போல் உணர்ந்தான்.மித்ரன்



முதல் ல கிணத்துல விழுந்து தலை முழுக்கனும். என்று காரை நிறுத்தி அவசரமாக வீட்டிற்குள் சென்று விட்டான்."


"மச்சான் மச்சான் என்று நந்து கூப்பிடுவது கூட அவன் காதில் விழ வில்லை"


"ஏன்டா நான் கூப்பிடறது கூட உன் காதுல விழலையா"


"சாரிடா மாப்புள நான் வேற ஒரு டென்ஷன் வந்தேன். அதனால் கவனிக்கலை டா சாரிடா


"நந்து அமுதினி யா காலேஜ் கொண்டு போய் விட முடியுமா?என்று கேட்டான்.



" இல்லடா மாப்புள வயல் ல கொஞ்சம் வேலை இருக்குடா என்னால அழைச்சுட்டு போக முடியாதுடா நீயே அழைச்சுட்டு போ "என்றான் நந்து


" நான் வயல் வேலைய பார்த்துக்குறேன். நீயே போய்ட்டு வாடா பிளீஸ் டா முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறினான் மித்ரன்.


" மித்ரனின் முகத்தை பார்த்ததும். சரி போறேன். அதுக்காக முகத்தை இப்படி வைத்து கொள்ளாதே பாக்க சகிக்கால


" இந்த ஆண்டவன் எதுக்கு அவளிடமே என்னை கோத்துவிடுறான். என்று ஆண்டவனை சாபித்தபடி வண்டியை உயிர்பித்தான். நந்து



"எவ்வளவு நேரம் தான் உறைந்து போய் நின்றாள். என்பதே அவளுக்குத் தெரியாது"



"அம்மு ..... அம்மு.... என்று அவளுடைய தோளை தொட்ட பிறகு நிகழ் உலகத்திற்கு வந்தாள். அஞ்சலி


" அம்மா நான் காலேஜ் போகணும்.
நான் கிளம்புறேன். என்று தனது அறைக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு தன்னுடைய scooty யை எடுத்துக் கொண்டு விரைந்து விட்டாள். அஞ்சலி



,.......................................................................





"அமுத்திணியினின் பொறுமையைக் காற்றில் பறக்க வெகு நேரம் கழித்து அங்கு வந்தான். நந்தன்



"ஏன்டா எரும சீக்கிரம் வருவன்னு பார்த்த இவ்வளவு லேட்டா வர்ற


"ஏய் யார பார்த்து எருமைன்னு சொன்ன


" ஏன் உன்னைப் பார்த்து தான் சொன்னேன். கண்ணாடில போய்ப் பாரு கருங் கட்டருமை மாதிரியே இருப்பா


"ரொம்பப் பேசாம வாய முடிகிட்டு வண்டில ஏறு


"வண்டிய நம்ம தோப்புக்கு விடு அங்க எதுக்கு இப்போ நீ காலேஜ்க்கு தானே போகணும். அது எங்களுக்குத் தெரியும். சொல்லுறத மட்டும் செய் நீ
எனக்கு வெறும் டிரைவர் மாதிரி தான் நான் சொல்லுற அழைச்சுட்டுப் போறதுதான் உன் வேலை சரியா என்றாள் அமுதினி


"சரிங்க முதலாளி அம்மா


"நீ இங்கயே வெயிட் பண்ணு கொஞ்ச நேரத்துல வந்துடுறேன். அதை விட்டு என்னை வேவு பாக்கிறேன்னு. பின்னாடியே வந்தால்.அவ்வளவு
தான் . அப்புறம் நான் இங்க வந்தத உன் உளவுத் துறைக்குச் சொன்ன உன்னை உண்டுஇல்லைன்னுபண்ணிவிடுவேன். என்று மிரட்டினாள். அதற்கும் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி கொண்டான்.


"நான் இவ்வளவு பேசுறேன். எதாவது சொல்லுறான பாரு சூடு சுரணை கூட இல்லை போல எருமை மாட்டு மேலை மழை பெய்ஞ்சபுல நிக்குறான். வாய் விட்டு திட்டிச் சென்றாள்.


" இதற்கு எல்லாம் அஞ்சுவனா நம்ம மங்கினி அமைச்சர் தன்னுடைய கதை குடைந்தப்படி சரிதான் போடி அவளை முறைத்துக் கொண்டுயிருந்தான்.



" அவனை முறைத்துக்கொண்டு அஞ்சலியை தேடி சென்றாள்.


"தென்னை மரத்தில் சாய்ந்தவாரு அமர்ந்து இருந்தாள்.அஞ்சலி


" எத்தனை தேங்காய் இருக்குன்னு எண்ணிட்டியா?

"அதெல்லாம் எண்ணியாச்சு ...... நீ ஏன் இவ்வளவு லேட்டா வந்துருக்க அமுது


"அதயேன் கேக்குற அந்தக் காட்டேருமை கூட வந்தேன். அதுதான் லேட் யாரு நந்து அண்ணன் வந்துருக்கரா ! ஆமாண்டி அந்தக் காரு ருருரு,....................


" ஏண்டி அண்ணன இப்படிப் பேசுற பாவம்டி யாரு உன் நொண்ணன் பாவமா?

"யாரு அவனா அவன் சரியான கல்
நெஞ்சக்காரன் அடுத்தவங்களோட மனதை கூடப் புருஞ்சிக்கக் கூடத் தெரியாத மண்ணு சரி சரி அவனைப் பத்தி இப்ப என்ன பேச்சு நம்ம விசயத்துக்கு வருவோம். அஞ்சலி


"இப்ப என்ன பண்ணுறதுன்னு தெரியல உங்க அண்ணன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாரு....

நாம இவ்வளவு கொல்மாலு பண்ணினது எல்லாம் வேஷ்டு போயிடும் போல இருக்குடி அமுது


" நீ எங்க அண்ணன லவ் பண்ணுணன்னு தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்தேன். பட் அதுக்கு எல்லாம் ஒன்னும் யூஸ் இல்ல போலடி ஜாதகத்தை மாத்தி கொடுத்து பொண்ணு பாக்குறது வரைக்கும் வந்தாச்சு அப்படி இருந்தும் உன்னைப் புடிக்கலைன்னு சொல்லிட்டாங்க அஞ்சலி . என் அண்ணன் ஆமா அப்படி என்னடி பண்ணுன என் அண்ணன



" உன் நொண்ண மந்திரிச்சி விட்டுட்டேன். நீ போய் வேப்பிலை அடிச்சிவிடு சரியாயிடும்.


" இந்த வியக்கிணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை லவ் மட்டும் பண்ண தெரியுது. ஆனால் எங்க அண்ணனை மட்டும் உனக்குக் கரெக்ட் பண்ண தெரியல


" இதுல எப்படி என் அண்ணனை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திதிதி....... கஷ்டம் டி......


" யம்மா ..... யம்மா....கொஞ்சம் உங்க திருவாயா மூடுங்க......அதுயெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். அமுது


"அது இல்லடி அஞ்சலி உன் லைன் கரெக்ட் ஆனா தான் என் ஆளை கரெக்ட் பண்ண முடியும்டி. அது ஒரு சரியான சாமியாருடி எந்த ரியாக்சனும் கொடுக்காதுடி அது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top