என்னுள் சங்கீதமாய் நீ 31

Nithi Kanna

Well-Known Member
#1
என்னுள் சங்கீதமாய் நீ 31


ஜெய்… வீசி சென்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளால் “ஆத்திரம், கோவம் மட்டும் இல்லை ஹர்ஷினிக்கு, வேதனையும், ஆற்றாமையும் தான்..”

“அவர் அந்த சொற்களை உணர்ந்து பேசவில்லை.. கண்டிப்பாக தன் மேல் உள்ள கோவத்தில் தான் அப்படி பேசினார்” என்று அவளுக்கு நன்றாக புரிந்தாலுமே.. அந்த வார்த்தைகள் தன்னை காயப்படுத்த தான் செய்கிறது..

“அவர் எப்படி தன்னை அப்படி சொல்லலாம்..? அவர் டான்ஸ் மாஸ்டர் என்பது ஒரு காதலியாக தனக்கு மிகசிறந்த பெருமையும், கர்வமே தான்.. அதை மறுப்பதற்கே இல்லை”,

ஆனால்… “அவரின் அந்த அடையாளம் தான் எனக்கு முக்கியம் என்று அவர் சொல்வது.. கோவத்தில் என்றாலுமே தவறுதான்..”

“அவரை விட.. அவரின் டான்ஸ் மாஸ்டர் எனும் அடையாளம் எனக்கு இப்பொழுது மட்டுமில்லை எப்பொழுதும்... எக்காலத்திலும்... முக்கியமானதாக இருந்ததும் இல்லை.. இனியும் இருக்க போவதில்லை..”

“அது நன்றாக தெரிந்தும் அவர் எப்படி தன்னிடம் அப்படி பேசலாம்..?” என்று மனதுள் அவன் பேசி சென்ற வார்த்தைகளை நினைத்து கொதித்து கொண்டே வீட்டினுள் சென்றவள், அங்கு ஹாலில் ஆச்சார்யாவை சுற்றி அனைவ்ரும் வேதனையோடு நிற்கவே,

“ஜெயின் தந்தை” அவரை பார்த்து “நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷனா..?” என்று கேட்ட வார்த்தைகள் ஞாபகம் வரவே, தனக்காக அவர் இந்த வயதில் வாங்கிய வார்த்தைகளை நினைத்து பெருந்துயரம் கொண்டவள், வேகமாக சென்று அவரின் கால் மடியில் முகம் புதைத்து கொண்டு,

“சாரி தாத்தா.. என்னால தான்.. அவர் உங்களை பாத்து அப்படி கேட்டுட்டார்.. ரொம்ப ரொம்ப சாரி தாத்தா.. என்னை மன்னிச்சிருங்க..” என்று மெலிதான அழுகையோடு கேட்க,

“முதல்ல அவர்கிட்ட இருந்து தள்ளி போடி..” என்று அவளின் கையை பிடித்து ஆத்திரமாக இழுத்த ரேணுகா,
“இப்போ உனக்கு நிம்மதியா இருக்கா.. டான்ஸ்.. டான்ஸ்ன்னு அவரை போட்டு இந்த பாடுபடுத்துற.. அந்த ஜெய் தம்பிக்கு உங்க தாத்தா மேல இருக்கிற அக்கறையில கொஞ்சமாவது உனக்கு இருக்கா..”

“உன்னை பெத்த எங்களை விட.. அவர்தான் உன்னை அப்படி பாத்துக்கிறாரு.. நீ சாப்பிட்ற சாப்பாடு.. நீ போட்டுகிற துணி.. நீ ஓட்டுற வண்டி.. இப்படி சின்ன விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரைக்கும் எல்லாமே உனக்கு பிடிச்சிதா இந்த வயசுலயும்.. பாத்து பாத்து செய்றாரே.. அதுக்கு ஒரு பேத்தியா நல்ல கைமாறு செய்ற நீ..” என்று,
ரேணுகா ஆத்திரமாக பொரிந்ததெல்லாம் ஹர்ஷினிக்கு மிகுந்த வேதனையை கொடுத்தாலும், “அவளின் கவனம் எல்லாம் இடிந்து போய் அமர்ந்திருந்த ஆச்சாரியாவிடம் தான் இருந்தது”.

“தான் மாடி மேல் முகம் புதைத்து மன்னிப்பு கேட்ட போதும் சரி.. இப்போது தன்னை ரேணுகா திட்டும் போதும் சரி.., ஆச்சார்யா அமைதியாக இருந்தது ஹர்ஷினிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியே..”

“ இதுவரை அவர் தன்னிடம் இது போல் இருந்ததில்லை.. இப்பொழுது எனோ அவர் தன்னை விட்டு விலகி செல்வது போல் தோன்றவும், அவள் மனதில் மிகப்பெரிய வெற்றிடம் உண்டாகி மிகுந்த வலியை கொடுத்தது என்றே சொல்லலாம்”.

“ஆச்சார்யா எனும் பேர்.. அவரின் அடையாளம்.. கெளரவம் எல்லாம் மஹாதேவன் தன்னை கேட்ட கேள்வியில் சரிந்தது போலவே தோன்றியது ஆச்சார்யாவிற்கு..”

“தன்னிடம் நெருங்கி பேச.. தன் குடும்பமே பயப்படும் போது, வெளி மனிதர் ஒருவர்.. தன் வீட்டிலே வந்து.. தன்னிடமே இப்படி பேசியது அவரை மிகவும் பாதித்தது”,

அவர் பேசியதை என்னத்தான்.. “தன் பேத்திக்காக” என்று பொறுத்து கொண்டாலும், “ஒரு ஆணாக.. சொஸைட்டியில் எல்லோரும் மதிக்கும் பெரிய மனிதராக... பிறந்ததில் இருந்து இதுவரை எல்லோருமே தன்னிடம் மிகுந்த மரியாதையாகவே பேசி மதிக்கும் பாரம்பரிய குடும்ப பின்னணி கொண்ட ஆச்சர்யாவிற்கு.. இந்த வயதில் ஒருவர் தன் முகத்திற்கு நேராகவே நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா..?” என்று கேட்டது அவரை மனதளவில் மிகவும் பாதித்தது.

அதனாலே ஜெய் பல முறை போன் செய்து பேசிய போதும் அவரால் முன் போல் இயல்பாக பேசமுடியவில்லை.

“அப்பா.. என்ன முடிவு எடுத்திருக்கீங்க..?” என்று மூன்று நாள் கழித்து ஜெய் மஹாதேவனிடம் கேட்க,
“என்னமோ.. எல்லாம் எங்களை கேட்டு தான் செய்ற மாதிரி புதுசா கேட்கிற..?” என்று கேட்க,

“உங்களை கேட்காம இதுவரை நான் எதுவும் செஞ்சதில்லை.. ஆனா இனிமேல் நான் அப்படி செஞ்சா அதுக்கு நீங்கதான் பொறுப்பு..” என்று ஜெயும் இந்த முறை விடாமல் பேசவே,

“எங்கே மகனுக்கும்.. அப்பாவுக்கும் சண்டை வந்துவிடுமோ..?” என்று எல்லா அம்மாக்களையும் போல பயந்த விஜயா,

“ஏங்க… நீங்க என்ன இன்னும் அதையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க.. ஹர்ஷினியை விட நல்ல பொண்ணு என் மகனுக்கு எங்க கிடைப்பா சொல்லுங்க.. அதனால பேசாம சட்டுபுட்டுன்னு கிளம்புங்க.. அவங்க வீட்டுக்கு போய் பேசி முடிச்சிடலாம்” என்று மகனுக்கு கல்யாணம் ஆக போகும் சந்தோஷத்தில் உற்சாகமாக சொன்னார்,

“ஓஹ்.. இப்போ நீயும் உன் மகனோட சேர்ந்துக்கிட்டயா..? அவங்க எதிர்பாக்கிற மாதிரி இனி உன் மகன் டான்ஸே ஆடமாட்டான்.. அது மறந்துபோச்சா உனக்கு..” என்று மனைவியிடம் கத்த,

அவரோ அசால்ட்டாக, “டான்ஸ் ஆடாட்டி என்ன, அதை விட்டா என் மகனுக்கு செய்ய வேற தொழிலா இல்லை.. ஏன் நம்ம கார் ஷோரூம் இருக்குல்ல.. அதை பாத்துக்கட்டும்.. அது பிடிக்கலைன்னா வேற எதாவது தொழில் செய்யட்டும்.. என் மகன் எந்த தொழில் செஞ்சாலும் அவனால் சாதிக்க முடியும்.. அதனால அதை விட்டுட்டு ஆகுற வேலையை பாருங்க..” என்று மகனுக்கு வக்காலத்து வாங்கினார்,

“மஹாதேவனுக்கும் ஹர்ஷினி மருமகளாக வருவதில் நூறு சதவீதம் விருப்பமே, ஆனால் அதுக்காக ஏன் டான்ஸை விடவேண்டும்..? என்று கோவம், வருத்தம் தான்..”

ஆனால் இனி விஜயாவும் ஜெயுடன் சேர்ந்து விட்டதால்.. அவரின் சப்போர்ட்க்கு யாரும் இல்லாமல் டெபாசிட் இழந்த மஹாதேவன் வேறு எதுவும் செய்ய முடியாமல் அவர்களுடன் கல்யாணம் பேசி முடிக்க தொங்கி போன முகத்துடன் கிளம்பினார்.

“ஏங்க.. ஹர்ஷினி வீட்டுக்கு போனதும்.. அவங்க தாத்தாகிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க..” என்று காரில் செல்லும் போது விஜயா சொல்ல,

“என்ன… நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்..?” என்று மஹாதேவன் கோவமாக எகிற,

“பின்ன.. நீங்க அன்னிக்கு அவர் கிட்ட மரியாதை இல்லாம பேசுனீங்களே அது தப்பு இல்லையா..? எவ்வளவு பெரிய மனுஷன் அவரு.. அவர்கிட்ட போய் மரியாதை இல்லாமல் பேசிட்டு இப்போ எதுக்கு மன்னிப்பு கேட்கணும்ன்னு கேட்கிறீங்க..? எனக்கே கடைசி.. கடைசியில நீங்க பேசுனது கஷ்டமா போயுடுச்சு”,

“என்னால எல்லாம் மன்னிப்பு கேட்கமுடியாது.. நான் என்ன இல்லத்தையா பேசினேன்.. அவங்க செஞ்சதை தானே கேட்டேன்..” என்று அடங்காமல் எகிற,

“அதெப்படி கேட்காம போவீங்க.. அன்னிக்கு நீங்க அவரை பேசனப்போ அங்க எல்லார் முகத்திலும் எவ்வளவு கோவம் தெரியுமா..? இருந்தாலும் அவங்க பொண்ணு வாழ்க்கைக்காக எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிட்டு அமைதியா இருந்தாங்க இல்லை..”

“அதேமாதிரி தான் நமக்கும்.. நம்ம பையன் வாழ்க்கை முக்கியம் இல்லையா..? கல்யாணம் முடிஞ்சா நாளபின்ன அவன் அங்க மரியாதையா போய் வர இருக்கணும் இல்லை.. அதுக்காகவாது அவர்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் சொல்லிப்புட்டேன்” என்று விஜயா மிரட்டலாக முடிக்க,

மகனாவது தனக்கு சப்போர்ட்டாக எதாவது சொல்வானா..? என்று எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த ஜெயயை பார்க்க, அவனோ அவர்கள் பேசுவதுற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் எங்கோ பார்த்து கொண்டு இருக்கவும், கடுப்பான மஹாதேவன் கடுகடு வென முகத்துடனே வந்தார்,

ஜெய் முன்னமே போன் செய்து “நான் என் குடும்பத்தோடு முக்கியமான விஷயம் பேச வருகிறேன்” என்று சொல்லிருந்தாலும், முன் போல் வாசலுக்கே சென்று வரவேற்க தோன்றாமல் மகன்களை மட்டும் வரவேற்க வாசலுக்கு அனுப்பிவிட்டு வீட்டினுள்ளே இருந்துகொண்டார் ஆச்சார்யா,

“பாத்தியா.. அவர் நம்மளை கூப்புட வந்தாரா..?” என்று வாசலிலே வைத்து மஹாதேவன்.. விஜயாவிடம் எகிற,

பின்ன.. “நீங்க பேசுன பேச்சுக்கு யாரா இருந்தாலும் அப்படித்தான் செய்வாங்க.. உள்ள போனவுடனே அவர் கிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க” என்று சொன்னவர் உள்ளே சென்று அவர் மன்னிப்பு கேட்கும் வரை கண்களாலே மிரட்டவும்,
வேறு வழி இல்லாமல்..,

“அன்னிக்கு நான் பேசுனது தப்பு.. என்னை மன்னிச்சுருங்க” என்று கை குவித்து கேட்க, அவர் பேசியதில் வருத்தம் இருந்தாலும், அவர் மன்னிப்பு கேட்கும் போது அதை வெளிப்படுத்த விரும்பாத ஆச்சார்யா,

“பரவாயில்ல.. மன்னிப்பெல்லாம் எதுக்கு விட்டுடுங்க.. உன் மகனுக்காக தானே நீ பேசுனீங்க..” என்று சொல்ல

“என்னதான் மகனுக்காக பேசினாலும்.. நிதானமில்லாமால் அவர் பேசுனதும்.. விட்ட வார்த்தைகளும் ரொம்ப பெரிய தப்புப்பா.. நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாம் இல்லை..” என்று மகனுக்காக இறங்கி உறவுமுறையோடு பேசும் விஜயாவை ஆச்சார்யா உட்பட எல்லோருக்கும் பிடித்து விட,

“அதுக்கென்னமா தாராளமா கூப்பிடு.. என் பேத்தியை உன் மகனுக்கு கொடுக்கறதால ஒரு விதத்துல நீயும் என் பொண்ணு மாதிரி தான்”, என்று பாசமாக அவரே சொல்லிவிட, குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவரிடம் நன்றாகவே பேசினர்..

“இவர்களின் திடீர் பாசப்பயிரை கடுப்பாக பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்து இருந்தார் மஹாதேவன்.”

“அன்னிக்கு நானும் கொஞ்சம் கோபமா பேசிட்டேன் என்னையும் மன்னிச்சிடுங்கப்பா..”

“அது எல்லா அம்மாவையும் போல எனக்கும் என் மகன் எல்லாரும் பேர் சொல்ற மாதிரி வாழ்றது பெருமை தானே.. அதான்.. அந்த கோவத்துலதான் அன்னிக்கு அப்படி பேசிட்டேன்” என்று விஜயாவும் சொல்ல,

“நீ எதுக்குமா மன்னிப்பு எல்லாம் கேட்கிற.. உங்க பக்கம் நியாயம் இருக்கு.. நீங்க கேட்டதுல எந்த தப்பும் இல்லை.. ஆனா ஒரு சினிமா பீல்டுல இருக்கிற பயனுக்கு என் பேத்தியை கொடுக்கணுமாம்ன்னு எனக்கு தான் பயம்..”

என்ன செய்ய..? அதனால நாங்க நிறைய பட்டுட்டுததால என்னை… என்னோட பயத்தை… என்னால மாத்திக்க முடியல.. என் கடைசி பொண்ணு வாழ்க்கை வீணா போக காரணமே டான்ஸும், சினிமாவும் தான்..” என்று பெருமூச்சோடு சுபத்ராவை பார்த்தபடி சொல்லவும்,

சுபத்ராவின் கசங்கிய முகத்தை பார்த்துவிட்டு அது பற்றி மேலும் தூண்டி துருவாமல் விஜயா பேச்சை மாற்ற பார்க்க, “ஹர்ஷினி பேறுக்கு தான் என் மருமக.. ஆனா.. அவ என் பொண்ணு மாதிரி தான். நீங்க என்னை பத்தி தெரிஞ்சுகிறதுல எந்த தப்பும் இல்லை” என்று சுபத்ராவே சொல்லவும்,

ஆச்சார்யா முதலில் இருந்து தேவி தொடங்கி, தன் பெற்றோர் சாபம் முதல் எல்லாவற்றையும் சொன்னார், கடைசியில் வீட்டை விட்டு இளங்கோவை சந்திரன் தள்ளியது வரை.. "சந்திரனின் ஒப்புதலோடு தான், அவர் முன்னமே தன் வீட்டினரிடமும் குற்ற உணர்ச்சியில் அவரே சொல்லிவிட்டதால்", எல்லாரும் அமைதியாகவே நின்றுயிருந்தனர்.

“இதனாலதான் எனக்கு பயம்.. ஏற்கனவே இந்த டான்ஸால, சினிமாவால நாங்க நிறைய கஷ்டப்பட்டுட்டோம். மறுபடியும் என் பேத்திக்கு எப்படி என்னால இது போல ஒரு வாழ்க்கையை அமைச்சி கொடுக்க முடியும்..?”

“நான் என்னை.. என் பயத்தை மாத்திக்க நிறைய வருஷமாவே முயற்ச்சி எடுத்தேன்.. ஆனா.. என்னால அது முடியல.. என் பேத்திக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாத ஒரு பாதுகாப்பான, நிறைவான வாழ்க்கையை தான் நான் எதிர்பாக்கிறேன்.. அதனால தான் நான் ஜெயயை ஒத்துக்கிட்டேன், அவர் கண்டிப்பா என் பேத்தியை நல்லா பாத்துப்பார்ன்னு எனக்கு தெரியும்..” என்று முடிக்க,

எல்லாவற்றையும் கேட்ட “விஜயாவுக்கும் சரி.. மஹாதேவனுக்கும் சரி..” அவரின் பயம் நன்றாக புரியத்தான் செய்தது,

“அப்பா நீங்க பயப்படுறதுல எந்த தப்பும் இல்ல.. இப்போ என்ன என் மகனுக்கு அந்த டான்ஸை விட்டா செய்ய வேற தொழிலா இல்ல. அதுமட்டுமில்லை.. எப்போ ஷூட்டிங் போனாலும் வர மாசக்கணக்கு தான்.. கல்யாணத்துக்கு அப்பறமும் அப்படி இருந்தா எப்படி குடும்பம் நடத்துறது.. அவன் அந்த தொழிலை விட்றது தான் சரி..” என்று விஜயா அந்தர் பல்டி அடிக்க, குடும்பம் மொத்தமும் நிறைவாக மலர்ந்து சிரித்தனர்,

“என்னமோ.. இவர்தான் மகன் அந்த தொழிலை விடறானேன்னு மூஞ்சை முழ நீளத்துக்கு தூக்கி வச்சிருக்கார், ஆனா உங்களுக்கு ஒன்னு தெரியுமா..? இவர் என் மகன் முதல்ல இந்த தோழிலுக்கு போறேன்ன்னு சொன்னப்போ போட்ட சண்டை என்ன..? பேசுன பேச்சு என்ன..?”

“ஏய் சும்மா இருடி..” என்று மஹாதேவன் அவசரமாக அதட்டுவதை கூட பொருட்படுத்தாமல்,

“அதுகூட பரவாயில்லை.. என் மகன் மாச செலவுக்கு கூட காசு தரமாட்டேன்னுட்டாரு.. எவ்வளவு கெஞ்சினே.. அழுதேன் அப்பாவும் தரல..”

அப்போ.. “என் மருமக ஹர்ஷினி தான் வேலை பார்த்து கொடு..”

“அம்மா..” என்று அப்பொழுதுதான் வந்த ஹர்ஷினி அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்டு சத்தமாக கூப்பிட்டபடி வந்தவள், அவரின் கையை பிடிச்சி கண்களால் சொல்ல வேண்டாமென சைகை செய்ய,

“அதான் எல்லாம் சொல்லிட்டேனே ஹர்ஷினி.. நீ தான் வேலை பாத்து அவனுக்கு மாச செலவுக்கு காசு அனுப்பினேன்ன்னு” என்று தடைப்பட்டதையும் அவளின் சைகையும் மீறி சொல்லி முடிக்க, கோவம் கொண்ட ஹர்ஷினி படபடவென பொரிந்து தள்ளினாள்.

“நான் ஒன்னும் எல்லா மாசமும் அவருக்கு காசு அனுப்புல அது தெரியுமா உங்களுக்கு..? கொஞ்ச நாள் தான் அனுப்பினேன்.. அப்பறம் இது தெரிஞ்சி அவர் என்கிட்ட எவ்வளவு சண்டை போட்டுட்டார் தெரியுமா..?”

“அதுக்கப்புறம்.. இப்போவாரைக்கும் அவர் நான் அனுப்புன காசை தொடவே இல்லை.. அவரே பார்ட் டைம் வேலை பாத்து தான் சாதிச்சாரு தெரியுமா..?”

அப்பவும்.. “அவர் சம்பாதிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லே நான் வேலை பாத்து சம்பாதிச்சு அவருக்கு அனுப்புன கொஞ்ச காசு கூட.. அவரே இன்னும் லட்ச கணக்குல காசு போட்டு.. அப்பவே என் பேருக்கு ஒரு பெரிய பண்ணை வீட்டை வாங்கி கொடுத்து இருக்கார் தெரியுமா..?”

“நீங்க கூட எங்க பார்ம் அவுஸை பாத்திங்கல்ல தாத்தா.. எவ்வளவு சூப்பரா இருந்துச்சுன்னு.. சொல்லுங்க..” என்று ஜெயயை பற்றி யாரும் எதுவும் நினைச்சிடக்கூடாதென்று வேகமாக சொன்னவளை கண்ட ஜெய்க்கு “வற்றாத ஜீவநதியாய் காதல் மேலும் பொங்கியது”.

“தாத்தா சொல்லுங்க..” என்று அவரை பார்த்தவள், அப்பொழுதுதான் அவரையும் தன் வீட்டாரையும் நன்றாக பார்த்தவளின் முகத்தில் தெரிந்த “மாட்டிக்கொண்ட பாவனையில்” ஜெய் சத்தமாகவே சிரித்து விட்டான்,

தான் குடும்பத்தோடு வீட்டிற்கு வருவதாக முன்னமே அவளுக்கும் ஜெய் சொல்லிருந்ததால், தாங்கள் வந்து இவ்வளவு நேரமாகியும் அவள் வராமல் இருக்க கோவமாக அமர்ந்து இருந்த ஜெய்,

இப்போது ஹர்ஷினியின் முகத்தை பார்த்து சிரிக்கவும், அவனை முறைத்து பார்த்த ஹர்ஷினி, பின் சங்கடத்துடன் திரும்பி தன் வீட்டாரை பார்க்க,

“அடிப்பாவி..” என்றபடி வாய் மேல் கை வைத்து கொண்டிருந்த பெண்களையும், “இதுதான் காரணமா..?” என்று தன்னை முறைத்து பார்த்து கொண்டிருந்த ஆண்களையும் கண்டவள் மானசீகமாக தலை மேல் கை வைத்து கொண்டாள்.

பின்னே.. “நான் வேலை செஞ்சு உழைச்சு தான் சாப்பிடுவேன்..” என்று ரோஷமாக ரேணுகாவிடம் பேசியதென்ன..

“நான் இப்பவே தொழிலை கத்துக்கிட்டு படிச்சி முடிச்சி நம்ம ஹோட்டல் தொழிலை உலகம் முழுசும் கொடிகட்டி பறக்க வைக்க போறேன், அதுக்கான ட்ரினிங் தான் இது..” என்று ஆண்களிடம் வீர வசனம் பேசியதாகட்டும்.. அவர்களை முறைக்க வைக்க தானே செய்யும்,

அடிப்பாவி.. “அக்கா.. அப்போ மாமாக்கு காசு கொடுக்க தான் வேலை பாத்தியா..? உன்னால நான் அக்கா பாரு இப்பவே வேலை பாத்து சாப்புடுறா.. நீயும் தான் இருக்கியா எந்நேரமும் தண்டமா ஊரை சுத்திகிட்டு..தண்டசோறு.. எருமைமாடுன்னு எவ்வளவு திட்டு வாங்கிருப்பேன்..” என்று கார்த்திக் கோவமாக கத்த,

“எப்படி.. எப்படி.. நீங்க உழைச்சிதான் சாப்புடுவீங்களோ..?” என்று மாலதியும் குறும்பாக இழுக்க..

“நம்ம ஹோட்டல்… இதுவரை எத்தனை நாட்ல கொடிகட்டி பறக்க விட்டிருக்க ஹர்ஷினி..?” என்று இந்திரனும் நக்கலாக சொல்ல, ஹர்ஷினிக்கு முகத்தை கொண்டு போய் எங்க வைத்து கோவதென்றே தெரியாமல் திண்டாடித்தான் போனாள்.


.............................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ப்ரண்ட்ஸ்.. Thank you so much friends for your support..
 
#4
ஹா ஹா ஹா
ஹர்ஷினிப் புள்ளை இப்படி மாட்டிக்கிச்சே
உங்க மருமகளை இப்படி போட்டுக் கொடுத்துட்டீங்களே, விஜயாம்மா
 
Last edited:

Advertisement

Sponsored