என்னுள் சங்கீதமாய் நீ 5

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 5



“பெரியம்மா கொஞ்சம் சீக்கிரம் கொண்டாங்க எங்க அம்மா வந்துருவாங்க என ஹாசினி” அவசரமாக கேட்கவும் .

"இருடி கொண்டு வரேன்.. ஆனா இதான் கடைசி பூரி ஹாசினி, இனி மேல் நீ கேட்டாலும் தரமாட்டேன்.." என கண்டிப்புடன் ரேணுகா சொல்லவும்

"ஓகே.. ஓகே.." என்றவள் வேகமாக பூரியை வாயில் அடைத்துக்கொண்டாள் .

"மெதுவா மெதுவா.. அவசரமா சாப்பிடாத"

"போங்க பெரியம்மா.. எங்க அம்மா மட்டும் பாத்துச்சி வாயில இருக்கிற பூரியைவே வெளியே எடுத்துடும்" என ஹாசினி சொல்லி கொண்டிருக்கும் போதே

"ஹாசினி.. இன்னும் நீ இங்க என்ன பண்ற..?" என சந்தேகமாக கேட்டபடி மாலதி {இந்திரனின் மனைவி } வர உடன் வந்த அபிஷேக், "வேற என்ன பண்ணுவா..? பெரியம்மா கேட்டு திருட்டு பூரி சாப்புடுவா.." என கிண்டலாக சொல்லவும்

“போட்டு கொடுத்துட்டான் எரும மாடு” என பல்லை கடித்தாள் ஹாசினி .

“ஹர்ஷி.. என்ன எந்திருச்சிட்ட ஒரு பூரி போதுமா உனக்கு..?" என கோவமாக ரேணுகா அதட்டவும்

"ம்மா போதும்" என்ற ஹர்ஷினி

ஹாசினி அபிஷேக் இருவரிடமும் ரெண்டு பேரும் "சீக்கிரம் முடிச்சுட்டு வாங்க" என்று சொன்னவள் ஹாலுக்கு சென்று விடவும்

“ஒருத்தி சாப்பிடவே மாட்டேங்கறா இன்னொருத்தி சாப்புட்டுக்கிட்டே இருக்கா” என மகளை முறைத்து பார்த்து கொன்டே சொன்ன மாலதி "அவன் சொல்றது உண்மையா ஹாசினி..? பூரி சாப்பிட்டியா என்ன..? ஓட்ஸ் தானே சாப்புடனும் நீ” என அதட்டவும்

"விடு மாலதி.. ஏன் அதட்டுற..? பாவம் புள்ள மூஞ்சி சுருங்கி போச்சு.." என ரேணுகா பரிவோடு சொல்லவும் மாலதியும் ஹாசினியின் பாவமான முகத்தை பார்த்துவிட்டு “சரி கிளம்பு ஹர்ஷினி ரெடியா இருக்கா பாரு.." எனவும் ஹாசினி "வரேன்.." என பொதுவாக சொன்னவள் அபிஷேக்கை பார்த்து ரகசியமாக அழகு காட்டிவிட்டு சென்றாள் .

"ஏன்மா இப்படி..? அவ மூஞ்ச பாவமா வச்சி உங்கள ஏமாத்திட்டு போறா” என அபி கடுப்பாக சொல்லவும்

"டேய்.. எப்ப பாத்தாலும் அவளோடு மல்லு கட்டுற.. பேசாம சாப்புட்டு கிளம்பு" என ரேணுகா அதட்டவும்

"வர வர இந்த வீட்ல எனக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்ல பாத்துக்குறேன் உங்களை.." என்றவன் சாப்பிட்டு கிளம்பிவிட்டான் .


"முன்னைக்கு ஹாசினி இப்போ நல்லா வெயிட் குறைஞ்சிருக்கா.. கொஞ்ச கொஞ்சமா குறைக்கலாம் விடு மாலதி" என ரேணுகா சொல்லவும்

"எனக்கும் புரியுதுக்கா 70 கிலோலிருந்து இப்போ 63 வந்துட்டா, அவ கல்யாணத்துக்குள்ள கண்டிப்பா இன்னும் ஒரு 5 கிலோ மட்டும் குறைச்சுட்டா போதும்.." என மாலதி கவலையோடே சொல்லவும்.

"மேனகாவின் மகன்.. கார்த்திக்குக்கு தான் ஹாசினியை உறுதி செய்து இருந்தனர்.."

"கார்த்திக்கே.. அவ வெயிட் பிரச்சனை இல்ல.. அதனால் ரொம்ப கவலை படாத விடு பாத்துக்கலாம்" என ஆறுதலாக ரேணுகா சொன்னார் .

…………………………………………………………………….


"அக்கா.. உனக்கு எப்படி அந்த ஒரு பூரி போதும்..?" என ஆச்சரியமாக ஹாசினி கேட்கவும்


"ம்ப்ச்" என்ற ஹர்ஷினி, “உன்னோட ப்ராஞ்சுக்கான ரிப்போர்ட் எங்க ஹாசினி..?இன்னிக்கு மதியத்துக்குள்ள நாம எல்லா ரிபோர்டும் கொடுக்கணும் தெரியுமில்ல.." என கொஞ்சம் கண்டிப்போடு கேட்கவும்

இந்த ஒரு மாதமாகவே எந்த எந்த ஸ்டேட்ல புது பிரான்ச் ஓபன் பண்றது , அதுக்கான இடம் , கொட்டேஷன் ரேடி பண்ண என மிகவும் பிஸியான மாதமாகத்தான் இருந்தது இவர்கள் மூவருக்கும்.

"ஹி ஹி அது.. இன்னும் பைனல் வேலை மட்டும் தான் பெண்டிங் இருக்கு. ஹோட்டல் போனவுடனே அதை முடிச்சுட்டு 1 மணிநேரத்துல கொடுத்துருவேன்" என ஹாசினி சமாளிப்பாக சொல்லவும்.

“புது பிரான்ச் ஓபன் பண்றத பத்தி பேசத்தான் இன்னிக்கு ஈவினிங் சென்ட்ரல் மினிஸ்டர பாக்க உங்க தாத்தாவும் , உங்க பெரியப்பாவும் போறாங்க தெரியுமில்ல. அவங்க கிளம்பரத்துக்குள்ள நாம ரிப்போர்ட் கொடுக்கணும் ஹாசினி".

அபி நேத்தே அவன் பிரான்ச் ரிப்போர்ட் கொடுத்து அதை அப்ரூவும் வாங்கிட்டான் . நீ மட்டும் தான் இன்னும் முடிக்காம இருக்க

"அபி நீ அவளோட இருந்து அவகிட்ட கொடுத்திருக்கிற ப்ராஞ்சுக்கான ரிப்போர்ட் ரெடி பண்ணு. எனக்கு 10 மணிக்கு ரிப்போர்ட் கையில் இருக்கணும்.." என சொல்லவும் அபி , ஹாசினி இருவரும் "ஒகேக்கா.." என்றனர்.

கிடைத்தது சான்ஸ் என "ஹாசினி உனக்கு எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடு.. இது தான் அத தவிர வேலையெல்லாம் நீ டைம்க்கு பாத்துட்டாலும்..!" என அபி நக்கலாக சொல்லவும்

"உன்னக்கு என்ன..? நீ கார் ஓட்டுற வேலையை மட்டும் பாரு.." என ஹாசினி வரிஞ்சி கட்டி கொண்டு சண்டைக்கு கிளம்பினாள் அபியிடம்.

"கொஞ்சமாவது.. அண்ணன் அப்படின்ற மரியாதை இருக்க.. உனக்கு திருஷ்டி பூசணிக்கா" எனவும்

"யாரு நானா..? நீ தாண்டா காண்டா மிருகம்” என எப்பொழுதும் போல் இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டு கொள்ள ஆரம்பிக்கவும் .

இவங்கள திருத்த முடியாது என சலித்த ஹர்ஷினி மொபைல் பார்க்க ஆரம்பிக்கவும் அதில் “இன்று ஜெய் ஆகாஷ் பாடல் ஷூட்டிங் முடிந்து வெளி நாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்” என ஏர்போர்ட்டில் இருக்கும் அவனின் போட்டோ போட்டு இருந்தனர்.

“நேஷனல் பெஸ்ட் கோரியோ கிராபர் அவார்ட் “வாங்கிய பிறகு ஜெய் ஆகாஷ் என்ன செய்தாலும் நியூஸ் தான் .

அதிலும் இப்பொழுதெல்லாம் அவன் கோரிய கிராப் செய்யும் பாடல்கள் எல்லாம் மிகவும் வெற்றி பெற ஆரம்பித்தது .

அவனின் “தனித்துவமான ஸ்டெப்ஸ்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆனது”. மிகவும் விரும்பும் தேடப்படும் ஆளாக மாறினான் ஜெய் ஆகாஷ் .

அவனின் வளர்ச்சியில் மிகவும் பெருமையே ஹர்ஷினிக்கு. சாதிப்பதற்காக அவனின் போராட்டங்கள் அனைத்தும் அறிந்தவள் என்பதால் “இந்த புகழுக்கு எல்லாம் மிகவும் ஏற்புடையவன் என்னவன்” என கர்வமே கொள்ளும் மனது ஹர்ஷினிக்கு .

அந்த நியூஸில் இருக்கும் அவனின் போட்டோவை ஜூம் செய்தவள் தன் விரலால் அவனின் முகத்தை வருடினாள் .

இது போல் அவனின் போட்டோவை பார்த்தால் தான் உண்டு மற்றபடி நேரில் பார்ப்பது எல்லாம் என நினைத்தவுடன் மனம் வெகுவாக சுருண்டது ஹர்ஷினிக்கு .

அன்று அவன் “நாம பிரிஞ்சிரலாம் என சொன்னவுடன் கோவத்தில் சொல்கிறான்” . அவனின் கோவம் குறையட்டும் பிறகு பேசலாம் என்றே நினைத்தாள் .

ஆனால் அவன் கோவத்தில் எல்லாம் சொல்லவில்லை உண்மையாகத்தான் தான் சொல்லிருக்கிறான் என நாளாக நாளாகவே ஹர்ஷினி உணர்ந்தாள்.

அவனை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவே இல்ல ஹர்ஷினியால் அதை விட ஆகாஷ் விடவே இல்ல என்றே சொல்லலாம்.

கால், சோசியல் மீடியா என எல்லாவற்றிலும் இருந்து முழுவதுமாக அவளிடமிருந்து விலகி விட்டான் .

ஆகாஷ பார்க்க முடியாமல் அவனோடு பேசவும் முடியாமல் இரண்டு மாதம் தாங்க முடிந்த ஹர்ஷினியால் அதற்க்கு பிறகு முடியவே முடியாது என புரிந்தவுடன் அவனோடு பேச வேண்டும் என தாரிணியின் மூலமாக சொன்னதற்கு அவனின் பதில் ஓரு மெயில் மூலமாக இரண்டே வரிகளில்

“தன்னிடம் பேச அவனுக்கு எதுவும் இல்லையெனவும்….. முடிந்தது முடிந்ததுதான் பை” என்றிருந்ததது. அதை பார்த்தவுடன்ஆகாஷ் ஏதோ பிளான் செய்கிறான் என புரிந்தது.

அதன் பிறகு அவனோடு பேச ஹர்ஷினியும் எந்த முயற்சி எடுக்கவில்லை. ஆனால் “மனம் மட்டும் கொதி கனலாக கொதித்தது.. என்ன பதில் இது..? முடிசிஞ்சிருச்சுன்னு.. அதெப்படி அவனால் இப்படி சொல்ல முடிகிறது..?"

"போ.. இனிமேல் நானும் பேச ட்ரை பண்ணமாட்டேன்" என முடிவு எடுத்துவிட்டாலும் ஆகாஷின் செயல் ஹர்ஷினிக்கு அதிகமான வேதனை , கோவம் இரண்டும் கொடுத்தது.

அவளின் கோவத்தை மேலும் அதிகரிப்பது போல் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்களின் பார்ம் ஹவுஸிற்கு ஹர்ஷினி சென்ற போது ஜெய் ஆகாஷும் அங்கு தான் இருந்தான் .

இவள் கார் ஹார்ன் அடிக்கவும் கந்தன் வந்து கேட் திறந்தவர் அவளிடம் “மேம் ஒரு நிமிஷம் இங்கே இருங்க” என்றார் கொஞ்சம் சங்கடமான முகத்துடன்

"ஏன்..? என்னாச்சு..?" என புரியாமல் ஹர்ஷினி கேட்கவும்

"இல்ல.. ஜெய் சார் உள்ளே இருக்கார்.. அவர் இப்ப கிளம்பிடுவாராம். அப்பறம் உங்கள உள்ளே வர சொன்னார்” என சொல்லவும் ஹர்ஷினிக்கு அதிர்ச்சி மற்றும் கோவத்தில் பேச்சே வரவில்லை .

அப்பொழுது ஜெய் ஆகாஷ் அவனின் காரை எடுத்து கொண்டு வெளியே வந்தவன் “ஹர்ஷினியின் பக்கம் கூட திரும்பாமல்” அங்கிருந்து கிளம்பியே விட்டான் .

அவனின் செயலில் முதலில் அதிர்ந்தாலும்.. பின்பு இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கன்னு நானும் பாக்குறேன் இரு என மனதுக்குள் கருவி கொண்டாள் ஹர்ஷினி.

“அக்கா ஹோட்டல் வந்துடுச்சி” என ஹாசினி உலுக்கவும் தான் சுயத்திற்கு வந்த ஹர்ஷினி ஓஹ் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கி உள்ளே சென்று விடவும் .

"அக்கா ஏன் இப்படி இருக்க..? அடிக்கடி இந்த மாதிரி அமைதியாகிடற…. என்ன ஆச்சு அவளுக்கு..?" என ஹாசினி கவலையோடு கேட்கவும்

“அக்கா கிட்ட யாரும் எதுவும் கேக்க கூடாதுன்னு தாத்தா கண்டிப்பா சொல்லிருக்கார்.. இல்லாட்டியாவது என்னனு பாக்கலாம்.." என அபியும் கவலைப்பட்டான் .

"ஹேய் கைஸ்.. என்ன இங்க மாநாடு..?" என கேட்ட படி கார்த்திக் வரவும், ஹாசினி அபி இருவரும் முகத்தை இயல்பாக வைத்து கொண்டனர் .

"கரெக்ட் தான்.. ஹாசினி இருக்கா இல்ல அதான் உங்களுக்கு மாநாடு போல கூட்டமா தெரியுது.." என அபி கிண்டலாக சொல்லவும்

ஹாசினி "அப்படியா..?" என்பது போல் கார்த்திக்கை முறைத்து பார்க்கவும்

"அய்யோ.. பேபி நான் அந்த மீனிங்க்ல சொல்லல.. டேய் உனக்கு ஏன்டா இந்த கொலவெறி..?" என அபியை பார்த்து கார்த்திக் கேட்டு கொண்டிருக்கும் போதே

இருவரையும் முறைத்தபடி நான் உள்ளே போறேன் என்ற ஹாசினி உள்ளே சென்று விடவும்

"இப்போ சந்தோஷமா உனக்கு..? நல்லா வருவடா.." என்று கடுப்பாக சொன்ன கார்த்திக் ஹாசினிய பின்பற்றி உள்ளே சென்று விட்டான்.

அபி சிரித்தவாறே நின்றவன் "அய்யோ.. அக்கா கொடுத்த ஒர்க் முடிக்கணும் சும்மாவே இவ செய்ய மாட்டா . இப்போ கார்த்திக் வேற வந்துட்டார்.

சுத்தம் இப்போ நான் தான் எல்லாம் செய்யணும்.." என ஹாசினியை கடுப்பாக மனதுக்குள் திட்டியவன் வேகமாக வேலையை பார்க்க சென்றான் .

…………………………………………………………………….

ஒருவழியாக எல்லா ரிப்போர்ட்டும் முடிச்சி ஆச்சார்யாவிடமும் கொடுத்து அவர் எல்லாத்தையும் சரிபார்த்து விட்டு சந்திரனுடன் கிளம்பியும் விட்டார் .

மிகவும் ஆசுவாசமாக அபி ,ஹாசினி ,ஹர்ஷினி மூவரும் வீட்டுக்குள் வரும்போதே உள்ளே மேனகா பேசும் சத்தம் வாசல் வரை கேட்டது .

அவரின் சத்தத்திலே எதை பத்தி பேசுகிறார் என புரிந்தவுடன் அபி , ஹாசினி இருவரும் பதட்டத்துடன் திரும்பி ஹர்ஷினியை பார்க்கவும் அவள் கோவமான முகத்துடன் வேகமாக உள்ளே சென்று கொண்டிருந்தாள்.

மேனகா இந்திரனிடம் கோவமாக "இங்க பாருங்கண்ணா.. என் பயனுக்கு வயசு 28 முடிஞ்சு 29 ஆரம்பிக்க போகுது . அப்படி இருக்கும்போது நீங்க இன்னும் டைம் கேட்குறீங்க. எனக்கு தெரிஞ்சு போச்சி கார்த்திக் ஹாசினி கல்யாணம் கண்டிப்பா நடக்காதுன்னு".

"ஏன் நடக்காது..?" என கேட்டு கொன்டே ஹர்ஷினி வீட்டுக்குள்ளே வரவும் அவள் பின்னாலே வந்த அபி , ஹாசினி இருவரும் மாலதியின் பார்வையை புரிந்து கொண்டு வேகமாக அவர்களின் ரூமிற்கு சென்றுவிட்டனர்.

"வா ஹர்ஷினி.. நல்ல நேரத்துக்கு தான் வந்திருக்க.." என கோவமாக வரவேற்ற மேனகா "என்ன கேட்ட.. ஏன் நடக்காதுன்னா..?"

"உனக்கு கல்யாணம் பண்ணிட்டுதான்.. ஹாசினிக்கு பண்ணணுன்னா எப்படி நடக்கும்..? 26 வயசாகியும் உனக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கிற நினைப்பு இருக்கிற மாதிரியே தெரியலையே.." என கொந்தளிக்கவும்.

அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஹர்ஷினி "சித்தப்பா.. ஹாசினி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு, நான் முன்னாடியே சொன்னப்போ... நீங்க நான் மேனகா கிட்ட பேசியாச்சு.

அதெல்லாம் சீக்கிரம் நடக்கும் சொல்லிட்டு.. இப்போ அத்தை வேற மாதிரி சொல்ராங்க.." என கொஞ்சம் கோவமாகவே இந்திரனிடம் கேட்கவும்

இந்திரனோ ஹர்ஷினியின் கேள்வியை கவனிக்காதவர் போல் "அப்பா அண்ணன் வந்ததுக்கு அப்புறம் நாம இத பத்தி பேசலாம் மேனகா.. இப்போ வேண்டாம்" என பிரச்னையை முடிக்க பார்க்க. அதை ஹர்ஷினி மேனகா இருவருமே கண்டு கொள்ளவில்லை

அதுவும் ஹர்ஷினி இந்திரனிடம் பேசியதை கேட்கவும் மேனகாவின் கோவம் இன்னும் அதிகரித்தது என்றே சொல்லலாம் .

அவருக்கு சுபத்ரா , ஹர்ஷினி இருவரையும் மிகவும் பிடிக்கும். ஆனாலும் ஆச்சார்யா , சந்திரன் இருவரும் இவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர்கள் .

அது தெரிந்தும் ஒரு டான்ஸ்க்காக இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் முறை சரியில்ல என்பதே அவரின் எண்ணம் .

ஆனால்.."உண்மை காரணம் இதுவல்ல.." என்பது அவருக்கு தெரியாது. அவருக்கு மட்டுமில்ல வீட்டில் உள்ள யாருக்கும் எதுவும் தெரியாது சந்திரன் , இந்திரன் தவிர.

"மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது..?" என்பது எல்லாம் இல்ல, ஆனால் ஏனோ இவர்கள் விஷயம் சொல்ல வேண்டாம் என்று தோன்றியதால் சொல்லவில்லை ஆச்சார்யா. மகன்களையும் சொல்லவிடவில்லை.

ஏற்கனவே மேனகா கொஞ்சம் கோவத்தில் தான் ஆச்சார்யாவை பார்க்க வந்திருந்தார் . அவர் இல்ல என்று தெரிந்ததும் இந்திரனிடம் பேசினார் . ஆனால் அவர் இன்னும் டைம் கேட்கவும் தான் இந்த பிரச்சனை எல்லாம்.

அவரின் புகுந்த வீட்டில் இப்பொழுது எல்லாம் ஹர்ஷினியின் கல்யாணத்த பற்றி தான் அதிகம் பேசுகின்றனர்.

அதிலும் இன்று ஒரு படி மேலே போய் "ஹர்ஷினியும் உன் தங்கை சுபத்ரா போல தான் இருக்க போகிறாளா..?" என கேட்கவும் தான் மேனகாக்கு கோவம் , வருத்தம் , ஆங்கம் எல்லாம்

அதோடு இப்பொழுது ஹர்ஷினியும் ஹாசினியின் கல்யாணத்த பற்றி மட்டும் பேசவும்

"என்ன.. நீ ஹாசினி கல்யாணம் பண்றத பத்தி மட்டும் பேசுற, உனக்கு கல்யாணம் பண்ற எண்ணமே இல்ல அப்படித்தானே..?"

"அப்போ நீயும் சுபத்ரா மாதிரி கடைசி வரை இப்படியே இருக்க போறியா..?" என ஆத்திரமாக மேனகா கேட்கவும்

"அத்தை.. உங்க பையன் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசுங்க மத்தது எல்லாம் பேசாதீங்க.." என ஹர்ஷினி கொஞ்சம் கோவமாக சொல்லி விடவும்

"ஏன் பேசக்கூடாது..? அப்போ எனக்கு உங்க மேல எந்த உரிமையும் இல்லையா..?" என மேனகா கொஞ்சம் கோபமாகவும் அதே சமயம் வருத்தமாகவும் கேட்கவும் அதை உணர்ந்த ஹர்ஷினி

"அத்தை.. உங்களுக்கு எங்க மேல எல்லா உரிமையும் இருக்கு, ஆனா என் கல்யாணத்த பத்தி மட்டும் பேசாதிங்கன்னு தான் சொல்றேன்" என கொஞ்சம் பொறுமையாகவே சொன்னாள்.

"ஹர்ஷினி உனக்கு தெரியாது. உனக்கு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலன்னு எத்தனை பேரு இப்போல்லாம் கேட்கறாங்க தெரியுமா .

போன வாரம் நம்ம சொந்தத்துல நடந்த கல்யாணத்துல கூட உன்ன பத்தி தான் நிறைய பேசினாங்க அதுவும் நீயும் சுபத்ரா மாதிரி தான் இருக்க போறியான்னு அண்ணிகிட்ட கேட்டு அண்ணி எப்படி அழுதாங்க தெரியுமா.

ஏன் ஹர்ஷினி உனக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது..?" என மேனகா ஆற்றாமையுடன் கேட்கவும் ஹர்ஷினி ரேணுகாவை பார்த்தாள் .

அவர் தன் கண்ணீரை கட்டுபடித்து கொண்டு நின்றிருந்தார் . அவரின் கண்ணீரை பார்க்கவும் ஹர்ஷினிக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது .

ஹர்ஷினி என மேனகா மறுபடியும் ஆரம்பிக்கவும் "இவர் இன்று விடமாட்டார் போலே..? எப்படி தப்பிப்பது..?"என யோசித்தவள்

"அத்தை ப்ளீஸ்.. இப்போ எதுவும் பேச வேண்டாம், அப்பறமா பேசுவோம், எனக்கு ரொம்ப பசிக்குது" என பாவமான முகத்துடன் சொல்லவும்

"அண்ணி.. அப்பறமா பேசலாம் அவளே ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் பசிக்குது சொல்றா.." என ரேணுகா மாலதி இருவரும் மேனகாவிடம் கேட்கவும்

"அவ எஸ்கேப் ஆக தான் பசிக்குதுன்னு சொல்றா.." என கரெக்டாக கண்டுபிடித்தவர் "ஹர்ஷினி.. நான் இன்னும் ஒரு வாரத்துக்கு இங்க தான் இருக்க போறேன்" என முறைப்பாக சொல்லவும்

"என்னது ஒரு வாரமா..?" என மனதுக்குள் அதிர்ந்தாலும், "நம்ம அத்தை தானே சமாளிப்போம்" என நினைத்தவள் வெளியே ஒன்றும் காட்டி கொள்ளாமல் "ஏன் அத்தை என்ன அவசரம்..? இன்னும் ஒரு வாரம் இருங்க" என பாசத்துடனே சொன்னாள் .

மேனகாவும் அவளின் பாசத்தை உணர்ந்தாலும் "அதை அப்பறம் பார்ப்போம்" என தன் முறைப்ப கைவிடாமலே சொன்னவர்

"அண்ணி.. ஹாசினி , அபியையும் சாப்பிட வர சொல்லுங்க.. நான் இன்னும் அவங்க கிட்ட பேசவே இல்லை" என மாலதியிடம் சொல்லவும் எல்லோரும் ஒன்றாகவே உணவு உண்டனர் .

ஆனாலும் எல்லோரின் மனதிலும் மேனகா இந்த முறை கண்டிப்பாக விட மாட்டார் என்று புரிந்தது.

முதலில் எல்லாம் இது போல் நிறைய சமாளித்தவள் தான் ஆனால் இப்பொழுது ஆகாஷும் ஹர்ஷினியை அவாய்ட் செய்ய செய்ய அவளின் வருத்தம் எல்லாம் போய் இப்போ கோவம் தான் அதிகம் ஆனது. எப்போ யார் மேல வெடிப்போம் என ஹர்ஷினிக்கே கொஞ்சம் பயமாக தான் இருந்தது .
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹர்ஷினியை டான்ஸ் ஆடக் கூடாதுன்னு
ஏன் ஆச்சார்யா சத்தியம் வாங்கினார்?
ஜெய் ஆகாஷ்ஷைத் தவிர வேற யாரையும் அவள் கல்யாணம் பண்ண மாட்டாள்ன்னு தெரிஞ்சும் ஆச்சார்யா ஏன் ஆகாஷ்ஷை ஹர்ஷினிக்கு மணமுடிக்க விரும்பலை?
என்ன காரணம்?
இதற்கும் சுபத்ரா கல்யாணமாகாமல் இருப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இருக்கா?
 
Last edited:

Nithi Kanna

Well-Known Member
ஹர்ஷினியை டான்ஸ் ஆடக் கூடாதுன்னு
ஏன் ஆச்சார்யா சத்தியம் வாங்கினார்?
ஜெய் ஆகாஷ்ஷைத் தவிர வேற யாரையும் அவள் கல்யாணம் பண்ண மாட்டாள்ன்னு தெரிஞ்சும் ஆச்சார்யா ஏன் ஆகாஷ்ஷை ஹர்ஷினிக்கு மணமுடிக்க விரும்பலை?
என்ன காரணம்?
இதற்கும் சுபத்ரா கல்யாணமாகாமல் இருப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இருக்கா?
thank you so much banumma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top