என்னுள் சங்கீதமாய் நீ 27

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 27


ஹர்ஷி.. வீட்ல இருந்து என்ன செய்ய போறோம்..? சுபத்ராவும் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளாஸ்க்கு கிளம்பிருவா.. வெளியே எங்காவது போலாமா.? என்று இந்திரன் கேட்கவும்,

அச்சோ.. இந்த சித்தப்பா காரியத்தையே கெடுத்தாரே.. என்று மனதுக்குள் அலறிய ஹர்ஷி, “இல்லை சித்தப்பா.. நான் அத்தையோட கிளாஸ்க்கு போறேன்.. நீங்க எல்லாம் வேணா கிளம்புங்க..”

அதுசரிவராது.. நீ அங்க போய் சும்மா உட்காந்திருக்கிருத்துக்கு எங்களோடு வா போலாம்.. என்று மாலதி கண்டிப்புடன் சொல்ல,

“சித்தி.. அதான் அத்தை இருக்காங்கல்ல.. நான் இருந்துப்பேன்.. நீங்க கிளம்புங்க” என்று அவர்களை சரிக்கட்டி அனுப்பியவள் சுப்தராவுடன் அகாடெமிக்கு சென்றாள்,

ச்சே.. இந்த டைம்மே போவேனாங்குது.. இன்னும் கிளாஸ் ஆரம்பிக்க அரை மணிநேரம் இருக்கு என்று கடுப்புடன் நேரத்தை சபித்தபடி சுபத்ரா ஆட்கள் மூலம் கிளீன் செய்வதை பார்த்து கொண்டிருந்தாள்.,

நான் தான் இன்னிக்கு வரேன்னு அவருக்கு தெரியுமில்ல.. ஏன் கொஞ்சம் சீக்கிரமா வந்தா தான் என்னவாம்,, கரெக்ட்டா டைம்க்கு தான் வருவாரா..? என்று ஜெயயை மனதுக்குள் அர்ச்சித்தபடி இருந்தவளின் அர்ச்சனையை கேட்டோ என்னமோ வேகமாக வந்து கொண்டிருந்தான் ஜெய் ஆகாஷ்,

இவள் கருப்பு கண்ணாடி தடுப்புக்கு அப்பால் உள்ள சுபத்ராவின் ஆஃபீஸ் அறைக்குள் அமர்ந்து இருந்ததால் அவளால் நன்றாக ஜெயயை பார்க்க முடிந்தது, அன்று ஹோட்டலுக்கு வந்து கத்திவிட்டு சென்ற ஜெய் இல்ல இவன்.. நிறைய மாற்றங்கள்..

கல்லூரி மாணவன் தோற்றத்தில் இருந்து மாறி “கட்டிளங்காளையாக, கம்பீர ஆண்மகனாக, தோள்கள் எல்லாம் விரிவடைந்து, இன்னும் ஒரு அடி வளர்ந்து, கண்களில் தனி பளபளப்புடன், முகம் இன்னும் ஜொலிக்க, அரும்பு மீசை மறைந்து கத்தை மீசையாக வளர்ந்து அதை முறுக்கி கொண்டே தன்னை தேடும் அவன் பார்வையில் இருக்கும் காதலை உணர்ந்தவளின் மனம் நெடு நாட்களுக்கு பிறகு தன் காதலனை கண்ட நிறைவில் மலர்ந்து மனம் வீசியது, அதுவே ஹர்ஷினியின் முகத்திற்கு தனி சோபையை கொடுத்தது,”

வழியில் உள்ள சுபத்ராவிடம் பேசியபடியே தன்னை தேடியவனின் முன் சென்று நிற்க மனம் ஆவல் கொண்டாலும், மூளை அதனை தட்டி, அவன் மேல் உள்ள செல்ல கோவத்தை ஞாபகப்படுத்தி “தேடட்டும்.. இன்னும் நல்லா தேடட்டும்.. இத்தனை மாசம் உன்னை தவிக்க விட்டார் இல்ல..” என்று தடை போட்டது.

அப்பொழுது கதவை திறந்து கொண்டு சுபத்ரா உள்ளே வரவும், அவரின் பின்னாலே வந்த ஜெயயை கண்டவுடன் வேகமாக எழுந்து நின்றாள், அதை பார்த்து சிரித்த சுபத்ரா,

“இன்னும் சீனியர் பயம் உன்னை விட்டு போகல போல.. படக்குன்னு எழுந்து மரியாதை எல்லாம் தர..” என்ன ஜெய்,,? என் மருமகளை நல்லா பயமுறுத்தி வச்சிருக்க போல..?” என்று சிரித்து கொண்டே பைலை பார்த்தவாறே அவனிடம் கேட்டார்.

அவர் பேசுவது எல்லாம் அவன் காதில் விழுந்தா தானே அவன் பதில் சொல்ல, அவன்தான் அவன் காதலியையே தீவிரமாக பார்த்து கொண்டிருந்தானே,

அச்சோ.. அத்தை கேட்கிறதுக்கு பதில் சொல்லாம இப்படி என்னை விடாம பாத்துட்டு இருக்காரே என்று மனதுள் பதறிய ஹர்ஷினி, “ஜெயிடம் தன் அத்தையை கண்ணால் காட்டி பேசுமாறு சைகை செய்ய, அவனோ அவளிடம் தான் பேச வேண்டும் என்று சைகை செய்ய”,

“அத்தை இருக்காங்க.. அப்பறம் பேசலாம்.. என்று இவள் சைகை செய்ய, அவனோ எனக்கு இப்பொழுதே பேசியாக வேண்டும்” என்று பிடிவாதமாக சைகை செய்ய,

“எப்போ பாரு இவர் நினைச்சது தான் சட்டம்..” என்று மனதுள் திட்டியவாறே அவனை முறைத்தவள், “அத்தை.. நான் இன்னிக்கு மதியம் என் பிரண்டை பாக்க ஸ்பென்சர் பிளாசா போறேன்..” என்று சொல்லவும்,

என்ன ஹர்ஷி இது..? அண்ணாதான் உன்னை வெளியே வரச்சொல்லி எவ்வளவு கம்பெல் பண்ணாரு.. அவர்கிட்ட என்கூடவே இருக்கேன்னு சொல்லிட்டு இப்போ வந்து நீ தனியா போறான்னு என்ன அர்த்தம்.. என்ன ஹர்ஷி இது எல்லாம்..? என்று சுபத்ரா கண்டிப்புடன் திட்ட,

“இவராலதான் எனக்கு இப்போ திட்டு..” என்று ஓரக்கண்ணால் அவனை கடுப்புடன் பார்க்கவும், “ப்ளீஸ்டி.. பேசு” என்று தன் வாயசைத்து அவன் சொல்ல,

“அத்தை.. நான் போயிட்டு அவளை பாத்துட்டு உடனே வந்துடுறேன்.. கொஞ்ச நேரம் தான் ப்ளீஸ் அத்தை..” என்று விடாது கெஞ்சவும், “சரி போ.. ஆனால் போன டைம் மாதிரி நீ தனியா எல்லாம் எங்கேயும் போக கூடாது.. நம்ம டிரைவர் கூடவே போயிட்டு வந்துடு” என்று முடிவாக சொல்லிவிட,

“விட்டார்களே அதுவே போதும்..” என்று “ஓகே வும்” சொல்லிவிட்டாள் ஹர்ஷினி. “சாரி ஜெய் இவளால நீ வெய்ட் செய்ய வேண்டியதா போயிடுச்சு..” என்று சொல்லவும்,

“பரவாயில்லை மேம்..” என்று சொன்னவன், தன் பாக்கேட்டிலிருந்து பணத்தை எடுத்து பீஸ் கொடுக்கவும், எண்ணி பார்த்து விட்டு பில் கொடுக்கவும்,

“ஏன் எண்ணி பாக்காம தான் வாங்குனா என்னவாம்.. இவரே பார்ட் டைம் வேலை பார்த்து கஷ்டப்பட்றாரு.. இவர்கிட்டேயும் பீஸ் வாங்கணுமா..? அதான் இவ்வளவு காசு வச்சிருக்கே.. இந்த அத்தை ரொம்ப மோசம்” என்று மனதுள் அவரை தாளித்தபடி நின்றுஇருந்த ஹர்ஷினியை கண்ட ஜெய்.

அவளின் பொருமலை அவள் சுபத்ராவை பார்க்கும் பார்வையிலே புரிந்து கொண்டு பொங்கி வந்த தன் சிரிப்பை வாய்க்குள் அடக்கினான்,

ஓகே மேம் நான் கிளாஸ்க்கு போறேன்.. என்று விட்டு வெளியே வந்த ஜெயின் மனம் நிறைந்து ஆசுவாசமாகவே உணர்ந்தது. எங்க அவகிட்ட நான் நடந்துக்கிட்ட விதத்துல என் மேல பயங்கர கோவத்துல இருப்பாளோ..? இல்லை ஒரு சமயம் வெறுத்தே இருப்பாளோ..? என்று பல நாட்களாக அவன் பயந்த பயம் அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

“ஹர்ஷி, நான் கிளாஸ் போறேன்.. நீயும் வாயேன்” என்று சுபத்ரா அழைக்க, மறுபடியும் ஜெயயை பார்க்கும் ஆசையில், “வரேன்..” என்றவள் அவருடன் கிளாஸ் நடக்குமிடம் சென்றவள், ஓரமாக அமர்ந்தபடி தன்னவன் ஆடுவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்,

“ம்ம்.. நிறைய சேஞ்ஜஸ் இவர் டான்ஸ்ல.. எல்லா ஸ்டெப்ஸும் அவருக்கான தனி ஸ்டைல்ல தான் ஆடுறாரு.. இங்க இத்தனை பேர்லே அவர் ஆடுற பாங்கு மட்டும் தனியாவே தெரியுது” என்று பெருமையுடன் அவனை பார்த்து கொண்டிருந்தவளை,

உணர்ந்த ஜெய், “ஆடும் போதே இவளை பார்த்து கண்ணடிக்கவும், முதல் போல் வெட்கத்தில் குனியாமல்.. மறுபடியும் கண்ணடிக்க மாட்டானா.. என்று தங்களின் நீண்ட மாத பிரிவில் அவனுக்காக.. அவன் காதலுக்காக.. இது போல் அவன் குறும்புக்காக ஏங்கியவளின் பார்வை அதை அப்படியே ஜெயிடம் வெளி படுத்தவும் தவறவில்லை..”

அவளின் ஏக்கமான பார்வையை புரிந்து கொண்ட ஜெயின் கால்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு “அவளையே குற்ற உணர்வுடன் தவிப்பாக பார்க்கவும்”, சுதாரித்து கொண்ட ஹர்ஷினி.. “அங்க பாத்து ஆடுங்க..” என்று சைகை காட்டும் போதே..

“என்ன ஜெய்..? ஏன் நின்னுட்ட..?” என்று சுபத்ரா பாடலை ஆப் செய்துவிட்டு கேட்க, “கொஞ்சம் பிரேக் வேணும் மேம்..” என்றவன் அங்குள்ள மேடையில் அமர்ந்துகொண்டான்.

“ஓகே..” என்ற சுபத்ரா.. “நீங்களும் கொஞ்ச நேரம் உட்காருங்க” என்று மற்றவர்களிடமும் சொன்னவர். நேரே ஹர்ஷினியிடம் வந்து அமர்ந்து கொண்டார்.

“மேம் அது உங்க அண்ணா பொண்ணு தானே.. இந்த போட்டோல இருக்கிறதும் அவங்க தானே..?” என்று அங்கு சுவரில் “ஹர்ஷினியின் முதல் நாட்டிய அரங்கேற்ற போட்டோவை” காட்டி ஒரு மாணவி கேட்க,

“ஆமாம்.. அவதான்..” என்று சுபத்ரா சிரிப்புடன் சொல்ல,

அப்போ சூப்பர் மேம்.. நீங்க அடிக்கடி சொல்வீங்க இல்ல.. “பரதத்துல உங்களுக்கு ஈகுவலா அவங்களும் ஆடுவாங்கன்னு.. இப்போ நீங்க ரெண்டு பேறும் எங்களுக்காக ஆடுங்க மேம்..” என்று அந்த மாணவி கேட்க,

“ஆமா மேம்.. ஆடுங்க..” என்று மற்றவர்களும் கேட்க, சுபத்ரா பதறி போனவராக ஹர்ஷினியை பார்த்தார். அந்த போட்டோவை பார்த்ததுமே தன் தலையை குனிந்து கொண்ட ஹர்ஷினியின் கண்களில் இருந்து கண்ணீர் வர பார்க்க, வேகமாக எழுந்து கொண்டவள்,

“சாரி.. ஐ காண்ட்..” என்று பொதுவாக சொல்லிவிட்டு, அங்கிருந்து செல்லவும், சுபத்ராவும் அவளை பின்தொடர்ந்த படி சென்றார், “என்ன ஆச்சு..?” என்று மற்ற மாணவர்கள் பேசுவதை கேட்ட படி அமர்ந்து இருந்த “ஜெயின் மனக்கண்ணில் ஹர்ஷினியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரே நின்றது”.

“எனக்கு பசிக்குது.. ஏதாவது சாப்பிடலாமா..?” என்று ஸ்பென்ஸரில் சந்தித்து கொண்ட ஜெய்.. ஹர்ஷினியின் வாடிய சோர்ந்த முகத்தை பார்த்து கேட்க, “ம்ம்.. போலாம்” என்றவள், அங்கிருக்கும் புட் கோர்ட்டில் சென்று இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்து, வெளியே உள்ள மேடை மீது அமரவும்,

“நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..” என்று ஹர்ஷினி மிகுந்த தயக்கத்துடன் இழுக்க,

“ம்ம் சொல்லு..” என்று சொன்ன ஜெய்க்கு, “அவள் என்ன சொல்ல போகிறாள்..?” என்று தெரியத்தான் செய்தது.

“அது.. நாம அப்போ காலேஜில் டான்ஸ் ஆடினோமே., எங்க தாத்தா கூட வந்திருந்தாரே.. அப்போ.. அன்னிக்கு.. தாத்தா.. என்னை இனி..” எனும் போதே தொண்டை அடைக்கவும், அவளின் வேதனையை புரிந்து கொண்ட ஜெய் தண்ணீர் பாட்டிலை நீட்டினான், மறுக்காமல் வாங்கி குடித்தவள், மூச்சை இழுத்து விட்டவாறே,

“என்னை இனி எப்போதும் டான்ஸ் ஆடக்கூடாதுன்னு எங்க பாட்டி.. என்னோட முதல் குரு மேல சத்தியம் வாங்கிட்டாரு..” என்று வேகமாக சொன்னவள்,

பொங்கும் கண்ணீரை மறைக்க வேகமாக கீழே குனிய பார்க்க, அவளின் முகத்தை குனிய விடாமல் தன்னை பார்த்தவாறு நிமிர்த்து பிடித்தவன், தன் கையால் வடியும் அவளின் கண்ணீரை துடைக்கவும், மேலும் விம்மிய படி அவனை கட்டி கொண்டவள், அழுது தீர்க்கவும்,

“போதும் விடுடி.. இன்னும் எத்தனை நாளைக்கு அதையே நினைச்சி இப்படி அழ போற..” என்று அவளின் வேதனையை தாங்காது கடிந்து கொண்ட ஜெய், அவளை தன்னிடம் இருந்து பிரிக்கவும், இத்தனை மாத பிரிவுக்கு பின்னால் கிடைத்த அவனின் நெருக்கத்தை இழக்க விரும்பாமல்,

“ம்ஹூம்.. மாட்டேன்..” என்பது போல் தலையாட்டி கொண்டே, மறுபடியும் அவனை இறுக்கி கட்டிப்பிடித்தாள். “நீ இப்படி கட்டி பிடிக்கிறது மாமனுக்கு குஜாலாவாதான் இருக்கு.. என்ன ஒன்னு மத்தவங்களுக்கு தான் ப்ரீ ஷோ காட்ட வேணும்ன்னு பார்த்தேன்..” என்று சென்னை மொழியில் குறும்பாக சொல்ல, “ச்சே.. பொது இடத்துல இப்படி நடந்துக்கிட்டோமே..” என்று வேகமாக அவனிடம் இருந்து பிரிந்து அமர்ந்தாள்.

“நான் கூட நீ எதோ பெருசா சண்டை போடா போற.. எப்படி உன்னை சமாதானப்படுத்த போறேன்னு பயந்துட்டு வந்தா.. நீ என்னடான்னா அழுதுட்டு இருக்க.. அதுவும் என்னையே கட்டிப்பிடிச்சு..” என்று சிரிப்புடன் சொல்ல,

“யாரு நீங்க பயந்தீங்க.. அதுவும் என்னை சமாதானபடுத்த..” என்று நக்கலாக கண்களை துடைத்து கொண்டே கேட்டவளின், தலையில் செல்லமாக தட்டிய ஜெய்,

“நம்புடி.. நிஜம் தான்..” என்று சொன்னவன், சிறிது நேர அமைதிக்கு பிறகு, “உன்னை ரொம்ப படுத்திட்டேன் இல்ல..” என்று குற்ற உணர்வுடன் கேட்க, “அது உண்மைதான்” என்றாலும், அவனின் அன்றய நிலையை புரிந்து வைத்திருந்த ஹர்ஷினி,

“இப்போ அதை பத்தி என்ன.. விடுங்க பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்..” என்று சொல்ல, அவளின் காதலில் நெகிழ்ந்த ஜெய் அவளின் கையை எடுத்து தன் கையோடு இறுக்கமாக பிணைந்தவன்,

“உனக்கு எங்கிருந்து..? எப்படி என் சூழ்நிலையை சொல்ல..”

ம்ம்.. “நான் முதல்ல அப்பாகிட்ட இதை பத்தி பேசனப்போ, அவருக்கு இதுல சுத்தமாவே விருப்பமில்லை.. இப்பவும் தான்..” அதனால தான் எனக்கு அவர் காசு தரல போல.. அப்போ எனக்கு அதை பத்தி அம்மா எதுவும் சொல்லல.. நான் அப்பாதான் அனுப்புறாருன்னு நினைச்சிட்டு இருந்தேன்.

ம்ப்ச்.. “எனக்கு உண்மையிலே அப்போ காசை பத்தி எந்த ஐடியாவே இல்லை..” நான் டான்ஸை பத்தி மட்டும் தான் யோசிச்சேன்.

“அதுதான் நான் செஞ்ச முதல் தப்பு..”

அடுத்து எனக்கு டான்ஸ் ஆட தெரியுமே தவிர, அதை ஒரு ப்ரொபஷனலா எப்படி இன்னும் டெவலப் பண்ணனும்ன்னு யோசிக்கல..

“அதுதான் நான் செஞ்ச இரண்டாவது தப்பு..”

“அடுத்த பெரிய தப்பு.. நான் உனக்கு செஞ்சது.. என்னோட அவமானத்தை, இயலாமையை, ஆத்திரத்தை உன்கிட்ட காமிச்சது.”

“உன்கிட்ட போன்ல பேசின முறை.. இப்போ அதை பத்தி நினைச்சா எனக்கே என்ன பார்த்து ஆத்திரம் வருது..” எனக்கு உண்மையிலே அந்த பையன் உன்பின்னாடி சுத்துறதால எந்த பிரச்னையும் இல்லை..

“நான் உன்னை எப்படி சொல்ல..? என்னை நீ நம்புற தானே..? என்று தவிப்புடன் கேட்க,

“ம்ம்.. நீங்க கோவத்துல தான் பேசுறீங்கன்னு அப்பவே புரிஞ்சது..”

“கோவம்.. அப்டிங்கிறதை விட ஒரு விதமான பயம்ன்னு கூட சொல்லலாம்”. அவள் நம்ப முடியாமல் பார்க்க, “உண்மை தான் ஹர்ஷி..”

“எல்லா ஆண்களுக்கும் ஒரு கட்டத்துல நம்மால எதையும் செய்ய முடியாம போயிருமோன்னு பயம் கண்டிப்பா இருக்கும்”,

“நானும் அதுக்கு விதிவிலக்கல்ல..” அதுவும் நான் என்னோட அப்பாகிட்ட சினி பீல்டுக்குள்ள போறேன்ன்னு சண்டைபோட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து “எங்க என்னால எதையும் செய்ய முடியாத ஒரு பெயிலியர் பெர்சனா ஆயிடுவேனோ.. என்னால் நான் நினைச்சதை சாதிக்க முடியாம போயிருமோ..?” அப்படிங்கிற பயம்.

அதோட.. நாலு பேர் பாக்க “மத்தவங்க என்னை உனக்கு ஒன்னும் தெரியல அப்படின்னு க்ரிடிஸைஸ் பண்ணவும் அவமானம், ஆத்திரம்..” அதுதான் என்னை அன்னிக்கு அப்படி உன்கிட்ட பேசவச்சுது போல..

“காரணம் எப்படி இருந்தாலும் அது தப்பு.. சாரிட” என்று மனமார சொன்னவனின் கையை இன்னும் இவள் இறுக்கி கொண்டவள்,

“அப்புறம்.. அடுத்த ஒரு வாரம் நீங்க சென்னையிலே இல்ல, எங்க போயிருந்தீங்க..?” என்று கேட்க,

“உனக்கு எப்படி தெரியும்..?”

“நான் உங்களை தேடி உங்க பிஜிக்கு போனேன்..”

ஓஹ்.. நீ என்னை தேடி சென்னை வந்திருந்தயா..?

ஆமாம்.. “ஒரு வாரமாகியும் நீங்க போனை ஆன் பண்ணவே இல்ல, உங்க வீட்டுக்கும் பேசல.. அதான் என்ன ஆச்சோன்னு,,? பாக்க வந்தேன்..”

“என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்ட இல்ல..”

எனக்கு உண்மையிலே கஷ்டமாவே இல்ல.. உங்களை பாக்க முடியாதது தான் வருத்தமா இருந்துச்சி.. எங்க போனீங்க..?

ம்ம்.. இங்க வந்து பழக்கமான ஒரு பையன், ஒரு டான்ஸ் மாஸ்டர் கிட்ட அசிஸ்ட்டண்டா இருக்கான்.. அவன்கூடவே "சாங் ஷூட்டிங்குக்காக ஊட்டி வரை வந்திருந்தேன்.. அப்போ அந்த மாஸ்டர்கிட்ட பேசி சான்ஸ் வாங்கலாம்ன்னு, பட் அங்கேயும் அவர்கிட்ட அவமானபட்டது தான் மிச்சம்.."

அந்த கோவத்துல ஊருக்கு வந்தா அப்பா.. ஏதேதோ பேசி.. அதான் நீயும் போன்ல கேட்டஇல்ல. எனக்கு அப்போ உண்மையிலே “நீ தான் எனக்கு காசு அனுப்பறே.. அதுவும் வேலை செஞ்சி காசு அனுப்புறேன்னு” தாரணி சொன்னதும்,

அப்பாவும் "சும்மா சுத்துற.. காசை காரியக்குறேன்னு கத்தவும்",

"நீயும் என்னை நம்பலைபோலன்னு ஆதங்கம்", அதோட உனக்கு எப்படி சொல்ல, “நான் சாப்பிட, தங்க நீ வேலை பாத்து காசு அனுப்புறேங்கிறது.."
எல்லாம்


"ஒரு ஆணா எனக்கு அது ரொம்ப பெரிய அவமானமாத்தான் தெரிஞ்சிது.”

அதுமட்டுமில்ல, நான் பிளான் பண்ணதே “டான்ஸ்ல ஏதாவது அச்சீவ் பண்ணிட்டு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும் அப்படிங்கிறது தான்,, ஆனா நடந்தது எல்லாம் தலைக்கீழ்..”

அந்த ஏமாற்றம், ஆத்திரம் எல்லாம் தான் உன்கிட்ட அன்னிக்கு ஹோட்டல்ல அப்படி கத்த வச்சுது.

அப்புறம் “உங்க அத்தை டான்ஸ் அகாடமில என்னை சேர சொன்னேன்னு தாரணி சொன்னப்போ.. உங்க அத்தை டான்ஸ் அகாடமிக்கு ஆள் பிடிக்க நான் தான் கிடைச்சேனாங்குற கோவத்துல..”

“முறைக்காதடி.. அப்போ கோவத்துல அப்படித்தான் நினைச்சேன்..” அப்புறம் கொஞ்ச நாள்லே போய் சேந்துட்டேன் இல்ல.. அப்புறமென்ன முறைக்கிறவ..

“அதெல்லாம் இருக்கட்டும்.. நான் தான் உன் காசு வேண்டாம்ன்னு தானே சொன்னேன்.. அப்படி இருந்தும் எதுக்குடி மாசாமாசம் என் அக்கவுண்டுக்கு இன்னும் காசு அனுப்பிட்டு இருக்க..”என்று காதை பிடித்து திருகியவாறே கேட்க,

அச்சோ.. வலிக்குது விடுங்க.. அப்பறம் "அந்த காசை வச்சிட்டு என்ன செய்ய சொல்றீங்க.. அதான் உங்களுக்கே அனுப்பினேன்.. அப்பவும் கோவத்திலாவது போன் செஞ்சி திட்டுவீங்கன்னு பார்த்தா பண்ணவே இல்ல.." என்று முறுக்கியவாறே கேட்க,

ம்ம்.. "அப்போ எனக்கு கோவத்துல கூட உன்கிட்ட பேசக்கூடாதுன்னு கட்டுப்பாடு.." பின்ன நீயும் எங்க அப்பா மாதிரித்தான் என்னை நினைக்கிறயோன்னு ஆதங்கம்.. "என்னால என் செலவை கூட சம்பாதிக்க முடியாதான்னு ஒரு வெறி.."

அதான் அப்படி.. என்று சொன்னவன், எல்லாத்தையும் சொல்லிட்டேன், இனியும் உன்கிட்ட மறைச்சி செய்ய ஒண்ணுமில்ல.. என்று பெருமூச்சுடன் சொல்லவும், குறும்பாக சிரித்த ஹர்ஷினி,

"இன்னும் ஒன்னு நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல.." என்று சொல்ல,

"என்னடி சொல்லல.. எல்லாத்தையும் சொல்லிட்டேனே.."

"ம்ம் இல்லை.. நீங்க இன்னும் உங்க காதலை சொல்லவே இல்லை.." என்று குறும்பாக சொன்னாலும், அதில் சிறிதளவு எதிர்பார்ப்பும் இருந்ததோ..?

.............................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. நெக்ஸ்ட் எபியோட பிளாஷ் பேக் முடிஞ்சுடும் ப்ரண்ட்ஸ்.. thank you
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா எல்லாத்தையும் சொல்லி ஒரு வழியா ஹர்ஷினியை ஜெய் சமாதானப்படுத்திட்டான்
இவங்களுக்கு எப்போ கல்யாணம் நடக்கும்?
ஜெய் ஆகாஷ்ஷையும் டான்ஸ் ஆடக் கூடாதுன்னு ஆச்சார்யா சொன்னாரே
அது என்ன ஆச்சு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top