என்னென்னவோ என் ஆசைகள்-24

Anu sri

Well-Known Member
#1
#என்னென்னவோ_என்_ஆசைகள்_24

-அனுஸ்ரீ

சைந்தவியின் உடல் மெல்லத்தேறியது. ஆனால் மனம் இன்னும் ரணமாக இருந்தது. நித்தியானந்தன் அவளை வெறிகொண்டு வேட்டையாடியது மீண்டும் மீண்டும் நினைவில் வந்து சித்திரவதை செய்தது. ‘அவனைப் பற்றி என்னவெல்லாம் நினைத்தாள்? அவன் மாறிவிட்டான், திருந்திவிட்டான் என்றெல்லாம் எண்ணி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டாளே? அவன் இன்னும் மாறவில்லை என்பதற்கு இதைவிடவும் ஒரு சான்று வேண்டுமா? இத்தனை நாட்களாக திரை போட்டு மறைத்து வைத்திருந்த அத்தனைக் கொடூரங்களையும் ஒரே நாளில் வெளிப்படுத்தி விட்டானே. அவனுக்கு உண்மையாகவே அவளிடம் அன்பு இருக்கிறது என்று நினைத்தாளே! அவனுக்கு அன்பாவது? காதலாவது?’ சைந்தவி கூறியது போல ‘அவனுக்குத் தேவை அவளது உடல் மட்டும் தான். அவன் நினைத்ததை நினைத்தபடியே சாதித்துக்கொண்டான். உயிரே போனாலும் அவள் உடல் அவனுக்குக் கிடக்காது என்றாளே? இன்று உயிரைத் தவிர அவளிடம் ஒன்றுமில்லாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டான். இனி இந்த உயிர் மட்டும் எதற்கு? கறைபட்ட உடலுடன் உயிர் வாழ்வதைவிட, சாவதே மேல்! இனி அவள் எதற்காக வாழ்வேண்டும்? வாழ்வதற்கு அவளுக்கு என்ன தகுதி இருக்கிறது? யாருக்காக வாழவேண்டும்?’ என்று வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்தாள்.

‘வேண்டாம்’ என்று எதுவோ தடுத்தது. அவளுடைய தந்தை! அவள் மடிந்து விட்டால், அவர் மட்டும் உயிர் வாழ்வாரா? அவருக்கு அவளைத்தவிர யாருமே இல்லையே? எவ்வளவு சுயநலமாக யோசித்தாள்? அவளுடைய நிம்மதிக்காக சாகத்துணிந்தாளே? தந்தையைப் பற்றி யோசிக்கக்கூட தோன்றவில்லையே? அந்த அளவிற்கு வாழ்க்கை வெறுத்துவிட்டதா?

‘தந்தைக்காக வாழ்ந்தே ஆகவேண்டும். ஆனால் எப்படி வாழ்வது? இனி அந்த சம்பவத்தை என்றேனும் மறக்க முடியுமா? அதை நினைத்து நினைத்தே அவள் உயிர் கரைந்துவிடுமே?’ என்று எண்ணினாள். அவளுடைய துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அவளுக்கு யாருமில்லை. அணைத்து ஆறுதல் படுத்தவும் யாருமில்லை. அவ்வளவு பரிதாபத்திற்குரிய பெண்ணாகிவிட்டாளா அவள்?

முதலிலிருந்தே அவனிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து, இறுதியில் எப்படித் தோற்றாள்? ஆனால், அன்று நூறு மதங்கொண்ட யானை வந்திருந்தாலும் அவனை ஒன்றும் செய்திருக்க முடியாது. அவ்வளவு வெறிகொண்டு இருந்தான். எந்தக் கணவனாவது கட்டிய மனைவியிடம் இப்படி நடந்துகொள்வானா? அத்தனை முரட்டுத்தனமாக மனைவியை நெருங்குவார்களா? ஒரு பெண்ணின் கண்ணீரை மதிக்காதவன் எப்படி மனிதனாவான்? நித்தியானந்தன் வெறும் மிருகம் தான்! மிருகத்தால் மட்டும்தான் அடுத்தவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவனும் மிருகம்தான் என்று அவள் மனம் வேதனையில் குமுறியது.

சைந்தவியின் வாழ்வில் இனி நித்தியானந்தன் இல்லை; அவனுடைய நினைவுகளும் இல்லை. அவள் மனதில் மெல்ல மலரத் தொடங்கியிருந்த காதல் மலரை, ஒரே நாளில் அழித்துவிட்டான். இனி எப்போதும் அது மீண்டும் மலராது. சைந்தவியின் மனம் பாறைபோல் இறுகிவிட்டது. அவள் வாழ்வில் இன்பம் என்பது கனவிலும் இல்லாமல் போய்விட்டது. அவளுடைய தந்தைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிருள்ள ஜடம் அவ்வளவுதான். ஆசை, விறுப்பு, வெறுப்பு என்று எதுவுமே அவளுக்கு இல்லை.

அவள் வாழ்வில் எஞ்சியிருந்தது கண்ணீர் மட்டும்தான். அதுவும் தந்தை அறியாமல் மெளனமாகவும், தனிமையில் அவளுக்குத் துணையாகவும் அதுமட்டும் தான் மிச்சமாக இருந்தது. காமமும் கோபமும் தான் மனிதனுடைய அழிவிற்குக் காரணம். நித்தியானந்தனுடைய ‘காமம்’ சைந்தவியை அழித்தது. சைந்தவியின் கோபம் அவளையே அழித்துக்கொள்ள துடித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவளுடைய அழிவு அவள் தந்தைக்கும் அழிவாயிற்றே! அதன் பொருட்டு கோபம் கொண்ட மனதை கட்டுப்படுத்த முயன்றாள்.

மனதை அடக்குவது மிகவும் கடினம். அதைத் தன் வசப்படுத்துவது அதைவிடக் கடினம். அதைக்கட்டுப் படுத்துவது காற்றைக் கட்டுப்படுத்துவதைப் போல. ஆனால், பயிற்சியினாலும் வைராக்கியத்தினாலும் அதைத் தன்வழிப் படுத்தலாம். அலைகின்ற மனம் தடுமாற்றத்தைத் தரும். ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மனம் திடத்தை தரும்; வளிமையைத் தரும். சைந்தவியை வாழவைத்துக் கொண்டிருப்பது அந்த வலிமைதான்.

சைந்தவி தேடுவது மகிழ்ச்சியை அல்ல; நிம்மதியை. அவள் மனதிற்குத் தேவைப்படுவது இன்பமல்ல; அமைதி. இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தேடும் மனம் தேடிக்கொண்டே இருக்கும். எதிலும் திருப்தியடையாது. ஆனால் நிம்மதியையும் அமைதியையும் தேடும் மனம், எல்லாவற்றிலும் திருப்தியடையும்; எதிலும் சுகம் பெறும். அடுத்த நிமிடமே நமக்குச் சொந்தமில்லை. இந்தத் தார்மீகத் தத்துவத்தைப் புரிந்துகொண்டால், நம் மனதில் கோபம் துக்கம் என்று எதுவுமே இருக்காது. எல்லோரும் அழியப் போகிறவர்களே. எல்லாம் அழிவுக்குரியவர்களே என்பதை உணரும் போது, இன்பமும் துன்பமும் ஒன்றாகத்தான் தெரியும்! இப்பொது சைந்தவியின் மனமும் அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறது. மெல்ல மெல்லத் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்.

அன்று சைந்தவியைக் காண தமயந்தியும் ராஜேந்திரனும் வந்திருந்தார்கள். காய்ச்சலில் விழுந்ததிலிருந்து சைந்தவி மிகவும் பலவீனமாக இருந்தாள்.

“என்னம்மா… ரொம்பவும் மெலிந்துவிட்டு இருக்கிறாயே?” என்று பாசத்துடன் கேட்டாள்.

“அவளுக்குக் கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லை. அதனால் தான் அப்படி இருக்கிறாள்” என்றார் சுந்தரலிங்கம்.

“டாக்டரிடம் போனாயா? இப்போது எப்படிம்மா இருக்கிறது?” என்று விசாரித்தார் தமயந்தி.

“இப்போது பரவாயில்லை அத்தை. நான் போய் உங்களுக்குக் காஃபி போட்டுக்கொண்டு வருகிறேன்” என்று எழுந்தவளுக்கு நிற்க முடியாமல் கால்கள் தல்லாடின. சமாளித்துக்கொண்டு ஒரு அடி எடுத்து வைத்தவளால் அதற்கு மேல் முடியவில்லை. அப்படியே மயங்கி சோஃபாவிலேயே விழுந்துவிட்டாள். அங்கிருந்த எல்லோரும் அவளருகே பதறிக்கொண்டு ஓடினர். தமயந்தி அவளைத் தாங்கிப் பிடித்து, முகத்தில் தண்ணீர் தெளித்து, “சைந்தவி… சைந்தவி…” என்று அவள் கண்ணத்தைத் தட்டினார்.

மெல்ல கண்விழித்தவளைக் கண்டவுடன் தான் எல்லோருக்கும் உயிர்வந்தது.

“சயூம்மா… உடம்புக்கு என்ன?” என்று பதறினார் சுந்தரலிங்கம்.

“ஒன்றும் இல்லையப்பா…” என்று தெளிவற்று முனகினாள் மகள்.

“என்னம்மா? மயங்கி விழுந்துவிட்டு ஒன்றும் இல்லையென்கிறாய்” என்று பரபரத்துவிட்டு, “முதலில் ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும் வா” என்று அழைத்தார் ராஜேந்திரன்.

உடனே சுந்தரலிங்கம், “டாக்டரை வீட்டிற்கே அழைத்துவிடுகிறேன்” என்று மருத்துவமனையை தொடர்புகொண்டார்.

அடுத்து நடக்கப்போகும் பயங்கரத்தை நினைத்து, சைந்தவிக்கு மனதிற்குள் பிசைந்தது. அவள் ‘வேண்டாம்’ என்று தடுத்ததை யாரும் கேட்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் வந்து அவளைப் பரிசோதித்துவிட்டு, வெளியே காத்திருந்த மூவராலும் நம்ப முடியாத செய்தியைக் கூறினார்.

“சைந்தவி இரண்டுமாத கர்ப்பம்!” என்று அதிர வைத்தார்.

அதைக்கேட்ட மூவருக்கும் பேரதிர்ச்சி! மூவருக்கும் ‘இது எப்படி சாத்தியமானது?’ என்ற கேள்விதான் எழுந்தது. யாராளும் ஒருவரோடு ஒருவர் பேசமுடியவில்லை. அவரவர் மனங்களிலும் எத்தைனையோ கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. சுற்றுச்சூழல் புரிய சிறிது நேரமானது. முதலில் சுதாரித்தது தமயந்தி தான். ஆண்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

சைந்தவியின் கர்ப்பத்திற்குக் காரணம் நித்தியானந்தன் தான் என்பதில் அவருக்கு ஐயமில்லை. ஆனால் அது எப்படி? என்று சைந்தவியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்று இருந்தது. அதை உடனடியாகத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பினார்.

தமயந்தியைக் காண சைந்தவிக்கு உடல் கூசியது. கணவனும் மனைவியும் பிரிந்திருப்பது தானே எல்லோருக்கும் தெரியும். யாரும் அறியாமல் அவனுக்கும் அவளுக்கும் இடையில் நடந்ததை, அவள் வயிறு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொடுத்துவிட்டதே. ‘கணவனைப் பிரிந்து வாழ்பவள் கர்ப்பம் என்றால் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற அவமானத்தில் உடல் நடுங்கியது. அவள் பார்வையைக் கண்ணீர் மறைத்தது. அப்பொது தமயந்தி அவளருகில் அமர்ந்து,

“இந்த மாதிரி நேரத்தில் அழக்கூடாதம்மா. கண்ணைத் துடைத்துக்கொள்” என்றார்.

“அ…த்…தை…” என்று விசும்பியவள், “நான்…நா…நான்…” என்று வார்த்தைத் தேடித் தடுமாறினாள்.

“நீ ஒன்றுமே சொல்ல வேண்டாமம்மா. எனக்குப் புரிந்துவிட்டது. ஆனால், உன்னிடம் ஒன்றைக் கேட்க வேண்டும். தயவு செய்து என்னைத் தவறாக நினைக்காமல், அதற்கு மட்டும் பதில் சொல்” என்றார்.

‘என்ன கேட்கப்போகிறார்?’ என்று திகைத்து விழித்த சைந்தவி, “என்ன…அ..த்..தை?” என்றாள் பயத்துடன்.

“இதற்குக் காரணம் யாரென்று எனக்குத் தெரியும். ஆனால், இது நீயும் விருப்பப்பட்டு…நடந்ததா? இல்லை…?” என்று நிறுத்தினார்.

இல்லை என்று மறுப்பாகத் தலையசைத்தவள், கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு கதறினாள். தமயந்திக்கு அதற்குமேல் நா எழாமால் தழுதழுத்தது. ஒரு பெண் எவ்வளவு கொடுமைகளைத் தான் தாங்கிக்கொள்வாள்? தன் மகானாயிருந்தாலென்ன எதற்கும் ஒரு எல்லையுண்டு’ என்று மனதினுள் புழுங்கினார்.

சைந்தவியின் கண்ணீரைத் துடைத்தவர், “அழாதே… எனக்கு உன்னைப் பற்றியும் தெரியும்; அவனைப் பற்றியும் தெரியும். எங்கள் யாருக்கும் உன்மீது எந்த சந்தேகமும் இல்லை. கவலைப்படாதே” என்று மருமகளுக்கு ஆதரவாகப் பேசினார்.

“இப்போது ஒரு பெண்ணக நான் சொல்வதைக்கேள்” என்று இடைவெளிவிட்டு, மீண்டும் தொடர்ந்தார், “இதைக் கலைத்துவிடு!” என்றார் தயக்கமின்றி.

“அத்தை…!” என்று திடுக்கிட்டு நிமிர்ந்தாள் சைந்தவி.

“ஆமாம். உண்மையாகத்தான் சொல்கிறேன்! உன்னைச் சிறைப்படுத்தும் இந்த வாழ்க்கை, இனி உனக்குத் தேவையில்லை. எல்லாவற்றையும் மறந்துவிடு. அதற்கு முதலில் இந்தக் கருவை இப்போதே அழித்துவிடு. இது நீ சுமக்கவேண்டிய சுமையல்ல. உனக்குத் தேவையற்ற பாரம். எந்தத் தவறும் செய்யாமல் நீ அனுபவித்த துன்பமெல்லாம் இன்றோடு போகட்டும். இனி உனக்கான வாழ்க்கையை நீயே தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறு!” என்று ஒரே மூச்சில் பேசிமுடித்தார்.

(தொடரும்…)
 
#4
எதிர்பார்த்த மாதிரியே
சைந்தவி கர்ப்பிணி
இவளின் நிலைமை
ரொம்பவே பாவம்தான்

ஆனால் மகன் நித்யன்
செய்த தப்புக்கு, ஒரு
பாவமும் அறியாத அந்த
சிசுவை, தமயந்தி ஏன்
அழிக்க சொல்லுகிறார்,
அனு டியர்?

சவி என்ன செய்யப்
போகிறாள்?
மாமியார் சொன்ன மாதிரி
இரண்டு மாத சிசுவை
அழிக்கப் போகிறாளா?
இல்லை குழந்தையைப்
பெற்றெடுக்கப் போகிறாளா?
 
Last edited:

Saroja

Well-Known Member
#9
மகனே ஆனாலும் தப்பை செய்திருக்கிறான் என்று
அவனை ஒதுக்கி வைத்து இருக்கும் பெற்றோர்
மருமகள் இனியாவது நன்றாக வாழ வேண்டும்
என்று நினைத்து மனம் வேதனையுடன்
குழந்தையை கலைக்க சொல்வது எத்தனை
துயரம்
 

Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் நேசம் மறவா நெஞ்சம் கதையின் 26ம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.........படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ். படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க தோழமைகளே !!
Where are you harini sis
happy birthday hana ravin

Sponsored