என்னுள் சங்கீதமாய் நீ 23

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 23





ஆச்சார்யாவால்.. “ஒருவரமாக கோயம்புத்தூரையே சல்லடை போட்டு சலித்தும்.. இளங்கோ குடும்பத்தினர் சென்ற தடதை கண்டுபிடிக்க முடியவில்லை”.

எங்கு சென்றனர்..? எப்படி சென்றனர்..? எங்கு மாயமாக மறைந்தார்கள்..? என்று ஒரு “துப்பும் கிடைக்காமல்..?” திணறித்தான் போனார்.. அதற்கு மேல் வேறு ஊர்களில் எல்லாம் தேட அவர் உடலும் ஒத்துழைப்பு தரவில்லை.. வீட்டிலும், டாக்டரும் விடவில்லை.

சுபத்ராவும் சம்பவம் நடந்த மறுநாளே ஹர்ஷினி உடன் வர அவர்களை தேடி சென்னை கிளம்பிவிட்டார். அங்கும் அவர்கள் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை... வீடும் பூட்டித்தான் இருந்தது.

சென்னையிலும்.. தனக்கு அவர்களை பற்றி தெரிந்த வரை எல்லா இடத்திலும் விசாரித்துவிட்டார்.. போதாதற்கு அவர்களின் “பூர்விகமான மதுரைக்கும், அவர்கள் அங்கு எச்சூழ்நிலையிலும் செல்ல மாட்டார்கள்..” என்று தெரிந்தும் எதற்கும் பார்ப்போம் என்று நேரடியாகவே சென்று விசாரித்தார்.

எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் சோர்ந்து, வேதனையின் உச்சத்தில் இருந்த சுபத்ராவை தேற்றுவதே ஹர்ஷினிக்கு மிக பெரிய விஷயமாக இருந்தது.

ஒருவாரம் கழித்து சந்திரனுடன் சென்னை வந்த ஆச்சார்யாவிற்கு சுபத்ராவை பார்த்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியே.. ஒரேவாரத்தில் மிகவும் மெலிந்து, சுத்தமாக தூக்கம் இல்லாமல், கண் சுற்றி கருவளையம் வந்து மிகவும் நொடிந்த நிலையில் இருந்தார்.

ஏற்கனவே தான் செஞ்ச தப்பை உணர்ந்து மிகவும் குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டிருந்த சந்திரன், சுபத்ராவை இந்த நிலையில் பார்த்ததும் மனதளவில் நரக வேதனையை உணர்ந்தார்.

அய்யோ.. “என்னோட ஆத்திரத்தால என்ன செஞ்சு வச்சிருக்கேன் நான்.. என் தங்கச்சி வாழ்க்கை கெட நானே காரணமாயிட்டேனே.. இந்த அண்ணனை மன்னிச்சுடுமா..” என்று கதறிக்கொண்டே சுபத்ராவிடம் செல்ல, சுபத்ராவோ அவரின் முகத்தை பார்க்க கூட பார்க்க விரும்பாமல் வேகமாக ரூமிற்குள் சென்று கதவடைத்து கொண்டார்.

அன்று மட்டுமல்ல சந்திரன் அங்கிருந்த இரண்டு நாட்களும் ரூம் கதவை கூட திறக்கவில்லை. ஆச்சார்யாவும், சந்திரனும்.. எவ்வளவு முயன்றும் சுபத்ராவை பார்க்க கூட முடியாமல் தான் ஊர் திரும்பினர்.



இளங்கோவின் பக்கத்து வீட்டில் முன்னமே சுபத்ரா சொல்லிருந்ததால், “தண்டபாணி வீட்டுக்கு வந்திருப்பதை..” அவர்கள் போன் செய்து சொல்லவும், உடனடியாக கிளம்பினார்கள் சுபத்ராவும், ஹர்ஷினியும்,

அங்கு “அவர் வீட்டை காலி செய்து கொண்டிருக்கவும் அதிர்ந்த சுபத்ரா, இவர்களை பார்த்தும் பார்க்காதது போல் இருந்த தண்டபாணியிடம் சென்று என்னப்பா வீட்டை காலி பண்றீங்களா..?” என்று கலங்கிய குரலில் கேட்க,

அவரோ எங்கோ பார்த்துக்கொண்டு “ஆமாம்..” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு வேறுபுறம் செல்லவும், அவரை தொடர்ந்தவாறே

“அவர்.. அவர் இப்போ எப்படி இருக்கார்..? கால்.. கால்ல தானே அன்னிக்கு கா.. கார்.. கார்..” என்று தொடர்ந்து கேட்க முடியாமல் அழுகையில் திணறவும், அவரின் கையை ஆறுதலாக பற்றி கொண்ட ஹர்ஷினி,

ப்ளீஸ் சொல்லுங்க அங்கிள்.. அத்தை இந்த ஒருவராமா “அவருக்கு என்ன ஆச்சோ..? எப்படி இருக்காரோன்னு ரொம்ப.. ரொம்ப.. வேதனைப்பட்டுட்டாங்க..” ப்ளீஸ்.. அவர் எப்படி இருக்காருன்னு மட்டுமாவது சொல்லுங்க.. என்று சுபத்ராவின் வேதனையை அருகில் இருந்து பார்த்ததால் அவருக்காக அவரிடம் கெஞ்சவே செய்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த தண்டபாணி, “நல்லா இருக்கான்.. கால் ஒன்னும் பிரச்னையில்லை… அவ்வளுதானே கிளம்புங்க..” என்று இப்பொழுதும் முகம் பார்க்காமலே பேசி முடித்தவர்,

அப்போது மட்டுமல்லாமல் அவர் பொருட்களை ஏற்றி அங்கிருந்து கிளம்பும் வரையும்.. அங்கேயே இருந்த சுபத்ரா, ஹர்ஷினியை கண்டு கொள்ளவே இல்லை. “அவரின் ஒதுக்கத்தில்.. ஏதும் பேச முடியாத குற்ற உணர்ச்சியில்.. மேலும் அவர்களை பற்றி ஏதும் அறிந்து கொள்ள முடியாத தவிப்பில்” அமைதியாகவே நின்றுவிட்டார் சுபத்ரா,

ஹர்ஷினி தான் விடாமல் அவரிடம் பேச முயற்சி செய்ய.. அவரோ கடைசி வரை அதற்கு இடம் கொடுக்காமலே நிரந்தரமாக அங்கிருந்து கிளம்பியும் விட்டார். அன்று முழுவதும் அழுது கரைந்த சுபத்ராவை தேற்றுவதே ஹர்ஷினிக்கு பெருங்கவலையாக இருந்தது.

சுபத்ராவின் வேதனையை பார்த்த அவளுக்கு இளங்கோ மீது சிறிதளவு வருத்தமும் உண்டானது. “அப்பா பண்ணது கண்டிப்பா தப்புதான்.. அதுவும் அவர் இளங்கோவை வீட்டை விட்டு வெளியே தள்ளுனது.. அதனால அவருக்கு அடிபட்டது எல்லாம் மாபெரும் குற்றமே.. அதை யாரும் மறுக்கவோ.. நியாப்படுத்தவோ முடியாது தான்..”

ஆனா.. அவர் அத்தையை பற்றி யோசிச்சிருக்கலாமே.. அத்தை கண்டிப்பா மனசால ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு அவருக்கு தெரியாமலா..? புரியாமலா..? இருக்கும்.

அப்படி இருந்தும் அவர் ஏன் அத்தையை பற்றி யோசிக்கலை..? அண்ணா பண்ண தப்புக்கு தங்கச்சிக்கு தண்டனை கொடுக்கலாமா..? என்று மனதுக்குள்ளே யோசித்து கொண்டிருந்தவள், அதையே கேள்வியாக சுபத்ராவிடமும் நேரடியாக கேட்டுவிட்டாள்.

அவளுடைய கேள்வியில் விரக்தியாக சிரித்த சுபத்ரா.. ”ஹர்ஷி.. உனக்கு எப்படி சொல்லணும்ன்னு..? எங்கிருந்து சொல்லணும்ன்னு..? எனக்கு தெரியல.. என்றுவிட்டு சில நிமிடங்கள் கண்மூடி அமர்ந்துஇருந்தவர்,

அவங்களோட சொந்த ஊர் மதுரை பக்கத்துல உள்ள கிராமம்.. நாம கூட அவங்களை தேடி போனோமே அந்த ஊர் தான்... இளங்கோ IT முடிச்சிட்டு இங்க சென்னையில இருக்கிற சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்தார்,

அவருக்கு “கீர்த்தின்னு..” ஒரு தங்கச்சி உண்டு.. அவரை விட 12 வருஷம் சின்ன பொண்ணு, “நம்ம வீட்ல நான் எப்படி எதிர்பார்க்கமா பிறந்தேனோ அது போல..”

சின்ன பொண்ணுங்கறதால “வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.. அதனாலே ரொம்ப பிடிவாதமும் கூட..” 12த் முடிச்சிட்டு காலேஜ் சென்னையில தான் படிப்பேன்னு பிடிவாதம் பிடிக்கவும், அவளோட பிடிவாத குணம் தெரிஞ்சதால அவங்களும் வேறு வழி இல்லாம சென்னயில காலேஜ் சேர்த்தாங்க.

அவளோட காலேஜ் ப்ரண்ட்ஸ் கொஞ்ச பேர் இங்க நம்ம அகாடமியில டான்ஸ் கத்துக்கிறாங்க.. அதை தெரிஞ்சுக்கிட்டு அவளும் எப்பவும் போல டான்ஸ் கத்துக்கணும்ன்னு பிடிவாதம். அப்பறம் என்ன அவளை இங்க டான்ஸ் கத்துக்க சேர்க்க வந்தப்போதான் நான் முதன் முதல்ல இளங்கோவையும், கீர்த்தியையும் பார்த்தேன்.

அவளும் டான்ஸை ரொம்ப ஆர்வமாவே கத்துக்கிட்டா., நல்லா பேசுவா.. பிடிவாதத்தை தவிர்த்து பார்த்தா கீர்த்தி உண்மையிலே ரொம்ப நல்ல பொண்ணு தான்.

அப்போதான் இளங்கோக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆச்சி.. “அவளுக்கு அவங்க அண்ணான்னு உயிர்ன்னே சொல்லலாம்.. அவருக்கும் அப்படி தான்..” எல்லாமே ரொம்ப நல்லாத்தான் போயிட்டு இருந்தது.

அவங்க அண்ணா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது, இவங்க ரெண்டு பேறும் அடுத்த நாள் காலையில கல்யாணத்துக்காக ஊருக்கு கிளம்பிறவங்க..

“கீர்த்தி ஈவினிங் காலேஜ் முடிச்சிட்டு ஹாஸ்டல் போகாம இருக்கவும், வார்டன் இளங்கோக்கு போன் செஞ்சு இன்பார்ம் பண்ணாங்க..” அவரும் எல்லா இடத்திலும் தேடிட்டு, நம்ம அகடாமியிலும் தேடவும் தான் எனக்கு விஷயம் தெரிஞ்சி, நானும் அவ ப்ரண்ட்ஸ் கிட்ட விசாரிக்க அப்போதான் தெரிஞ்சுது,

அவளுக்கும், அவ கிளாஸ் ப்ரண்ட்ஸ்க்கும் சண்டை.. எதனாலன்னு பார்த்தா.. “அடுத்த நாள் ஈவினிங், அவங்க கிளாஸ் பொண்ணு பர்த்டேக்காக OMRல எதோ ரிசார்ட்ல பார்ட்டி அரேஞ் செய்து இருப்பாங்க போல,”

இவ அவங்க கிட்ட அதை பத்தி ஆர்வமா விசாரிக்க.. அவங்க “இவளை அதுக்கெல்லம் நீ சரிப்பட்டு வரமாட்ட.. நீ கிராமம் தானேன்னு ரொம்ப சீண்டி இருக்காங்க..”

அவ்வளவுதான்.. சொல்லவா வேனும்.. ஹாஸ்டல் வராம பீச்சல போய் இருந்துகிட்டு, அதை தெரிஞ்சி இளங்கோவும், நானும் பீச்சுக்கு போய் அவளை செம வாங்கு வாங்கிட்டார் இளங்கோ..

அப்படியும் அடங்காம ஓவர் பிடிவாதம் பிடிக்க, இளங்கோ கண்டிப்பாவே முடியாதுன்னு சொல்லி அவர்கூடவே அவர் ஸ்டே பண்ணிருக்கிற வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டார்.

ஆனா மறுநாள் ஈவினிங் அவ.. அவர் ஏமாந்த நேரம் பார்த்து அந்த ரெசார்ட்க்கு கிளம்பிட்டா. அவர் முதல் நாள் போல தேடிகிட்டு இங்க என்கிட்ட வரவும், நானும் விசாரிச்சு, அது எந்த ரெசார்ட்ன்னு பேர் சொல்லி அனுப்புனேன்..

அதுக்கு அப்பறம் “நடந்ததெல்லாம் ரொம்ப கொடுமையான சம்பவம்..” கீர்த்தி பிடிவாத வீம்புல.. அங்க போய்ட்டாலும், அங்க நடக்கறதை எல்லாம் பாத்துட்டு, பயந்து போய் அவளே அவங்க அண்ணனுக்கு கூட்டிட்டு போக போன் பண்ணிட்டா..

ஆனா இவர் அங்க போறதுக்குள்ள எல்லாம் கை மீறி போச்சு.. அந்த ரெசார்ட்ல இருந்த வேற பசங்க ட்ரக்ஸ் எடுத்து இருந்தாங்க போல.. போதையில இவகிட்ட வம்பு பண்ண, இவ அந்த பசங்கள அடிச்சி,

அவனுங்க இவளை பழிவாங்க கார்டெனக்கு தூக்கி போயி கொடூரமா சீரழிச்சி, கடைசியில அங்க போன இளங்கோ தேடி பிடிச்சி அவங்க கிட்ட போனப்போ அவ உடம்புல உயிரே இல்லை..

அது கூட தெரியாத அந்த மிருகங்க அவளை.. இவர் தங்கச்சியை அந்த நிலையில் பாத்து.. வெறியேறி அங்கேயே பக்கத்துல இருந்த சம்மட்டிய எடுத்து அவனுங்களை போட்டு புரட்டி எடுத்துருக்கார்..

சத்தம் கேட்டு எல்லாம் வர.. அப்பறம் என்ன, மீடியா, டிவி, நியூஸ் பேப்பர் எல்லாத்திலும் திரும்ப.. திரும்ப.. இந்த விஷயத்தை போட்டு மிச்சம் மீதி இருந்த குடும்ப மானமும் போய்.. கல்யாணமும் நின்னு போச்சு.

இவர் அடிச்சதுல ஒரு பையன் ஸ்பாட் அவுட்.. அதனால இவரை அப்பவே அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. எதோ இவர் நல்ல நேரம்.. ஜட்ஜ் நல்ல மனுஷனா இருக்க போய், குறைஞ்ச பட்ச தண்டனை 3 வருஷம் கொடுத்தாரு..

இதுல என்ன கொடுமைன்னா.. அவரோட சொந்த பந்தங்கள் எல்லாம் சப்போர்ட் பண்ணாம இவங்களை கை விட்டதும் இல்லாம, பொண்ணை சரியா வளக்கலை.. அந்த பார்ட்டி நடக்கிற இடத்துக்கு எல்லாம் போவானேன்.. பொண்ணு மேலயும் தப்பு இருக்குன்னு எல்லாம் பேச வெறுத்து போன அன்னபூரணி அம்மாவும், அப்பாவும் அங்க இருந்த சொத்தை எல்லாம் வித்துட்டு இங்க சென்னைக்கே வந்துட்டாங்க..

அப்போ அவங்களுக்கு நான் தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.. இளங்கோ ஜெயில்ல இருந்து வர வரை அவங்களுக்கு தேவையானது எல்லாம் என்னால முடிஞ்சு வரை பாத்துக்கிட்டேன்.. அப்படி ஆரம்பிச்சது தான் எங்க பழக்கம்..

எனக்கும்.. இளங்கோக்கும் உள்ள விருப்பம் இப்போ ஒரு வருஷமாத்தான். அதுக்கு அப்பறம் என்னை பத்தியும் அவங்களுக்கு முழுசா எல்லாம் நானே சொல்லிட்டேன்.

அப்பாகிட்டயும் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. அவரும் அவங்களை பத்தி நல்லா விசாரிச்சாரு தான் ஆனாலும் அவரால ஒத்துக்க முடியல.. இருந்தாலும் எனக்காக ஓகே சொல்ற ஸ்டேஜில தான் இப்படி எல்லாம் நடந்திருச்சி..

உண்மையிலே அவங்க ரொம்ப பாவம் ஹர்ஷினி.. எல்லார்கிட்டயும் நிறைய கேட்டுட்டாங்க.. நிறைய அவமானம், சொல்.. இப்போ உங்க அப்பா அவங்களை தப்பா பேசணுதும் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே தள்ளி அவமானபடுத்தி.. அடிபட்டு.. ச்சே.. என்று வெறுப்போடு சொன்னவர் எழுந்து செல்லவும்,

அவர் சொன்னதை கேட்ட ஹர்ஷினி சிலை போலே அமர்ந்து இருந்தாள்.. அவளால் தாங்கவே முடியல.. மனது மிகவும் பாரமாகி போனது.. கேட்கும் போதே இவ்வளவு வேதனை என்றால், அனுபவித்தவர்களுக்கு சொல்லவா வேண்டும்..?

“நாம பண்றது ரொம்ப தப்பு இளங்கோ..” என்று தண்டபாணி சொல்லவும், என்ன..? என்று கூட கேட்காமல் கண்மூடி படுத்து இருந்தான் இளங்கோ.

“நாம என்ன தப்பு பண்ணோம்..? இன்னிக்கு என் மகன் ஒரு காலை தொலைச்சி கட்ட கால்ல நடக்கிறான்னா..? அதுக்கு காரணமே அந்த குடும்பம் தான்..” என்று வெறுப்போடு அன்னபூரணி சொல்ல,

“அவங்க அண்ணா பண்ண தப்புக்கு அந்த புள்ள என்ன பண்ணும்..? பாவம் அந்த பொண்ணு.. ஒரே வாரத்துல ஆளே பாதியாயிட்டா.. பாக்கவே எவ்வளவு வருத்தமா இருந்துச்சி தெரியுமா..?” என்று வருத்தத்துடன் தண்டபாணி சொன்னார்.

அதுக்கு நாம என்ன செய்ய..? “அவ அண்ணா பண்ண தப்புக்கு அவ கஷ்டப்பட்றா..” இனிமேல் அந்த பொண்ணை பத்தி நீங்க பேசவே கூடாது.. “எல்லாம் முடிஞ்சது முடிஞ்சதுதான்..” நீங்க உங்க வேலையை பாருங்க என்று அன்னபூரணி சொன்னதுக்கு, எந்த வித மறுப்பும் இல்லாமல் இறுகிய முகத்தோடே படுத்து இருந்தான் இளங்கோ.

ஹர்ஷினியால் சுபத்ராவை இந்த நிலையில் விட்டு செல்ல முடியாததால் “காலேஜில் மெடிகல் லீவ் அப்ளை..” செய்துவிட்டு, மேலும் ஒருவாரம் அங்கே தான் இருந்தாள்.

இதற்கிடையில்.. “ஜெய் ஒரு முறை மட்டுமே போன் செய்து சில நிமிடங்கள் பொதுவாக பேசியிருந்தான்.” எப்பொழுதும் அவர்களுக்குக்கிடையில் போன் பேசும் பழக்கம் மிகவும் அரிது தான் என்றாலும், இம்முறை ஹர்ஷினி மனதளவில் மிகவும் ஜெயயை தேடினாள் என்றே சொல்லலாம்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு அவன் வைக்கவும், “ஏன் இன்னும் பேசினால் தான் என்ன..? என்று மனம் வெகுவாக முறுக்கி கொண்டது.” இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி இருந்தாலாவது, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவளே போன் செய்து பேசியிருக்க முடியும்.

ஆனால்.. இப்பொழுது போன் செய்து கூட பேச முடியாமல், அவனை பார்க்க கூட முடியாமல் மனதளவில் அவனை மிகவும் தேடினாள்.

இந்த இடைப்பட்ட நாட்களில் தான் அனுபவித்த துயரை, மனப்பாரத்தை, அவனை கட்டிக்கொண்டு அழுது தீர்க்க வேண்டும் என்றே தவித்தாள்..

தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்தும், மனம் அவனை தான் தேடியது..

அவன் அருகாமை தான் கேட்டது..

அவன் தோள் சாயத்தான் ஏங்கியது..

அவனிடம் தன் மனபாரத்தை இறக்கி வைக்க தான் தோன்றியது..

தாத்தா டான்ஸ் ஆடக்கூடாதென்று சத்தியம் வாங்கிவிட்டதை அவனிடம் சொல்லி ஆறுதல் கேட்க தான் விழைந்தது..

சுபத்ரா ஆரம்பித்து.. கீர்த்தி வரை தன்னுடைய மனதில் தேங்கி விட்ட அழுகையை அவனிடம் தான் சொல்லி மனதார அழச்சொன்னது..

அவளின் அந்த தவிப்பை போக்குவது போல் சுபத்ராவே அவளை காலேஜ் கிளம்பும் படி கட்டாயப்படுத்தி அனுப்பிவிட, மிகுந்த ஏக்கத்தை சுமந்தவாறே அவன் எப்பொழுதும் அமரும் மரத்தடி மேடைக்கே நேராக சென்றுவிட்டாள்..

எதிர்பாராமல் வந்தவளை.. முதலில் தன் ஆசை தீர பார்த்த ஜெய்.. அதன் பிறகே “அவளின் கண்களில் தெரிந்த தனக்கான அளவில்லா தேடலை புரிந்து கொண்டவனின் மனம்..” அதை விட அதிகமாக தான் அவளை தேடியதை அவளிடம் வெளிப்படுத்த மனம் பரபரத்தது..

....................................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க.. thank you ப்ரண்ட்ஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top