என்னுள் சங்கீதமாய் நீ 25 2

Advertisement

Nithi Kanna

Well-Known Member


என்னுள் சங்கீதமாய் நீ 25 2



ஹர்ஷினி, “இன்னிக்கு தானே உனக்கு பர்ஸ்ட் செமெஸ்டர்.. வா நானே இன்னிக்கு உன்னை காலேஜில் ட்ராப் பண்றேன்..” என்று ஆச்சார்யா வரவும்,

“வேண்டாம்.. நானே போய்க்கிறேன்..” என்று அவரின் முகம் கூட பார்க்காமல் சொன்னவள் கிளம்பி விடவும், “பேத்தியின் ஒதுக்கத்தில் மிகவும் ஒடிந்து போய் நின்றுருந்த ஆச்சார்யாவை கண்ட சந்திரனுக்கு குற்ற உணர்ச்சி மேலும் மேலும் அதிகரித்து அவரை கொன்றது”.

கேட்டின் அருகிலே நின்ற ஜெய், ஹர்ஷினி வரவும் "ஆல் த பெஸ்ட் ஹர்ஷ்.. நல்லா எக்ஸாம் எழுது.." என்று வாழ்த்து சொல்லவும், “ஆச்சார்யாவை ஒதுக்கிவிட்டு தானும் வேதனையில் வந்த ஹர்ஷினிக்கு ஜெயின் விஷ் கொஞ்சம் தெம்பூட்டியது” என்றே சொல்லலாம்.

“thank யு.. நீங்களும் நல்லா பண்ணுங்க..” என்று இவளும் விஷ் செய்ய, அதெல்லாம் அய்யா கலக்கிடுவேன்.. பாஸ் பண்ற அளவுக்கு படிச்சிட்டோம்ல.. என்று கூலாக சொல்ல, இவரை.. என்று சிரிப்புடன் முறைத்தவளை,

என்ன..? “என்னையும் உன்ன மாதிரி படிப்பஸ்ன்னு நினைச்சியா..?” அந்த மாதிரி எல்லாம் மாமன்கிட்ட தப்பி தவறி கூட எதிர்பார்க்காதடி..

அதைவிட “வீட்ல ரெண்டு பேர்ல ஒருத்தர் படிச்சா போதும்ன்னு..” ஒருத்தர் சொல்லிருக்கார் என்று சொல்லவும், “யாருடா அது..?” என்று ஹர்ஷினி புரியாமல் பார்க்க,

“வேற யாரு.. நம்ம தனுஷ் தான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன், சரி பெல் அடிச்சிட்டாங்க பாரு.. அது கூட தெரியாம “எப்ப பாரு மாமனையே சைட் அடிச்சிட்டு திரும்ப வேண்டியது.. கிளம்பு.. கிளம்பு..”என்று குறும்பாக சொல்லவும், "உங்களை வந்து பேசிக்கிறேன்.." என்று செல்லமாக மிரட்டிவிட்டு சென்றாள் ஹர்ஷினி.



அப்பாடா.. “ஒருவழியா எல்லா எக்ஸாமும் முடிஞ்சது..” என்று ஆசுவாசமாக சொன்னபடி குமார் அவர்களின் ஆஸ்தான இடமான மரத்தடியில் அமரவும், “ஆமாண்டா.. இப்போ தான் பயங்கர ரிலீபா இருக்கு..” என்று அசோக் சொல்ல,

“என்ன ரிலீபா இருக்கா உனக்கு.. இதுக்கப்புறம் தான் மச்சி நமக்கு ஆப்பே இருக்கு..” என்று பீடிகையுடன் செல்வம் சொல்ல,

“இவன் ஒருத்தன் நாம சந்தோஷமா இருந்தாவே இவனுக்கு ஆகாது.. எதையாவது சொல்லி பீதி கிளப்ப வேண்டியது..” என்று எரிச்சலாக குமார் சொன்னான்,

“டேய்.. நான் உண்மையைத்தான் சொல்றேன்.. என்ன மறந்துட்டிங்களா..? இதுக்கு அப்பறம் நாம காலேஜே வரத்தேவையில்லை.. அடுத்த செமஸ்டர் நமக்கு ப்ராஜெக்ட்.. அது முடிஞ்சி வைவா.. பைனல் எக்ஸாம், அடுத்து வேலையோ, இல்ல மேல படிக்கவேண்டியதோ எதையோ செய்யணும்..” என்று பொறுப்பாக சொல்ல,

ஜெயின் எண்ணம் முழுவதும் அடுத்து அவன் செய்ய வேண்டியதையே தெளிவாக, உறுதியாக யோசித்து கொண்டிருந்தது. அதன்படியே அவனுடைய ப்ராஜெக்ட்டுக்காக என்று வீட்டிலும், ஹர்ஷினியிடமும் சொல்லி கொண்டு சென்னை சென்றவன், அவன் நினைத்ததை செயல்படுத்தவும் முயற்சி செய்தான்.

ஆனால் பலன் என்னமோ பூச்சியமாக தான் இருந்தது. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே போன் செய்து பேசும் அவனின் குரலிலே உள்ள ஏமாற்றத்தை புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு, “ஏன் இப்படி பேசுறாங்க..? என்ன ஆச்சு..?” என்று அவனை நினைத்து குழம்பவே செய்தாள்.

“அப்பா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று காலையிலே ஜெய் வரவும், “வா ஜெய்.. நானே உன்கிட்ட பேசணும்ன்னு தான் இருந்தேன்.. அடுத்து என்ன செய்ய போற..?” என்று டிகிரி முடித்த எல்லா மகன்களிடமும் அப்பாக்கள் கேட்கும் கேள்வியை கேட்டார் மகாதேவன்.

அதைப்பத்தி தான் உங்ககிட்ட பேசணும்ப்பா..

ஓகே சொல்லு.. என்ன யோசிச்சி வச்சிருக்கே, வேலையா..? இல்லை மேல ஏதாவது படிக்கிறயா..?

ரெண்டும் இல்ல..

என்ன சொல்ற..? ரெண்டும் இல்லன்னா..? வேற என்ன இருக்கு..? என்று புரியாமல் கேட்டார்.

“நான் டான்ஸல ஏதாவது செய்யலாம்ன்னு இருக்கேன்..”

என்ன..? என்ன சொல்ற நீ..? எதாவது யோசிச்சி தான் பேசுறியா..? என்று கோவத்தோடு கத்தவும், அவரின் கத்தலில் வேகமாக வெளியே வந்தனர் ஜெயின் அம்மா விஜயாவும், ஜெயின் தங்கை தாரணியும்,

“ஏங்க.. என்ன ஆச்சு..? ஏன் காலையிலே இப்படி கத்துறீங்க..?” என்று விஜயா கேட்க. “என்ன ஏன் கேக்குற.. இங்க நிக்கிறாரு இல்ல.. இந்த துரை கிட்டேயே கேளு..” என்று ஆத்திரமாக சொல்லவும்,

“என்ன ஜெய்.. ஏன் அப்பா கோவப்படுறாரு..?” என்று கேட்க, அவரிடமும் அதையேதான் சொன்னான் ஜெய். அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயா.,

“என்ன தம்பி இது.. இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா.. வேணாம்பா.. நீ பேசாம அப்பா ஷோ ரூம்க்கே போ..” என்று அவரும் மறுத்து பேச, தன்னுடைய முடிவில் உறுதியாக நின்ற ஜெய், யார் சொல்வதையும் கேட்காமல் மறுபடியும் சென்னைக்கே சென்றுவிட்டான்.

போகுமுன் இந்த ஆண்டு தான் +2 முடித்த தாரணியை அவனின் காலேஜிலே சேர்க்க இருப்பதால், ஒருநாள் ஹர்ஷினியை பார்க்கிற்கு வரவைத்து, தாரணியிடம் “உன் வருங்கால அண்ணி..” அறிமுகமும் செய்யவும்,

ஹர்ஷினியின் முகம் அண்ணி.. என்று அவன் இவளையே காதலாக பார்த்துகொண்டு சொல்லவும் வெட்கத்தில் சிவந்தாலும், “இன்னும் வாயைத்திறந்து காதலையே சொல்லலை..” என்று மனதுள் செல்லமாக நொடிக்கவும் செய்தாள்.

ஹர்ஷினியிடம் வேலை பார்க்கவே சென்னை செல்கிறேன்.. என்று விட்டு தான் சென்றான். ஏனெனில் “அவனுக்கு டான்சில் ஏதாவது சாதித்த பிறகே அவளிடம் இதையும் தன் காதலையும் சேர்த்தே சொல்ல வேண்டும்” என்று இருந்ததால் அவன் அவளிடம் மறைக்கவே செய்தான்.

ஆனால்.. அது அவன் நினைத்தது போல் அவ்வளவு எளிதாக இல்லை.. மிகவும் முயற்சி செய்தும் அவனால் ஏதும் செய்ய முடியாதது மட்டுமில்ல அவனால் உள்ளயே நுழைய முடியவில்லை..

அப்படியும் சான்ஸ் கிடைத்தால், அவனால் அவர்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு ப்ரொபஷனாக ஆடமுடியவில்லை. இதற்கிடையில் அவனுடைய செலவுக்கு மகாதேவன் காசு அனுப்ப முடியாது என்று விஜயாவிடம் உறுதியாக சொல்லிவிட்டதால், அவர்தான் அவருடைய சேமிப்பிலிருந்து இத்தனை மாதம் மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அதுவும் குறைந்து அவரால் அடுத்த மாதத்திலிருந்து பணத்தை அனுப்ப முடியாது என்பதால் கணவரிடமே கெஞ்சியும், அவர் தராததால் அழுது கொண்டிருக்கவும் , விஷயம் தெரிந்த தாரணி,

அண்ணனை நினைத்து சோகமாக கேன்டீனில் அமர்ந்து கொண்டிருக்கவும், அவளை கவனித்த ஹர்ஷினி, என்னவென்று கேட்க, முதலில் எதுவும் இல்ல என்று மறைத்த தாரணி, பிறகு இதுதான் என்று சொல்லி அழவும்,

ஹர்ஷினிக்கு.. “டான்சில் சாதிக்கும் அவனின் குறிக்கோளை நினைத்து மிகவும் சந்தோஷமாக, பெருமையாக இருந்தாலும், பணம் இல்லாமல் தவிக்கும் தன்னவனின் நிலையை நினைத்து மனம் மிகவும் கனத்து போனது.”

அதோடு “டான்ஸில் ஜெய் சாதித்தாலே நான் சாதித்தது போல் தானே..” இதற்கு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும், தன்னால் என்ன செய்ய முடியும்..? என்று ஒரு நாள் முழுவதும் யோசித்தவள், மறுநாளே ஆச்சார்யாவிடம் சென்று “தனக்கு ஹோட்டலில் பார்ட் டைம் வேலை வேண்டும்” என்று கேட்க,

எதனால்..? என்று கேட்டவரிடம், எதையோ சொல்லி சமாளித்தவள், அவர் பேத்தி தன்னிடம் நெடுநாள் கழித்து கேட்பதாலே சம்மதிக்கவும், காலேஜ் முடியவும் நேரே ஹோட்டல்க்கு சென்றுவிடுபவள், இரவு 9 மணி வரையுமே அங்கு தான் இருப்பாள்,

வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், தனக்கு தெரிந்தவரை. முடிந்தவரை நன்றாகவே செய்தாள். “பேத்தியின் பொறுப்பில் மனம் குளிர்ந்த ஆச்சார்யா, தாராளமாகவே பணம் கொடுக்கவும், மிகவும் மகிழ்ந்த ஹர்ஷினி முழு பணத்தையும் தாரணி மூலமாக ஜெயின் அக்கவுண்ட்டில் சேர்த்துவிடுவாள்”.

விஜாவிடமும், மகாதேவனிடமும், “ஜெய் பார்ட் டைம் வேலை” செய்து சமாளிப்பதாகவும், அவனிடம் அதை பற்றி கேட்கவேண்டாம், அவன் நீங்க பணம் தராததால் கோவமாக இருக்கான் என்றும் தாரணி சொல்லிவிட,

விஜயா மகனை நினைத்து கவலை பட்டு கொண்டிருந்தவர், இனி அவனே சமாளித்து கொள்வான்.. என்று மகிழ்ந்தார் என்றால், மகாதேவனோ “பணம் தராவிட்டால் வந்துவிடுவான் என்பதாலே கொடுக்காமல் இருந்தவர், ஜெய் வேலை பார்ப்பதை கேள்விப்பட்டு, எதையோ செய்யட்டும்..” என்று விட்டுவிட்டார்.

“என்கிட்ட அசிஸ்டன்ட்டா சேர உனக்கு என்ன தகுதி இருக்கு..? முதல்ல ஒரு டான்ஸரக்கு எல்லா விதமான ஸ்டைல் ஆப் டான்ஸும் தெரியணும்.. நீ எல்லாம் ப்ரொபஷனலா டான்ஸ் ஆட தெரியாம எதுக்கு டான்ஸ் ஆட சான்ஸ் கேட்டு வர..” என்று ஒரு பிரபல டான்ஸ் ,மாஸ்டர் எல்லோர் பார்க்க கத்திவிடவும்,

“வாழ்க்கையிலே ஏற்பட்ட முதல் அவமானத்தில்..” உள்ளுக்குள் மிகவும் நொறுங்கி போனான் ஜெய், அன்றோடு மட்டுமல்லாமல். வேறு இரண்டு மாஸ்டரும் இதே போல் சொல்லி அவமானப்படுத்திவிட, ஏமாற்றத்தில், இயலாமையில், தன்னால் எதுவும் சாதிக்க முடியாதோ..? என்று மிகவும் அழுத்தமான மனநிலைக்கு சென்றுவிட்டவன்,

தன்னையே தன்னால் சமாளிக்க முடியமால், ஆறுதலுக்காக ஹர்ஷினிக்கு போன் செய்தான். அவளோ காலேஜில் இருந்தவள், காலேஜ் முடியவும் வழக்கம் போல் நேரே ஹோட்டேல்க்கு சென்றுவிட்டாள். அதனாலே அவளுக்கு ஜெய் போன் செய்தது தெரியாமல் போய்விட்டது.

இரவு வீட்டிற்கு வந்ததும், ரூமில் இருக்கும் தன் மொபைலை எடுத்து பார்த்தவள், “ஜெயிடமிருந்து வந்திருந்த 20 மிஸ்ட் கால்களை” பார்த்துவிட்டு, வேகமாக அவனுக்கு போன் செய்தாள்.

பீச்சில் உட்கார்ந்து கடலை வெறித்து கொண்டிருந்த ஜெய், இவள் போன் செய்யவும், முதலில் எடுக்காமல் இருந்தவன். அவள் விடாமல் கூப்பிடவும், அட்டென்ட் செய்து காதில் வைத்து கொண்டு எதுவும் பேசாமல் இருக்கவும், பயந்து போன ஹர்ஷினி,

“ஹலோ.. ஹலோ ஜெய்..” என்று பதட்டத்துடன் கூப்பிடவும், ம்ம் என்று மட்டும் சொன்னவன், வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், அவனின் ம்ம்.ல் நிம்மதியடைந்த ஹர்ஷினி, “லைன்ல தான் இருக்கீங்களா..?” என்று ஆசுவாசப்படவும்,

“ஏன் நான் லைன்ல இருக்க வேண்டாம்ங்கிறேயா..?” என்று கேட்க,

என்ன சொல்றீங்க..? எனக்கு புரியல..?

“என்ன புரியல உனக்கு..? நான் உன்கூட லைன்ல இருக்கிறது உனக்கு பிடிக்கல போல.. அதான் உனக்கு இப்போ நிறைய பேர் இருக்காங்களே.. அழகா, உன்னை மாதிரி பணக்காரனா.. எல்லாம் சாதிக்க முடிஞ்சவங்களா..?” என்று தன் இயலாமையை ஆத்திரத்துடன் அவளிடம் கட்டினான் ஜெய் ஆகாஷ்.

“என்ன பேசுறீங்க நீங்க..? இதுபோலேல்லாம் பேசாதீங்க..?” என்று அவன் பேச்சில் கோவம் கொண்டு ஹர்ஷினி சொல்லவும்,

“நான் என்ன இல்லாததய்யா சொல்லிட்டேன்.. அதான் ME ஸ்டூடெண்ட் ஒருத்தன் உன்பின்னாடியே சுத்துறானாமே..? இப்போவாரைக்கும் அதைப்பத்தி ஒருவார்த்தை என்கிட்ட சொன்னியா நீ..?” என்று முன்னமே பேச்சு வாக்கில் அங்கேயே ME படித்து கொண்டிருக்கும் குமார் சொன்னதை வைத்து, அவள் போன் எடுக்காத கோவத்தை காட்டினான்.

“எனக்கு அது ஒருவிஷயமாவே தெரியல.. அதான் நான் சொல்லலை” என்று ஹர்ஷினி முடிந்தவரை பொறுமையாகவே சொன்னாள்.

“ஜெயிக்கும் அது ஒன்றுமில்லை தான்.. என்றாலும் இப்பொழுதுள்ள அவன் மன அழுத்தத்தை, கோவத்தை கையாள முடியாமல் ஹர்ஷினியிடம் காட்டிக்கொண்டிருந்தான்.

“அதெப்படி அந்த விஷயம் எனக்கு முக்கியமா..? இல்லையான்னு..? நீயே எப்படி முடிவு பண்ணலாம்.. எனக்கு உன்சம்மந்த பட்ட எல்லா விஷயமும் முக்கியம் தான்..” என்று காட்டமாக சொல்ல,

அவனின் கோவத்தை உணர்ந்த ஹர்ஷினி, இப்போ எது பேசினாலும் கண்டிப்பா சண்டை தான் வரும் என்று புரிந்துகொண்டு ஜெயிடம் “ஓகே.. இனி எல்லாத்தையும் சொல்லிடுறேன்..” என்று முடிக்க பார்த்தாள்., ஜெய் மறுபடியும் ஆரம்பித்தான்,

“ஏன் என் போனை எடுக்கல..? நான் உனக்கு வேண்டாதவனா ஆய்ட்டேனா..? என்னால எதையும் சாதிக்க முடியாதுன்னு நீயும் நினைக்கிறியா..?அதான் என்னை விட்டு போக நினைக்கிறாயா.?” என்று ஹர்ஷினி சொல்ல வருவதை கூட கேட்காமல் தொடர்ந்து பொரிந்து தள்ளியவன், போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.

ஒரு வாரமாகியும் போனை ஆன் செய்யவில்லை. அவனுடைய பேச்சில் ஹர்ஷினிக்கு கோவம் இருந்தாலும் அவனை நினைத்து கவலை கொள்ளவும் செய்தாள், தினமும் தாரணியிடம் விசாரிப்பவள் அவன் அவர்களுக்கும் போன் செய்யாததை கேள்விப்பட்டு ஒரு கட்டத்தில் “அவனுக்கு என்ன ஆச்சோ..?” என்று பயப்படவே ஆரம்பித்துவிட்டாள்.

..............................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. thank you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top