என்னுள் சங்கீதமாய் நீ Final 1

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ Final 1



எல்லாம் வல்ல இறைவன் சந்நிதியில் “சுபத்ரா.. இளங்கோ திருமணம்” இனிதே நிறைவேற எல்லோரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் மிதந்தாலும், “சுபத்ரா.. ஹர்ஷினியின் கண்களில் மெலிதான குற்ற உணர்ச்சியும்” தெரிந்தது, இருவரின் பார்வையும் சந்திரன் மேல் தான் இருந்தது,

அவரின் பார்வையும் இவர்களை நோக்கி தான் இருந்தது ஒரு வித “எதிர்பார்ப்புடன்”, பின் என்ன நினைத்தாரோ..? சுபத்ரா இருக்குமிடம் வந்தவர், வந்துவிட்டாலும் என்ன பேசுவது..? என்று புரியாமல் திணறவும்,

அவரின் பரிதவிப்பை புரிந்து கொண்ட இளங்கோ.. சுபத்ராவை கண்டிப்போடு பார்க்க, “அவர் என்ன செய்வாரோ..?” என்று எல்லோரும் அவர்களையே தான் எதிர்பார்ப்பு கலந்த ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்,

சுபத்ராவிற்கு.. சந்திரனிடம் பேசக்கூடாது என்றெல்லாம் இல்ல, ஆனால் அவரின் மனதில் இருந்த ஒருவித குற்ற உணர்ச்சி அவரை பேசவிடாமல் செய்தது, அடைத்த தொண்டையை செருமி கொண்டு, வழிந்த கண்ணீரை துடைக்க கை கொண்டு செல்ல, சந்திரன் தன் கையால் அவரின் கண்ணீரை துடைக்க..

அவரின் அன்பில் இருந்த எல்லா தடைகளையும் உடைய.. “அண்ணா..” என்று கதறி கொண்டே வேகமாக அவரை கட்டிப்பிடித்து அழவும், சந்திரனும் எல்லையில்லா ஆனந்தத்தில் தங்கையை கட்டிக்கொண்டு அழ, “இந்திரனும்.. மேனகாவும்” வேகமாக வந்து அவர்களை கட்டிக்கொண்டு அழ, சுற்றிருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீரோடு “நீண்ட நெடு வருட வேதனை முடிவுக்கு வந்ததில் அளவில்லா ஆனந்தமே..”

ஆச்சார்யா.. தன் பிள்ளைகளின் ஆனந்த கண்ணீரை நிறைவோடு பார்த்து கொண்டிருக்கவும், அவரின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு அவரிடம் செல்ல கால்கள் பரபரத்தாலும், “ஜெய்க்கு அவர் செய்த அநியாத்தில் மனம் ஓட்டாமல் தள்ளிருக்கவே முடிந்தது.. வருத்தத்தோடு தான்”,

ஆனால்… அந்த “வருத்தம் எதுவும் ஜெய்க்கு இருந்தது போல் தெரியவில்லை, அவன் அவரை நெருங்கி தோளோடு அணைத்துக்கொள்ள, ஆச்சார்யாவும் அவனை மகிழ்ச்சியோடு சேர்த்து அணைத்து கொள்ள, அவர்களின் பாசப்பிணைப்பை பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினிக்கு தோன்றியது,

“பொறாமையா..? சந்தோஷமா..? கோவமா..? ஆற்றாமையா..?” இதில் எது என்று அவளுக்கே தெரியாமல் அவர்களையே குறுகுறுவென்று பார்க்க, அவளின் பார்வையை உணர்ந்த ஜெய், கிண்டலாக சிரித்தபடி ஆச்சார்யாவை பார்க்கும் படி சைகை காட்ட, அவரும் திரும்பி தன் செல்ல “பேத்தியை பார்த்த உடனே அவரின் கண்களில் தெரிந்ததெல்லாம் ஏக்கமே.”

அதை புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு.. “முதல் முறையாக ஓர் நொடி தவறு செய்கிறோமோ..? என்றே தோன்றியது”, ஆனால் அடுத்த நொடி அவளின் மனம் “அவர் தான் தவறு” என்று உரக்க சொன்னதில் மீண்டும் உறுதியுடன் முறுக்கி தான் கொண்டது, அதை அவளின் முகமே காட்டி கொடுக்க, புரிந்து கொண்ட ஜெய் பல்லை கடித்தான்.. என்றால் ஆச்சார்யா நிராசை கொண்டார்,

ஆச்சார்யாவிற்கு நன்றாக புரிந்தது, பேத்தியின் எதிர்பார்ப்பு என்னவென்று..?

அவர்களையே முறைத்து கொண்டிருந்த மகளிடம் வந்த ரேணுகா, அவளின் தலையில் கொட்ட, வழியில் “ஆஆ..” என்று கத்தியவாறு திரும்பி தன் தாயை முறைத்து பார்த்தவள்,

“இப்போ எதுக்குமா கொட்டுன..?” என்று கோவமாக கேட்க,

ம்ம்.. எதுக்கு கொட்டினேனா..? என் புருஷனுக்காக தான் கொட்டினேன்.. “ஏண்டி எதோ கெட்ட நேரம் அவருக்கு.. அப்போ எதோ கோவத்தில், நிதானமில்லாம அப்படி ஒரு பெரிய தப்பு பண்ணிபுட்டாரு.. அதுக்கு அவர் வருத்தப்படாத நாளே இல்லை.. அன்னியிலுருந்து அந்த மனுஷன் நிம்மதியா சாப்புட்டு,, தூங்கி நான் பார்த்ததே கிடையாது..”

“இப்படி செஞ்சிட்டோமேன்னு எப்போ பார்த்தாலும் வேதனை தான், இதுல போதாக்குறைக்கு.. உன்னை வேண்டி.. வேண்டி.. ஒத்த பிள்ளையா பெத்து உன் மேல உசிரையே வச்சிருந்தார்”.

“அவர்கிட்ட இத்தனை வருஷமா பேசாம.. அவர் முகத்தை கூட பார்க்காம என்ன பாடுபடுத்துன அவரை.. பாரு.. இப்போ கூட உன்னைத்தான் ஏக்கமா பாத்துட்டு இருக்காரு.. இப்பாவது போய் என் புருஷன் கிட்ட பேசலாம் இல்லை..” என்று தன் கணவருக்காக ரேணுகா மகளிடம் ஆதங்கமாக சண்டையிட..

தன்னயே பார்த்து கொண்டிருந்த சந்திரனை கவனித்த ஹர்ஷினிக்கும்.. "இத்தனை வருஷமா கோவத்துல அவரை ஒதுக்கி வச்சி நிறைய கஷ்ட படுத்திருக்கோம்" என்று தெரிந்திருந்தாலும், இப்பொழுது அதையே ரேணுகா வார்த்தைகளாக சொல்ல, மிகவும் வருத்தம் தான்,

அதனாலே.. முயன்று தைரியத்தை வரவழைத்து கொண்டு அவரிடம் செல்ல, “இத்தனை வருடம் கழித்து தன்னிடம் மீண்டும் வரும் மகளை ஆனந்தமாக கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்க”, அவரை நெருங்கிய ஹர்ஷினி,

“என்ன பேசுவது..?” என்று சுபத்ரா போலே திணற, அந்த நொடியில் தன் இரு மகள்களின் ஒற்றுமையான தவிப்பை உணர்ந்த சந்திரன், “தானே ஹர்ஷினியின் கையை பாசத்தோடு பற்ற.. ஹர்ஷினிக்கும் தந்தை பாசத்தில் உள்ளுக்குள் உடைந்து அவரின் கைகளை பற்றி அதிலே முகம் புதைத்து அழ, சந்திரனும் கண்களில் தேங்கும் கண்ணீரோடு அவளின் தலையை பாசமாக வருடி விட, ஒரே நாளில் தங்கள் குடும்பத்தில் இழந்த சந்தோசம் மீண்டும் மீண்டதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே,

“ஆச்சார்யாவை தவிர..” அவரின் பக்கத்திலே இருந்ததால் அவரின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொண்ட ஜெய்க்கு ஹர்ஷினி மேல் வருத்தமே..

“சரி.. கடவுள் சந்நிதானத்துல எல்லா பிரச்சனையும் நல்ல படியா முடிஞ்சது.. கிளம்புங்க வீட்டுக்கு போலாம்.. நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு கிளம்பிரனும்” என்று அன்னபூரணி சொல்ல,

எல்லோரும் அடுத்து அடுத்த செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க ஆரம்பிக்க.. இறுதியாக சுபத்ரா.. கணவர் வீடு செல்லும் நேரமும் வர, அவர் முதலில் தேடியது தன் தந்தையை தான்..

“கல்யாணத்துக்கு முதல் நாளே இரவு முழுவதும் அவரிடம் மனதார பேசி.. இத்தனை வருட கஷ்டத்தை நினைத்து, தேவியை நினைத்து அழுது இருந்தாலும்”,

“பிறந்த வீட்டை விட்டு செல்லும் போது அழாமல் இருக்க அவர் மட்டும் விதிவிலக்கா என்ன..?” அவர் கிளம்பும் போது மறுபடியும் ஒரு பாச அரங்கேற்றம் நடைபெற்று.. அவர் கணவர் வீடு செல்ல “எல்லோரின் மனதிலும் அழுத்திருந்த மிக பெரிய மனபாரம் நீங்கியதில்” அந்த நாள் இனிதே நிறைவடைந்தது.

அடுத்து “ஜெய்.. ஹர்ஷினி” திருமணத்திற்கு இன்னும் சிறிது நாட்களே இருந்ததால், எல்லோரின் கவனமும் அதிலே செல்ல நாட்கள் புயல் வேகத்தில் கடந்து, இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்னும் நிலையில்..

“ஆச்சார்யா.. எல்லோரிடமும் பேச வேண்டும்..” என்று அனைவரையும் “சுபத்ரா குடும்பம் முதல் ஜெய் குடும்பம் வரை” எல்லோரும் ஒன்று சேர, ஹர்ஷினிக்கு தான் சிறிது நாட்களாகவே இருந்த மிகப்பெரிய தவிப்பு இன்னும் இன்னும் அதிகமாகியயது,

ஏனெனில்.. கடந்து சென்ற நாட்களில் “என்னதான் ஆச்சார்யா சந்தோஷமாக தன் உயிர் பேத்தியின் திருமண வேலைகளை ஓடியாடி பார்த்தாலும் அவரிடம் தெரிந்த அலைப்புறுதலில், வேதனையில், குழப்பத்தில், இவை அனைத்தும் தன்னால் தானோ..? என்ற சந்தேகத்தில் ஹர்ஷினிக்கு குற்ற உணர்ச்சியோடு வருத்தமும் கூட..

அதோடு “ஜெயும்.. அவளின் செயல்.. கோவம் எல்லாம் தப்பு” என்றே தொடர்ந்து சாடி கொண்டிருந்தான்.

அவர் எல்லோரையும் பார்த்து விட்டு கணீரென பேச ஆரம்பிக்க, “நான் கொஞ்சம் பேசணும் தாத்தா..” என்று ஹர்ஷினி பரிதவிப்புடன் சொல்ல, கூர்மையாக அவளை பார்த்த ஆச்சார்யா,

“நான் பேசி முடிச்சதும்.. நீ பேசு ஹர்ஷி” என,

“ப்ளீஸ் தாத்தா.. நான்.. நான்.. பேசி முடிச்சிடுறேனே..” என்று வேண்டுகோளாக கேட்க,

“ம்ம்..” என்று பெருமூச்சு விட்ட ஆச்சார்யா பேசும்படி சைகை காட்ட, அவளோ பேசாமல் அவரிடம் வந்தவள் ஒரு நொடி தயங்கி விட்டு கேவலோடு பாய்ந்து அவரை கட்டி கொண்டு அழ, எல்லோருக்கும் அதிர்ச்சியே..

“மறுபடியும் சண்டையா..?” என்று தான் எல்லோருமே நினைத்து இருந்ததால் இந்த திருப்பத்தை எதிர்பாராமல் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்க, “ஜெய் மட்டும் இதை.. தான் எதிர்பார்த்தேன்” என்று ஹர்ஷினியை காதலாக பார்த்த படி நின்றான்..

“ஏன் ஆச்சார்யாவுமே.. ஹர்ஷினி பேச வேண்டும்.. என்று கேட்டதில், சண்டை தான் போடா போகிறாள்..” என்றே நினைத்து.. தடுத்து, தான் சொல்ல வந்ததை சொல்லிவிட எண்ணினார்..”


ஆனால்.. ஹர்ஷினியின் இந்த செயலை எதிர்ப்பார்க்காமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றவர், அடுத்து தானும் அவளை பாசத்தோடு அணைத்து கொள்ள, ஹர்ஷினி இன்னும் இன்னும் தான் அழுதாள்..

“தாத்தா.. என்னை மன்னிச்சிடுங்க..” என்று அழுகையோடு சொல்ல, யாருக்கும் முதலில் அவள் சொன்னதில் நம்பிக்கையே இல்லை.. எல்லோரும் நம்பாமல் ஒருவர் மாற்றி ஒருவர் பார்க்க, இவர்களின் செயலில் ஜெய்க்கு சிரிப்பு தான் வந்தது,

அதே சிரிப்போடே.. “உங்க காதுல விழுந்தது உண்மைதான்.. அவ அவங்க தாத்தாகிட்ட மன்னிப்பு தான் கேட்ட” என்று சொல்ல, அவனின் சிரிப்பில் கடுப்பான ஹர்ஷினி,

“நான் இங்க அழுதுட்டு இருக்கேன்.. இவர் என்னடான்னா என்னை வச்சி காமெடி பண்ணிட்டிருக்கார்..” என்று வீறு கொண்டு எழுந்தவள், வேகமாக ஆச்சார்யாவிடம் இருந்து விலகி அவனை முறைக்க,

“இங்க என்ன முறைப்பு வேண்டிக்கிடக்கு.. முதல்ல அவர்கிட்ட பேச வேண்டியதை பேசு..” என்று அதட்டலாக சொல்ல,

“என் தாத்தாகிட்ட பேச எனக்கு தெரியும்.. நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்று கழுத்தை வெட்டி நொடித்தவள்,

“நீங்க என்ன.. அவர்கிட்ட ரொம்பத்தான் கொஞ்சி குலாவுறீங்க..” என்று ஆச்சார்யாவிடமும் கோவமாக எகிற, அவளின் பொறாமையில் தன் பேத்தி மீண்டும் கிடைத்து விட்டாள் என்று புரிந்த உடன் இத்தனை நாள் இருந்த டென்க்ஷன், பயம்.. வேதனை எல்லாம் நீங்கியது போல் இருந்தது ஆச்சார்யாவிற்கு..

“ஏய்.. நீ பேசவேண்டியதை முதல்ல பேசுடி..” என்று அவளை நெருங்கி ஜெய் கடுப்புடன் முணுமுணுத்து விட்டு செல்ல, “நாம இதை பத்தி அப்பறம் பேசலாம்..” என்று அவளே “தொடரும்..” போட்டு முடித்தவள்,

“தாத்தா.. என்னை மன்னிச்சிருங்க” என்று மனதார மறுபடியும் கேட்கவும்,

“ஷ்ஷ்.. எதுக்கு ஹர்ஷி மன்னிப்பெல்லாம் கேட்கிற விடு..”

“இல்லை தாத்தா.. கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரு உறுத்தல்.. நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறோனோன்னு தோணிட்டே இருக்கு.. ஏன் அதுதான் உண்மையும் கூட, நீங்க என் மேல வச்சிருக்கிற பாசத்துல ஒரு சதவீதம் கூட குறை கண்டுபிடிக்க முடியாது..”

“இந்த வயசுலயும்.. என் கல்யாணத்துக்காக நீங்க ஓடியாடி சந்தோஷமா வேலை செய்றீங்க.. எதனால் என் மேல வச்ச அளவுக்கடந்த பாசத்தால் தானே..”


“எனக்கும் உங்களை ரொம்ப.. ரொம்ப.. பிடிக்கும் தாத்தா.. எல்லோருக்கும் அவங்க அப்பா ரோல் மாடலா இருந்தா.. எனக்கு எப்பவும் நீங்க தான் ரோல் மாடலா இருந்திருக்கேங்க..”


“என்னை பொறுத்தவரை என் தாத்தா எப்பவும் எந்த தப்பும் செய்யவே மாட்டாரு.. அவர் ரொம்ப நல்லவர்.. பாசமானவர்..”

“இன்னும் எப்படி சொல்ல..?”

“ என் மனசுல உங்களுக்கு ஒரு ஹீரோ இமேஜ் தாத்தா..” என்று சொல்லும்போதே அவளின் குரலில் இருந்த பெருமையில் கர்வத்தில் ஆச்சார்யாவிற்குமே பெருமை தான்..

“ஆனால்..” என்று அவரை அதிர்ப்தியாக பார்த்தவள்,

“இந்த இமேஜ் முதல்ல உடைஞ்சது எப்போ தெரியுமா..? தாத்தா..

“நீங்க அந்த காளிதாஸ் கேட்டதுக்கு பயந்து.. என்னை டான்ஸை விட சொன்னப்போ..” என்று நிறுத்தி நிதானமாக சொல்ல,

“ஹர்ஷினி..” என்ற ஜெயின் அதட்டல் உச்ச கட்ட கோவத்தில் தான் ஒலித்தது,

“இருக்கட்டும் ஜெய்.. அவ பேசட்டும்” என்று ஆச்சார்யா உறுதியாக சொல்லிவிட ஜெய்க்கு எதுவும் செய்ய முடியாத நிலை..

“மறுபடியும்.. மறுபடியும் ஏன் இதை பற்றியே பேசி பேசி அவரை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று ஹர்ஷினியின் மேல் அளவுகடந்த கோவம் எரிமலையாய் கொதித்தது”.

ஆனால்… “ஹர்ஷினியோ இன்று தன்னுடைய எண்ணத்தை தாத்தாவிடம் சொல்லிவிட வேண்டும்” என்று உறுதியோடு இருந்ததால் அவள் ஜெயின் புறம் திரும்ப கூட இல்லை,

அதுக்கு அப்பறம் “சுபத்ரா அத்தை விஷயத்துல” என்று சொல்ல,

ஆச்சார்யா.. அதில் “தன் தவறு எங்கே..?” என்று புரியாமல் பார்க்க,

“நீங்க முதல்லே அத்தைக்கு ஓகே சொல்லிருந்தா எந்த பிரச்சனையும் வந்தே இருந்திருக்காதே.. ஏன்னா..? உங்களுக்குமே இளங்கோ மாமா மேல திருப்தி இல்ல.. எல்லோரும் பெருமையா பார்க்க வேண்டிய மனுஷனை.. நீங்க உங்க மகளுக்கு ஏத்தவனா..? இல்லையான்னு..? யோசிச்சீங்க..

“உங்களுக்கும் பொண்ணு இருக்கு.. பேத்தி இருக்கு.. அவரோட நிலைமையை தெரிஞ்சவுடன் நீங்கதான் முதல்ல அவருக்கு யோசிக்காமலே பொண்ணு கொடுத்திருக்கணும்”, என்று சொன்னவள்,

“அடுத்து ஜெய்..” என்று சொல்ல,

“என்னை பத்தி நீ பேசாதே” என்று தன்னை பற்றி பேசுவாள் என்று உறுதியாக தெரிந்ததால், ஜெய் கோவமாக கத்த, அவனின் கோவத்தில் ஹர்ஷினி உடல் அதிர நின்றுருந்தாலே தவிர, பின் வாங்க வில்லை.

ஆச்சர்யாதான் மறுபடியும் ஜெயயை அடக்க, ஹர்ஷினி உறுதியுடன் தான் பேசினாள். “அவரை பத்தி நாம ஏற்கனவே நிறைய முறை பேசிட்டோம்.. சண்டை போட்டுட்டோம்”.

“ஆனாலும்.. இப்போவும் சொல்றேன் “நீங்க அவருக்கு செஞ்சது ரொம்ப பெரிய தப்பு, அநியாயம் தாத்தா.. ஒருத்தரோட உழைப்பை. அங்கீகாரத்தை.. அடையாளத்தை.. இலட்சியத்தை வேரோடு பிடுங்கிறதுக்கு எந்த காரணம் சொன்னாலும் ஏத்தக்கவே முடியாது தாத்தா..” என்று சொல்லவும், ஜெயின் தந்தை மகாதேவனுக்கு மருமகளின் தைரியம்.. நேர்மை.. காதலை நினைத்து பெருமையே.

“தான்.. பேச பேச மருகி போய் நின்றிருந்த ஆச்சார்யாவை கண்ட ஹர்ஷினிக்கு வருத்தம் இருந்தாலும், தன் எண்ணத்தை சொல்லிவிட வேண்டும்” என்று தன் மனதை கல்லாக்கி கொண்டு எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள்,

இதையெல்லம் உங்களை தப்பு சொல்லணும்ன்னு நான் சொல்லலை தாத்தா.. “என் தாத்தா ஒரு ஹீரோன்னு நினைச்சி உங்களை பாலோவ் பண்ணியிருந்த என்னால.. இதையெல்லாம் ஜீரணிக்கவே முடியலை”

“உங்களுக்கு தெரியாது தாத்தா.. என் தாத்தாவா..? இப்படின்னு நான் நிறைய நாள் எனக்குள்ளே அழுது.. எனக்குள்ளே நிறைய சண்டை போட்டு அந்த அழுத்தம் தாங்காம உங்க கிட்ட சண்டை போட்டு, அதை நினைச்சி நானே வேதனை பட்டு, ரொம்ப ரொம்ப கொடுமையா இருக்கும் தாத்தா..”

“நீங்க பொய்த்து போனது ஒரு பக்கம்.. ஜெயோட கனவு ஒரு பக்கம்ன்னு ரொம்ப எனக்குள்ளே நான் அல்லாடிருக்கேன்”.

“என்னால யார்கிட்ட போய் என் கஷ்டத்தை சொல்ல முடியும்.. ஏன்னா பொறந்ததுல இருந்து நான் யார்கிட்டேயும் எப்பவும்.. எதுவும்.. ஷேர் செஞ்சதே இல்லை.. உங்களை தவிர”..

ஆனா.. இப்போ நீங்க குடுக்கிற கஷ்டத்தை உங்க கிட்டேயே நான் எப்படி சொல்லி..? என்னன்னு சொல்லி? ஆறுதல் தேட முடியும்..” என்று விரக்தியாக முடிக்க, கேட்ட எல்லோருக்குமே மனம் மிகவும் கனத்து போனது,,

“ஆச்சார்யாவிற்கோ.. எதையும் சொல்லிவிட முடியாத நிலை..” மிகவும் திணறி போனவராக அவளை பார்க்க,

“நான் இப்போவும் உங்களை கஷ்டப்படுத்த இதையெல்லாம் சொல்லலை தாத்தா.. நீங்க கொஞ்ச நாளாவே வேதனையோடு இருக்கிறது எனக்கு தெரியும்”.

“என்னால தானோன்ற குற்ற உணர்ச்சி, வருத்தத்தால தான் எல்லாத்தையும் இப்பவே உங்ககிட்ட சொல்லிட்டு இதை எல்லாத்தையும் முடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டேன்”,

இனி.. “நமக்குள்ள டான்ஸ் அப்படிங்கிற பேச்சோ.. சண்டையோ.. எதுவுமே.. எப்பவுமே.. வேண்டாம் தாத்தா” என்று முடிக்க, கேட்டிருந்த ஆச்சார்யாவிற்கு எல்லையில்லா சந்தோஷம் தான், அதையே அவரின் முகம் பிரதிபலிக்க எல்லோருக்கும் அவரின் மேல் அதிர்ப்தியே..!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top