என்னுள் சங்கீதமாய் நீ 32

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 32





ஹர்ஷினியை யாரும் எதுவும் சொல்லாதீங்க.. “என் மகனுக்கு அவ செஞ்சது நாளபின்ன உங்களுக்கு வேற யார் மூலமாவது தெரிஞ்சா.. நீங்க யாரும் என் மகனை தப்பா நினைக்க கூடாதுன்னு தான் நானே சொல்லிட்டேன்..” என்று விஜயா முடிக்கும் முன்னமே..

“இதில.. இவரை தப்பா நினைக்க இவங்களுக்கு என்ன இருக்கு..? நான் இவங்க காசை சும்மா ஒன்னும் தூக்கி கொடுத்துடலை.. கஷ்டப்பட்டு வேலை பாத்து தான் கொடுத்தேன்..” என்று ஹர்ஷினி வரிஞ்சி கட்டி கொண்டு சண்டைக்கு கிளம்பவும்,

“ஏண்டி.. நாங்க இப்போ யாராவது எதாவது சொன்னோமா..? அப்படியே விரிஞ்சி கட்டிக்கிட்டு சண்டைக்கு வர.” என்று ரேணுகா அவளின் தலையை தட்டி சொல்லவும்,

“ஏதாவது சொன்னோமா..?ன்னு வேற கேட்கிறீங்க.. முதல்ல இதுல நீங்க சொல்ல என்ன இருக்கு சொல்லுங்க..? இந்த விஷயத்துல யாருக்கும் எதுவும்ம்ம்.. சொல்ல ஒன்னும் கிடையாதுன்னு தான் நானும் சொல்றேன்” என்று மேலும் சண்டையிட,

“ஹர்ஷினி.. விடு உங்க அம்மா தெரியாம சொல்லிட்டா..” என்று அவளின் எண்ணமான “ஜெயயை பற்றி யாரும் எக்காலத்திலும் எதுவும் சொல்லிடகூடாது என்ற அவளின் கவனம் புரிந்த ஆச்சார்யா” அந்த விஷயத்தை அதோடு முடித்து விட,

“ஜெய்க்காக.. ஜெயின் மரியாதைக்காக தன் வீட்டாரிடமே சண்டை போடும் ஹர்ஷினியின் மேல்… அவளின் காதல் மேல்… மஹாதேவன் பெருமதிப்பு கொண்டார்” என்றே சொல்லலாம்.

“வந்ததிலிருந்து யாரும் எதுவும் சாப்பிடல.. எல்லோரும் கொஞ்சம் காபி, ஸ்னாக்ஸ் எடுத்துக்கோங்க..” என்று மாலதியும், மேனகாவும் விருந்தோம்பலை ஆரம்பிக்க, எல்லோரும் எடுத்து கொண்டாலும், மஹாதேவன் மட்டும் எதையும் தொடாமல் விறைப்பாக அமர்ந்திருக்க,

அவரின் அருகில் சென்ற “சந்திரன்..” தானே அவருக்கு காபி கப்பை எடுத்து, “காபி சாப்பிடுங்க..” என்று மரியாதையாக கொடுக்க, அதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால்.. அமைதியாக வாங்கி குடிக்கவும் தான் எல்லாருக்குமே மனது நிம்மதியானது.

“இதை எல்லாம் பார்த்த படி மட்டும் தான் இருந்தான் ஜெய்... எதிலும் தலையிடவில்லை.. யாருக்காகவும் ஆதரவாகவோ, எதிர்த்தோ பேசவில்லை.. இனி நாம் எல்லோரும் ஒரே குடும்பம்.. சண்டையோ.. சந்தோஷமோ எல்லாம் அவரவர்கள் பார்த்து கொள்ள வேண்டும், இதில் தானோ ஹர்ஷினியோ எங்கும் இருக்க போவதில்லை” என்பதுதான் அவனின் உறுதியான எண்ணமாக இருந்ததால், அவன் எதிலும் பேசவில்லை.

“இந்த வாரத்திலே ஒரு நல்ல நாளா.. உங்களுக்கு வசதிப்பட்ட நாளா பாத்து சொல்லுங்கப்பா.. உறுதி பண்ணி கையோடு அன்னிக்கே கல்யாணத்துக்கு முகூர்த்த நாளையும் குறிச்சிரலாம்.. அப்போதான் அடுத்து கல்யாணவேலை பாக்க ஆரம்பிக்க முடியும்..” என்று விஜயா ஆச்சார்யாவிடம் கேட்கவும்,

“எங்களுக்கு எந்த நாளா இருந்தாலும் சம்மதம் தான்”, என்று பேத்தியின் கல்யாண சந்தோஷம் முகத்தில் தெரிய ஆச்சார்யா பூரிப்பாக சொல்ல,

“அப்போ சரி.. உங்களுக்கு தெரிஞ்ச ஜோசியர் இருந்தா.. இப்பவே என்னைக்கு உறுதி செய்யலாம்ன்னு கேட்டு சொல்லிடுங்க” என்று விஜயா சொல்லிவிட.. ஆச்சார்யாவும் உடனடியாக செயல்பட்டு, “அடுத்த மூன்றாம் நாள் உறுதி செய்வது என்று முடிவெடுக்க பட்டது”.

இதில் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தது.. “மாமனாரும்.. மருமகளும் தான்..”

அதை எல்லோரும் கவனித்தாலும், “எதுவும் பேசமுடியாமல்.. ஏன் எதுவும் பேசவே வேண்டாம்.. அவர்களிடம் பேசினால் கண்டிப்பாக பிரச்சனை தான்” என்று அனைவருக்கும் புரிந்ததால், மஹாதேவனையும், ஹர்ஷினியையும் எதுவும் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருக்க, காண்டான இருவரும், எல்லோரையும் முறைத்தபடி தான் இருந்தனர்.. ஹர்ஷி வெளிப்படையாக என்றால் மஹாதேவன் மறைமுகமாக..

என்ன..? “என்னை ஒரு வார்த்தை கூட யாரும் கேட்காம எல்லாத்தையும் அவங்களே பேசி முடிவு எடுத்துகிறாங்க.. அப்போ இனி ஜெய்யோட டான்ஸ் கரியர் அவ்வளவுதானா.. அதை பத்தி யாரும் எதுவும் பேசக்கூட செய்ய மாட்டேங்கிறாங்க..”

“இந்த விஜயா அம்மாவும் அநியாயத்துக்கு இப்படி மாறிட்டேங்களே.. அவங்களுக்கு ஜெயோட அப்பாவே தேவலை.. இன்னும் விறைப்பாதான் இருக்கார்.. அவரை வச்சி மறுபடியும் இதை பத்தி எதாவது கேட்கலாமா..?” என்று தீவிரமாக யோசித்த படி மஹாதேவனை பார்த்து கொண்டிருந்தவளை,

தானும் பார்த்து கொண்டிருந்த ஜெய்க்கு அவளின் எண்ணம் புரியவே, “இவ கண்டிப்பா அடங்கவே மாட்டா..” என்று பல்லை கடித்தவன் “அவரே.. எப்படா சான்ஸ் கிடைக்கும் சண்டை போடலாம்ன்னு வெய்ட் பண்ணிட்டிருக்கார்.. இவ போற போக்கை பாத்தா அவரோட கூட்டணி வச்சி என்னை காலிபண்ணிடுவா போல..”

“நானே இப்போதான் அரும்பாடுபட்டு எல்லாத்தயும் ஒன்னு சேர்த்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கிற வரை வந்திருக்கேன்.. அதை மொத்தமா கெடுத்துடுவா போல.. இவளை இப்பவே மிரட்டி வைக்கல அவ்வளவுதான்” என்று வேகமாக யோசித்தவன், அதை செயல்படுத்தும் விதமாக,


அவளின் கையில் இருக்கும் போனை பார்த்துவிட்டு வேகமாக மெஸேஜ் செய்ய, மெசேஜ் வந்த சத்தத்தில் போனை பார்த்த ஹர்ஷினி, அதில் “உன்கிட்ட முக்கியமா பேசணும்..” என்று ஜெய் அனுப்பியிருக்க,

நிமிந்து அவனை பார்த்து கோவமாக முறைக்க.. “பேசணும்ன்னு சொன்னதுக்கு எதுக்கு இந்த முறை முறைக்கிறா..?” என்று தான் அவளிடம் அன்று கோவத்தில் சண்டை போட்டதை மறந்து அவளையே கேள்வியாக பார்க்க,

“ஓஹ்.. அன்னிக்கு என்னை அந்த பேச்சு பேசிட்டு.. இப்போ இவருக்கு அதுகூட நியாபகம் இல்லையா..?” என்று இன்னும் கோவம் கொண்டு கண்களால் எரித்தவளை,

“இப்போ எதுக்கு கண்ணுல தீயை எறியவுடுறா..? என்று மேலும் குழம்பியவன், புரியாமல் யோசிக்க, கடுப்பான ஹர்ஷினி முகத்தை திருப்பி கொண்டாள். தான் அவளிடம் என்ன பேச வந்தோம் என்பதையே மறந்துவிட்டு, “அவ எதுக்கு கோவமா இருக்கா..?” என்று அதை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டான் ஜெய்,

ஓஹ்.. “அன்னிக்கு அவகிட்ட வெளியே வச்சி கோவமா எதோ பேசினேனே.. என்ன பேசுனே..? இவ முறைக்கிறதை பார்த்த எதோ பெருசா பேசிருக்கன்னு மட்டும் தெரியுது.. ஆனா என்னத்த பேசி தொலைச்சேன்னு தான் தெரியலை” என்று யோசித்தபடி அமர்ந்திருந்தவன்,

ஆச்சார்யா எதோ கேட்கவும், அவரிடம் பேச ஆரம்பித்தவன், அடுத்து கிளம்பும் வரையிலும் ஹர்ஷினியிடம் பேசமுடியாமல் தான் கிளம்பினான். அடுத்த இரண்டு நாட்கள் எல்லோரும் பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தனர், குறைந்த நாட்களிலே ஆச்சார்யா தன் செல்ல பேத்தியின் உறுதி செய்யும் பங்க்ஷனை மிக சிறப்பாக, அவர் ஆசைப்பட்டது போல் கிராண்டாகவே ஏற்பாடு செய்து அசத்திவிட்டார் என்றே சொல்லலாம்,

ஜெயும் தங்கள் பக்கம் மிகச்சிறப்பாகவே ஏற்பாடு செய்தான்,”ஹர்ஷினிக்கு அன்று கட்டிக்கொள்ளும் புடவை முதல் போட்டு வரை அவள் அன்று அணியும் அத்தனையும் ஜெய் தானே நேரில் சென்று பார்த்து பார்த்து வாங்கினான்”. இதற்கிடையில் அவசரமாக உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பது வேறு முடிந்தவரை எல்லாவற்றையும் தானே பார்த்து கொண்டான்,

அதில் மஹாதேவனுக்கு எல்லயற்ற வருத்தமே மகன் மேல்.. “ஏன் நான் செய்ய மாட்டேனா..? என்னிடம் கொஞ்சம் வேலைகள் கொடுக்க கூடாதா..?” என்று விஜயாவிடமும் சண்டை போட..

அவரோ.. “ஏன் உங்ககிட்ட வந்து ஒருத்தர் சொல்லனுமா..? நீங்களே தான் உங்க மகன் கல்யாணத்துக்கு எடுத்து போட்டு செய்யணும்.. வந்துட்டார் எப்போ பார்த்தாலும் என் மகன் மேல பிராது தூக்கிட்டு..” என்று கணவரிடம் சிடுசிடுத்தவர்,

அதற்கு பிறகு அவரை சுத்தமாகவே கண்டுகொள்ளவில்லை என்று தான் சொல்லணும்.. மனைவியின் பேச்சில் இன்னும் நொந்து போன மஹாதேவன், “போடி போ.. மகன் கல்யாண ஜோருல என்னையே திட்டுற இல்லை.. உன்னை அப்புறம் கவனிச்சிக்குறேன்” என்று மனதுள் மனைவியை திட்ட மட்டுமே முடிந்தது அவரால்..

உறுதி செய்யும் நாளும் வந்துவிடவே, என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த ஹர்ஷினி, “பேசாம நாம முதல்ல எடுத்த முடிவையே அப்ளை செஞ்சிடலாமா..?” என்று யோசிக்கவே ஆரம்பித்து விட்டாள்.

அவளின் யோசனையான முகம் கண்டாலும் வீட்டில் உள்ள யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல், திருமண வேலைகளை பார்க்க, அங்கு மகாதேவனை போல் இங்கு ஹர்ஷினியும் நொந்தே போனாள்.

“என்னடா.. இங்க ஒருத்தி கஷ்டப்பட்டுட்டு இருக்காளேன்னு..? ஒருத்தராவது என்ன..? எதுன்னு..? என்னை கவனிச்சீங்களா..? என்று அலங்காரம் செய்ய வந்த மாலதியிடமும், மேனகாவிடமும் எகிற,

அவர்களோ “நீ என்னாவது பேசிக்கொள்” என்பது போல் அவளை பங்க்ஷனுக்காக தயார் செய்ய ஆரம்பிக்கவும், “சித்தி.. அத்தை நான் உங்ககிட்ட தான் பேசிட்டிருக்கேன்.. நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை பாத்துக்கோங்க” என்று கத்தியவளை கண்டுகொள்ளாமல் அவர்கள் வேலையை அவர்கள் செய்யவும்,

இன்னும் கடுப்பான ஹர்ஷினி வேகமாக சென்று கட்டிலில் படுத்து கொள்ள, “அக்கா.. அண்ணி” என்று இருவரும் ஏககாலத்தில் ரேணுகாவை அழைக்க, “அய்யோ… அம்மாவா..?” என்று அவள் பதறி எழும்போதே வந்துவிட்ட ரேணுகா,

மூக்கு விடைக்க, இடுப்பு மேல் கைவைத்து மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க பத்ரகாளியாக நின்று அவளை மிரட்டலாக பார்த்தவர்..

“என்னடி..? மறுபடியும் உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா..? எப்போ பாத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஆரம்பிச்சிர.. உனக்கு ரொம்ப கொழுப்பாயிடிச்சி.. உன்னை சின்ன பிள்ளையிலே ரெண்டு தட்டு தட்டி வளத்திருக்கணும் அதான் நான் செஞ்ச தப்பு..” என்று ஹர்ஷினி தயாராகும் வரை அவளை ஆத்து.. ஆத்தென்று ஆத்தி தள்ளியவர்,

“ம்மா.. போதும்.. போதும் நான் ரெடியாகிட்டேன்.. சந்தோஷமா போ.. போய் உன் மாப்பிள்ளைக்கு சொஜ்ஜி.. பஜ்ஜி எல்லாம் செய் போ..? என்று எரிச்சலாக சொல்ல,

“ம்க்கும்.. நீ சொல்லாட்டியும் நான் என் தங்க மாப்பிள்ளைக்கு செய்ய தான் போறேன்.. போடி” என்று அவளை நொடித்திவிட்டு செல்லவும், தலை மேல் கை வைத்தே அமர்ந்துவிட்டாள் ஹர்ஷினி.

உறுதி செய்யும் பங்க்ஷன் ஆச்சார்யாவின் கோயம்பத்தூர் வீட்டிலே என்பதால், ஜெய் வீட்டினர் உறவுகள் புடை சூழ வந்திறங்கவும், மேல தாளத்துடன் மிகவும் தடபுடலாக குடும்பம் சதவிகிதமாக வரவேற்ற ஆச்சார்யா, மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று அமரவைத்தார்.

காபி பரிமாற.. “முதலில் உறுதி செய்துவிடலாம்” என்று ஜெய் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் சொல்லிவிட, முறையாக உறுதி பத்திரம் வாசிக்கப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் என்று நாளும் குறிக்கப்பட்டு… தட்டை மாற்றிக் கொண்டனர்,

அடுத்து ஹர்ஷினியை அழைத்து வர, மிகவும் ஆவலாக அவளை பார்த்த ஜெய், அவளின் அலங்காரத்தில் தலை சொக்கித்தான் போனான். ஆனால் அவளோ அவன் இருந்த பக்கம் கூட திரும்பாமல் விறைப்பாக நின்றவளின் கைகளில் தாரணி புடவை முதற் கொண்டு ஒரு பெரிய பேக்கையும் கொடுக்க,

“இந்த டைம்மும் குங்கும கலர் புடவை மட்டும் எடுத்திருக்கட்டும்.. அப்பறம் இருக்கு அவருக்கு..” என்று மனதுள் திட்டியவாறே ரூமினுள் சென்று பிரித்து பார்த்தவள்,

“அதே குங்கும கலர் புடவை தான்” எனவும் உச்சக்கட்ட ஆத்திரத்தில் பல்லை கடித்தாள். அதை தான் கட்டியாக வேண்டும் என்பதால் வேறு வழி இல்லாமல் கட்டிக்கொண்டு சபைக்கு வந்தவள்,

ஜெயயை கடுப்பாக பார்க்க, அவனோ அவளை பார்வையாலே கபளீகரம் செய்து கொண்டிருந்தான், அதுவும் அவளின் இடையில் அடிக்கடி தேங்கிய அவன் கண்களில் தெரிந்த கிறங்கத்தில்... அவ்வளவு கோவத்திலும் வெட்கம் கொண்ட ஹர்ஷினி,

“அந்த பார்வை பாக்குற அந்த கண்ணை போய் குத்தினால் தான் என்ன..?” என்று நினைத்தவள் அதை ஜெயிடமும் சைகையாய் காட்ட, அவனோ.. “போடி அப்படித்தான் பார்ப்பேன்..” என்று இன்னும் இன்னும் தலை முதல் கால் வரை சட்டமாக பார்த்தவன்,

“எல்லாம் பெர்பெக்ட்.. அய்யாவோட செலக்க்ஷன் எப்படி..?” என்று காலரை தூக்கி காட்டி கேட்க, “நல்லாவே இல்லை..” என்று ஹர்ஷினி முகத்தை சுழிக்க.

“ஓஹ் அப்போ வா.. இப்பவே ரூமுக்கு போயி எல்லாத்தையும் கழட்டி கொடுத்துற..” என்று வம்பாக சைகை காட்டவும், ஹர்ஷினி வெட்கத்தோடு “கொன்னுருவேன்..” என்று விரல் நீட்டி மிரட்டி சைகை காட்ட, குறும்பாக சிரித்த ஜெய், மேலும் சைகை காட்ட வர,

“பொண்ணு.. மாப்பிள்ளை வாங்க” என்று அழைக்கவும், நல்ல பிள்ளை போல் வந்த இருவரையும் அருகருகே உட்காரவைத்து சந்தனம் தடவி.. பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்ய, உறுதி செய்வது சுபமாக நடந்தேறியது,

அடுத்து இறுதியாக உணவு பரிமாற.. உணவு சுவையில் ஈர்க்கப்பட்டு எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு உண்டனர். கடைசியாக வந்திருந்த எல்லாருக்கும் உறுதி செய்ததற்கே ஸ்வீட் உடன் கிப்டும் கொடுத்து அசத்திவிட்டார் ஆச்சார்யா,

எல்லோரும் உணவு உண்ணும் போது, “கார்த்திக்.. உங்க அக்கா எங்க..?” என்று ஜெய் கேட்க,

“அவ அவளோட ரூமுக்கு போய்ட்டா மாமா..” என்று பக்கத்தில் இருந்த ஹாசினி சொல்ல,

“அப்படியா சரி.. அவ ரூம் எங்க இருக்கு..? என்று உரிமையோடு கேட்ட ஜெயயை பார்த்து திருதிருவென விழித்த ஹாசினி, கார்த்திக் இருவரும்,

“அவ ரூமுக்கு.. நீங்க.. இப்போ எப்படி..? நான் பெரியம்மாகிட்ட கேட்டுட்டு வந்திடுறேன்” என்று ஓடிய ஹாசினி, கையோடு ரேணுகாவை அழைத்து கொண்டு வர,

“சொல்லுங்க மாப்பிள்ளை..” என்று வந்த ரேணுகாவை பார்த்து ஹாசினியை முறைத்த ஜெய், “ஹர்ஷினி..” என்று இழுக்க..

“நான் அவளை வரச்சொல்றேன் மாப்பிள்ளை..” என்றவர், “ஹாசினி போய் அக்காவை கூட்டிட்டு வா” என்று அவளை அனுப்பியவர், ஹாசினி வேகமாக சென்று ஹர்ஷினியை அழைத்து கொண்டு வந்தாள்,

“ஹர்ஷினி… மாப்பிள்ளை கூடவே இருந்து அவர் சாப்பாட்டை கவனிச்சிக்கோ.. கார்த்திக்.. ஹாசினி நீங்களும் தான்.. மாமாவை கூடவே இருந்து பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு செல்ல, ஜெய் மொத்தமாக மூவரையும் கொலை காண்டுடன் பார்க்கவும், மூவருமே அவனின் கடுப்பில் சிரித்தே விட்டனர்,

“சிரிக்காதடி.. நானே கடுப்புல இருக்கேன்..” என்று ஹர்ஷினியை மிரட்டியவன், இவங்களை.. என்று கார்த்திக்.. ஹாசினியை கொலை வெறியுடன் பார்த்தவன்,

“போங்க.. போய் ரெண்டு பேரும் எனக்கு சாப்பாடு கொண்டு வாங்க” என்று கடுப்புடன் சொல்ல,

“சரி மாமா.. போயிட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சி வந்தா போதுமா..?” என்று கார்த்திக் குறும்பாக இழுக்க, “வரவே வேண்டாம்.. முதல்ல இடத்தை காலி பண்ணுங்க” என்று அவர்களை விரட்டி விட்டவன், ஹர்ஷினி எதோ சொல்ல வர..

“எதுவும் பேசாதா.. எனக்கு இப்போ முதல்ல நாம தனியா மீட் பண்ணனும்..” என்று சீரியசாக சொல்ல.. அவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஹர்ஷினி..

“அப்படியெல்லம் முடியாது” என்று ஏற்கனவே அவன் மேல் இருந்த கோவத்தை காட்டினாள்.

“என்னது முடியாதா..? என்னடி ரெவென்ஜ் எடுக்கிறாயா..? பாருடி இது அதுக்கான டைம் இல்லை..” என்று பாவமாக சொல்ல, உதட்டை சுழித்த ஹர்ஷினி,

“முடியாது..” என்பது போல் தலையாட்ட, “ஓஹ்.. அப்போ முடியாது அதானே.. அப்போ சரி … எனக்கு இங்கேயே கூட ஓகேதான்” என்றபடி அவளை நெருங்க, பதறிப்போன ஹர்ஷினி

“அய்யோ.. என்ன பண்றீங்க.. முதல்ல தள்ளி போங்க..” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி வேகமாக அவனிடமிருந்து தள்ளி நின்றவள்,

“இப்போ எதுக்கு தனியா மீட் பண்ணும்ங்கிறீங்க..? அதெல்லாம் ஆகாது..”,

“எதுக்கா..? சரி உன் ஆசை அதுதான்னு சொல்றேன்.. “எனக்கு இப்பவே உன்னை இறுக்கி கட்டிப்பிடிச்சு கண்ல பட்ற இடத்திலெல்லாம் நச்நச்சுன்னு முத்தம் கொடுக்கணும்.. அப்பறம் என்னை எப்பவும் மயக்குற உன் இடுப்பை பிடிச்சி நல்லா சிவக்குற அளவுக்கு நறுக்குன்னு கிள்ளனும்.. அப்பறம் உன் உதட்டை..”

அச்சோ.. போதும்.. சும்மா இருங்க.. என்று தாபத்துடன் சொல்லி கொண்டிருந்தவனை வெட்கத்துடன் வேகாமாக தடுத்த ஹர்ஷினி, “யாராவது கேட்டுட்டா என்ன ஆகும்..? இப்படியா பேசுவீங்க” என்று கடிந்து கொண்டவளை,

இன்னும் கிறக்கம் தீராமல் பார்த்த ஜெய், “நீதானடி கேட்ட… எதுக்கு தனியா மீட் பண்ணனும்ன்னு..? அதான் சொன்னேன்” என்று குறும்பாக சொல்ல, சொல்ல மட்டுமே முடிந்தது ஜெயால், இறுதிவரை அதற்குண்டான வாய்ப்பை அவன் மேல் இருந்த கோவத்தில் ஹர்ஷினி தரவே இல்லை.

அவளின் செயலில் முறுக்கி கொண்டு கிளம்பிய ஜெயயை பார்த்து சிரித்த ஹர்ஷினி, அவளின் ரூமிற்குள் வந்தவள், உடை மாற்ற பால்கனி கதவை பூட்ட சென்றவள்,

தோட்டத்தில் “சந்திரன் சந்தோஷமாக ஜெயயை கட்டிபிடுப்பது கண்டு அதிய்ச்சியானவள், ஜெயும் சிரித்தபடி அவரை கட்டிப்பிடிப்பதும், பின் இருவரும் மிகவும் உற்சாகமாக எதோ பேசுவதும் கண்டு மேலும் அதிர்ந்தவளுக்கு சிறிது சிறிதாக எல்லாம் புரிய..” இருவரையும் கோவம் கொண்டு வெறித்து பார்த்தாள்.

...........................................................................................

வணக்கம் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை ஷேர் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்.. THANK YOU
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top