என்னுள் சங்கீதமாய் நீ 26

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 26



அத்தை.. “நானும் உங்க கூட சென்னை வரேன்..” என்று ஹர்ஷினி சொல்லவும், புரியாமல் பார்த்த மேனகா,

“நாளைக்கு உனக்கு காலேஜ் இருக்கே ஹர்ஷினி..” என்று கேட்க,

“இருக்கு தான் அத்தை.. ஆனா எனக்கு சுபத்ரா அத்தையை பாக்கணும் போல இருக்கு..”என்று குறுகுறு நெஞ்சோடு சொன்னாள். அவள் சுபத்ராவை பார்க்க அல்ல.. ஜெயயை தானே பார்க்க செல்கிறாள்.

ஓஹ்.. என்று யோசித்தவர், ரேணுகாவை கேள்வியாக பார்க்கவும், “கூட்டிட்டு போ மேனகா..” என்று சம்மதம் சொல்லிவிடவும், அன்று இரவே அவர்களுடன் சென்னை சென்றவள், மறுநாளே ஷாப்பிங் போவதாக சொல்லிவிட்டு ஜெய் தங்கியிருக்கும் பிஜிக்கு சென்றாள்.

ஆனால்.. “அவன் வெளியே சென்றிருக்கிறான்..” என்றுவிடவும் அங்கேயே சுற்றி கொண்டு ஈவினிங் வரை வெய்ட் செய்தவள், அதற்கு மேல் சுப்தராவை சமாளிக்க முடியாமல் கிளம்பிவிட்டாள்.

அன்று மட்டுமல்ல அடுத்த இரண்டு நாட்களும் அவன் அந்த பிஜிக்கு வரவே இல்லை.. எங்கு சென்றான் என்று தகவலும் சொல்லவில்லை.. என்றுவிடவும், இதற்கு மேல் சமாளிக்க முடியாது.. “காலேஜ் செல்ல வேண்டுமே.. ரேணுகா வேறு வரச்சொல்லி போன் செய்து கொண்டேயிருக்கவும்..” வேறு வழி இல்லாமல் ஊர் திரும்பிவிட்டாள்.

எங்கு சென்றான்..? எப்படி இருக்கிறான்..? ஏன் இன்னும் போனை ஆன் செய்யவில்லை.? என்று அவனின் கவலையே அவளின் மனதை கரையனாக அரித்து கொண்டிருந்தது. அதற்கு விடுவு கிட்டுவது போல், விடியற்காலையிலே தாரணி போன் செய்து “ஜெய் இப்பொழுது தான் வீட்டுக்கு வந்ததாக கூறவும் தான் ஹர்ஷினிக்கு உயிர் மூச்சே வந்தது”.

தன்னை நிதானித்து கொண்டவள்.. “தாரணி நான் சொல்றதை கவனமா கேட்டு அப்படியே செய்யணும்..” என்று தாரணியிடம் சில விஷயங்கள் சொன்னவள்,

“அன்று விடுமுறை நாள்” என்பதால் எப்பொழுதும் போல் ஹோட்டல்க்கு சென்றவள் அன்று முழுவதும் போனை கையிலே வைத்து சுற்றிக்கொண்டிருந்தாள், அவள் எதிர்பார்த்த போன் மாலையில் வரவும், உடனடியாக அட்டென்ட் செய்து காதில் வைத்துக்கொண்டு அங்கு விஜயா மற்றும் ஜெயின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

“ஜெய் ஏன் இவ்வளவு மெலிஞ்சு போய் இருக்க..? மூஞ்சும் சரியில்ல.. என்னடா ஆச்சு..? ஏதாவது பிரச்சனையாப்பா..? அம்மாகிட்ட சொல்லு சாமி..” என்று விஜயா மகனிடம் கவலையோடு கேட்டு கொண்டிருந்தார்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..” என்ற தன்னை இத்தனை நாள் தவிக்கவிட்ட ஜெயின் குரலை கேட்ட ஹர்ஷினியின் கண்களில் கண்ணீர் அரும்பவும், அதை துடைத்து கொண்டவள், அவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தாள்.

“இல்லப்பா எதோ இருக்கு.. ஏதா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுப்பா..” என்று “அவன் எதுவும் இல்லை..” என்று சொன்னாலும் விடாமல் தொடர்ந்து வற்புறத்துவும்,

இப்போ என்னம்மா தெரியணும் உனக்கு..? நான் ஏன் இப்படியிருக்கேன்னா..? நல்லா கேட்டுக்கோ.. “எனக்கு ஒழுங்கா டான்ஸ் ஆடவே தெரியலையான்.. யாரும் எனக்கு சான்ஸ் கொடுக்க மாட்டேங்கிறாங்க…”

அப்படியும் அலைஞ்சி.. தெரிஞ்சி ஒரு டான்ஸ் மாஸ்டர் கிட்ட சான்ஸ் கேட்டதுக்கு, “எனக்கு ப்ரொபெஷனாலா, எல்ல விதமான் டான்ஸும் தெரியலையாமா..? நீ எல்லாம் எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு டான்ஸ் ஆட சான்ஸ் கேட்டு வரேன்னு எல்லாரும் பார்க்க அவமானப்பட்டேன்..”

“அவர்கிட்ட மட்டுமில்ல.. அதுக்கப்புறமும் நிறைய டைம்.. நிறைய பேர்கிட்ட அசிங்கப்பட்டேன் போதுமா..?” என்று அவன் கத்தும் போது அங்கு வந்த மஹாதேவன்,

“இதுக்கு தான் பெரியவங்க சொல்றதை கேட்கணும்ங்கிறது, ஒழுங்கா IT கம்பெனிக்கே வேலைக்கு போயிருக்கலாம் இல்லை.. இப்போ பாரு இத்தனை மாசம் சுத்தியும் உன்னால ஒன்னும் செய்ய முடியல..”

இதுல நீ வேற “சும்மா சுத்துற உன் மகனுக்கு காசு தரச்சொல்லி அழுகை.. நல்ல வேளை நான் காசு தரலை.. இல்லாட்டி அதுவும் கரியாத்தான் போயிருக்கும்..” என்று அவனின் மனஅழுத்தம் தெரியாமல் நக்கலாக சொல்ல,

இங்கு “ஹர்ஷினிக்கு தன்னவனின் நிலையை நினைத்து உயிர் துடித்தது”,

“ஏங்க சும்மா இருங்க.. எப்போ என்ன பேசணும்ன்னு தெரியாதா உங்களுக்கு..? புள்ள ஏற்கனவே கஷ்டத்துல இருக்கும் போது இப்படித்தான் பேசுவாங்களா..?” என்று விஜயா கணவரை கத்தியவர்,

இறுக்கமாக அமர்ந்துஇருந்த மகனின் தலையை வருடியவாறே நீ போ ரெஸ்ட் எடுப்பா.. போப்பா, போ ஜெய்.. என்று அவனை வற்புறுத்தி ரூம்க்கு அனுப்பும் சத்தம் கேட்க,

அதை தொடர்ந்து “ஹலோ ஹலோ..” என்று தாரணி கூப்பிடும் குரலில், அடைத்த தொண்டையை செறுமிய ஹர்ஷினி, சொல்லு தாரணி.. எனவும்

“நீங்க சொன்ன படியே, அண்ணா எதோ மனசு கஷ்டத்துல இருக்கிற மாதிரி தெரியுது, என்ன எதுன்னு..நீங்க விசாரிங்கம்மான்னு அம்மாகிட்ட சொன்னேன்”,

அண்ணா ரொம்ப மெலிஞ்சி போயி, எப்படியோ இருக்க அம்மாவும் பயந்துட்டாங்க,

அண்ணா காலையிலருந்து நல்லா தூங்கிட்டே இருக்கவும், எழுப்பாம அவரே எழட்டும்ன்னு வெய்ட் பண்ணோம்.. அதான் லேட் என்று சொல்ல, சரி, அவரை கொஞ்சம் பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

தாரணி.. என்று ஜெய் கத்தும் சத்தத்தில், அப்பொழுதுதான் ஹர்ஷினியிடம் பேசிவிட்டு வைத்தவள், ஜெய் கூப்பிடவும் போனை கையிலே கொண்டு சென்றுவிட்டாள், ஜெயின் ரூமிற்குள் சென்ற தாரணி, அவனின் கோவமான முகத்தில், பயந்தவாறே

“என்ன அண்ணா..?” என்று கேட்கவும், “அம்மாவை வர சொல்லு உடனே..” எனவும், வேகமாக சென்று விஜயாவை கையோடு அழைத்து கொண்டு வந்தாள்,

“எனக்கு நீங்க காசு அனுப்பினீங்களா..? இல்லையா..?” என்று அழுத்தத்தோடு கேட்க, தாரணியின் கைகள் பயத்தில் வேர்த்து கொட்டியது,

“என்ன ஜெய் இப்படி கேட்கிற.. உனக்கு முதல்ல ஒரு மூணு, நாலு மாசம்தான் என்னால காசு அனுப்ப முடிஞ்சது.. அதுக்கு அப்பறம் தான் நீயே அங்க எதோ வேலை.. என்ன தாரணி சொன்ன.. என்ன வேலை அது..?” என்று தாரணியிடம் கேட்க, ஜெயின் கண்கள் கூர்மையாக அவளை துளைத்தது.

ஏய் சொல்லுடி..? என்று விஜயா மறுபடியும் கேட்க, “பார்ட்.. பார்ட் டைம்” என்று திணறியவள், ஜெயின் பார்வையில் வேகமாக தலை குனிந்து கொண்டாள். ஆங்.. அதான்.. அந்த வேலை பாத்து நீயே சம்பாதிக்கிறன்னு தாரணி சொல்லவும் தான் எனக்கு நிம்மதியாச்சி.. என்று சொல்லவும், நீ போம்மா..? என்று அவரை அனுப்பிவிட்டவன்,

“இப்போ நான் என்ன நடந்ததுன்னு உன்கிட்ட கேட்டா தான் எனக்கு எல்லாம் சொல்லுவியா தாரணி..?” என்ற ஜெயின் குரல் அழுத்தத்திலே, பயந்து போன தாரணி “ஹர்ஷினி வேலை பார்த்து பணம் அனுப்புவது முதல், இப்பொழுது போன் பேசியது வரை..” அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

“மேம்.. உங்களை பார்க்க உங்க ஜூனியர் வந்திருக்காங்க..” என்று ரிசெப்ஷனில் போன் செய்து சொல்லவும், யாரு என்று யோசித்து கொண்டே வந்தவள்,

அங்கு தாராணியோடு இருந்த ஜெயயை கண்டிப்பாகவே எதிர்பார்க்கவில்லை. வெகு மாதத்திற்கு பிறகு அவனை பார்த்ததால், ஆனந்த அதிர்ச்சி கொண்டவள், மலர்ந்த முகத்துடனே ஜெயயை நன்றாக பார்த்தவாறே வேகமாக அவர்களை நெருங்கியவள்,

“வாங்க.. வாங்க உள்ளே போய் பேசலாம்..” என்று ஹோட்டல் உள்ளே அழைக்கவும், அவளையே தன் நெருப்பு பார்வையால் பொசுக்கி கொண்டிருந்த ஜெய்,

“இங்கேயே பேசலாம்..” என்று கடினமான குரலில் சொல்லவும் தான், வேறுபாட்டை உணர்ந்து அவர்களை நன்றாக பார்த்தவளுக்கு “தாரணியின் அழுத முகமும், ஜெயின் இறுகிய முகமும் கண்ணில் பட்டது”.

என்ன.. என்ன ஆச்சு..? என்று புரிந்தும்.. புரியாமலும் திணறியவாறே கேட்டவளை,. கண்களில் கனலுடன் நோக்கிய ஜெய்,

“சோ.. உனக்கும் நான் எதுக்கும் லாயக்கில்லாதவனாதான் தெரியுறேன் போல..” என்று அடக்கப்பட்ட குரலில் சீறவும்,

“இல்லை.. அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லை..” என்று பதறி போனவளாக மறுக்கவும்,

“ஆமா.. அப்படித்தான் நினைச்சிருக்க.. அதனால தான் நீ வேலைக்கு போய் எனக்கு காசு அனுப்பியிருக்க..”

“நான் அப்படி எல்லாம் நினைச்சு காசு அனுப்பலை.. உங்களுக்கு.. நீங்க எப்படி சமாளிக்க முடியும்ன்னு தான்..” என்று சொல்லும்போதே,

ஓஹ்.. “அப்போ என்னால என்னோட செலவுக்கு கூட காசு சம்பாதிக்க முடியாதுங்கிறாயா..? அந்தளவு கையாலாகாதவனா உன்கண்ணுக்கு தெரியறேனா..?”

“அய்யோ.. நான் அப்படி நினைக்கவே இல்லை.. ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..” என்று அவள் சொல்வதை காது கொடுத்து கூட கேட்காத ஜெய்

“இனி எனக்கு யார் தயவும் தேவையில்லை, என் செலவை நானே பாத்துக்கிறேன்..” என்றுவிட்டு விடுவிடுவென சென்றுவிடவும், “சாரி..” என்றுவிட்டு தாராணியும் அவனுடன் சென்றுவிட்டாள், ஹர்ஷினிக்கு சில நிமிடங்களிலே ஒரு பெரிய புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

சொன்னது போல் “பார்ட் டைமாக ஒரு பிஸ்ஸா கார்னரில் வேலை” செய்து அவன் செலவை அவனே பார்த்து கொண்டாலும் மனது அமைதியடையவே இல்லை.

“தன் தந்தை தன்னை நம்பி காசு தராதது, ஹர்ஷினி வேலை செய்து தனக்கு காசு அனுப்பியது” எல்லாம் அவனை மனதளவில் இன்னுமே பாதித்தது,

“ஒரு காதலனாக ஹர்ஷினி தனக்காக செய்தது பெருமையாக, கர்வமாக இருந்தாலும், ஒரு முழு ஆண்மகனாக அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை..”

“எதோ தன் மிகவும் தாழ்ந்து போனதாக தான் தோன்றியது அவனுக்கு..”

“அவளுக்காக எதோ செய்ய வந்து, இறுதியில் அவளிடமே உதவி பெற்று” என்று நினைத்து மறுக்கியவனால் ஒரு கட்டத்தில் ஹர்ஷினியின் முகத்தை கூட பார்க்க முடியும் போல் தோணவில்லை.

அதனாலே அவன் ஹர்ஷினியை பார்க்காமல், பேசாமல் அவளை வருத்தவைத்தான். தாரணி மூலமாக எவ்வளவு முயன்றும் அவனை சமாதான படுத்த முடியாமல் தவித்த ஹர்ஷினி,

இறுதியாக ஒரு விஷயத்தை மட்டும் தாரணி வழியாக அவனை சென்று சேருமாறு பார்த்து கொண்டவள்.. அதற்கு பிறகு “அவனுடைய கோவம் தீர்ந்து அவனே வரட்டும்..” என்று

“அவனுடைய உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவனுக்கான டைம்மை கொடுத்தவள் எவ்விதத்திலும் அவனை தொடர்பு கொள்ளாமல் தாரணியிடம் மட்டும் தினமும் அவனின் நலத்தை விசாரித்து கொண்டு அமைதியாக இருந்து கொண்டாள்”.

ஹர்ஷி.. “உன்னோட காலேஜ் சீனியர் ஜெய் தெரியுமா உனக்கு..?” என்று ஊர் வந்த சுபத்ரா கேட்கவும், அவரின் தீடிரென ஜெய் பற்றிய கேள்வியில் மெலிதான பயம் கொண்டவள்,

தெரியும்.. தெரியும் அத்தை..

அந்த தம்பி “இப்போ நம்ம டான்ஸ் அகாடமியில தான் டான்ஸ் கிளாஸ் வராப்படி.. ரொம்ப நல்லா ஆடுறான், அவனும் என்னை மாதிரியே எல்லா ஸ்டைல் ஆப் டான்சும் தேடி பிடிச்சி கத்துகிறான்”.

“டான்ஸ்ல தனக்குன்னு ஒரு முத்திரையை பதிக்கறது தான் அவனுடைய குறிக்கோள் போல.. நீ வேணும்ன்னா பாரேன்.. அவன் கண்டிப்பா சாதிக்கவும் செய்வான்”. என்று சுபத்ரா சொல்ல சொல்ல,

“குரு மெச்சிய சீடனாக ஜெய் இருப்பதை கண்ட ஹர்ஷினிக்கு மனதில் சாரல் அடித்தது”.

அன்றிரவு.. போன் செய்த தாரணி, “உங்க அத்தை வந்திருக்காங்களா..?” என்று கேட்கவும், ஆமா.. என்று ஹர்ஷினி சொல்லவே,

அண்ணா போன் பண்ணியிருந்தாங்க.. “உங்களை உங்க அத்தை கிளம்பிறப்போ அவங்களோடயே சென்னை வரசொன்னார் அண்ணா..” என்று சொல்லவும்,

“நீண்ட நெடிய இடைவெளிக்கு பின் தன்னை தேடிய ஜெயயை” நினைத்த ஹர்ஷினியின் மனம் என்ன உணர்கிறது என்றே தெரியவில்லை. சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும்,

இத்தனை மாதம் தன்னை தவிக்க விட்ட அவன் மேல் கோவம், வருத்தம் இரண்டுமே இருந்தது. “வரமாட்டேன்னு சொல்லிடலாமா..?” என்று மூளை யோசிக்கும் போதே, வாய் "வரேன்.." என்று சொல்லிவிட்டுருந்தது.

“எனக்கு நானே தான் பெரிய எதிரி போல என்று தன்னையே கொட்டிக்கொண்டாள் ஹர்ஷினி”.

சுபத்ரா சென்னை கிளம்பவும், நானும் வரேன்.. எனக்கு இப்போ லீவ் தான் என்று ஹர்ஷினி கிளம்ப, “நாங்களும் சென்னை வரோம் அத்தை.. எங்களுக்கும் இப்போ லீவ் தான் என்று கார்த்திக், ஹாசினி” அடம்பிடிக்க அவர்களுடன் மாலதி, இந்திரன் என்று ஒரு படையே சென்னை கிளம்பியது.

“குட்டி பிசாசுங்களா..” என்று கடுப்பில் அவர்களின் மண்டையை கொட்டவும், ஏன்க்கா..? என்று தலையை தேய்த்து கொண்டே அமுல் பேபி போல் சப்பியாக இருந்த ஹாசினி பாவமாக கேட்கவும் சிரிப்புடன் அணைத்துக்கொள்ள தான் முடிந்தது ஹர்ஷினியால்.

.....................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொன்னா சந்தோஷப்படுவேன் ப்ரண்ட்ஸ்.. thank you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top