என்னுள் சங்கீதமாய் நீ 24

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 24



ஹர்ஷினியின் கண்களில் தெரிந்த தேடலில், அவளையே காதலோடு பார்த்து கொண்டிருந்த ஜெயிடம், என்னடா தில்லானா அம்மிணி இங்கேயே நிக்கிது என்று குமார் சந்தேகமாக கேட்க, சுதாரித்து கொண்ட ஜெய்,

நான் தாண்டா.. அவ ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி “என்ன பாக்க வர சொல்லி சொல்லிருந்தேன்”.

நீ ஏண்டா அந்த அம்மினியை வர சொன்ன..?

ம்ம்.. அதுவா.. ஆஹா “நாங்க டான்ஸ் ஆடுன சிடி அவளுக்கு இன்னும் கொடுக்கல இல்ல.. அதான் அதை வாங்க தான் வர சொல்லிருந்தேன்”, என்று வேகமாக கூறியவன்,

அடுத்து அவன் பேசுமுன், நான் லேப்ல தான் சிடி வச்சிருக்கேன்.., போய் எடுத்து கொடுத்துட்டு வந்திறேன்டா.. என்றவன், ஹர்ஷினியை நெருங்கி,

"என்கூடவே வா.." என்று விட்டு முன்னாள் செல்ல, அவனை பின்தொடர்ந்து சென்றவள், அவன் லேபிற்குள் நுழைந்து லேசாக கதவை சாத்தவும், எதுவும் பேசாமல் அவனை ஏக்கத்தோடு பார்த்தவாறே நின்றாள்.

அவளுக்கு அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்து, அவன் நெஞ்சின் மீது சாய்ந்து தனக்கான ஆறுதலை தேட மிகவும் தவிப்பாக இருந்தாலும், எந்த உரிமையில் அவனை நெருங்குவது என்ற தயக்கத்தோடு அவனை பார்த்தவாறே நிற்கவும்,

அவள் கண்கள் வெளிப்படுத்திய ஏக்கத்தை, தவிப்பை புரிந்து கொண்ட ஜெய், அவளை நெருங்கி நின்றவாறே,

"என்ன ஆச்சு ஹர்ஷ்..? ஏன் இப்படி தவிப்பா நிக்கிற..?" என்று பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் கேட்க,

"நான் எதிர்பார்க்கறதை எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும்..?" என்ற பார்வையை பார்க்க, அவளின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடியாத ஜெய் மேலும்,

ஏதா இருந்தாலும் சொல்லு..? அதுக்கு நாம என்ன செய்ய முடியும்ன்னு யோசிக்கலாம்..? என்று “அவளின் தாத்தா டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிவிட்டததுக்காக தான் வருத்தப்படறா போல..” என்று நினைத்துக்கொண்டு கேட்டான்.

ஜெய் சொன்னதை கேட்ட ஹர்ஷினிக்கு "அவனின் காதலை நினைத்து கர்வமாக இருந்தாலும், அந்த காதலை அவன் வார்த்தைகளால் தன்னிடம் வெளிப்படுத்தாத வரை, அவன் காதலை அனுபவிக்க முடியாத தன் நிலைய நினைத்து துயரம் கொண்டவள்," ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாக நிற்கவும்,

அவளின் தவிப்பிற்கான காரணம் தெரியாமல், இல்லை வேற எதாவது பிரச்சனையா இருக்குமோ..? என்ற பயத்தில் "என்னடி ஆச்சு..? ஏன் இப்படி எப்படியோ இருக்க..? வாய திறந்து தான் சொல்லேண்டி..?" என்று அவளிடமே கோவப்பட,

"அவனின் சொன்னால் தானே தெரியும்..?" என்ற கோவத்தில் பாதிக்கப்பட்ட ஹர்ஷினி, அவனை அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் கிளம்ப பார்க்க,

அவளின் பார்வையில் தன் தவறை உணர்ந்த ஜெய், “ச்சு.. எனக்கு இவகிட்ட மட்டும் தான் இப்படி டக்கு.. டக்குன்னு.. கோவம் வந்து தொலையுது, பொறுமையே இல்லடா உனக்கு.. ஏற்கனவே மனசு கஷ்டத்துல இருக்கிறவகிட்டே போய் கோவப்பட்றே”, என்று தன்னையே நொந்தவன் அவளின் கையை பிடித்து தடுத்தவாறே,

"இல்லடி.. நீ கஷ்டப்படவும், என்ன ஆச்சோ..? அப்படிங்கிற பயத்துல தான் கோவப்பட்டுட்டேன்," என்று அவளிடம் சமாதானமாக பேசியவன், அவளின் கண்களை பார்த்தாவறே,

"நீ என்கிட்ட எதையோ எதிர்பாக்கிற..? ஆனா அது என்ன அப்படின்னு தான் என்னால கண்டுபிடிக்க முடியல.. நீயே சொல்லிடு ஹர்ஷ்.." என்று கேட்க, அவனின் தொடர் கேள்வியில் கடுப்பானவள்,

"சொல்லு..சொல்லுன்னு என்னதான் சொல்ல நான்..? ஒரு பொண்ணாய் இருந்துகிட்டு நான் எதிர்பார்க்கிறதை நானே எப்படி சொல்ல முடியும்..?" என்று மனதுள் பொறுமியவள், அவனிடம் இருந்து தன் கையை விடுவித்து கொண்டு,

"நான் ஒன்னும் உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கலை.." என்று சிடுசிடுத்து விட்டு மறுபடியும் கிளம்பவும்,

ஏய் என்னடி..? என்ன கேட்டுட்டேன்னு இப்படி கடுப்படிக்கிற..?

என்ன ஆச்சு..? ஏன் திடீர்னு கோவப்பட்றா..? என்று புரியாமல் கேட்க, ஆத்திரமடைந்த ஹர்ஷினி,

ம்ம்.. நீங்க ஒண்ணும் தப்பா கேட்கல.. நான் தான் தப்பு, உங்ககிட்ட போய் எதிர்பார்த்தேன் பாருங்க என்ன சொல்லணும்..?

"அதான்.. அதையே தானே நானும் கேட்கிறேன்.. என்கிட்ட என்ன எதிர்பாக்கிறேன்னு சொன்னாத்தானே நான் செய்ய முடியும்..?" என்று அவளின் ஆறுதல் தேடும் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் கேட்டான்,

அவனின் கேள்வியில் கொந்தளித்த ஹர்ஷினி,

ம்ம்.. "எனக்கு உங்களை இறுக்கி கட்டிப்பிடிச்சுக்கிட்டு, உங்க நெஞ்சு மேல சாய்ந்துகிட்ட மனசார அழணும் போல இருக்கு, உங்க தோள்ல சாய்ந்து என் மனப்பாரத்தை இறக்கணும் போல இருக்கு.. இப்படி நிறைய ஏக்கம் இருக்கு..",

ஆனா இதையெல்லாம் "எந்த உரிமையில் நான் செய்ய..?" நீங்க தான் என்கிட்ட உங்க காதலை சொல்லக்கூடாதுன்னு குறிக்கோளா இருக்கீங்களே..?

அதுகூட பரவாயில்லை.. "என்னடா ஒருத்தி காலேஜ் வந்தே மூணு வாரத்துக்கு மேல ஆச்சு.. என்ன ஆச்சோ..? ஏன் வரலன்னு எதாவது கண்டுகிட்டீங்களா.. இல்ல ஓரு வார்த்தை தான் போன் செஞ்சி கேட்டீங்களா..?",

முதல்ல ஒரு நாலு நாள் பண்ணதோடு சரி, அதுக்கப்புறம் ஒரு டைம் மட்டும் போன் பண்ணிட்டு.. அதுவும் ஒரு ரெண்டு, மூணு நிமிஷம் பேசனத்தோடு சரி.. ஏன் இன்னும் கொஞ்சநேரம் என்கிட்ட பேசுனா குறைஞ்சா போயிருவீங்க..?

இப்போ மட்டும் வந்து ரொம்ப அக்கறையா என்ன ஆச்சுன்னு கேட்டுகிட்டு இருக்கீங்க..? சொல்ல முடியாது.. போங்க.. என்று உணர்ச்சி வேகத்தில் தன் ஆதங்கத்தை கொட்டி கொண்டிருந்தவள்,

ஜெய் தன்னை மிகவும் நெருங்கி வரவும் தான், சுயத்திற்கு வந்தவள், "அய்யோ.. ஆத்திரத்துல என்ன செஞ்சு வச்சிருக்கேன்.. எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனே.." என்று நினைத்தவாறே,

முகம் சிவந்து, கண்கள் தாழ்ந்து, படபடக்கும் இதயத்துடன், மெலிதான நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தவளை மிக மிக நெருங்கிய ஜெய், அவளின் காதருகில் குனிந்து, உதடுகள் உரச..

"என்ன பாருடி.." என்று கிறக்கமாக சொல்லவும், முதன் முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை, அதுவும் “தன் மனங்கவர் மன்னவனின் ஸ்பரிசத்தை தன் உடல் முழுவதும் உணர்ந்த ஹர்ஷினி” மேலும் நடுங்கியவாறு, கைகளை இறுக்கி பிடித்து கொண்டு, கண்களை மூடிக்கொள்ளவும்,

அவளின் நடுக்கத்தை, இன்பமான தவிப்பை மிக அருகில் ரசித்து பார்த்த ஜெய், அவளின் இறுக்கி பிடித்த கைகளை தன் கை கொண்டு விடுவிக்கவும், தன் ஸபரிசத்தால் சிலிர்த்த அவளை ரசனையாக பார்த்தபடி,

அவளின் ஆட்காட்டி விரலில் இருந்து உள்ளங்கை வரை தன் ஒரு விரல் கொண்டு கோடிழுத்தவன், அங்கேயே தேங்கி தன் விரலால் வட்டம் போட்டு கொண்டே,

“என்ன நிமிந்து பாருடி..” என்று சொல்லவும், மறுப்பாக தலையசைத்த ஹர்ஷினி, அவனின் கையிலிருந்து தன் கையை உருவ பார்க்க,

"ம்ஹூம்.. நீ முதல்ல என்னை நிமிந்து பாரு.. அப்பறம் உன் கையை விடறேன்.." என்று குறும்பாக பேரம் பேசினான், அவன் உள்ளங்கையில் வட்டம் போடுவதால் கூசும் தான் கையை இழுக்க முடியாமல் தவித்தவள்,

அய்யோ.. கோவத்துல எல்லாத்தையும் உளறிட்டு, இப்போ எப்படி அவர் முகத்தை பார்க்கிறது..? “ம்ஹூம்..” என்று மறுப்பாக தலையசைக்க, “என்னை பாக்க வைக்கிறேண்டி” என்றவாறே மேலும் நெருங்க,

ஐயோ.. என்ன செய்ய போறாரு..? இவ்வளவு கிட்ட வராரே..? என்று பரிதவிப்புடன் நின்றவளை.. காதலாக பார்த்தபடி,

“தன்னை முதலில் கவர்ந்த.. அவளின் மூடிய கண்களில் மேல் தன் முதல் இதழ் முத்தத்தை அழுத்தமாக பதிக்க”,

அவனின் எதிர்ப்பாரா செயலில் அதிர்ந்த ஹர்ஷினி, வேகமாக கண் திறந்து குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தவனை நம்பமுடியாமல் பார்த்தாள்.

"என்னடி.. ரொம்ப அதிர்ச்சியா பாக்குற..? இனி இதெல்லாம் அடிக்கடி நடக்கும்.. பழகிக்கோ.." என்று உல்லாசமாக சொல்ல, "ம்க்கும்.. ரொம்பத்தான்" என்றபடி ஹர்ஷினி தன் உதட்டை சுழிக்கவும்.

அவளின் சுழித்த உதட்டை தன் விரலால் சேர்த்து குவித்து பிடித்தவன், "என்னடி ரொம்பத்தான் சுழிக்கிறா..? ஓஹ் இங்க கொடுக்கலன்னு கோவமா..?" என்று அவளின் குவித்த உதட்டை தாபமாக பார்த்தபடி கேட்டான்,

அவனின் கேள்வியில் கடுப்பான ஹர்ஷினி, கையால் அவனிடமிருந்து தன் உதட்டை பறித்தவள், "முதல்ல தள்ளி நில்லுங்க.." என்று படபடக்கவும்,

"ஓஹ்.. இன்னும் உன்கிட்ட தள்ளி வரணுமா..?" என்று கேட்டவாறே இன்னும் அவளை நெருங்கவும்,

அச்சோ.. ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க.. தள்ளி நில்லுங்க..

"அதெல்லாம் முடியாது.. எது பேசறதா இருந்தாலும் இப்படியே பேசு.." என்று ஒரு இன்ச் கூட நகராமல் உரிமையாக சொல்ல,

இத்தனை மாசமா பேசக்கூட இல்லாம இருந்துகிட்டு இப்போ வந்து ரொம்பத்தான் உரிமை கொண்டாடுறாரு..? என்று நினைத்தவள்,

"ரொம்பத்தான் உரிமையா பேசுறீங்க.. அப்புறம்.. அப்பறம்... என்று அவன் முத்தம் கொடுத்ததை சொல்ல முடியாமல் திணறியவள், கண் மீது கை வைத்து, இதையெல்லாம் செய்றீங்க..?" என்று கேட்க,

மெலிதாக சிரித்த ஜெய், "எதையெல்லாம் செஞ்சேன்..?" என்று கேட்டவாறே அவளின் கை விரல்களை தன் விரல்களோடு இறுக்கமாக கோர்த்தான், அவனின் கை இறுக்கத்தில்,

"ஸ்ஸ்.. ஏன் இப்படி..? கையை விடுங்க.." என்று இன்பமான வலியில் மெலிதாக முணங்க,

ஏன் அப்படி கேட்ட..? என்று கேட்க, எதை கேட்டேன்..? என்று இப்போது கேட்டதையே மறந்து புரியாமல் பார்த்தவளை, ஆசையோடு பார்த்தவன், "ஏன் உரிமையை பேசுறீங்கன்னு கேட்டையே..?" அப்பறம்..என்று சொன்னவன்,

டக்கென்று மறுபடியும் அவளின் கண் இமைகளின் மேல் முத்தம் வைத்துவிட்டு, "நான் இப்படி முத்தம் கொடுத்ததை ஏன் கொடுத்தீங்கன்னு கேட்ட இல்ல..? அதான் ஏன் அப்படி கேட்ட..? எனக்கு இதையெல்லாம் செய்ய உரிமை இல்லங்குறியா..?" என்று காதலனான கோவத்தோடு கேட்டான்,

ஆமாம்.. உங்களுக்கு என்ன உரிமை இருக்கு..?

ஏன் எனக்கு உரிமை இல்ல..?

எப்படி உரிமை இருக்கு.. நீங்க தான் இன்னும் உங்க காதலை என்கிட்ட சொல்லவே இல்லையே..?

"ஏன் நான் தான் முதல்ல சொல்லனுமா..? நீ உன் காதலை சொல்ல மாட்டியா..?" என்று வம்பிழுத்தான், அதை புரிந்துகொள்ள முடியாத ஹர்ஷினி,

ஆஹான்.. நான் எப்படி சொல்லுவேன்.. எனக்கு.. என்னால.. எப்படி முடியும்..? என்று திணறவும்,

ஏன் முடியாது..? நமக்குள்ள யார் சொன்னா என்ன..? “இன்பாக்ட் முதல்ல எதுக்கு காதலை சொல்லணும்..? நாம ரெண்டு பெரும் லவ் பண்றது நமக்கு தெரிய தானே செய்யும், அப்பறம் எதுக்கு அதை வேற சொல்லுவானேன்..?” என்று கண்களில் குறும்புடன் சீரியசாக கேட்டான்,

அவனின் கேள்வியில் காண்டான ஹர்ஷினி, “அதானே.. ஏன் சொல்லணும்..? சொல்லவே வேண்டாம்.. நீங்களே உங்க காதலை பத்திரமா வச்சிக்கோங்க..” என்று சிடுசிடுக்கவும், சத்தமாக சிரித்த ஜெய்,

ஏண்டி.. நான் இப்போ உன்கிட்ட என் லவ்வை சொன்னாதான்.. உனக்கு நாம லவ் பண்ற பீல் வருமா..? என்று கேட்க,

“லவ்வை சொல்றதுக்கே இந்த அக்கப்போறா.. போயா நீ ஒன்னும் சொல்லவே தேவையில்லை.." என்று கடுப்பாக முகத்தை திருப்பி கொண்டாள் ஹர்ஷினி. திரும்பிய அவளின் முகத்தை, கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க செய்த ஜெய்,

இப்போ ஓகேவா..? என்று கேட்க, என்ன ஓகேவா..? என்று விழித்தவளை, தன்னோடு சேர்த்து இறுக்கி கட்டி பிடித்தவன்,

"உனக்கு இப்போ அழணும் போல இருக்கா..?" என்று கேட்க, முதலில் புரியாமல் யோசித்தவள், புரிந்த பின் தானகாவே கண்கள் கலங்கியது.. ஆனால் “இது காதலின் கண்ணீர்..”

தன் மார்பு சட்டை ஈரமாவதை உணர்ந்து அப்படியே சிறிது நேரம் நின்றவன், பின் அவளை தன்னிடம் இருந்து பிரித்து, “போதும்டி அழுதது..” என்றவாறே அவளின் கலைந்த தலை முடியை ஒதுக்கி, கண்களை தொடைத்தவன்,

"என்னை பாரு ஹர்ஷ்.." என்று அழுத்தமாக சொல்லவும், அவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலைடி..” என்று அதிருப்தியாக சொல்ல, என்ன.. நான் என்ன செஞ்சேன்..? என்று அவன் அதிருப்தியில் கலங்கியவள் கேட்க,

“உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.. என்னை கட்டிப்பிடிக்க, என் தோள்ல சாய்ஞ்சு அழ.. நினைச்ச நேரத்துல என்கிட்ட பேச.. உன்னோட கஷ்டத்தை என்கிட்ட சொல்ல.. இன்னும் சொல்லபோனா, உன்னை தவிர இந்த உலகத்திலே யாருக்கும் அந்தளவு உரிமை இல்லன்னு கூட சொல்லலாம்.. அதே போல தான் நீயும் எனக்கு..”,

ஆனா நீ உன்னோட கஷ்டத்தை என்கிட்ட சொல்ல, என்னை நெருங்க அவ்வளவு தவிக்கிற.. ஏன் தெரியுமா..? “உனக்கு ஒரு மூணு வார்த்தை தான் தேவை.. இது தான் எனக்கு கஷ்டமா இருக்கு..” என்று சொன்னான்,

அவனின் பேச்சில், ஒரு வேளை தான் தான் தவறோ..? ஆனால்.. லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ணா தானே..? என்று அவளின் வயது காரணமாக குழப்பமாக யோசித்தவளை பார்த்து புரிந்து கொண்டவன்,

"ம்ம்.. உனக்கு நான் சொல்றது இப்போ புரியாது.. ஓகே லீவ் இட்.." என்றவன், இனி இந்த மாதிரி இருக்க மாட்ட தானே.. ஏதா இருந்தாலும் என்கிட்ட எந்தவிதமான தயக்கமும் இல்லாம வருவ தானே..?

"ஆமா.. ஆனா.. நீங்க இன்னும்.. இன்னும் லவ் சொல்லவே.." என்று முடிக்க முடியாமல், அவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு அழுத்தமாக மூடியவன், தன் காதலை முத்தத்தின் மூலம் அவளுக்கு உணர்த்தினான்.

"இனி என்கிட்ட லவ் சொல்ல சொல்லி கேட்ட இதுதான் நடக்கும்.." என்றவாறே மேலும் முத்தமிட்டவன், அதிர்ச்சியோடு தன்னை பார்த்தவளிடம்,

“நான்.. முதல்லே உன்கிட்ட என் காதலை சொல்ல வந்தப்போ நீ தான் அந்த ராஜீவை பத்தி பேசி கெடுத்த..”,

"சோ.. இனி எனக்கு எப்போ தோணுதோ அப்போதான் சொல்லுவேன்.. பட் எனக்கு இன்னிக்கு சொல்ல தோணலை.." என்று தோரணையாக சொன்னான்

அவனை முறைத்து பார்த்த ஹர்ஷினி, “அப்போ எனக்கு அந்த கிஃப்ட்டையும் கொடுக்க மாட்டீங்க.. அப்படித்தானே..?” என்று ஆத்திரமாக கேட்டவுடன்,

அவள் கிஃப்டை மறக்காமல் இன்னும் எதிர்பார்ப்போடு கேட்கவும், முதலில் மகிழ்ந்தவன் கண்களில் ஓர் நொடி தோன்றி மறைந்தது வேதனை..

ஆமா.. அதெப்படி தருவேன்.. லவ் சொன்னாத்தானே கிப்ட் தரணும்.. ஏன் நீ எனக்கு ஏதாவது கிப்ட் வாங்கி வச்சிருக்கியா..? அப்போ சரி.. நீ இவ்வளவு ஆசை படறதால.. நீ வேணும்ன்னா என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல என்று இன்னும் அவளை வம்பிழுத்தான்.

அவனுக்கு.. அவளிடம் காதலை சொல்ல கூடாது என்றெல்லாம் இல்லை, ஆனால் சூழ்நிலை அது போல் அமையவும் தான் அவன் சொல்ல சென்று சொல்லாமலே விட்டது..

ஆனால் அதற்கு பிறகு ஹர்ஷினி.. தன்னிடம், சொல்வானோ..? என்று தினம்.. தினம்.. எதிர்பார்க்கவும் தான் , "அவனுக்கு காதலை சொல்லாமல் காதலிப்பதும்.. ஹர்ஷினியை சீண்டுவதும் மிகவும் பிடித்திருந்தது.." என்றே சொல்லலாம்.. இதுவும் நல்லதான்பா இருக்கு.. என்று நினைத்தவன் வேண்டுமென்றே அவளிடம் காதல் சொல்லாமல் இருந்தான்.

ஆனால் இப்பொழுது.. அவன் ஹர்ஷினியிடம் காதல் சொல்வதை பற்றியே நினைக்கவில்லை என்றே சொல்லலாம்.. இன்னும் சொல்ல போனால் அவனுடைய எண்ணம் முழுவதும் கடந்த நாட்களில் வேறாக தான் இருந்தது.

அதனாலே முதலில் அவனால் ஹர்ஷினியின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்த பின்னால் அவளை "அவளின் மனஅழுத்தத்திலிருந்து" வெளியே கொண்டு வர நினைத்து தான் அவளை வம்பிழுத்தான்.

அவன் சொன்னதை கேட்டு கடுப்பான ஹர்ஷினி, "இவர் கண்டிப்பா சொல்ல போறதில்லை, என்னை வம்பிழுக்கவே இப்படி பன்றாரு.." என்று புரிந்து கொண்டவள், அவனை முறைத்துவிட்டு செல்லவும், சத்தமாக சிரித்தான் ஜெய் ஆகாஷ்.



………………………………………………..





ஹாய் ப்ரண்ட்ஸ்..



அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு இந்த லவ் எபி எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்கப்பா.. thank you சோ மச் பார் யுவர் சப்போர்ட் ப்ரண்ட்ஸ்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரான ரொமான்டிக் அப்டேட்,
நிதி டியர்
நீ என்னைக் காதலிப்பதை என்னிடம் சொல்லவில்லைன்னு இந்த ஹர்ஷினிப்
பொண்ணு முகத்தைத் திருப்புறாள்
இந்த ஜெய் ஆகாஷ் என்னடான்னா
"சொன்னால்தான் சொன்னால்தான்
காதலா
சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா......"ன்னு பாடாமல் பாடி
"முத்தே முத்தம்மா முத்தம் ஒண்ணு
தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள்
வரலாமா"-ன்னு முத்தாவாக் கொடுத்துத் தள்ளுறான்
இம்புட்டு லவ்வான லவ்வாங்கிஸ் கிஸ்
இரண்டு பேரையும் பிரிக்க இந்த நிதிப் பொண்ணுக்கு எப்படித்தான் மன்சு
வந்திச்சோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top